Monday, January 04, 2010

எங்கள் ஊர் காவல் தெய்வங்கள்

எங்க ஊரில் ஒரு பழக்கம். பிரசவம் முடிந்து தன் கணவன்
வீட்டிற்கு புறப்படும் முன் பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு
ஊர் காவல் தெய்வங்களின் கோவிலுக்கு சென்று
வழிபாடு செய்த பிறகு தான் ஊருக்கு கிளம்புவார்கள். உள்ளூர்
காரங்களா இருந்தாலும் காவல் தெய்வங்கள் கோவிலுக்கு
போய்விட்டுத்தான் வேறு ஊருக்கு குழந்தையை தூக்கிகிட்டு
போவாங்க.

எங்கள் ஊரில் காவல்தெய்வங்கள் அதிகம். கடிதம் எழுதி
கோரிக்கையை, மனக்குறையை வைக்கும் மக்களுக்கு
அருள்புரியும் பெரம்பூர் வீரமாகாளி, ஊர்க்காவல் செய்யும்
பொற்பனை முனீஸ்வரர்,அடப்பன்குளம், நார்த்தாமலை மாரியம்மன்,
திருவப்பூர் மாரியம்மன். இதில் அவரவர் வீட்டுக்கு அருகில்
இருக்கும் காவல் தெய்வ கோவிலுக்கு முதலில் செல்வார்கள்.

புதுகையிலிருந்து அண்டக்குளம் சென்று அங்கேயிருந்து
பெரம்பூர்.பெரம்பூர் வீரமாகாளி. கடும் தெய்வம். தன்னை ஒருவர்
துன்புறுத்துவதாக கடிதம் எழுதி பிரார்த்தனை செய்தால்
தண்டித்து விடுவாள். தவறாக எழுதி வைத்தால் எழுதியவரையே
தண்டிப்பாள். குறை தீர்க்கும் காளி.
அன்னையாக அருள் புரிபவள். சக்தி வாய்ந்தவள்.
அவளை தரிசித்து வந்தேன்.

போட்டோல்லாம் பிடிக்க கூடாது. சுயம்புவாக நிற்கும் தெய்வம்
அவள்.

அங்கிருந்து நேராக சென்றது பொற்பனைக்கோட்டை.
இது காவல்தெய்வம் முனீஸ்வரர் கோவில்.
ஆஜானுபாவன் தோற்றம். பச்ச கச்சம் கட்டி
இவர் ஊரில் உலாவருவதாக பலரும் நம்புகிறார்கள்.
மணியோசை, தூப வாசனை கட்டியம் சொல்லும் இவரது
வருகையை. அந்நேரத்தில் எதிரே வரும் எலியும் நசுங்கிப்போய்விடும்.

பெரியவருக்கு 4 முழ வேட்டி, 8 முழ வேட்டியெல்லாம் பத்தாது.
10* 6 சைஸ் வேட்டிதான் சரியா வரும். அம்புட்டு பெரிய
உருவம். மாலையா வாங்குவதை விட 2 பந்து கதம்பம்
வாங்கினாத்தான் போட முடியும். பன்னீர், இளநீர், எண்ணெய்,
பால் குளியல் செய்வது ரொம்ப பிடிக்கும். ஜவ்வாது மணக்க,
சாம்புராணி புகையில சூப்பரா நிப்பாரு பொற்பனையான்.


நம்புவர்களுக்கு நான் அருள் புரிகிறேன் என காக்கும் தெய்வம்
இவர். பொற்பனைக்காளியும் உண்டு.

சிம்பிளாக அலங்காரத்தில் பெரியவர் முனீஸ்வரர்.


சூப்பர் அலங்காரத்தில் பொற்பனையான்.



அப்புறம் ஊருக்கு வந்துட்டு சாந்தாரம்மன் கோவில் போகாட்டி
எப்படி? சாந்தாரம்மன் கோவில்ல பைரவருக்கு விளக்கேத்திகிட்டு
இருக்கேன். யாரோ என்னிய கூப்பிடறா மாதிரி இருந்துச்சு.
அதுவும் என் பள்ளிநாட்களில் இருந்த பெயர். நான் அப்படியே
ஷாக்காகிட்டேன். என் தோழிகள் யாரும் ஊர்ல இல்ல.

அதுவும் இப்ப 15 வருஷமா கலா ஸ்ரீராம்ங்கற பேர்லதான்
பலருக்கும் அறிமுகம். இம்புட்டு வருஷம் கழிச்சு என்னை
ஞாபகம் வெச்சு பழைய பேர்ல யாரு கூப்பிடறாங்கன்னு
பார்த்தா என்னோட ராணி ஸ்கூல்ல படிச்ச சுதாவோட
அம்மா அங்க இருந்தாங்க. அவங்கதான் கூப்பிட்டு
கையை பிடிச்சு பேசிகிட்டு இருந்தாங்க.

