Wednesday, November 18, 2009

ஹைதை ஆவக்காய பிரியாணி- 18.11.09

லோக்கல் ட்ரையினில் அடிக்கடி பயணம் செய்யறவங்க
சீசன் டிக்கெட் வாங்குவாங்க. இதனால் ஒரு மாதத்துக்கு
தொல்லை இல்லை. சீசன் டிக்கெட் இருப்பதால் ஒரே
நாளில் பல தடவை பய்ணம் செஞ்சாலும் ஏதும்
பிரச்சனையில்லை.

அந்தந்த ஊர்களில் இருக்கும் லோக்கல் ட்ரையினில்
பயணிக்க மட்டுமே இது செல்லுபடியாகும். வேறு
ஊருக்கு போகும்போது அங்கே போய் டிக்கெட் வாங்க
வேண்டும். எதிர்காலத்தில் இந்த சிக்கல் இருக்காது.
India one எனும் கார்ட் கொண்டு வரப்போகிறார்கள்.

எந்த ஒரு மெட்ரோ நகரத்து ரயில் பயண சீசன்
டிக்கெட் வைத்திருந்தாலும் மற்ற மெட்ரோ நகர
ரயில்களில் பயணிக்கலாம். புதிதாக டிக்கெட்
வாங்க வேண்டியது இல்லையாம். ப்ரீபெய்ட்
போன் கார்ட் போல் நம் பயண எண்ணிக்கைக்குத்
தகுந்த வாறு பணம் கார்டில் குறையும். ரீசார்ஜ்
செய்து கொள்ளலாம்.

நல்லாத்தான் யோசிக்கறாங்க.

***********************************************
பத்தாம் வகுப்பு பரிட்சையை தள்ளுபடி செஞ்சாச்சு.
அடுத்த கட்டமாக மனித வள மேம்பாட்டுத் துறை
பன்னிரண்டாவது பரிட்சை எழுதும்
மாணாக்கர்களில் வெளிநாடு சென்று மேற்படிப்பு
படிக்க ஆசைபடுபவர்களுக்கு தேசிய அளவில்
ஒரு பரிட்சை வைக்க திட்டமிட்டுள்ளது.
SAT- SCHOLASTIC APTITUDE TEST (US)போல்
தேசிய அளவில் ஒரு தேர்வு வைப்பதால்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்
மாணவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கும்
வண்ணம் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

நம்ம காலத்துல இப்படியெல்லாம் யோசிக்காம
என்ன செஞ்சுகிட்டிருந்தாங்க??? :(( :))

*************************************

பெண்களிடம் ஒரு பகிர்தல்:

அந்த 3 நாட்கள் மேட்டருங்க. 24 மணிநேரத்துக்கு
பிரச்சனையில்லை(whisper shield போல)
எனும் ரீதியில் வரும் விளம்பரங்களைப்
பார்த்து அந்த வகை நாப்கின்கள் வாங்கும் ஆளா நீங்க??

மேட்டர் உங்களுக்கு. அத்தகைய நாப்கின்கள் உள்ளே
ப்ளாசிடிக் வைத்திருப்பார்களாம். அதனால் இன்ஃபெக்‌ஷன்,
அரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகமாம்.
பருத்தியிலானால் ஆன நாப்கின்கள் மட்டும் தான்
உபயோகிக்க வேண்டும்.

3 முறையாவது நாப்கினை மாற்ற வேண்டும்.
நம்ம நண்பர் எழுதிய இந்த பதிவும் ஞாபகம் வந்துச்சு.

மகளீர் நல மருத்துவர் சொன்னதாக சமீபத்தில்
கேள்விபட்ட இன்னொரு
செய்தியையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சாதாரண நாட்களில் கூட பேண்டியையும் 3
முறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை
டாய்லெட் உபயோகித்த பின்னர் தண்ணீர்
விட்டுக்கழுவி, டிஷ்யு பேப்பரால் ஒத்தி
துடைத்து ஈர்ப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது
மிக அவசியம்.


