Tuesday, October 27, 2009

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... கொஞ்சம் வந்திட்டு போறது!!!

யாரைக்கூப்பிடறேன்னு பாக்கறீங்களா?? எல்லாம்
அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க, நட்புக்கள், உடன் பிறப்புக்கள்
எல்லோர் கிட்டயும்தான் பேசணும்னு.

எதைப்பத்தி??? கொஞ்சம் விவகாரமான மேட்டர்தான்.
சில ஆண்களுக்கு கோபம் கூட வரலாம். ஆனா
பிள்ளை வளர்ப்புன்னு வரும்போது ஆண்/பெண்
பாராபட்சம் ஏது? அதனாலதானே இருவரையும்
சேர்த்து ”பெற்றவர்கள்” அப்படின்னு ஒருவார்த்தை
இருக்கு.


மக்களை பெற்ற மகராசன்/மகராசியா இருந்தாலும்
சரி, மக்களை பெறப்போகும் மகராசன்/மகராசியா இருந்தாலும்
சரி உங்க கருத்தை கண்டிப்பா சொல்லிட்டு போங்க.

மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அப்படின்னு
எல்லோருக்கும் தெரியும்.(அதான் அத்தாதண்டி
பாட்டில்ல சின்னதா போட்டு வெச்சிருக்காங்களே!!)

இப்பல்லாம் பொது இடத்தில் புகை பிடிப்பதுக்கு தடா
போட்டிருக்காங்க. சீரியல்கள், சினிமா எல்லாவற்றிலும்
கண்டிப்பா குடிப்பது போல காட்சி வருது. என்னதான்
மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அப்படின்னு
விளம்பரம் போட்டு அந்த காட்சியை காட்டினாலும்
இப்படி பட்ட காட்சிகளினால் சின்ன பசங்களுக்கு கூட
90 கட்டிங், மிக்ஸிங் எல்லாம் செய்முறை விளக்கப்படமா
பாத்து மனசுல பதிஞ்சிடுது. இப்படி வசனமில்லாத
காட்சியில்லாத சினிமா,சீரியல் கிடையவே கிடையாது.

இந்த சூழல் வளரும் இளைய சமுதாயத்துக்கு தவறான
செய்தியை கொடுக்குதா இல்லியா? தீயவற்றை
பார்க்காதேன்னு காந்தியின் 3 குரங்கு பொம்மை கருத்து
சொல்லுது. ஆனா இப்ப பசங்க பார்ப்பதும் இதே,
கேட்பதும் இதேன்னுல்ல ஆச்சு, நமக்குத் தெரியாம
பேசவும் செய்வாங்க தானே???????



சரி இதுக்கு நாம என்ன செய்ய முடியும்??
நல்லா செய்யலாங்க. பதிவுலகம்னா சும்மாவா?
ஒருங்கிணைந்து ஏதாவது செஞ்சு இப்படி பட்ட
காட்சிகள் இடம்பெறாம தடுக்க ஏதாவது செய்வது
நல்லது. பசங்களுக்கு எப்படியும் தெரியத்தான்
போகுதுன்னாலும்... நாமளே அதுக்கு வசதி
செஞ்சு கொடுத்தா மாதிரி ஆகிடக்கூடாதுல்ல...

இன்னொரு முக்கியமான விடயம் ”குடிமகன்களின்”
வாரிசுகள். இவர்களின் நிலமை???
குடிமகன்கள் நாட்டுச் சரக்கு அடிக்கறவங்க மட்டுமல்ல
நாகரீகமாக பார்டிங்கற பேர்ல சேர்ந்து தண்ணியடிப்பது,
வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடறவங்க.. OCCATIONAL
DRINKERS அப்படின்னு தன்னைசொல்லிக்கிட்டு
குடிக்கிறவங்க, COMPANY கொடுக்கறேன்பான்னு
ஒரு பெக் அடிக்கறவங்க, மீட்டிங்க், கஸ்டமர்ஸ்
அது இதுன்னு காரணம் சொல்றவங்க எல்லாருமே
“குடிமகன்கள்” தான்.

இவங்க பசங்க இவங்களை பார்த்தே வளர்வதனால்
அவங்களும் குடிமகன்களின் வாரிசுகளாக கண்டிப்பாக
ஆக வாய்ப்புக்கள் அதிகம்.

”எங்கப்பாவே குடிப்பாரு, அவரு என்ன என்னை கேள்வி
கேட்பது” இது 34 வயதாகும் ஒரு இளைஞனின் கேள்வி!!!
இந்தக்கேள்வி கேட்பது அந்த ஆணின் தெனாவெட்டை
காட்டுதுன்னாலும், அவர் வளர்ந்த சூழலை காட்டுதே!!!!

