Tuesday, January 05, 2010

ஜாலிலோ ஜிம்கானா.. :))))

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணாகிட்டயும் என் கிட்டயும் எங்க
தோழிகள் கேட்கும் முதல் கேள்வி,”வூட்டுக்காரர் ஊர்ல இருக்காரா”?
இருவரின் கணவர்களுக்கும் காலில் சக்கரம் வைத்ததுபோல
சுத்திக்கினே இருப்பாங்க.

அதனால பல சமயம் “எங்க வீட்டுக்காரர் ஊருக்கு போயிட்டாருன்னு”
ஜாலிலோ ஜிம்கானா தான்.(அக்னி நட்சத்திர ஜனகராஜ் மாதிரி எம்புட்டு நண்பர்கள் சந்தோஷப்படறாங்க!!எங்களுக்கும் காலம் வரும்ல:) )

எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிட்டாரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்................


ஊர்ல இருந்தா பெருசா டார்ச்சர் ஏதும் கொடுக்கும் ரகமில்லை.
ஆனாலும் இது ஒரு தனி சுகம். அன்னபூர்ணா வீட்டுல அவுக அயித்தான்
இல்லாட்டி பிள்ளைகளை கூட்டிகிட்டு ஹோட்டல் போவாங்க.
(அவர் இருந்தா வீட்டுச் சாப்பாடுதான் விரும்புவார். மாதத்துல
20 நாள் டூர் போறவராச்சே) ”நான் எப்படா ஊருக்கு கிளம்புவேன்னு
காத்துகிட்டு இருக்கீங்க போலன்னு!!” சிரிச்சுகிட்டே சொல்வார்.


நம்ம வீட்டுலயும் அயித்தான் ஹோட்டல்ல சாப்பிடுவாரேன்னு
சனிக்கிழமை இரவு தவிர எல்லா நேரமும் வீட்டுச் சாப்பாடுதான்.

இங்க நம்ம வீட்டுல அயித்தான் ஊருக்கு கிளம்பப்போறேன்னு
சொன்னா,”பக்காவா!! கன்பார்மா போறீங்களான்னு!!” விசாரிக்கறது.:)
வேற எதுக்குமில்லை. அவருக்கு பிடிக்காத காய்கறிகள், பிடிக்காத
சமையலை சமைச்சு நானும் பிள்ளைகளும் சாப்பிடுவோம். அதுக்காகத்தான்.
(சேமியா பஹாளாபாத் + தேங்காய்ச் சட்னி பிள்ளைகளின் விருப்பமான
உணவு. அவருக்கு பிடிக்காது. அதனால அவர் ஊர்ல இல்லாதப்பத்தான்
இது செய்யப்படும்)

பல சமயம் பசங்க சோறே சமைக்க வேணாம்னு சொல்லிடுவாங்க.
(அயித்தானுக்கு லன்ச் பேக் செய்யும் வேலை இல்லையே) அதனால
தோசை, இட்லி, சப்பாத்தி, பாஸ்தான்னு ஷார்ட் கட்
சமையல் செஞ்சு சாப்பிடுக்குவோம்.


அதுவும் ஒரு நாள் கண்டிப்பா பசங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் கொடுத்திட்டு
நான் ஓட்ஸ் கஞ்சி குடிச்சிடுவேன். காலை ப்ரேக் பாஸ்ட் அம்புட்டுதான்.
என்ன ஒரு சுகம். :)))


வெள்ளிக்கிழமை இரவுகளில் டீவிக்கு முன்னாடி ரஜாய் போட்டு
தலகாணி எல்லாம் வெச்சுகிட்டு, நானும் பசங்களும் கெட்டி ரஜாயை
போத்திக்கினே படம் பாத்துட்டு அப்படியே தூங்குவோம்.

சில சமயம் சனிக்கிழமை இரவுதான் வருவார். சனிக்கிழமை பிள்ளைகளுக்கு
பள்ளி விடுமுறை. இழுத்து போத்திக்கினு 8 மணி வரைக்கும் தூங்கும் சுகம்..
(அவுக இருந்தா ஆபீஸுக்கு கிளம்புவாக. டிபன் செய்யணும்னு 7 மணிக்கு
எந்திரிப்போம்ல :))

சென்னையில இருந்தப்ப எங்க பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட் ஹஸ்பண்டும்
ஊருக்கு போய், அயித்தானும் ஊருக்கு போயிருந்தா எங்க ரெண்டு
பேருக்கும் ஜாலி. நான் சோறு, கறி செய்வேன், அவங்க காரக்குழம்பு,
ரசம், அப்பளம் செஞ்சிடுவாங்க. சாப்பாட்டைக் கொண்டுவந்து
வெளியில வெச்சுகிட்டு( பின் கேட்) இரண்டு குடும்பமும் சேர்ந்து
சாப்பிடுவோம்.


