Friday, September 25, 2009

மகதீரா!!!!!!!

1609 ஆண்டில் துவங்குகிறது படம். காலபைரவன்(ராம் சரண் தேஜா,
மெகா ஸ்டார் சிரங்சீவியின் மகன்) உதயகார்க பேரரசின் மெய்காப்பாளான்.
இவரின் குடும்பத்தாருக்கு ஒரு புகழ் உண்டு. போரில் 100 பேரையாவது
வெட்டி சாய்த்துவிட்டு 30 வயதுக்குள் இறந்துவிடுவார்கள்.

இளவரசி மித்ரா (காஜல் அகர்வால்)வும் காலபைரவனும் காதலிக்கிறார்கள்.
இராஜாவின் உறவினனும் மித்ராவை விரும்ப இருவருக்கும் இடையே
போட்டி நடக்கிறது. வென்றது காலபைரவன். உறவினன் நாடு கடத்தப்
படுகிறான். ஆனால் அவர்களது குடும்ப பாரம்பரிய கதையால்
அரசர் தனது மகளின் நீண்ட விவாக வாழ்விற்காக

காலபைரவனைக் கோர அவனும் இளவரசியை விட்டுக்கொடுத்து
மெய்க்காப்பளானாகவே இருக்க விரும்புவதாக கூறுகிறான்.

தேசத்தின் நலன் கருதி பைரவனுக்கு பூஜை நடக்கும் பொழுது
ராஜாவின் உறவினன், எதிரி நாட்டு மன்னன் ஷேர் கானுனுடன்(ஸ்ரீ ஹரி)
கலந்து ராஜாவை கொன்று பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து
போர் செய்ய காலபைரவன் 100 பேர்களை கொன்று போரி
புரிந்து கொண்டிருக்கும் வேளையில் இராஜாவின் உறவினன்
காலபைரவனையும், மித்ராவையும் கொன்று விடுகிறான்.
மலையின் உச்சியிலிருந்து இருவரும் கீழே விழுந்து இறக்கிறார்கள்.


400 வருடங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டில் காலபைரவன், மித்ரா,
வில்லன், ஷேர்கான் நால்வரும் மறுபிறவி எடுக்கிறார்கள்.




இந்த ஜென்மத்தில் பைக்ரேஸ் ப்ரியராக வரும் ஹர்ஷா( ராம் சரண் தேஜா)
அருமையாக நடித்திருக்கிறார். காதலர்கள் இணைகிறார்களா?
என்பதுதான் மீதிக்கதை.

ராஜர் காலக்கதையும் சரி இந்தக்காலக்கதையும் சரி
அலுப்புத்தட்டாமல் கொண்டு போயிருக்கிறார்கள். அதற்கே
ஷ்பெஷல் பாராட்டு தரலாம்.

பாவம், காமெடித் திலகம் ப்ரம்மானந்தாவைத்தான்
வீணடித்து இரண்டு காட்சியில் அடிவாங்கிக்கொண்டு
போய்விடுவதாக காட்டியிருக்கிறார்கள்.




57 நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது
இத்திரைப்படம். பாடல்கள் ”பஞ்சதாரா பொம்ம்” மெலடியாக
இனிக்கிறது.

15 வருடங்களுக்கு முன் சிரஞ்சிவியின் சூப்பர் ஹிட் பாடலான
”பங்காரு கோடிபிட்ட” இந்த படத்தில் ரீ மிக்ஸாக ஒளிக்கிறது.

அந்தக்காலப்பாடல் சிரஞ்சிவியின் நடனத்துக்காக அவரது
ப்ரத்யேக ரசிகர்களால் இன்றும் நினைவில் இருக்கிறது என்றால்
இப்போதைய பாடல் ராம் சரணின் ரசிகர்களுக்கு விருந்து தான்.

அப்பா ஆடிய ஆட்டம் டிஸ்கோ சாந்தியுடன்:



மகனின் ஆட்டம் முமைத் கானுடன்:
சிரஞ்சீவியும் ஒரு ஆட்டம் இதில் போட்டிருக்கிறார்.



எங்களுக்கு பிடித்திருக்கிறது.

ஆல் தி பெஸ்ட் ராம் சரண்.

11 comments:

Vidhya Chandrasekaran said...

நாக்கு தெலுகு தெலுசண்டி:)

நசரேயன் said...

நாக்கு தெலுகு ராதண்டி.. நேனு சாம்பர்வாடு

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா ஜெயா டிவீ ஹாசினி பேசும் படத்தில் சுகாசினி இந்தப் படத்தை பற்றி உருகிஉருகி பேசினார்.அப்புறம் ஆச்சர்யமாக விஷயம் அவரிடம் ராம்சரன் சுத்தத் தமிழில் பேசியது. சீக்கிரம் பாத்துடுறேன்.

மங்களூர் சிவா said...

இங்கு தமிழ் படம் போடக்கூடிய ஒரே தியேட்டரில் இந்த மஹதீரா படம் 3 வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் புது தமிழ்படம் பார்க்கமுடியவில்லை என கடுப்பில் இருந்தோம் நல்லா இருக்கு பிடிச்சிருக்குன்னு வேற சொல்லீட்டீங்க ட்ரை பண்ணிட வேண்டியதுதான்!

மங்களூர் சிவா said...

/
400 வருடங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டில் காலபைரவன், மித்ரா,
வில்லன், ஷேர்கான் நால்வரும் மறுபிறவி எடுக்கிறார்கள்.
/

ஐயோ ஆத்தா அந்த மாதிரி படமா :((((((

pudugaithendral said...

வாங்க வித்யா,

சந்தோஷம்

pudugaithendral said...

வாங்க நாசரேயன்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

சிரஞ்சீவி, நாகி, பவன் கல்யாண என் பல தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழ் தெரியும். (டாக்டர் ராஜசேகர் பேசுகிற தெலுங்கை கேட்க கொடுத்துவைத்திருக்க கூடாது :)) )

ராம்சரண் பேசியதில் ஆச்சரியமில்லை.

அவரின் முதல் படமான சிருதா விட இதில் கலக்கியிருக்கிறார்

pudugaithendral said...

ஐயோ ஆத்தா அந்த மாதிரி படமா//

பயப்படாம போயி பாருங்க சிவா.

வித்தியாசமா நல்லா எடுத்திருக்காங்க

Ananya Mahadevan said...

நானும் இந்தப்படம் பார்த்தேன். ஆயிரத்தில் ஒருவனைவிட மிகவும் நன்றாக இருப்பதாக தோன்றியது. அலுப்பு தட்டாமல் இருப்பதோடு, படமும் ரசமாக இருந்ததாகவே பட்டது. இந்தப்பையன் சென்னை பத்மா ஷேஷாத்திரிபள்ளியில படிச்சானாம். அதான் தமிழ் தெரிஞ்சிருக்கு. பகிர்வுக்கு நன்றி.

pudugaithendral said...

ஆமாம் அநந்யா

வருகைக்கு நன்றி