Thursday, July 23, 2009

நானும் ஸ்கூலுக்கு போவேன்!!!!

கயல்விழியின் இந்த கொசுவத்தியை படிச்சதும்
எனக்கும் (அதான் எப்பவுமே சுத்துதே!) கொசுவத்தி
சுத்த ஆரம்பிச்சிருச்சு. :))

எனக்கும் என் தம்பிக்கு 8 வயது வித்யாசம்.
அதனால் வீட்டில் வேறு யாரும் இல்லாமல் போரடித்துக்
கொண்டு கிடப்பேன். புதுகையில் சுப்பராமய்யர் பள்ளி
அம்மாவின் தாத்தாவுக்கு சொந்தமான பள்ளி.
தாத்தா அங்குதான் வேலைப்பார்த்தார். சித்தி
அரிச்சுவடி(அந்தக்கால எல்.கே.ஜி) டீச்சர்.


எங்கள் வீட்டின் வழியாகத்தான் சித்தி வேலைக்குச்
செல்ல வேண்டும். தனியாக போரடித்துக்கொண்டு
வீட்டில் இருப்பதை விட தன்னுடன் பள்ளிக்கு
அழைத்துச் சென்றார். 31/2 வயதுதான்.
சின்ன தூக்குச்சட்டியில்
சோறு எடுத்துக்கொண்டு வாசலில் ரெடியாக
காத்திருக்க சித்தி அழைத்துச் செல்வார்.
சாயந்திரம் திரும்ப வருவதும் அவரோடு தான்.
அப்பா, அம்மா தடுத்தாலும் நானும் ஸ்கூலுக்கு போவேன்
என்று அடம்பிடித்து செல்வேனாம். (அப்பாடி
தலைப்பை பிடிச்சாச்சு)

என் முதல் ஆசிரியை சித்திதான். (இன்றளவும்
எனக்கும் ஏதாவது தெரியும் என்றால் என்னை
செதுக்கிய சிற்பிகளில் சித்தியும் முக்கியமானவர்)

புதுகையில் பிரபலமாக இருந்த child jeasus convent
பள்ளியில் என்னை சேர்க்க முடியாவிட்டாலும்
அதே போன்ற ஒரு யூன்பார்ம், டக்டக்கென
நான் நடக்க ஷூ, அலுமினியப்பெட்டி
ஆங்கில ரைம்ஸ் புக்(எம்.ஜே.சார் பைண்டிங்
செஞ்சது. பார்க்க ஒரு சாயலில் எம் ஜி ஆர்
அவர்கள் போலிருந்ததால் அவருக்கு என் நாமகரணம்)
என என்னை அடுத்த வருடமே அழகு படுத்தி
பார்த்தார் சித்தி.

சித்தி அந்த வேலையை விட்டு விட அம்மா
அங்கே டீச்சரானார். அம்மாவிடமிருந்தால்
தகராறு செய்வேன் என்று அவர்களாக நினைத்து
பக்கத்து வகுப்பான (கிளாஸ் ரூமைச் சொன்னேன்)
ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த டீச்சர் ஈஸ்வரி டீச்சர்.
இவரது கணவர் புதுகை அரசு மருத்துவமனையில்
வேலை பார்த்தார். டீச்சர் காலை ஆட்டிக்கொண்டே
சொல்லிக்கொடுக்கும் பாணி ரொம்ப பிடிக்கும்.
கையில் குச்சி வைத்திருப்பார். அந்தக் குச்சி
தரையில் தட்டி பயத்தை உண்டாக்க மட்டுமே.
நான் மாண்டிசோரி ஆசிரியை ஆன போது
என் ஒண்ணாம்கிளாஸ் ஈஸ்வரி டீச்சரின்
முறையில்தான் எடுத்தேன். 24 வருடங்களுக்கு
பிறகும் அவரை என்னால் மறக்கவே முடியவில்லை.

