நட்பு இந்த சொல் எனக்குள் உண்டாக்கும் அதிர்வு
சொல்லில் அடங்காது.
இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு என் பதிவு
நண்பர் ரங்கா எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறார். நன்றி ரங்கா. மிக்க மகிழ்ச்சியாக
இருக்கிறது.
வலையுலகில் எனக்கு நிறைய்ய உறவுகள்.
மிகச் சிறந்த நட்பும் உண்டு. இதில் எனக்கு
மிக்கச் சந்தோஷம்.
ரங்கா இந்த விருதை ஏற்படுத்த காரணமாக
கூறியிருக்கும் காரணங்கள் மிக்க அருமை:
முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.
இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.
மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.
இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
1.முதல் சந்திப்பிலிருந்தே தோழி என்றழைத்து
பேசியவர் ஆதி(தாமிரான்னு சொன்னா புரியும்)இவருக்கு என் நட்பு விருது.
2. கார்பரேட் கம்பர் நர்சிம். சொல்லுங்க ஃப்ரெண்ட்
என்றழைத்து பேசும் தொனியிலேயே நட்பு உணரப்படும்.
இந்த நண்பருக்கும் என் விருது.
3. எனது 50ஆவது பதிவிற்கு வந்த நண்பர் ஹரி.
இன்றளவும் சாட்டிங் உண்டு. யூ டுய்பில் தான் ரசித்தது,
என நிறைய்ய பகிர்தல்கள். அவரது வலைப்பூ.
4. கயல்விழி முத்துலெட்சுமி இவரைப்பற்றி தெரியாதவங்க
உண்டா?? அவங்களுக்கு தோழியின் அன்புப் பரிசு இந்த விருது.
5. ஹைதையில் இருந்து கொண்டு முத்துச்சரத்துக்கு
விருது கொடுக்காவிடில் எப்படி?? முத்துச்சரம் தொடுக்கும்
ராமலக்ஷ்மியும் என் தோழி என்று சொல்லிக்கொள்வதில்
பெருமை.
6. ஊஞ்சல்னு சொன்னதும் இவங்க பெயர்தான் ஞாபகத்துக்கு
வரும். யெஸ் தாரணிப்பிரியாவுக்கு இந்த விருது.
7. அன்புடன் அருணா உங்களுக்கும் இந்த விருது.
பொறுப்பான ஆசிரியை வேலைக்கிடையே அழகான
கவிதைகள் சிம்பிளி சூப்பர்ப்.
8.மனதில் உறுதி வேண்டும் எஸ்,பி.பீ போல
மருத்துவருக்குள் இம்புட்டு திறமையா என நான்
வியக்கும் நண்பர் டாக்டர் தேவா. பின்ன என்ன?
இன்றைய அவரது பதிவில் இருக்கும் பென்சில்
ஸ்கெட்சிங் அவரே போட்டதுங்க.
9.என் வானம் அமுதா நல்ல தோழின்னு
சொல்வதில் சந்தோஷம். பாத்தா ஹாய் (சாட்டிங்கில்)
சொல்லாம இருக்க மாட்டாங்க.
10.சமீபத்தில் அறிமுகமாகிய நண்பர்.
வண்ணத்துப்பூச்சியாருக்கு என் விருது.
இவ்வளவுதானா என் நட்பு வட்டம் என்று நினைக்காதீங்க.
மிகப் பெரிய வட்டம்தான். இந்த விருது பகிரப்படும்பொழுது
வழங்க ஆள் வேணுமே!! அதான் பத்து பேரோடு
நிறுத்திக்கொண்டேன்.
இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :
1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.
2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.
3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
அப்படின்னு ரங்கா சொல்லியிருக்காரு.
நண்பர்களே நீங்களும் உங்கள் நண்பருக்கு
விருது கொடுத்து பெருமைப்படுத்துங்கள்.
26 comments:
விருதுகள் என்பது நம் அடையாளத்தை பிறர் மீது திணிக்கும் விஷயமல்ல..
நம் அன்பை பிறர்க்கு புரிய வைக்கும் விஷயம்.
இதை புரிந்துகொண்டால் விருது இனிக்கும், பதிவுகள் சிறக்கும்.
உங்களிடம் விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
:)
விருதுகள் என்பது நம் அடையாளத்தை பிறர் மீது திணிக்கும் விஷயமல்ல..
நம் அன்பை பிறர்க்கு புரிய வைக்கும் விஷயம்.//
பாராட்டுக்கள். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
ஸ்மைலிக்கு நன்றி சிபி
;-))
பத்தும் முத்து :)
நன்றி புதுகை...
அனைவருக்கும் வாழ்த்துகள்..
விருது பெற்ற அனைவர் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகள்....!
வாழ்த்துகள்! தங்களுக்கும் மற்றும் இங்கு பெற்ற அனைவருக்கும்.
ரங்கன் சொன்னதை வழிமொழிகிறேன்.
வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி அப்துல்லா
வருகைக்கு நன்றி வண்னத்துபூச்சியாரே
வருகைக்கு நன்றி அந்தோணிமுத்து
நன்றி ஜமால்
நன்றி புதுகைத்தென்றல்.. :)
இத உருவாக்கிய ரங்கனுக்கு பாராட்டுகள். வழங்கிய தென்றலுக்கு மனமார்ந்த நன்றிகள்.!
மிக்க மகிழ்ச்சி உங்களிடம் இருந்து விருது பெறுவதில். விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் (உங்களுக்கும் சேர்த்துதான்...)
விருதுக்கு வாழ்த்துகள் தென்றல்.. வாங்குவோருக்கும் வாழ்த்துகள்..
வாங்க கயல்
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஆதி
நன்றி அமுதா
நன்றி தியானா
நன்றி புதுகை தென்றல். சத்தியமாய் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ரொம்பவே சந்தோசம் + நன்றி
அன்புக்கு நன்றி தென்றல்! மகிழ்வாக உணர்கிறேன்!
விருது பெற்ற உங்களுக்கும் மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!
ஊரில் இல்லாததால் என் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பதிந்திடுவதில் சின்னத் தாமதம்:)!
வாழ்த்துக்கள் தாரணிப்ப்ரியா
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி
Post a Comment