நான் காலேஜ்ல படிக்கும்போது கூட படிச்ச பொண்ணு
ஒரு நாள் தன் வீட்டில் நடந்ததைச் சொன்னா!!
செம அதிர்ச்சி. அவங்கப்பா புகழ்பெற்ற வக்கீல்.
ஐயா வீட்டிலேயே “குடி”யும் குடித்தனுமா இருப்பாராம்.
ஒருநாள் தோட்டத்துல உட்கார்ந்து அப்பா கட்டிங்
அடிக்கும்போது பாத்துகிட்டே இருந்து 10வயது பையன்
எடுத்து குடிச்சிட்டாராம். மெல்லவும் முடியாம மிழுங்கவும்
முடியாம அப்பா தவிக்க, அந்தப் பையன் ஒரு சிப்
அடிச்சதுக்கே மயங்கி, நாக்கு குழறின்னு இருக்க
அம்மா அழுதாங்களாம்.

புருஷனை குடிக்காதயான்னு பொண்டாட்டி சொன்னா
எத்தனை பேரு கேப்பாங்க??? என் சுயத்துல தலையிடாதே!!
என் இஷ்டம். பொம்பிளைங்களுக்கே இப்படித்தான்,
புருஷன் குடிச்சா பிடிக்காதே, அட்வைஸ் செய்ய
ஆரம்பிச்சிடுவாங்க இதெலாம் ரங்கமணிகள்,
கிட்டுமணிகள் அடிக்கும் டயலாக்க்குகள்.

பொண்டாட்டி சொன்னா கேட்க வேணாம்.
ஐயா உங்க புள்ளையும் உங்களை போல
குடிமகன்களாக ஆகத்தான் வேணுமா??
(குடிக்கற்வங்களை மட்டும் தான் சாமி
கேக்கறேன். பொதுவா கேக்குறதா நினைச்சு
நான் குடிக்கலை அப்படின்னு சண்டை
போட்டு பின்னூட்டம் வேண்டாம்.)


பிள்ளைகள் வளர ஆரோக்கியமான சூழலை
தரவேண்டியது பெற்றோரின் கடமையாச்சே!!!
தன் பிள்ளை எப்படி வளரணும்னு நினைக்கறோமோ
அப்படி நாம வாழ்ந்து காட்டணும். ஆயிரம்
பேர் தப்பு செஞ்சாலும்,”எங்கப்பாவுக்கு அந்த
பழக்கமில்லை, அப்பா திட்டுவாருன்னு ஒரு
பயம் வந்தா பசங்க அந்தத் தப்பை செய்வாங்களா????


முக்கியமான விடயம் இந்தக் காலத்து பசங்களுக்கு
”எல்லாமும்” நல்லா தெரிஞ்சிருக்கு. ட்ரக்ஸ்,டிரிங்க்ஸ்
பத்தி பசங்க பேசினா பயப்ப்ட்டு கோவப்படாம
அவங்களை பக்கத்துல அமர்த்தி பேசணும்...

இதனால் ஏற்படும் தீமைகளை சொல்லிக்கொடுப்பது
நல்லது. 10 வயது முதலே இதைப்பத்தி
சொல்வது நல்லாதாங்க. பசங்க சைக்காலஜி
படிச்சவங்க சொல்றாங்க. அப்பாவுக்கு எந்த
தீயபழக்கமும் இல்லாம இருந்தும் பசங்க கெட்ட
பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறதுக்கு காரணம்
அப்பாவும்,அம்மாவும் வேலை வேலைனு ஓட,
பெத்தவங்களுக்கும் பிள்ளைக்க்கும் இடையே விழும்
இடைவெளி காரணம்.

பிள்ளைகளுக்கு குவாலிட்டி டைம் ஒதுக்கி அவங்களோடு
ஒரு நண்பனை போல இருந்து வழி நடத்திக்கொண்டு
வருவது தான் சரியான பிள்ளை வளர்ப்பு.

நீங்க என்ன சொல்றீங்க!!!!!

34 comments:

ஆயில்யன் said...

//இதனால் ஏற்படும் தீமைகளை சொல்லிக்கொடுப்பது
நல்லது.///


நல்லது கெட்டது சொல்ல வந்தா யாருங்க கேக்குறாங்க :))))

மத்தபடி விழிப்புணர்வி ஏற்படுத்தக்கூடிய விசயங்கள் நிறைய சொல்லியிருக்கிறதுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் :)

அபி அப்பா said...

