பல விடயங்கள் ஏன் செய்கிறோம் என்று தெரியாமலையே
செய்வோம். அல்லது இதுதான் பழக்கம் என்று செய்வோம்.
உண்மையில் அதன் அர்த்தம் புரியும்போது ஒரு பிரமிப்பே
ஏற்படும்.
திருமண சம்பிரதாயங்களும் அந்த வகைதான். தமிழ்
சம்பிரதாயங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது.
எங்கள் தெலுங்கு சம்பிரதாயத்தில் நடக்கும் விடயங்கள்
பலதுக்கு எனக்கு காரணம் தெரியாது அல்லது
சொல்லப்பட்ட காரணங்கள் சரியாக இல்லை.
ஆனால் இந்த சம்பிரதாயங்கள் சிலவற்றுக்கு காரணம்
ஒரு சிங்களத் திருமணத்தில் புரிந்த போது
பிரமிப்பாகவும், மனதுக்கு இனிமையாகவும் இருந்தது.
கொழும்புவில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின்
மகளுக்கு மவுண்ட் லவனியா ஹோட்டலில் திருமணம்
நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவருடன் திருமணம்.
சிங்கள முறைப்படி நடந்தது. வெளிநாட்டினருக்கு சடங்கின்
காரணம் புரிய வேண்டும் என்பதால் திருமணச் சடங்குகளும்,
அதன் கருத்துக்களும் பிரிண்ட் செய்து வந்திருந்த
ஒவ்வொருவருக்கும் கொடுத்திருந்தார்கள்.
படிக்க படிக்க பல விடயங்கள் புரிந்து கொண்டேன்.
திருமணத்தின் போது மாப்பிள்ளையின் கால்களைக் கழுவி
உள்ளே அழைப்பது பழக்கம். இந்த சடங்கு அங்கேயும்
நடை பெற்றது. மணப்பெண்ணிற்கு தந்தை இல்லாததால்
அண்ணன் அந்தச் சடங்கை செய்தார்.
(இந்த சடங்கிற்கு இங்கே சொல்லும் காரணம்
மணமகளும்,மணமகனும் திருமால், ஸ்ரீதேவி
அம்சம். அதனால் மணமகனை திருமாலாக
நினைத்து கால்கழுவி உள்ளே அழைப்பது
மரபு)
“தல்லி கடுபு சல்ல சீர”(தாயின் வயிறு குளிர புடவை)
எனும் பெயரில் பெண்ணின் தாயாருக்கு புடவை,
காய்கறிகள், அரிசி, பழங்கள் எல்லாம் மணமகன்
வீட்டார் கொடுக்கும் பழக்கம் உண்டு. இதற்கு
சொல்லப்படும் காரணம்” தன் வயிற்றில் சுமந்து
வளர்த்த மகளை அழைத்து போகிறார்களே
என்று தாய் வருந்தக்கூடாது” என்பதால் அவர்களுக்கு
மரியாதை செய்து மனைவியை அழைத்துப்போவார்
மணமகன்.
அங்கேயும் இந்தச் சடங்கு நடந்தது. மணமகளின்
தாயாருக்கு புடவை மற்றும் சில சாமான்கள் மூட்டையாக
கட்டி அவரிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கி
ஆசிர்வாதம் பெறுவார் மணமகன். மாமி அந்த
மூட்டையை தன் தலையில் தாங்கி எடுத்துச் செல்வார்.
அதற்கு அவர்கள் தந்திருந்த விளக்கம்,” என் மனைவியை
இத்தனை ஆண்டுகள் எனக்காக வளர்த்து கொடுத்ததற்கு
நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தச் சடங்கு” என்று
இருந்தது.
மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் எத்தனை புடவை
தருகிறார்கள்? அதில் பட்டுப்புடவை எத்தனை?
என பேசி முடிக்கும்போதே முடிவு செய்வார்கள்.
காலங்காலமாக எல்லோரும் கொடுப்பதால்
கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் மணமேடையில் மணமகளுக்கு மணமகன்
புடவை தருவது இனி உனக்கு உடை தந்து
பார்த்துக்கொள்வது என் கடமை என்று சொல்வதாக
அர்த்தம். (இந்தக் காலத்தில் பெண்ணும் சம்பாதிப்பதால்
தானே உடை வாங்கிக்கொள்ளும் நல்ல நிலை
இருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்த நிலையில்
சொல்லாமல் சொல்லி மனைவியை பார்த்துக்கொள்ளும்
பொறுப்பு கணவனுடையது என்று சொல்லி அதை
நல்ல துவக்கமாக திருமணத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறார்கள்)
திருமணச் சடங்குகளிலேயே வெட்கமும், கேலியுமாக
நடை பெறுவது உண்ணும்போது ஒருவருக்கொருவர்
ஊட்டிக்கொள்வது தான்.
அழகான தட்டில் பால்சோறு கொண்டுவரப்பட்டு
அதை கணவன் மனைவிக்கு ஊட்டும் நிகழ்ச்சிக்கு
கொடுக்கப்பட்டிருந்த விளக்கம்.”இன்றிலிருந்து
உன் வயிறு காய்ந்து விடாமல் உனக்கு
உண்ண உணவு நான் தருகிறேன். இது என்
கடமை.” என்று சொல்வதாம்.
காரணம் புரிந்த போது
ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது பல விடயங்கள் புரிஞ்சது.
