Sunday, December 13, 2009

புயலும், மழையும் பின்னே கொசுவத்தியும்...

புயல், மழைக்கெல்லாம் கொசுவத்தியான்னு!!! கேக்கறீங்களா?
ஆமாங்க எல்லாமும் நம்ம வாழ்க்கையில விளையாண்டிருக்குல்ல!!

ஒவ்வொரு வருஷம் நான் அசை போடும் நிகழ்வுகளில் இதுவும்
ஒண்ணு. டிசம்பர் 16 முதன் முதலில் ஹைதை வந்ததும் இந்த
நாளில்தான், குட்டி ஆஷிஷோடு ஹைதைக்கு முதன் முதலில்
வந்ததும் அந்த நாள் தான்.

13 வருடங்களுக்கு பிறகும் மனதில் அப்படியே சிம்மாசனம்
போட்டு இருக்குது அந்த நாள். காரணம்??? அதுதான் கொசுவத்தி.

அக்டோபர் 7 ஆஷிஷ் பிறந்தது. பேருக்கு 3ஆவது மாசம்
”நான் ஊருக்கு போவேன்னு: கிளம்பிட்டேன். அயித்தான்
மட்டும் தனியே இருப்பதால் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு
இருந்தாரு(கல்யாணத்துக்கு முன்னாடி ஹோட்டல்லதான் சாப்பிட்டுகிட்டு
இருந்தாலும், நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல!!)

குழந்தை பிறந்து மகளை கொண்டு விடுவதுன்னா சும்மாவா!
அப்பா, அம்மா கூட வந்தாங்க. அப்பா சென்னை வரை,அம்மா ஹைதை வரை.

சனிக்கிழமை இரவு இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் புதுகையிலிருந்து
நான், அப்பா, அம்மா குட்டி ஆஷிஷ் எல்லோரும் கிளம்பினோம்.
s4 கோச் முழுவதும் புதுகை கோட்டா. எங்க ஊர்க்காரவுங்க தான்
எல்லோரும். அப்பாவைத் தெரியாதவங்க உண்டா!!

“என்ன ரமணி சார், பாப்பாவை(!!) கொண்டு விட போறீங்களா?”
“பேரனா சார்! சந்தோஷம் சார்”னு எல்லாம் அப்பா கூட பேசிக்கிட்டு
இருந்தாங்க.

இரவு பேருக்கு படுத்து, தூங்காத ஆஷிஷுடன் போராடி
எப்பவோ தூங்கிப்போயி விடிஞ்சா சென்னையை சேர்ந்திருப்போம்னு
கண்ணத் தொறந்தா வண்டி நிக்குது சிதம்பரத்தில்!!!

”இதுக்கு முன்னாடி கிளம்பின கம்பன் எக்ஸ்ப்ரஸ் கூட அப்படியே
நிக்குது சார், மத்த ட்ரையினுங்களும் கூட நிக்குது”ன்னு அப்பாவோட
ப்ரெண்ட் வந்து சொன்னாங்க.

சரி நம்ம இந்திய ரயில் என்னைக்கு சீக்கிரமா போயிருக்குன்னு
இருந்தோம். வண்டி நகர்ற பாடே தெரியலை!!!

காலையில் சென்னையை சேர்ந்திடுவோம் என்பதால் கையில
சாப்பாடு ஏதும் எடுத்துக்கலை. வயிறு பசி. எங்க வண்டி
சிதம்பரம் ஷ்டேஷன் கிட்ட நின்னதால் தம் டீயாவது குடிக்க
கிடைச்சுது. கைவசம் பிஸ்கட் எப்பவும் இருக்கும் அதானால
அன்னைக்கு காலை உணவு டீயும், பிஸ்கட்டும்தான்னு
நினைச்சோம். மணி ஆவுது வண்டி கிளம்பற வழியைக்
காணோம். அப்புறமாத்தான் மேட்டர் தெரிஞ்சது.


பெஞ்ச மழையில ட்ராக் தண்ணியில மூழ்கிருக்கு.
வண்டி போவது கஷ்டம்னு!!! கைக்குழந்தையுடன்
ட்ரையினில் அம்மாடி அந்தக் கஷ்டம்!!!