ஊர்லேர்ந்து அயித்தான் வரும் அன்னைக்கு ரொம்பவும்
மெனக்கெட்டு வீட்டயே மாத்திப்போட்டு சும்மா பளிச்சுன்னு
ஆக்கிடுவேன். வந்ததும் ஒரே பாராட்டு மழைதான். :))))

யெஸ்ஸு. இப்பவும் அயித்தான் ஊருக்கு போயிருக்காக.
ஆமாம். ஜாலிலோ ஜிம்கானா தான்.

:))))))))))))))))))))))

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

டிஸ்கி: கணவர்கள் ஊருக்கு போயிட்டா இப்படித்தான் பெண்கள்
சந்தோஷப்படறாங்க அப்படி இப்படின்னு தாக்க காத்திருக்கும்
நபர்களுக்கு !!அடுத்த பதிவை படிச்சிட்டு அப்புறமா சொல்லுங்க.

(ஹஸ்பண்டாலஜி ப்ரொபசர் கிட்டயேவா)

78 comments:

புதுகைத் தென்றல் said...

அட இன்னும் யாரையும் காணலியே!!

ஆச்சரியமால்ல இருக்கு

நாஸியா said...

நாந்தான் வந்துட்டேன்ல?

ஹிஹி.. நல்ல கதையா இருக்கே.. பாவம் அண்ணே! :)

இருந்தாலும் கல்யாணம் ஆன பிறகு தோழிமாரோட நேரம் செலவழிக்க முடியுதுன்னா அது பெரிய சந்தோசம்!

வால்பையன் said...

//இருவரின் கணவர்களுக்கும் காலில் சக்கரம் வைத்ததுபோல
சுத்திக்கினே இருப்பாங்க.//

கூடவே ஒரு பிரேக்கும் வச்சிருக்கலாம்!

நட்புடன் ஜமால் said...

நான் நம்ப மாட்டேன்

இத மட்டும் நான் நம்ப மாட்டேன் ...

-------------

அயித்தான்ஸ் இல்லாட்டி நீங்க எம்பூட்டு பீலிங்ஸ்ன்னு நேக்கு தெரியுமே ...

வால்பையன் said...

//(அக்னி நட்சத்திர ஜனகராஜ் மாதிரி எம்புட்டு நண்பர்கள் சந்தோஷப்படறாங்க!!எங்களுக்கும் காலம் வரும்ல:) )//

அந்த டயலாக் ரங்கமணிகளுக்கு மட்டும்னு நினைச்சோமே! இப்போ ஷிப்ட் ஆயிருச்சா!?

வால்பையன் said...

//அன்னபூர்ணா வீட்டுல அவுக அயித்தான்
இல்லாட்டி பிள்ளைகளை கூட்டிகிட்டு ஹோட்டல் போவாங்க.//

அன்னைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடுவாங்கன்னு சொல்லுங்க!

புதுகைத் தென்றல் said...

நாந்தான் வந்துட்டேன்ல?//

வாங்க நாஸியா வந்ததுக்கு சந்தோஷம்.

பாவம் அண்ணே! //

அது சரி

//இருந்தாலும் கல்யாணம் ஆன பிறகு தோழிமாரோட நேரம் செலவழிக்க முடியுதுன்னா அது//
பெரிய சந்தோசம்!

தோழி மாரோடு மட்டுமா பிள்ளைகளும் நானும் கூட எஞ்சாயோ எஞ்சாய் தான்

வால்பையன் said...

//அவர் இருந்தா வீட்டுச் சாப்பாடுதான் விரும்புவார்.//

தான் சமைத்ததையே சாப்பிடுவது ஒரு சுகம் தான்!

புதுகைத் தென்றல் said...

கூடவே ஒரு பிரேக்கும் வச்சிருக்கலாம்!//

ப்ரேக் வயரை அறுத்துவிட்டுத்தான் ஆண்டான் அனுப்பியிருக்கான் போல

வால்பையன் said...

//”நான் எப்படா ஊருக்கு கிளம்புவேன்னு
காத்துகிட்டு இருக்கீங்க போலன்னு!!” சிரிச்சுகிட்டே சொல்வார்.//

குக்கர் போயிட்டா மக்கர் இல்லாம சாப்பிடுவிங்க போலயேன்னு நான் சொல்லுவேன்!

Anonymous said...

:)

இப்படி ஊருக்குபோகும்போது தனியா சமாளிப்பயான்னு ஒரு கேள்வி வேற கேப்பாங்க.உங்களையே சமாளிச்சுட்டேன் அப்படின்னு எடுத்து விட்டா...... :)

வால்பையன் said...