கூட வந்த பசங்களுக்கு செம ஆச்சரியம்.
பகக்த்துலேயே இருக்கும் அரியவளைப்பாக்காட்டி
எப்படி? எனக்கும் அரியவளுக்கும் ரொம்ப நாளா
ஃப்ரெண்ட்ஷிப்.

சாந்தாரம்மன் கோவிலைச்சுத்தி கடைகள். பாத்திரக்கடை,
பூக்கடை, காய்கறிக்கடைன்னு இருக்கும். அம்மன் சந்நிதிக்கு
நேராக காய்கறிக்கடை பக்கம் ஒரு ஆயா உக்காந்து
எலுமிச்சம் பழம் விப்பாங்க. பெரிய பொட்டோட கொஞ்சம்
கரடுமுரடா தெரியற அவங்ககிட்டதான் அம்மா எப்பவும்
எலுமிச்சம் பழம் வாங்குவாங்க.

அவங்ககிட்ட பழம் வாங்கிகிட்டு போய் அரியநாச்சியம்மன்
கோவில் சூலத்துல குத்தணும் என்பது அம்மாவோட
கட்டளை. அப்படித்தான் எப்பவும் செய்வேன்.
அந்தம்மா 4 வருஷத்துக்கு முன்னாடி செத்துட்டாங்க.
கோவில் சந்நிதிக்கு எதிரா பிறமுதுகு காட்டி தெகிரியமா
கடை போட்டவங்க. அவங்க இல்லாத இடம் வெரிச்சோடி
கிடக்கு. வேறகடையில எலுமிச்சம்பழம் வாங்கிக்கிட்டு
அரியவளைப்பாக்க போனேன்.

சபரிமலைக்கு சில பேர் இருமுடிகட்டிகிட்டு இருந்தாங்க.
அம்மனுக்கு சந்தனக்காப்பு. ஜொலிச்சுகிட்டு இருந்த
அம்மாவை தரிசனம் செஞ்சுட்டு வந்தோம்.

9 comments:

ஆயில்யன் said...

வாவ்வ் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!


இது எங்க மாமாவுக்கும் குலதெய்வம் நான் போயிட்டு வந்திருக்கேனே!!!! :))))) (பாஸ் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - நாங்க எல்லாம் அந்த கோவிலுக்கு ஆட்டோவில போனோம்ல - என்னோட முதல் ஆட்டோ பயணமும் கூட!)

pudugaithendral said...

வாங்க பாஸ்,

கொசுவத்தி சுத்திடுச்சா?? ஆட்டோ பயண அனுபவம்னு அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன் பாஸ்

RAMYA said...

அக்கா நம்ம ஊரைப் பத்தி எழுதி இருக்கீங்க அருமை!

புதுகை நினைவில் மறுபடியும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டது.

புதுக்குளம், ராஜாகுளம், புவனேஸ்வரி அம்மன் கோவிலை மறந்து விட்டீங்களே!

அடுத்த முறை அங்கும் சென்று வாருங்கள்.

பழைய நினைவுகளை மனம் அசைபோட வச்சுட்டீங்க :)

pudugaithendral said...

வாங்க ரம்யா,

புவனேஸ்வரி கோவில் போன தடவை போனேன். இந்த முறை மழைவேற எங்கயும் போக முடியாம செஞ்சிடிச்சு

நிஜமா நல்லவன் said...

அட்டெண்டன்ஸ்!

Pandian R said...

முனீஸ்வரர் கோயில் சாம்பிராணி மணப்பது போல ஊருக்குப் போயிட்டு வந்ததில் இருந்து மண்வாசனை தூக்கி அடிக்கிறது. ம்ம். நடக்கட்டும். புதுகை கொ.ப.சே அவர்களுக்கு வாழ்த்துக்கள். (பாவம் ஸ்ரீராம் அய்யா..)

pudugaithendral said...

அட்டெண்டன்ஸ் மார்க்ட் நிஜம்ஸ்

pudugaithendral said...

புதுகை கொ.ப.சே அவர்களுக்கு வாழ்த்துக்கள். (பாவம் ஸ்ரீராம் அய்யா..)//

:))))

வல்லிசிம்ஹன் said...

தென்றல் உங்க பதிவை ஹைலைட் செய்து படிக்க வேண்டி இருந்ததுப்பா. இருந்தாலும் விஷயம் சுவாரஸ்யமா இருந்ததால் ,ஒண்ணும் கஷ்டமாத் தெரியலை:0)
ஏயப்பா எத்தனை கோவில்கள் மா.
படங்கள் அனைத்தும் மண்வாசனையோடு நன்றாக இருக்கிறது.