Tuesday, July 14, 2009

ஆஹா!! என்ன ருசி!!!

மழைக்காலத்தில் பிள்ளைகளுக்கு பசி கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்கும். சோறு, தோசைன்னா
முகம் சுளிப்பாங்க. ஏதாச்சும் சட்டுன்னு
செஞ்சு கொடுக்கணும்னா என்ன செய்வதுன்னு
குழம்புவோம்.

எனக்கு தோணிய இரண்டு ஐடியாக்களை சொல்றேன்.
உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு பாருங்க.

இட்லி மாவில், வெங்காயம், கறிவேப்பிலை,
சீரகம், மிளகு, கொத்தமல்லி இலை எல்லாம்
போட்டு கலந்து குழிப்பணியாரச்சட்டியில்
குழிப்பணியாரமா செஞ்சு எடுத்துக்கோங்க.

தக்காளி,வெங்காயச் சட்னி அரைச்சு தனியா
வெச்சுக்கோங்க.




தயாரான குழிப்பணியாரத்தை தட்டில்
வெச்சு அதில் வெங்காயச் சட்னி 1 ஸ்புன்
போட்டு மேலே காராபூந்தி, சேவ் ஆகியவை
தூவி கொடுத்தா சூப்பரா இருக்கும்.
விரும்பறவங்களுக்கு தயிர் கொஞ்சம் சேத்தா
தஹி பூரி போல சுவையோ சுவை.

*****************************************

காலேல செஞ்ச இட்லியை இட்லி உப்புமா
இல்லாட்டி இட்லி ஃப்ரை இது மாதிரி செய்வோம்.

இட்லியையும் மேலே சொன்ன மாதிரி
அலங்கரிச்சு கொடுத்தா பாராட்டு மழைதான்.

எங்க வீட்டு குட்டீஸ் ஆஷிஷ் அம்ருதா
சுவைல மயங்கி அன்னைக்கு முழுக்க எனக்கு
ஒரே பாராட்டு மழைதான் போங்க.

11 comments:

நட்புடன் ஜமால் said...

மழைக்காலத்தில் பிள்ளைகளுக்கு பசி கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்கும்\\

உண்மை தான்.

அதுவும் காரமா எதுனா இருந்தா ...


ஆஹா! என்ன ருசி ...

ராமலக்ஷ்மி said...

அடிக்கடி நான் செய்யும் பணியாரம், ஹி குறிப்பாக இட்லி மாவு இரண்டாம் நாள் கடைசி மாவாகும் போது.

//காராபூந்தி, சேவ் ஆகியவை
தூவி கொடுத்தா சூப்பரா இருக்கும்.
விரும்பறவங்களுக்கு தயிர் கொஞ்சம் சேத்தா
தஹி பூரி போல சுவையோ சுவை.//

இது ட்ரை பண்ணியதில்லை. செய்து பார்த்து விடுகிறேன்:)!

நாஞ்சில் நாதம் said...

\\\ இட்லி மாவில், வெங்காயம், கறிவேப்பிலை,
சீரகம், மிளகு, கொத்தமல்லி இலை எல்லாம்
போட்டு கலந்து குழிப்பணியாரச்சட்டியில்
குழிப்பணியாரமா செஞ்சு எடுத்துக்கோங்க ////

இட்லி மாவுக்கு பதில் முட்டை உடைச்சு விட்டு முட்டை பணியாரமாக கூட செய்யலாம். நல்லயிருகும்

நிஜமா நல்லவன் said...

இதெல்லாம் நாங்க எப்பவோ செஞ்சாச்சு....:))

pudugaithendral said...

அதுவும் காரமா எதுனா இருந்தா ...//

அதே தான் ஜமால் :))

pudugaithendral said...

இங்கயும் அதே கதைதான் ராமலக்‌ஷ்மி.

:))

செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க. வெங்காயச் சட்னி முக்கியம்

pudugaithendral said...

ஆஹா,

ரெசிப்பிக்கு நன்றி நாஞ்சிலாரே(அப்படி கூப்பிடலாமா??)

pudugaithendral said...

இதெல்லாம் நாங்க எப்பவோ செஞ்சாச்சு....//

:))))

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா நான் ஹைதை வந்தபோது நீங்க சாப்பிடக் குடுத்தது இதுதானே??

pudugaithendral said...

ஆமாம் இதுதான் அப்துல்லா

மங்களூர் சிவா said...

nice
:))