Tuesday, September 29, 2009

தென்றல் வந்தக் கதை..

ரெய்கி கற்ற பிறகு மெடிட்டேஷன் செய்வேன்.
சில சமயம் அபூர்வமாக ஏதாவது
மெசெஜ்கள் கிடைக்கும். அதாவது ஏதோ நிகழ போவது
போல். கண்ணை மூடினால் கம்ப்யூட்டர் மானிட்டர் போன்ற
ஸ்கிரீனில் தமிழ் எழுத்துக்கள் போகும். இப்படி பலமுறை
போக ஆரம்பித்த பிறகு யோசிக்க ஆரம்பித்தேன். நமக்கு
வரும் செய்தி தான் என்ன? என கூர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.


தமிழில் நான் எழுதுவது என்பது சாத்தியமில்லை என்பது
என் திடமான நம்பிக்கை. பதிவர் வண்ணத்துப்பூச்சியார்
அவர்கள் என்னை சென்னை இரயில் நிலையத்தில்
சந்தித்த போது அப்பாவும் உடனிருந்தார்.

என் டிரையின் கிளம்பிய பிறகு அப்பாவுடன்
பேசிக்கொண்டிருந்திருப்பார் போல.
என் எழுத்தைப் பற்றி சூர்யா சொல்ல அப்பா
சொன்னது சூர்யா அவர்களுக்கு செம அதிர்ச்சி.
“அவளுக்கு தமிழே வராது. தமிழ் படிக்க ரொம்ப
கஷ்டப்படுவாள்”!!!!!!! :))) எல்லோரும் சொல்வது
போல் தமிழ் தெரியாது என்று ஸ்டைலுக்காகச் சொல்லவில்லை.

தாய்மொழி தெலுங்கு. வீட்டில் அதுதான் பழக்கத்தில்
இருக்கும் மொழி. பேச்சுத் தமிழ் தெரியும். எழுத
படிக்கத் தெரியும். ஆனால் கதை, கட்டுரை, கவிதை
எல்லாம் எழுதும் அளவுக்கு தமிழ் தெரியாது. அதுதான்
மேட்டர்.

என்னைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதால்
“நாம எங்க தமிழ்ல எழுத போறோம்”!!! என மெசெஜை
லட்சியம் செய்யாமலிருந்தேன். 4 மாதங்கள் கழித்து
இம்சை அரசி அவர்களின் வலைப்பூ பற்றி விகடன்
வரவேற்பரையில் வந்திருந்தது. அதைப் படித்து
விட்டு இணையத்தில் அவரது வலைப்பூ தான் நான்
முதலில் படித்தது. அங்கேயிருந்து சில வலைப்பூக்களுக்கு
போய் படித்தேன். செம இண்ட்ரஸ்டிங்காக இருந்தது.

புத்தகம் வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.
இப்போது இணையத்தில் படிக்க வாய்ப்பு. இதுதான்
என்னை வலைப்பூ பக்கம் வரத் தூண்டியது.

பா.பா.சங்கத்தில் பக்கம் போனதில் மைஃப்ரெண்ட்
இமெயில் ஐடி கிடைத்தது. இம்சை அரசிக்கு
என் வாழ்த்தை சொல்லுங்கன்னு அவருக்கு ஒரு
மெயில் அனுப்பி ஆரம்பித்தது முதல் உறவு.

அந்த நேரம் பினாத்தல் சுரேஷ் அவர்கள்
Wifeology பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
படிக்க படிக்க இம்புட்டு பெண்கள் எழுதறாங்களே!
ஒருத்தராவது இவருக்கு எதிராக எழுதக்கூடாதா?
என ஆதங்கப்படுவேன்.