சரியாக 6வயது ஆனதும் அப்பா வந்து முறையாக
அப்ளிகேஷன் எழுதி, எல்லோருக்கும் ஆரஞ்சு
மிட்டாய் கொடுத்து திரும்பவும் அதே கிளாசில்
உட்கார்ந்து ஒண்ணாம் வகுப்பு!!!!

ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவரின் மகன்
என்னோடு ஒண்ணாம் கிளாசில் படித்தான்.
அவன் தினமும் பள்ளிக்கு வர சாம்பார்
தூக்குச் சட்டி நிறைய்ய கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அழுகைதான். அதனால்
அவனுக்கு சாம்பார் என்றே பெயர் சூட்டினோம்.
கிளாசில் எப்போதும் தூங்கி வழியும் அவனை
ஒரு முறை ஒரு நண்பன் சொன்னான் என்று
சீண்டி தோப்புக்கரணம் போட்டேன். அதுவும்
பசங்க படத்தில் வருமே அது போல் ஒருத்தர்
தோளை ஒருத்தர் பிடிக்க “உன்னாலே நான்
கெட்டேன், என்னால நீ கெட்ட” என்று
பாடிக்கொண்டு அப்படியே தான். :)) (அப்படி
உக்கி போடும் போது என் காது தோட்டை
ஒருத்தி இழுத்துவிட ஓட்டை பெரிதானது.
அதை +2 படிக்கும்போதுதான் தைத்தோம்.
அந்த சீனை பார்க்கும் போது தானாக என்
கைகள் காதைத் தொட்டு பார்ததது)


இரண்டாம் வகுப்பு பெரிய்ய ஸ்கூலிலிருந்து
சின்ன ஸ்கூலுக்கு. அதாவது 1ஆம் வகுப்பு
இருந்தது 6,7,8 வகுப்புக்கள் இருந்த பெரிய
கட்டிடத்தில். 2,3,4,5 வகுப்புக்கள் இருந்தது
சின்ன கட்டிடம்(சின்ன ஸ்கூல், பெரிய்ய ஸ்கூல்)
இராமமூர்த்தி சார் கிளாஸ். வேட்டி கட்டிக்கொண்டு
டிபிகல் வாத்தியாராக ஆனால்” என்ன கலா!
என்னாச்சு, நீ படிக்கற பிள்ளையாச்சே! என்று
ஊக்கம் தரும் சார்” "சும்மா பிள்ளைய திட்டாத
ரத்னா!" என அம்மாவை திட்டுவார்.(அம்மாவும்
அவுங்க ஸ்டூடண்ட்)



3ஆம் வகுப்பு பட்டு டீச்சர். இவரது வகுப்பில்
படிக்கும்போது நடந்த ஒரு மறக்க முடியாத
நிகழ்வால்தான் எனக்கு அருமையான தாத்தா
ஒருவர் கிடைத்தார்.(அதெல்லாம் அடுத்த போஸ்ட்ல)


4 சுவாமியப்பன் சார் கிளாஸ். புதுகையில்
நடனப்பள்ளி வைத்திருந்தார். கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.
ஆங்கில கற்க ஆரம்பித்தது இங்கே தான். நான் தமிழ் மீடியத்தில்
தான் படித்தேன். அதுவும் அரசு உதவிபெரும் பள்ளியில்

5ஆம் வகுப்பு. எனக்கு மிகவும் பிடித்தது இந்த
வகுப்புதான். காரணம் கனகாம்புஜம் டீச்சர்.
அன்பாலே என்னை வென்றவர். இந்த வகுப்பில்தான்
நோட் புக்கில் எழுத பழகியது. அது வரை ஸ்லேட்தான்.
வேறு செக்‌ஷனில் இருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி
ராவ் சார்தான் வரலாறு,புவியியல் ஆசிரியர். குடுமி
வைத்திருக்கும் சார்தானேன்னு வாலாட்ட முடியாது
கம்பெடுத்து முதுகு பட்டையை உரிச்சிடுவார்.
(புதுகைக்கு பெருமை சேர்க்கும் அதிஷ்டானம்
புவனேஸ்வரி கோவிலில் மந்திரம் சொல்லிக்கொண்டு
சாயங்கால நேரங்களில் இருப்பார்)