***************************************
புதுக்கோட்டை காரவுகளே, வாங்க ஒரு
சோகமான செய்தி இருக்கு. :(((((((

நம்ம ஊரின் பாரம்பரியச் சின்னம்,
கம்பீரமா இருக்கற இந்த ஆர்ச் இனி
காணக் கிடைக்காது. போக்குவரத்துக்கு
இடைஞ்சலா இருக்கு, இடிஞ்சு போனதை
இடிச்சோம், பக்கத்துலேயே இருக்கற டாக்‌சி
மார்கெட்டுக்கு கஷ்டமா இருக்குன்னு
என்னன்னவோ காரணம் சொல்லி சனிக்கிழமை
இடிச்சிட்டாங்களாம்.


வெள்ளைக்காரங்க கட்டினாங்க. அதனாலேயே
இந்த வளைவை பரமாரிக்க அவங்களே பணம்
கொடுத்துகிட்டு வர்றாங்களாம். இதை போய்
இடிச்சிருக்காங்களே.


ஏற்கனவே ராணி அரண்மனை போச்சு,
பிறகு குட்டிராணி அரண் மனையும் போச்சு
பெரிய அரண்மனை எப்பவோ காலி...

புதுக்கோட்டைன்னு ஒரு தொகுதி இல்லாம
நாலா பிரிச்சுவிட்டாங்க. புதுகை பதிவர்
நண்பர் சுரேகாவின் இந்தப் பதிவை படிங்க.


புதுக்கோட்டைன்னு ஒரு ஊரு இருந்துச்சாம்னு
சொல்லிக்கிற நிலமை சீக்கிரம் வந்திடும் போல
இருக்கே.........

:(((((((((((((((((((((((((((

**********************************************

21 comments:

துளசி கோபால் said...

சரித்திரத்தின் முக்கியம் தெரியாத பயலுவளா இருக்காங்களே(-:

இடிக்கறது சுலபம். கட்டுவது கஷ்டமுன்னு எப்பத்தான் தெரியப்போகுதோ?


பிகு: எங்கூர்லே பஸ்ஸுக்கு இப்படி ஒரு மெட்ரோ கார்ட் இருக்கு. பயணம் போகப்போக பஸ்ஸில் இருக்கும் ஒரு மெஷினில் கார்டை உரசுனாப் போதும். கழிச்சுக்கும்.

நிஜமா நல்லவன் said...

/புதுக்கோட்டைன்னு ஒரு ஊரு இருந்துச்சாம்னு
சொல்லிக்கிற நிலமை சீக்கிரம் வந்திடும் போல இருக்கே/

:((

pudugaithendral said...

சரித்திரத்தின் முக்கியம் தெரியாத பயலுவளா இருக்காங்களே//
ஆமாம் டீச்சர் அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு

pudugaithendral said...

எங்கூர்லே பஸ்ஸுக்கு இப்படி ஒரு மெட்ரோ கார்ட் இருக்கு.//

சிங்கையில பாத்திருக்கேன்

pudugaithendral said...

வாங்க நிஜம்ஸ்,

:((

Pandian R said...

புதுசா ரயில் கார்டு வாங்க சொல்லாம ஏற்கனவே பயன்பாட்டில இருக்கிற மும்பை சென்னை ரயில் கார்டுகளையும் எடுத்திக்கிட்டா நல்லது.

புதுகை ஆர்ச்.. போயே போச்சு! சரித்திரத்திற்கும் புதுக்கோட்டைக்கும் மிக தூரம்.

Jayashree said...

1 ) எங்க ஊரிலும் மெட்ரோ கார்ட் உண்டு. எனக்கு அது எப்பவுமே மத்த இடங்களை விட ஜாஸ்தினு படும் .


காட்டன் துணி என்னிக்குமே நல்லது. " WASH!!! " WESTERN COUNTRIESல வீட்டுல இருந்தாலொழிய கொஞ்சம் கஷ்டம் .ஆனா toilet tissue க்கு பஞ்சம் இல்லை மாத்துவதோட நிக்காம bladderஐ யும் அடக்கி வைக்காம அப்பப்போ நினைவா empty பண்ணனும். அது ladies bladder health க்கும் நல்லது.

3 ) ஒ.. நம்பகாலத்தில் கோண புளீயங்கா பறிச்சுண்டு இருந்தா போல இருக்கு. சரி, இப்ப இந்த தலைமுறைக்காவது செய்யணும்னு தோனியதே பெரிசு!!

pudugaithendral said...