”நீங்களே எழுதுங்க அக்கா!” என்று மை ஃப்ரெண்ட்
ஊக்குவிக்க வலைப்பூ துவங்கினேன். இ கலப்பை
லிங்க் அனுப்பி, தமிழ் டைப் அடிப்பது எல்லாம்
சொல்லிக்கொடுத்தது அன்பு தங்கச்சி மைஃப்ரெண்ட் தான்.
மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

எத்தனையோ பெயர்கள் யோசித்து கடைசியில்
நான் பிறந்து வளர்ந்த ஊரான புதுக்கோட்டைக்கு
பெருமை!!! சேர்க்குமுகமாக புதுகைத் தென்றல்
என்ற பெயரில் பதிவெழுத ஆரம்பித்தேன்.
மும்மத பிரார்த்தனை பதிவுதான் என் ஆரம்ப
பதிவு. அது வித்தயாசமான துவக்கம்னு ரசிகன்
பாராட்டியிருந்தார். அப்பெல்லாம் என் பதிவுகளுக்கு
ரசிகன் தான் அதிகமா பின்னூட்டம் போட்டு
பாராட்டி, ஊக்குவித்து எல்லாம் செய்தார்.

அப்புறம் ஆரம்பமானது ஹஸ்பண்டாலஜி. :)))
செம காரசாரமான விவாதங்கள், வெளிநடப்புக்கள்
என ஜாலியா இருக்கும் ஹஸ்பண்டாலஜி வகுப்பறை.

அக்கா, அக்கான்னு பேசறவங்க கூட அவங்க
மனைவிகிட்ட என்னை அறிமுகப்படுத்த
பயப்பட்டாங்க!!! ஒரு டெர்ரரா அறிமுகமானோம்ல.
:)))

ஹஸ்பண்டாலஜி பதிவுகள் தந்த அறிமுகம்
என் எழுத்தை படிக்கவும் மக்கள் வந்தனர்.
”அட நாமும் தமிழில் எழுதி அதை நல்லா
இருக்குன்னு!”சொல்றாங்க என்பது சந்தோஷம். உபயோகமான
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளனும் என்பதுதான்
என் ஆசை. படிப்பவர்கள் ”புதுகைத் தென்றல் வலைப்பூ பக்கம்
போனோம்பா, நல்லா இருந்துச்சு, மைண்ட்ல
வெச்சுகிட்டு பின்னாடி யூஸ் செஞ்சுக்கலாம்”
எனும் எண்ணம் வரவேண்டும். இது தான்
ஆசை. உங்கள் அனைவரின் ஆதரவோடு
484 பதிவுகள் போட்டுவிட்டேன். இன்னும்
இரண்டு வருடங்கள் கூட முடியவில்லை
என்பது தான் சிறப்பு.

பதிவு எழுதுவது என்று ஆரம்பித்து இப்போது
ஒரு உலகமே உருவாகிவிட்டது.புது புது உறவுகள்,
நட்புகள் என அன்பு நிறைந்த உலகம் என்னுடையது.

கைவலி என்று பதிவு போடுவது
குறைந்துவிட்டாலும் ஆன்லைனில் பார்த்தாலே
அதட்டும் ஜீவஸ், ரங்கா, மங்களூர் சிவா
என அன்பு நெஞ்சங்கள். கை வலி பற்றி
எஸ்.எம்.எஸ் அடித்தாவது தெரிந்து கொள்ளும்
கோமா, மெயிலோ, போனோ செய்து பேசும்
நட்பு ராமலட்சுமி என எத்தனையோ கொடுத்திருக்கான்
இறைவன்.ஹைதையில் “தாரே ஜமீன் பர்” படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியை நான். ஆனால் அதிகமாக
டூர் போகும் வேலை அயித்தானுக்கு. நான் வேலைக்கு போனால்
பிள்ளைகளை சரிவர கவனிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக
வேலைக்குச் செல்லவில்லை. பார்ட்டைம் வேலை எல்லாம்
இந்தியாவில் சாத்தியமில்லை.( எங்கள் அப்பார்ட்மெண்டில்
இருக்கும் தோழி ஒருவர் டெல்லி பப்ளிக் பள்ளியில் ஆசிரியை.
என்னிடம் இருக்கும் நான் தயாரித்த புத்தகங்கள், பயிற்சி
எல்லாம் பார்த்து என்னை அவர்கள் பள்ளியில் ப்ர்ப்ரைமரி
இன்சார்ஜாக சேரச்சொல்லி ஒரே அடம்.)