நல்லாதான் சொல்லியிருக்கீங்க!நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! நல்ல மனுஷனுக்கு ஒரு குவாட்டர்:-))

குட் குட் நல்ல பதிவு!

pudugaithendral said...

வாங்க பாஸ்,

நல்லது கெட்டது சொல்ல வந்தா யாருங்க கேக்குறாங்க //

இப்ப ஞாபகத்துக்கு வருவது ஏதாவது செய்யணும் பாஸ் டயலாக் தான்.

pudugaithendral said...

நல்ல மனுஷனுக்கு ஒரு குவாட்டர்//

ஆஹா இதுதானே வேணாம்னு பதிவு போட்டேன்.

அவ்வ்வ்வ்வ்வ்

அபி அப்பா said...

செந்தழல் ரவி பாணியில் சொல்ல போனா மேலே உள்ள என் கமெண்ட்க்கு கும்பனி பொருப்பு ஏற்காது. அதனால் தயவு செய்து அதை அனானிமஸ் ஆக்கிவிடவும்:-))

Ungalranga said...

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும்...இப்பொ இருக்கும் நம்ம (பிள்ளை வரம்)பெற்றவர்கள் உஷாரா தான் இருக்காங்க..!!

ஆனா..பேச்சு தான் கம்மி.. மனசு விட்டு பேசுறது கிடையாது..

இன்னும் அவங்களுக்கே அதை பத்தியான கூச்சம் போகலை..

என்ன செய்ய..

அப்பாஸ், அம்மாஸ்..வாய் விட்டு பேசினா.. பிள்ளைங்க நோய்விட்டு வாழுவாங்க..

வாய்மூடி கண்டுகாம இருந்தா பிள்ளைங்க புகைவிட்டு பொசுங்குவாங்க..

எது வேணும் ..சூஸ் த பெஸ்ட் வாழ்க்கை!!

Thamira said...

OCCATIONAL
DRINKERS அப்படின்னு தன்னைசொல்லிக்கிட்டு
குடிக்கிறவங்க, COMPANY கொடுக்கறேன்பான்னு
ஒரு பெக் அடிக்கறவங்க,
அது இதுன்னு காரணம் சொல்றவங்க எல்லாருமே
“குடிமகன்கள்” தான்.//

அப்டீங்கறீங்க.?? அவ்வ்வ்.. எனக்கெதுக்கு அந்தக்கவலை? நா நல்ல புள்ளைப்பா.!

மோனிபுவன் அம்மா said...

”இந்த நல்ல கருத்தை நான் ஒரு நகல் எடுத்து வைத்துக்கொண்டேன் ”

ஏன் ?????????

என் கணவரிடம் காட்டதான்.


நன்றி

நல்ல கருத்தை எழுதவும்

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க என்ன சொல்றீங்க!!!!!//

அக்கா சொன்னா சரிதான் :)

மோனிபுவன் அம்மா said...

"புருஷனை குடிக்காதயான்னு பொண்டாட்டி சொன்னா
எத்தனை பேரு கேப்பாங்க??? என் சுயத்துல தலையிடாதே!!
என் இஷ்டம். பொம்பிளைங்களுக்கே இப்படித்தான்,
புருஷன் குடிச்சா பிடிக்காதே, அட்வைஸ் செய்ய
ஆரம்பிச்சிடுவாங்க இதெலாம் ரங்கமணிகள்,
கிட்டுமணிகள் அடிக்கும் டயலாக்க்குகள்.

பொண்டாட்டி சொன்னா கேட்க வேணாம்.
ஐயா உங்க புள்ளையும் உங்களை போல
குடிமகன்களாக ஆகத்தான் வேணுமா??
(குடிக்கற்வங்களை மட்டும் தான் சாமி
கேக்கறேன். பொதுவா கேக்குறதா நினைச்சு
நான் குடிக்கலை அப்படின்னு சண்டை
போட்டு பின்னூட்டம் வேண்டாம்.) "

ரொம்ப கரேட்டா சொன்னிங்க தென்றல்.

இதை எத்தனை போர் படித்து திருந்தபோறார்களோ தென்றல்

pudugaithendral said...

தயவு செய்து அதை அனானிமஸ் ஆக்கிவிடவும்/

:)))))

pudugaithendral said...

சூஸ் த பெஸ்ட் வாழ்க்கை!//

super

pudugaithendral said...

எனக்கெதுக்கு அந்தக்கவலை? நா நல்ல புள்ளைப்பா//

:))) வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்.

என்ன செய்யலாம்னு கருத்து சொல்லிருக்கலாமே (வந்தவங்க எல்லாம் ஓட்டு போட்டு முக்கியமான இடுகைக்கு கொண்டு போயிருந்திருக்கலாம்.)

pudugaithendral said...