ராமச்சந்திரன் சார் என்று ஒருவர். அவருக்கு
நாங்கள் வைத்த பெயர் லீவு சார். வி்டுமுறை
என்றால் அதை ராமச்சந்திரன் சார் வந்துதான்
சொல்வார். அவரைக்கண்டாலே லீவு எப்ப சார்?
என்று கேட்டு முறைப்பை பதிலாக பெற்ற
குறும்பு மாணவர்களும் உண்டு. :))
என் ஆரம்பப்பள்ளி வரை எங்கள் குடும்பத்தில்
அனைவருமே படித்தது இந்தப் பள்ளியில்தான்.


எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான விஷயம்
என் சின்ன தாத்தா(அம்மாவின் சித்தப்பா) அதே பள்ளியில்
ஹெட்மாஸ்டராக இருந்தாலும், அந்த பள்ளியே
எங்களுக்கு சொந்த மான பள்ளியாக இருந்தாலும்
தனி மரியாதை, ஷ்பெஷல் ட்ரீட்மெண்ட் ஏதுமில்லாமல்
மற்ற மாணவர்களோ்டு என்னையும் ஒரு சேர
பார்த்தது. பாகுபாடு இல்லாமல் அனைத்து
ஆசிரியர்களும் நடந்து கொண்டார்கள்.



புதுகையில் நடந்த என் திருமண ரிஷப்ஷனுக்கு
அம்மாவுடன் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளாக
அனைவரும் ஆஜர். அதனால் இன்றளவும் விரும்பும்
நேரத்தில் வீடியோவில் இவர்களை பார்க்க முடியும்.


ராணிஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேர்ந்த பிறகும்
ஓடி வந்து டீச்சர்களைப் பார்ப்பேன்.
அப்போது என் கனகாம்புஜம் டீச்சர் அடித்த
கமெண்ட்,” உங்க பேட்ச்சோட டீச்சருக்கு
இருக்கற மரியாதையே போயிடிச்சு கலா!!
உங்களுக்கெல்லாம் படிப்பு சொல்லிக்கொடுக்க
இஷ்டமா இருக்கும். இப்பல்லாம் ரொம்ப
கஷ்டமா இருக்கு!!!”

:))) வாத்தியார் மெச்சும் மாணாக்கர்கள் நாங்கள்.

21 comments:

நட்புடன் ஜமால் said...

வாத்தியார் மெச்சும் மாணாக்கர்களாக இருப்பதால் தான்

இம்பூட்டு பாடம் எடுக்குறியள்

pudugaithendral said...

இம்பூட்டு பாடம் எடுக்குறியள்//

உ.கு ஏதும் இல்லியே :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காதைத் தைச்சீங்களா ? :(

ம் நான் அடிக்கடி பெரிய தொங்கட்டான்களைப்போடும்போது சிலர் பயமுறுத்துவாங்க காது அறுக போதுன்னு .. :)

இந்த தொடரில் எனக்குஒரு பயம்.. முதல் டீச்சர் முதல் ஸ்குல் எல்லாம் சிலர் தங்கள் பாஸ்வேர்ட் ரெக்கவரிக்கு குடுத்து வச்சிருப்பாங்க்..இப்ப வெளியே வருதே.. :(

*இயற்கை ராஜி* said...

//மிட்டாய் கொடுத்து திரும்பவும் அதே கிளாசில்
உட்கார்ந்து ஒண்ணாம் வகுப்பு!!!!//

ரொம்ப strong foundation:-))

pudugaithendral said...

ஆமாம் கயல்,

காதை தெச்சதாலே 1/4 பவுனுக்கு மேல வெயிட்டா தோடு போட முடியாது.. :))

pudugaithendral said...