ஞாயிறு மாலை 7 மணியாகியும் வண்டி சிதம்பரத்தை
விட்ட அகலல. அப்பா திங்கள்கிழமை காலை அப்பா
ஆபிஸ் போயே ஆகணும் அதனால,” அம்மாவும் நீயும்
சென்னை போயிடுங்கன்னு” அப்பா பாதிவழியிலேயே
புதுகைக்கு திரும்ப முயற்சி செய்ய கிளம்பிட்டார்.


வண்டில இருக்கறவங்க அக்கம் பக்கத்து ஊர்களுக்குள்ளாற போய் சாப்பாடு
ஏதும் கிடைக்குதான்னு பாக்கப்போனாங்க! கிடைச்சதை
கொண்டு வந்து எல்லோரும் பகுந்து சாப்பிட்டோம்.
அதுலயும் கைக்குழந்தைக்காரின்னு என் வயிறு நிறைய்யற
மாதிரி எல்லோரும் பாத்துக்கிட்டாங்க.அம்மாவுக்கு அவங்களே
வாங்கிக்குடுத்தாங்க. (இப்பல்லாம் புதுகைக்குன்னு ஒரே
கோச் போடுறதில்லை)


மெல்ல மெல்ல நகர்ந்த ட்ரையின் கடலூர் வந்துச்சு.
அங்க ஒரு 3 மணிநேரம் வாக்குல இருந்து திங்கள்கிழமை
அதிகாலை 6 மணிக்கு எக்மோர் ஷ்டேஷன் வந்து
சேர்ந்தோம். நாத்தனார் வீடு ரயில்வே குவார்டர்ஸ்லதான்.
நேரே அங்கேதான் போனோம்.

ஸ்ரீராமின் அண்ணா வியாசர்பாடியில இருந்தார். மாமியாரும்
அங்கேதான் இருந்தாங்க. அவங்க பேரனை பார்க்கணும்னு
ஆசைப்பட்டதா சொன்னாங்க.(உடல்நிலை சரியில்லாதவங்க)
எக்மோர்லேர்ந்து வியாசர்பாடி போகும் பாதை மழையில
பாதிப்பு, பிரிட்ஜ்ல தண்ணி. மணலி எல்லாம் சுத்தி
வியாசர்பாடிக்கு ஆட்டோல போய் பேரனை காட்டிட்டு
வந்து அன்றைக்கு சாயந்திரம் ட்ரையினில் ஹைதைக்கு
புறப்பட்டு 16ஆம் தேதி செகந்திராபாத்தில் காத்திருந்த
அயித்தானைப் பார்த்து அழணும்போல ஆயிடுச்சு.


நாங்க கிளம்பும்போது இல்லாத மழையும், புயலும்
சடனா வந்து 14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய
எங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு. புதுகை-சென்னை
48 மணிநேரப்பயணம் கைக்குழந்தையுடன் இருந்தாலும்,
நடுவில் அப்பா ஊருக்குத் திரும்பும் அவசர சூழல் இருந்தாலும்
அதிகம் கஷ்டம் தராமல் இருந்தது அன்பு மிகு புதுகைவாழ்
மக்களால்தான்!!

எங்க ஊர் மக்களுக்கு என் நன்றி.

33 comments:

நட்புடன் ஜமால் said...

கொசுவத்தி எதுலையும் சுத்தனும்

pudugaithendral said...

:)))

சிங்கை நாதன்/SingaiNathan said...

//தம் டீயாவது //

தம் & டீ இல்லையே ;)

அன்புடன்
சிங்கை நாதன்

பூங்குன்றன்.வே said...

ட்ரைன்ல போறதுல இவ்ளோ கஷ்டம் இருக்காங்க?ஏன்னா நான் எப்பவும் ப்ளைட் தான் :)

Prathap Kumar S. said...

சொசுவத்தி பதிவு செம டரியல்... ரயிலு போக முடியாம மாட்டிகிட்டா டர்ர்ர்ர்ர்...அதுவும் கைக்குழந்தையோட..நல்லவேளை ஊருக்குள்ள இருந்ததால பெரிய பிரச்சனை இருந்திருக்காது.

நான் ஒருதடவை நட்டநடுகாட்டுக்குள்ள மாட்டிகிட்ட அனுபவம் இருக்கு...டாராயிட்டேன்...

Prathap Kumar S. said...

வலைப்பதிவுக்கு திருஷ்டிபுள்ளையாரு வச்சு முதல் பதிவர் நீங்கதான்... முடில
டெக்னாலஜீக்கே இந்தகதியா?