இதை எத்தனை போர் படித்து திருந்தபோறார்களோ //

யோசிக்க ஆரம்பிச்சாலே போதும். வருகைக்கு நன்றி மோனிபுவன் அம்மா

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அப்துல்லா

Vidhya Chandrasekaran said...

கொஞ்சம்ன்னு சொல்லிட்டு பயங்கர நல்ல செய்திய சொல்லிருக்கீங்களே அக்கா.

மங்களூர் சிவா said...

/
நீங்க என்ன சொல்றீங்க!!!!!
/

நான் ஒன்னுமே சொல்லலீங்க :))

மங்களூர் சிவா said...

/
எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க என்ன சொல்றீங்க!!!!!//

அக்கா சொன்னா சரிதான் :)
/

ரிப்பீட்டு

pudugaithendral said...

நல்ல செய்திய சொல்லிருக்கீங்களே //

நன்றி வித்யா, என்ன செஞ்சா இந்த பிரச்சனை தீரும்னு உங்க கருத்தையும் சொல்லுங்க

pudugaithendral said...

வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி சிவா

cheena (சீனா) said...

ம்ம் செய்தி நன்று நன்று - மக்கல் புரிஞ்சிக்கணுமே - அதுதானெ பிரச்னை

ம்ம்ம்ம்ம்

Rajalakshmi Pakkirisamy said...

Good Post :)

வல்லிசிம்ஹன் said...

தென்றல், நல்லதொரு பதிவு.

வளர்ந்து வரும் பயங்கரம். இது. அதுவும் சென்னையில் இது ஒரு ஃபேஷனாவே போயிட்டு இருக்கு.
கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்வதால் வரும் தீமைகள் ஏராளம்.
கொன்க்ச நாள் குடியிலிருந்து விடு பட உதவும் ஒரு செந்டரில் கௌன்சிலிங் பயிற்சியாளராக இருந்திருக்கேன்.
அங்கே கேட்ட கதைகள் இன்னும் என்னைக் கதிகலங்க வைக்கும்.

சோஷியல் ட்ரின்கிங் என்பது வெளி நாட்டுக்குத் தான் பொருந்தும்.

பொதுவாகவே ரோல் மாடலாக இருக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.
பெண்ணிடமும் பிள்ளைகளிடமும் இந்தத் தீமையைப் பற்றிச் சொல்லி வைப்பது அவசியம்.
கோக், பெப்சி என்று ஆரம்பித்து வேறு எதிலோ போய் முடியும்.
சாதரணமாக அமைதியாய் இருப்பவர்கள் கொஞ்சம் உற்சாக பானம் எடுத்த பிறகு , செய்யத்துணியாத காரியங்களைச் செய்வார்கள். இதெல்லாம் அதிகமான வார்த்தைகள் இல்லை. சாதரணமகக் குடிக்க முடியும் என்று நிருப்பிப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை நாளுக்கு இப்படியே இருப்பார்கள் என்று தெரியாது.

கோபிநாத் said...

ரைட்டு அக்கா ;)

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி ராஜலட்சுமி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்க விரிவான பின்னூட்டம் பலரது கண்ணைத் திறந்திருக்கும்னு நம்பறேன்.

நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோபி

Yousufa said...

அக்கா,

நல்ல பதிவு;

குடிக்கும் பதிவர்கள் யாராவது அவர்கள் தரப்பை விளக்கி பின்னூட்டமோ, எதிர்ப்பதிவோ போடலாமே?

pudugaithendral said...

அவர்கள் தரப்பை விளக்கி பின்னூட்டமோ, எதிர்ப்பதிவோ போடலாமே?//

லாமே- வருமா???
வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு தென்றல்.

pudugaithendral said...

நன்றி ராமலட்சுமி

CHANDRA said...

குடி பழக்கத்தை வளர்த்து வரும் நம் அரசாங்கத்தின் செவிட்டு காதுகளில் இந்த பதிவு ஒலிக்கட்டும்.நல்ல இளைஞர்களை கேடுகெட்ட வழியில் இட்டு செல்லும் அரசாங்கம்.இன்னும் சிறிது காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, மிகப்பெரிய கேடு நிகழும் முன் இந்த குடியை ஒழிக்க வேண்டும்.உங்களை போல நிறைய பேர் எழுத வேண்டும்.”புதுகை தென்றல் புவி எங்கும் வீசட்டும்,இப்புண்ணிய பூமியின் புனிதம் காக்கட்டும் - வாழ்த்துக்கள்”

pudugaithendral said...

நன்றி சந்த்ரா