Saturday, November 14, 2009

இப்படியும் ஒரு தொடர் பதிவு போடலாம் வாங்களேன்!!!

ஒரு ஊருக்கு போவதென்றால் நாம் யோசிக்கும்
முதல் விடயம் எங்கே தங்குவது????

உறவினர் இருக்கும் ஊருக்குப்போனாலும்
இப்போது இருக்கும் காலகட்டத்தில் கூட்டமாக
(2 பேருன்னாலும் கூட்டம்தான்) சென்று
தங்குவது உசிதமல்ல. இதில் ஆண்களுக்கு
பர்ஸ் இளைக்கும் என்பதைத் தவிர வேறு
ஏதும் உபத்திரவம் இல்லை.

ஆனால் மற்ற வேலைகள் வீட்டின் பெண்ணிற்கு
அதிக சுமையாகிவிடும். ஹோட்டலில் தங்குவது
என்றால் பட்ஜட்டில் பெரிய கம்பிளி விழும்.

தவிர என்னுடைய எண்ணம் என்னவென்றால்,
ஊர் சுத்திப்பார்க்க போகப்போகிறோம், இரவு
ஓய்வெடுக்கவும், நம் பெட்டிகளை வைக்கவும்
தான் இடம் வேண்டும். இதற்கு என் சாய்ஸ்
PAYING GUEST ACCOMODATIONS.

SERVICED APARTMENTS, PAYING GUEST ACCOMODATIONS
இவை நம் பட்ஜட் போலவும் இருக்கும். ஹோட்டலை
விட வீடு போலவும் இருக்கும். பல இடங்களில்
காலை உணவும் சேர்ந்தே இருக்கும்.

பதிவர் வினிதா இப்படி பின்னூட்டமிட்டிருந்தார்.

//ஏற்கனவே கேட்டது தான், பள்ளி விடுமுறை ( கிறிஸ்துமஸ், நியூ இயர் ) சமயம் அங்கு குடும்பத்தோடு எங்கு வந்து தங்கலாம்?

ரிசசென் சமயம், பெங்களூரிலிருந்து பட்ஜெட் வைத்து தான் வருவோம்!

ஒரு ரிப்பீட்டு பதிவு போடுங்க ப்ளீஸ்!//

ரொம்ப நாளாகவே எனக்கு இதைப் பற்றிய
பதிவு போட வேண்டும் என்பது என் விருப்பம்.

தோழி கேட்டபின் உடனடியாக போடுவது என்று
முடிவெடுத்துவிட்டேன்.

ஹைதை, சென்னை,பெங்களூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களில்
எனக்குத் தெரிந்த PAYING GUEST ACCOMODATIONS
பற்றி ஒரு பதிவு விவரங்களுடன் போடப்போகிறேன்.


இது போல சுற்றுலா தலங்களில், தலைநகரங்களில்,
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்ஜட் ஹோட்டல்கள்,
PAYING GUEST ACCOMODATIONS ஆகியவற்றின்
விவரங்களுடன் பதிவிட வேண்டுகிறேன். இது
பலருக்கு உதவியாக இருக்கும்.


உதவ விரும்புபவர்கள், பதிவிடுங்களேன்.
பதிவு போட நேரமில்லை என்றால் விவரங்களை
எனக்கு மடலிடுங்கள். நான் பதிவு போட்டுவிடுகிறேன்.

அனைவருக்கும் நன்றி

10 comments:

Siva said...

Appreciate u'r thinking...waiting for the post!

பிரபாகர் said...

நல்ல முயற்சிங்க... பயனுள்ளதாய் இருக்கும், வாழ்த்துக்கள்....

பிரபாகர்.

pudugaithendral said...

நன்றி சிவக்குமார்,

தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

pudugaithendral said...

நன்றி பிரபாகர்,

பதிவு சீக்கிரமே வரும்.

மங்களூர் சிவா said...

சூப்பர்!

எப்பிடி இருந்தாலும் ஹைதராபாத்ல உங்க வீட்டுல டேரா போடறது போடறதுதான்
:))))

pudugaithendral said...

ஆமா, இப்படியே சொல்லிக்கிட்டுத்தான் இருக்கீங்களேத் தவிர வர்ற வழியைக்காணோம்.

மங்களூர், கூர்க் பகுதிகளுக்கு உங்களை tag செய்கிறேன் சிவா. கண்டிப்பா பதிவு போடுங்க

cheena (சீனா) said...

எப்படி எல்லாம் சிந்திக்கறாங்கப்பா - தேவையான பதிவு தான் - உண்மை

மக்களே உதவுங்கள்

நல்வாழ்த்துகள் புதுகைத்தென்றல்

நட்புடன் ஜமால் said...

நல்ல முயற்சி :)

Pandian R said...

நல்லா யோசிக்கிறீங்க. வாசிக்கக் காத்திருக்கிறோம்!

pudugaithendral said...

வந்திருக்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.

தேவையான தகவல்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவு வரும்.

நன்றி