படம் பார்த்துமுடித்தது மனதில் ஏதோ நெருடல்.
மாண்டிசோரி ஆசிரியையாக நீ வேலை பார்க்காவிட்டால்
என்ன? பெற்றோர்களுக்கு தேவையான டிப்ஸ்கள்,
சில்ட்ரன் சைக்காலஜி பற்றி, இப்படி நிறைய்ய சொல்லலாமே.
ஒரு ஆரோக்கியமான தலைமுறை பிள்ளைகள்
உருவாக உன்னாலான தகவல்களை பகிர்ந்து
கொள்ளலாமே!! என்று தோன்றியது.

அதனால் உருவானது தான் பேரண்ட்ஸ் கிளப். தம்பி இம்சை அவர்கள் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று கிளப்பில்

என்னோடு
* விசயக்குமார்

* Vidhoosh
* பேரன்ட்ஸ் கிளப்
* வண்ணத்துபூச்சியார்
* கிருத்திகா
* Jeeves
* அபி அப்பா
* சுரேகா
* பாச மலர், எம்.எம்.அப்துல்லா ஆகியோரும் எழுதி தேவையான
விழிப்புணர்வை வழங்குகிறோம்.

கானக்கந்தர்வன் யேசுதாஸ்- இவரது பாடல்கள் என்றால்
உயிர். அவரது பாடல்களை பதிய வேண்டும் என்ற
ஆசையுடன் ஆரம்பித்தது கானக்கந்தர்வன் வலைப்பூ.
யேசுதாஸ் அவர்களின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு
பாடல்கள் இங்கே இருக்கு. தம்பி நிஜம்ஸ், நாமக்கல் சிபி,
ஜி3,ஆகியோரும் என்னோடு இங்கே எழுதறாங்க.

தென்றல் வந்த கதைன்னு சொல்லி தென்றல்
செல்லும் பாதையையும் சொல்லிட்டேன் போல இருக்கு.

:))))))))))))))))

25 comments:

butterfly Surya said...

விரைவில் ஐநூறு பதிவுகளை அடைய வாழ்த்துகள்.

ரவி பாரதி ல/ Tivoli Garden ல சின்ன function வைப்பீர்களா..??

புதுகைத் தென்றல் said...

ரவீந்த்ர பாரதி/Tivoli Garden இது ஃப்ரீயா இல்லியாம்.

எங்க வீட்டுக்கு எதிர்ல இருக்கற பார்க்குல வெச்சுக்கலாம்.

:))))))

எம்.எம்.அப்துல்லா said...

// விசயக்குமார்
* Vidhoosh
* பேரன்ட்ஸ் கிளப்
* வண்ணத்துபூச்சியார்
* கிருத்திகா
* Jeeves
* அபி அப்பா
* சுரேகா
* பாச மலர் ஆகியோரும் //

எங்க என் பேரைக் காணோம்???

வெளிநடப்பு :)

ஆயில்யன் said...

தென்றல் செல்லும் பாதையில் இன்னும் பல பல புதுமைகளை தீண்டி செல்லட்டும் :)

வாழ்த்துக்கள் பாஸ் :))

கோபிநாத் said...

ஆகா...சொல்லிட்டிங்களா!!!..லிஸ்டுல ஒன்னு போச்சா!..ரைட்டு ;)

வந்த கதை நல்ல கதை தான். ஆமா அந்த ஜோசுதாஸ் பாட்டு அங்க இருக்கா?

ராமலக்ஷ்மி said...

இதமாய் வந்த தென்றல்
பதமாகவே பயணிக்கிறது..
சிலநேரம் சிலருக்கு
‘செல்ல’ டெரராய்
இருந்தாலும் கூட:))!