நட்புடன் ஜமால் said...

இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் புதுகையிலிருந்து]]

எங்கட ஊர் வழியாத்தான் போகும் ...

ஹுஸைனம்மா said...

எங்க சுத்தி எங்கப் போனாலும் புதுகையை ஒரு தூக்கு தூக்கிவிடாமப் போறதில்லன்னு முடிவா? அடுத்த தரம் எம்மெல்லேக்கு நில்லுங்க, அவ்வளவு ஆதரவு இருக்கும்.

கண்மணி/kanmani said...

ஆத்தா முன்னமே தெரிஞ்சிருந்தா எங்கூட்டுலேந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருப்பேனே தாயீ..ஆனா என்ன போன் பண்ணா லைன் கட்டாயிருந்திருக்கும்.மொபைல் சார்ஜ் போட கரண்ட் இருக்காது.நான் எங்க ஏரியாவுல இருந்து ஸ்டேஷனுக்கு வரனுமின்னா பரிசல் ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும்.ஸ்டேஷ்னே முழுகிச்சுன்னா எங்க நகரெல்லாம் வெள்ளக்காடு ஆயிருமில்ல:))

க‌ரிச‌ல்கார‌ன் said...

//14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய
எங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு//
இப்ப‌வும் அப்ப‌டித்தான் இந்த‌ கொடுமைக்கெல்லாம் விடிவே கிடையாதா/

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல//

போற‌ போக்குல‌ பொய் சொல்றிங்க‌ பார்த்தீங்க‌ளா!!!!!

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பதிவு
தென்றல்
என் சின்னவன் பிறந்தபோது கோவையிலிருந்து மதுரைவரை ட்ரெயினிலும் பின்பு காரிலும் காரைக்குடி வந்தது உங்க பதிவைப் படித்ததும் இன்பமாய் நினைவுக்கு வந்தது

Thamira said...

சும்மாவே இது மாதிரி அனுபவங்கள் திரில்தான். அதுவும் கைக்குழந்தையுடன் என்றதும் படிக்கவே எங்களுக்குத் திரில்லாகிவிட்டது.

pudugaithendral said...

வாங்க சிங்கை நாதன்,

உடம்பு நலமா??

தம் & டீ இல்லையே//

நானும் அப்படித்தான் பயந்தேனுங்க. பால்,டீ,சர்க்கரை எல்லாம் ஒண்ணா கொதிக்க வெச்சு வடிகட்டுவாங்களாம்.

அப்பா சொன்னாரு :)

pudugaithendral said...

ட்ரைன்ல போறது எம்புட்டு சுகமோ அம்புட்டு கஷ்டமும் கூட பூங்குன்றன்.

இந்தியாக்குள்ள ஃபளைட்ல போற காசுக்கு வெளிநாட்டுக்கு போயிடலாம் பாருங்க. அதனால எனக்கு பிடிச்ச ட்ரையின் தான் :))

pudugaithendral said...

ஆமாம் நாஞ்சில் பிரதாப்,

முன்னுக்கும் போக முடியாம, பின்ன ஊருக்கு வர முடியாம நடுவாந்திரமா மாட்டிகிட்டோம். ஏறிட்டோம், மக்களும் இருக்காங்க அப்படின்னு தெகிரியமா ட்ரையின்லேயே இருந்தோம்.

pudugaithendral said...

வாங்க ஜமால்,

அது ஒரு பெரிய சுத்து சுத்தி சென்னை போய் சேரும். இப்ப சென்னை எக்ஸ்பிரஸ்னு ஒரு சூப்பர் பாஸ்ட் ட்ரையின் வந்திருச்சு. ஜாலி தான்

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

எங்க ஊருங்கறதால சொல்லலை. புதுகை மக்களின் குணம், மரியாதை கலந்த பாசம். பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம் நெஜமாவே சொந்த காரங்க மாதிரி இருப்பாங்க.

உனக்கு பிடிச்ச அரைச்சுவிட்ட காரக்கொழம்பு செஞ்சேன்னு கொண்டு வர்ற எதுத்த வீட்டு அத்தை, 4 தெரு தள்ளியிருக்கும் மாமி பாட்டிக்காக பஜ்ஜி செஞ்சு கொண்டுவருவாங்க. இப்படி ஒரு இணைப்பா இருப்பாங்க.