//நம்ம வீட்டுலயும் அயித்தான் ஹோட்டல்ல சாப்பிடுவாரேன்னு
சனிக்கிழமை இரவு தவிர எல்லா நேரமும் வீட்டுச் சாப்பாடுதான்.//

வாரத்துல ஒருநாள் தான் வயித்துக்கு விடுதலையா!?

புதுகைத் தென்றல் said...

அயித்தான்ஸ் இல்லாட்டி நீங்க எம்பூட்டு பீலிங்ஸ்ன்னு நேக்கு தெரியுமே ...//

வாங்க ஜமால்,

ஃபீலிங்ஸாஃப் ஹைதராபாத் தான். ஆனாலும் ஜாலிலோ ஜிம்கானாவும் உண்டு

வால்பையன் said...

//ஊருக்கு கிளம்பப்போறேன்னு
சொன்னா,”பக்காவா!! கன்பார்மா போறீங்களான்னு!!” விசாரிக்கறது.:)//

50/50, ”போன் ஆஃப் ஃப்ரெண்ட்” ஆப்சன்லாம் இருக்கா!?
கோடிஸ்வரன் நிகழ்ச்சி மாதிரியில்ல போய் கிட்டு இருக்கு!

நட்புடன் ஜமால் said...

ஆனாலும் ஜாலிலோ ஜிம்கானாவும் உண்டு]]

ரொம்ப நம்பிட்டனோ :D

புதுகைத் தென்றல் said...

//(அக்னி நட்சத்திர ஜனகராஜ் மாதிரி எம்புட்டு நண்பர்கள் சந்தோஷப்படறாங்க!!எங்களுக்கும் காலம் வரும்ல:) )//

அந்த டயலாக் ரங்கமணிகளுக்கு மட்டும்னு நினைச்சோமே! இப்போ ஷிப்ட் ஆயிருச்சா!?/

யெஸ்ஸு. டூர் போகும் கணவன் வாய்த்த பெண்கள் சொல்லும் டயலாக்கும் அதான் சாமி

புதுகைத் தென்றல் said...

குக்கர் போயிட்டா மக்கர் இல்லாம சாப்பிடுவிங்க போலயேன்னு நான் சொல்லுவேன்//

இப்படி எல்லாம் சொல்லிகினே இருக்க வேண்டியதுதான்.இதை நாங்க என்னைக்கு நம்பிருக்கோம்.

:)))

புதுகைத் தென்றல் said...

இப்படி ஊருக்குபோகும்போது தனியா சமாளிப்பயான்னு ஒரு கேள்வி வேற கேப்பாங்க.உங்களையே சமாளிச்சுட்டேன் அப்படின்னு எடுத்து விட்டா...... //

நல்லா இருக்கு. மைண்ட்ல வெச்சுக்கறேன். நன்றி சின்ன அம்மிணி

வால்பையன் said...

//அவருக்கு பிடிக்காத காய்கறிகள், பிடிக்காத
சமையலை சமைச்சு நானும் பிள்ளைகளும் சாப்பிடுவோம்.//

அவைகள் தான் எங்களுக்கு பிடிக்கும் முக்கியமான வார்த்தைய காணோம் பாருங்க! என்னா வில்லத்தனம்!

புதுகைத் தென்றல் said...

ரொம்ப நம்பிட்டனோ //

ஆளம் எது ஐயா, இந்த பொம்பளை மனசுத்தான்யா :)))

புதுகைத் தென்றல் said...

50/50, ”போன் ஆஃப் ஃப்ரெண்ட்” ஆப்சன்லாம் இருக்கா!?
கோடிஸ்வரன் நிகழ்ச்சி மாதிரியில்ல போய் கிட்டு இருக்கு!//


:))))))) கன்பார்மா தெரிஞ்சுகிட்டாத்தானே நாம ப்ளான் செய்ய முடியும் வால்பையன்

வால்பையன் said...

//சேமியா பஹாளாபாத் + தேங்காய்ச் சட்னி பிள்ளைகளின் விருப்பமான
உணவு. அவருக்கு பிடிக்காது.//

எங்க வீட்டு தங்கமணி கூட, அவளுக்கு பிடிச்சதை, குழந்தைக்கு பிடிக்கும்னு தான் வாங்கி சாப்பிடுறா! எல்லாரும் ப்ளான் பண்ணி தான் செய்யுறாங்களோ!

வால்பையன் said...

//பல சமயம் பசங்க சோறே சமைக்க வேணாம்னு சொல்லிடுவாங்க.//

எம்புட்டு நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது!

வால்பையன் said...