இந்த தொடரில் எனக்குஒரு பயம்.. முதல் டீச்சர் முதல் ஸ்குல் எல்லாம் சிலர் தங்கள் பாஸ்வேர்ட் ரெக்கவரிக்கு குடுத்து வச்சிருப்பாங்க்..இப்ப வெளியே வருதே.. //

ஆமாம் யோசிக்கப்படவேண்டிய மேட்டர்தான்

pudugaithendral said...

ரொம்ப strong foundation:-))//

ஆமாம். :(( :))

rapp said...

ஒவ்வொருத்தரும் இதில் கலக்குறீங்களே:):):)
//எனக்கும் என் தம்பிக்கு 8 வயது வித்யாசம்.
அதனால் வீட்டில் வேறு யாரும் இல்லாமல் போரடித்துக்
கொண்டு கிடப்பேன்.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........அப்புறம் தம்பியோ தங்கச்சியோ வந்தப்புறம் ரேகிங் பண்றது.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

//கிளாசில் எப்போதும் தூங்கி வழியும் அவனை
ஒரு முறை ஒரு நண்பன் சொன்னான் என்று
சீண்டி தோப்புக்கரணம் போட்டேன். //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......:):):)

ராமலக்ஷ்மி said...

அலுமினியப் பெட்டியில் புத்தகங்கள் கொண்டு போவது பெருமையா இருக்கும் அப்போ:)! நல்ல நினைவுகள்! அடுத்த போஸ்டுக்கு வெயிட்டிங்.

pudugaithendral said...

ஒவ்வொருத்தரும் இதில் கலக்குறீங்களே:):):)//

thanks

//எனக்கும் என் தம்பிக்கு 8 வயது வித்யாசம்.
அதனால் வீட்டில் வேறு யாரும் இல்லாமல் போரடித்துக்
கொண்டு கிடப்பேன்.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........அப்புறம் தம்பியோ தங்கச்சியோ வந்தப்புறம் ரேகிங் பண்றது.//

இதுக்கு நான் தான் அவ்வ்வ்வ்வ்வ்வ் சொல்லணும். ரேகிங் செஞ்சா அப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து என்
தோலை உரிச்சிடுவாங்க. :((

pudugaithendral said...

அலுமினியப் பெட்டியில் புத்தகங்கள் கொண்டு போவது பெருமையா இருக்கும் அப்போ:)! //

ஆமாம். ஆங்கில வழி கல்வி படிச்சவங்க அந்தப் பெட்டிலதான் கொண்டு போவாங்க. எனக்கும் அப்படி ஒரு பெட்டி கிடைச்சதும் நான் அடிச்ச பில்டப்பு(பொட்டி புத்தகம் வெச்சதும் செம கணம் கணக்கும். அதையும் தாங்கிகிட்டு வீறு நடை வேறு) :))

மங்களூர் சிவா said...

சூப்பர் கொசுவத்தி!

சாம்பார் மேட்டர் சூப்பர்!

மங்களூர் சிவா said...

/
புதுகைத் தென்றல் said...

காதை தெச்சதாலே 1/4 பவுனுக்கு மேல வெயிட்டா தோடு போட முடியாது.. :))
/

காதை பிச்ச தோழன் / தோழி வாழ்க
அய்த்தான் சார்பாக
மங்களூர் சிவா

கோபிநாத் said...

நல்ல கொசுவத்தி ;))

Anonymous said...

இயற்கைக்கு ஒரு ரிப்பீட்டேஎய்

நாமக்கல் சிபி said...

பள்ளிக்கால நினைவுகள் எல்லாம் சுகமானவை!

நாமக்கல் சிபி said...

//ரொம்ப strong foundation:-))//

பின்ன! பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருந்தாத்தானே பில்டிங்க் ஸ்ட்ராங்கா இருக்கும்!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சிவா.

காதை பிச்ச தோழன் / தோழி வாழ்க
அய்த்தான் சார்பாக //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோபி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

pudugaithendral said...

நன்றி சிபி