ஆமாம் ஃபண்டு,

அதே மாதிரி ஒரு கார்ட் ஒரு முறை எடுத்தா போதும். எங்க வேணாம் உபயோகிச்சுக்கலாம்.
சரித்திரத்திற்கும் புதுக்கோட்டைக்கும் மிக தூரம்.//

பல சரித்திரச் சின்னங்கள் நம்மூ்ர்லதாங்க இருக்கு. ஆனா புதுக்கோட்டை இருந்ததுன்னு சரித்திரத்துல எழுதிடுவாங்க போல இருக்கு

pudugaithendral said...

மாத்துவதோட நிக்காம bladderஐ யும் அடக்கி வைக்காம அப்பப்போ நினைவா empty பண்ணனும். அது ladies bladder health க்கும் நல்லது. //

ஆமாம் ஜெயஸ்ரீ, சரியா சொன்னீங்க.
//நம்பகாலத்தில் கோண புளீயங்கா பறிச்சுண்டு இருந்தா போல இருக்கு//

:))))))வருகைக்கு நன்றி

காற்றில் எந்தன் கீதம் said...

nalla irukku akka

அ.மு.செய்யது said...

வாவ் !!!! நிறைய விஷயங்கள் இருக்கின்றன பதிவில்...

குட் ஒன் !!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி காற்றில் எந்தன் கீதம்

pudugaithendral said...

நன்றி செய்யது

ஹுஸைனம்மா said...

சுய சுத்தம் பற்றிய கருத்துக்கள் மிக அவசியமானவை. படித்த பெண்கள் கூட இதுபற்றி கவனம் செலுத்துவதில்லை.

Thenammai Lakshmanan said...

//நம்ம காலத்துல இப்படியெல்லாம் யோசிக்காம
என்ன செஞ்சுகிட்டிருந்தாங்க??? :(( :))//

Good question Puthukaith thendral

Thenammai Lakshmanan said...

//புதுக்கோட்டைன்னு ஒரு ஊரு இருந்துச்சாம்னு
சொல்லிக்கிற நிலமை சீக்கிரம் வந்திடும் போல
இருக்கே.........//

நானும் கேள்விப்பட்டேன் தென்றல்

ரொம்ப வருத்தமாக இருந்துச்சு

Anonymous said...

அந்த மூணு நாள் மேட்டர், ஒரே இதை நாள் பூரா எப்படி. ஃபிரஷாவே இருக்காதே. ஏதாச்சும் ஒருநாள் பிரயாணம்னா கூட முடியாதே.

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

//படித்த பெண்கள் கூட இதுபற்றி கவனம் செலுத்துவதில்லை//

ஆமாம். அதான் பிரச்சனை. இந்த விஷயத்தில் கொஞ்சம் அலட்சியம்னு கூட சொல்லலாம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க தேனம்மை,

ரொம்ப வருத்தமாக இருந்துச்சு//

வருத்தப்பட்டுக்க வேண்டியதுதான். என் பையன்(பிறந்தது புதுகையில்) நேத்து இந்த விஷயத்தைக் கேள்விபட்டு ஏன்மா?ஏன்மா இடிச்சாங்க? உடைஞ்சிருந்தாலும் நல்லா மெயிண்டென் பண்ணமுடியும், மனசுக்கு கஷ்டமா இருக்குன்னு, ஆயிரம் கேள்விகள் கேட்டு வருத்தப்பட்டுகிட்டே இருந்தான்.

:(((((((((((((

pudugaithendral said...

வாங்க சின்ன அம்மிணி,
//ஒரே இதை நாள் பூரா எப்படி. ஃபிரஷாவே இருக்காதே.//

ஆமாம்பா, ஆனா பலரும் மாத்துவதில்லையாம். :((( மருத்துவர் சொல்லி வருத்தப்பட்டார்.

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

பல செய்திகள் - பயனுள்ள செய்திகள் - பெண்கள் மூன்று முறை தினமும் மாற்ற வேண்டுமாம் - நடக்கற விஷயமா தென்றல் -

தண்ணீர் விட்டுக் கழுவுவதா - அயலகங்களில் எப்படிம்மா

புதுகையின் சரித்திர அடையாளங்கள் ஒவ்வொன்றாய் அழிக்கப் படுவது மன வருத்தத்தினைத் தருகிறது

நல்வாழ்த்துகள் தென்றல்