21 comments:
பலே!
:)
வருகைக்கு நன்றி ஃபண்டு
வருகைக்கு நன்றி சிவா
நாமும் கற்றுக் கொள்ளக் கூடியதா இருந்துச்சு
//திருமணச் சடங்குகளிலேயே வெட்கமும், கேலியுமாக
நடை பெறுவது உண்ணும்போது ஒருவருக்கொருவர்
ஊட்டிக்கொள்வது தான்
//
அதுக்கு அப்புறம் பொண்டாட்டி ஊட்டிவுடுறது எப்பயாவது முடியாம படுத்துக்கிடந்தாத்தான் :))
வாங்க பாஸ் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.
நன்றி
அதுக்கு அப்புறம் பொண்டாட்டி ஊட்டிவுடுறது எப்பயாவது முடியாம படுத்துக்கிடந்தாத்தான் :))//
இதுக்கேன் முடியாம படுக்கணும். நல்லா இருந்தாலும் ஒரு நாள் உன் கையால சாப்பிடணும்னு இருக்குன்னு சொல்லி ஊட்டச் சொல்லலாமே.(கல்யாணத்தக்கப்புறம் எத்தனை ரங்க்ஸ் ஊட்டறாங்க. அதுவும் அன்னிய பொழுதோட சரியாச்சே.... :))) தங்க்ஸுக்கு முடியலன்னா ரங்க்ஸ் ஊட்டறது கூட கிடையாது. :)))
அப்துல்லா அண்ணே சீனியர் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
:)))))
ரொம்ப சந்தோஷம், பல விடயங்கள் புரிஞ்சது.
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.
அம்மி மிதித்தல்
அருந்ததி பார்த்தல்
தாலி
கெட்டி மேளம்
தீவலம் வருதல்
திலகமிடல்
இன்னும் இன்னும்.
ஆனால் சொல்லப் போனால் ஆணாதிக்கம் என்று சொல்லிவிடுவார்கள்.
சோ, கப் சிப்
தாய்க்குச் சீர் கொடுப்பது இதுதான் முதல் தடவையாகக் கேள்விப்படுகிறேன். மனம் இனிக்கிறது. எவ்வளவு முறையாகச் சடங்குகள் ந்நடந்திருக்கின்றன.
பால் சாதம் ஊட்டுவதற்கு இப்பத்தான் அர்த்தம் புரிகிறது. மிக நல்ல பதிவு தென்றல். நன்றி
:) :) :)
பல திருமணச்சடங்குகள் பொருள் பொதிந்தவையே - காலம் காலமாக செய்யும் சடங்குகள் இன்று சடங்காகத்தான் செய்யப்ப்டுகின்றன - என்ன செய்வது - பொருள் புரியாமல் ஏன் செய்கிறோம் எனத் தெரியாமல் - செய்ய வேண்டும் என்பதற்காகவே செய்ய்ப்படுகின்றன
நல்வாழ்த்துகள் புதுகைத் தென்றல்
//”இன்றிலிருந்து
உன் வயிறு காய்ந்து விடாமல் உனக்கு
உண்ண உணவு நான் தருகிறேன். இது என்
கடமை.” என்று சொல்வதாம்.//
இப்படி ஒரு காரணம் இருக்கிறதா:)?
இப்போ எல்லா திருமணங்களிலும்தான் ஒருவருக்கொருவர் ஊட்டுகிறார்களே பந்தியில் முதலில் சேர்ந்து சாப்பிட அமருகையில். இதையே பொண்ணும் சொல்வதாகக் கொள்ளலாம் அப்போது:))!
நன்றி சிவா
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.//
ஆமாம் இருக்கு. பல விடயங்கள் பேசிவிட முடியாதுதான். :((
வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்
வாங்க வல்லிம்மா,
தெலுங்கு சம்பிரதாயத்தில் தாய் மகளுக்கு தாலி கட்டுவதும் உண்டு. வெங்கலப்பானை நிறைய்ய லட்டு வைத்து அதில் கருகமணி கட்டி கொளரியின் அருகில் வைத்து கொளரி பூஜை செய்து, மணமேடைக்கு வருவாள் மணம்கள்(கூடையில் மாமாக்கள் தூக்கி வருவார்கள்)
மணமகன் தாலி கட்டியதும் தாய் அந்தத் தாலியை நாகவல்லியின் போது கட்டுவாள். 3 மணமகன் கட்டும் தாலி, 1 அம்மா கட்டுவது என 4 தாலி அணியும் பழக்கம்.
வருகைக்கு நன்றிம்மா
3ஸ்மைலியா நன்றி ராஜலக்ஷ்மி
ஆமாம் சீனா சார்,
ஏன் எதுக்குன்னு சொல்லி அர்த்தம் புரிந்து செய்வதால் மன ஈடுபாட்டோடு செய்யலாம்.
வருகைக்கு நன்றி
இதையே பொண்ணும் சொல்வதாகக் கொள்ளலாம் அப்போது//
:))) கொள்ளலாம். ஆனால் அந்தத் திருமணத்தில் மணமகன் தான் ஊட்டினார். பெண்ணுக்கு இயல்பாகவே தாய்மை உணர்வு உண்டு, திருமணம் ஆணை தாயுமானவன் ஆக்குகிறது
நன்றி ராமலக்ஷ்மி
Post a Comment