அப்துல்லா தம்பி ஆசையா அக்கான்னு கூப்பிடறதுல மதங்கள் மறந்து போயிடுதுல்ல.

நான் இருப்பது ஹைதையில் அதனால் புதுகைக்கு நான் எம் எல் ஏ சரி வராது. அப்துல்லா தம்பி அல்லாட்டி சுரேகா சரியான சாய்ஸ்.
:))

pudugaithendral said...

நாஞ்சில் பிரதாப்,

திருஷ்டி பிள்ளையார் சும்மா கலாட்டாக்காக. பாக்கறவங்க எல்லாம் ப்ளாக் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க, பணால் ஆயிட்டா அதான். :))

pudugaithendral said...

அப்ப எது கண்மணி மொபைல்லாம்,

நான் சொல்வது 1996 டிசம்பர்.:))

ரயில்வே ட்ராக்குக்கு அந்த பக்கம் 1கிமீ தூரத்துல ஒரு கிராமம் தண்ணி சூழ்ந்து மக்கள் எந்தத் தொடர்புமில்லாமல் தவிச்சுகிட்டு கைகாட்டி கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. பாவமா இருந்துச்சு.

pudugaithendral said...

வாங்க கரிசல்,

விடிவு ஏது. வருண பகவானைத்தான் திட்டணும்.

pudugaithendral said...

போற‌ போக்குல‌ பொய் சொல்றிங்க‌ பார்த்தீங்க‌ளா//

ஹலோ பொய்யெல்லாம் இல்லீங்க.

நல்லாவே சமைப்பேன்.

pudugaithendral said...

நம்ம ஊர் பக்கமெல்லாம் இப்படிதான் தேனம்மை. உங்களுக்கும் கொசுவத்தி சுத்திட்டேனா?

pudugaithendral said...

வாங்க ப்ரெண்ட்,

ஆமாம் கைக்குழந்தைக்கு மழை, காத்தால ஜுரம் ஏதும் வரக்கூடாதுன்னு பயந்து கிட்டே இருந்தேன்.

Pandian R said...

தென்றல், நம்மூர்ல இருந்து சென்னைக்கு ரயில்ல போறது (அப்ப இருந்த மீட்டர் கேஜ்ல) ஒரு தண்டனை. அதோட மழை வேறையா.. சுத்தம்.

ஒன்னு தெரியுமா. அகலப்பாதை ஆனதுமே புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் S4 கோச்சுதான் விழுது (இடம் இருக்கும் பட்சத்தில்).

நீங்க இப்ப ரயில்ல போயி பாக்கனும். திருச்சி- புதுக்கோட்டை 50 நிமிடம். இன்னும் வேகம் அதிகமாக்கப் போறாங்களாம்.

நல்ல நினைவுப் பதிவு.
நன்றி

Sakthi said...

nice

pudugaithendral said...

வாங்க fundoo,

இப்பவும் புதுகை - சென்னை ட்ரையினில்தான் பயணம். ப்ராட்கேஜ் வந்ததுல செம வேகம் தான்.

எனக்கென்னவோ ட்ரையினில் போற சுகம் வேறு எதுலயும் வராது. :))
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சக்திவேல்

காற்றில் எந்தன் கீதம் said...

கைகுழந்தையோடு 48 மணி நேரப் பயணமா ? ரொம்பவே கஷ்டம் தான் :(
ஆனால் நல்லா மனம் படைத்த மனிதர்களுக்கு மத்தியில் பயணம் வாய்த்தது தான் உங்கள் அதிஷ்டம் :)
நல்ல கொசுவத்தி!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சுபாஷ்ணி

Sakthi said...

nalla irukku..

KarthigaVasudevan said...

இப்படி ஒரு அனுபவமா? ரொம்பக் கஷ்டம்ங்க ...அதுவும் கைக்குழந்தையோட நாற்ப்பத்திஎட்டு மணி நேரம் ட்ரெயின் லனா பயங்கர டென்சன் தான்.எப்படியோ கடந்து வந்து அதைப் பத்தி பதிவும் போட்டாச்சு. நல்லா இருக்கு தென்றல் உங்கள் அனுபவப்பகிர்வு

pudugaithendral said...

ஆமாம் மிஸஸ்.தேவ்,

ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. என்ன செய்ய பாதி தமிழ்நாட்டை சுத்தி பாத்து சென்னை வரணும்னு இருந்திருக்கு நமக்கு
:)) வருகைக்கு நன்றி