Tuesday, July 21, 2009

எப்போன்னு காத்திருப்பாங்க போல இருக்கே....

கொஞ்சமாகத் தூறல் போட்டால் போதும்
அண்ணனும் தங்கையும் கோரஸாக
“லாலாலான்னு பாடுவாங்க” கொஞ்ச நேரம் கழிச்சு
நமுட்டு சிரிப்பு சிரிப்பாங்க. கடைசியா

”நாங்க இன்னைக்கு உங்க ரூம்ல படுத்துக்கலாமான்னு”
கேட்டு அப்பாவை மயக்கி சம்மதமும் வாங்கிடுவாங்க.
சில சமயம் நான் வரம் கொடுத்துவிடுவேன். :))

நேற்று அது போல நடந்து தலையணை, போர்வையுடன்
எங்கள் ரூமுக்கு வந்துவிட்டனர் இருவரும்.



இரவு படுக்கப்போகும் முன் கட்டாயமாக
கைகாள்களில் மாய்ச்சுரைஸர் க்ரீம் தடவிக்கொள்ள
வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறேன்.
பாதங்களில் கிரீம் தடவி சாக்ஸ் போட்டுக்கொண்டு
படுப்பதால் கால்கள் சுத்தமாகவும், மாய்ச்சுரைஸ்
செய்யப்பட்டும் இருக்கும்.

நேற்று நான், ஆஷிஷ், அம்ருதா மூவரும் க்ரீம்
தடவிக்கொண்டிருந்தோம். பிள்ளைகளை உசுப்பேத்த
தலையில் அடித்துக்கொண்டார் அயித்தான்.

உடனே முறைத்தாள் அம்ருதா..
சற்று நேரத்தில் குழிப்புண்ணுக்காக வாயில் மருந்து
தடவிக்கொண்டார் அயித்தான்.
“ இப்ப நீங்க மட்டும் என்ன செய்யறீங்களாம்” இது அம்ருதா.
நான் என்ன உங்களை மாதிரி பூசிக்கிட்டேனா? மருந்து
தடவிக்கறேன்.

”இதுவும் மருந்துதான் நீங்க வாயில தடவறீங்க
நாங்க கை,கால்ல தடவிக்கறோம்!!”

“அதானே!! நீங்க எங்களை மாதிரி வெயில்ல
போறதில்ல, ஏசிலதான் இருக்கீங்க. அதனால
உங்களுக்குத் தேவையில்ல. நாங்க அப்படியா??”
இது அண்ணன்.

என்ன பேசுவதென்று தெரியவில்லை!!!

சரி சரி தூங்குங்க!!! குட் நைட் என்று சொல்வதைத்
தவிர...

எப்போ கார்னர் செஞ்சு அட்டக்கலாம்னு
காத்திருப்பாங்க போல இருக்கே..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

10 comments:

நிஜமா நல்லவன் said...

present!

நிஜமா நல்லவன் said...

//எப்போ கார்னர் செஞ்சு அட்டக்கலாம்னு
காத்திருப்பாங்க போல இருக்கே..//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Sanjai Gandhi said...

:)

pudugaithendral said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்தான் நிஜம்ஸ்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சஞ்சய்

butterfly Surya said...

இது நல்லாயிருக்கு..

நட்புடன் ஜமால் said...

எப்போ கார்னர் செஞ்சு அட்டக்கலாம்னு
காத்திருப்பாங்க போல இருக்கே..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

டெர்ரரா இருக்கு வண்ணத்துப்பூச்சியாரே

pudugaithendral said...

ஆமாம் ஜமால்

மங்களூர் சிவா said...

:)))))))))))