அழகாய் இன்னும் பதிவுகள்
பதினாறு இட்டு,
ஐநூறைத் தொட்டு
எங்களை மகிழ்விக்க
வீசியபடியே இருங்கள்
தென்றல், வாழ்த்துக்கள்!

இராகவன் நைஜிரியா said...

484 இடுகைகள் இரண்டு வருடத்தில். பிரமாதம். நான் 10 வருஷத்தில் கூட இவ்வளவு எழுதுவேணா என்றுத் தெரியாதுங்க.

பேரண்ட்ஸ் கிளப், கானகந்தர்வன் வலைப்பூ பற்றி இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். நேரம் கிடைக்கும் போது அவசியம் சென்றுப் பார்க்கின்றேன்.

புதுகைத் தென்றல் said...

எங்க என் பேரைக் காணோம்???

/
அட ஆமாம்.
கட் காபி பேஸ்ட் செஞ்சேன்.

வெளிநடப்பு :)/

இதெல்லாம் ஓவரு

புதுகைத் தென்றல் said...

நன்றி பாஸ்

புதுகைத் தென்றல் said...

ஆஹா மாட்டிவிட நினைச்சீங்களா கோபி.

அது சரி

புதுகைத் தென்றல் said...

சிலநேரம் சிலருக்கு
‘செல்ல’ டெரராய்
இருந்தாலும் கூட//

:)))))) இது தான் பல சமயம் நிஜம்.

நன்றி ராமலக்‌ஷ்மி

புதுகைத் தென்றல் said...

பேரண்ட்ஸ் கிளப், கானகந்தர்வன் வலைப்பூ பற்றி இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். நேரம் கிடைக்கும் போது அவசியம் சென்றுப் பார்க்கின்றேன்.//

அப்படியா இராகவன். கண்டிப்பா பாருங்க

வருகைக்கு நன்றி

மாதேவி said...

மென்மேலும் தென்றல் இதமாய் வீசி மகிழ்விக்கட்டும்.வாழ்த்துக்கள்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

தலை வணங்குகிறேன் அக்கா. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள்.. இன்னும் பல பதிவுகள் எழுதி எங்களுக்கெல்லாம் நிறைய விஷயத்தை எழுத்துச்சொல்ல இன்னொரு வாழ்த்துக்கள்..

இன்னும் நிறைய..
நிறைய எதிர்ப்பார்க்கிறோம். :-)

புதுகைத் தென்றல் said...

எல்லாம் தங்களருள் மைஃபிரண்ட் தங்கச்சி

புதுகைத் தென்றல் said...

நன்றி மாதேவி

அமுதா said...

வாழ்த்துக்கள் தென்றல். தென்றல் போன்று இதமானது உங்கள் வலைப்பூ. விரைவில் ஐநூறு தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

/
அக்கா, அக்கான்னு பேசறவங்க கூட அவங்க
மனைவிகிட்ட என்னை அறிமுகப்படுத்த
பயப்பட்டாங்க!!! ஒரு டெர்ரரா அறிமுகமானோம்ல.
:)))
/

ஐ அப்பிடியா இது தெரியாம நான்
:)))))))))))))

வித்யா said...

வாழ்த்துகள் கலா அக்கா.

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்.. இன்னும் பல பதிவுகள் எழுதி எங்களுக்கெல்லாம் நிறைய விஷயத்தை எழுத்துச்சொல்ல இன்னொரு வாழ்த்துக்கள்..

கும்க்கி said...

ஏங்க்கா... புயல் அடிச்ச கதையால்ல இருக்கு....

புதுகைத் தென்றல் said...

நன்றி அமுதா

புதுகைத் தென்றல் said...

ஐ அப்பிடியா இது தெரியாம நான்
:)))))))))))))//

ஹா ஹா ஹா ஹா

:))))))))))))))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

தென்றல் சில சமயம் புயலாய் வீசும்ல கும்க்கி அதான்.

:))))))