//தோசை, இட்லி, சப்பாத்தி, பாஸ்தான்னு ஷார்ட் கட்
சமையல் செஞ்சு சாப்பிடுக்குவோம்.//

ஓ இதெல்லாம் தான் ஷார்ட் கட்டா!?
எங்க வீட்ல நேரா ”கெலாக்ஸ்” தான்!

புதுகைத் தென்றல் said...

எங்க வீட்டு தங்கமணி கூட, அவளுக்கு பிடிச்சதை, குழந்தைக்கு பிடிக்கும்னு தான் வாங்கி சாப்பிடுறா! எல்லாரும் ப்ளான் பண்ணி தான் செய்யுறாங்களோ!/

தங்கமணி ஊருக்குபோனதும் ரங்க்ஸ் அடிக்கற கொட்டங்கள் தங்க்ஸ் ஊர்ல இருக்கும்போது செய்ய முடியாதது தானே பாஸ். அப்ப நீங்கல்லாம் திட்டமிடாமலா இருக்கீக :)))

வால்பையன் said...

//அதுவும் ஒரு நாள் கண்டிப்பா பசங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் கொடுத்திட்டு
நான் ஓட்ஸ் கஞ்சி குடிச்சிடுவேன். காலை ப்ரேக் பாஸ்ட் அம்புட்டுதான்.
என்ன ஒரு சுகம். :)))//

அட எல்லாரும் இதை தான் பண்றிங்களா?
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!

வால்பையன் said...

//வெள்ளிக்கிழமை இரவுகளில் டீவிக்கு முன்னாடி ரஜாய் போட்டு
தலகாணி எல்லாம் வெச்சுகிட்டு, நானும் பசங்களும் கெட்டி ரஜாயை
போத்திக்கினே படம் பாத்துட்டு அப்படியே தூங்குவோம். //

சீரியல்லாம் உங்க ஊருல தெரியாதா?
இங்க வாரத்துல ஏழு நாளும் சீரியல் தான்!

வால்பையன் said...

//இழுத்து போத்திக்கினு 8 மணி வரைக்கும் தூங்கும் சுகம்..//

ஆபிஸ்க்கு அனுப்பிட்டு மத்தியானம் போடும் தூக்கத்தை பத்தி யாருமே பேசமாட்டிகிறீங்களே!?

வால்பையன் said...

//நான் சோறு, கறி செய்வேன், அவங்க காரக்குழம்பு,
ரசம், அப்பளம் செஞ்சிடுவாங்க.//

இதுக்கு பேரு தான் கூட்டுசதிங்கிறது!

புதுகைத் தென்றல் said...

சீரியல்லாம் உங்க ஊருல தெரியாதா?
இங்க வாரத்துல ஏழு நாளும் சீரியல் தான்!//

சீரியலா அப்படின்னா??

இப்படிக்கு சீரியல்/டீவி பார்க்காதோர் சங்கம்.
ஹைதை

வால்பையன் said...

//சாப்பாட்டைக் கொண்டுவந்து
வெளியில வெச்சுகிட்டு( பின் கேட்) இரண்டு குடும்பமும் சேர்ந்து
சாப்பிடுவோம்.//

அட!, வீட்டுவாசல்லயே பிக்னிக்கா!?

வால்பையன் said...

//ஊர்லேர்ந்து அயித்தான் வரும் அன்னைக்கு ரொம்பவும்
மெனக்கெட்டு வீட்டயே மாத்திப்போட்டு சும்மா பளிச்சுன்னு
ஆக்கிடுவேன். //

இது தான் உங்க ”நீட்டு” ரகசியமா

வால்பையன் said...

//யெஸ்ஸு. இப்பவும் அயித்தான் ஊருக்கு போயிருக்காக.
ஆமாம். ஜாலிலோ ஜிம்கானா தான்.//

செம கும்மியா பதிவு வரும்போதே எங்களுக்கு அந்த சந்தேகம் வந்துருச்சு!

புதுகைத் தென்றல் said...

ஆபிஸ்க்கு அனுப்பிட்டு மத்தியானம் போடும் தூக்கத்தை பத்தி யாருமே பேசமாட்டிகிறீங்களே!?//

என்ன ஒரு வயிற்றெரிச்சல் பாருங்க.
ஆபீஸ்ல போய் தூங்குறீங்களே அதைப்பத்தி நாங்க ஏதும் சொன்னமோ!!

:))

புதுகைத் தென்றல் said...

அட!, வீட்டுவாசல்லயே பிக்னிக்கா!?//

யெஸ்ஸு

புதுகைத் தென்றல் said...

//ஊர்லேர்ந்து அயித்தான் வரும் அன்னைக்கு ரொம்பவும்
மெனக்கெட்டு வீட்டயே மாத்திப்போட்டு சும்மா பளிச்சுன்னு
ஆக்கிடுவேன். //

இது தான் உங்க ”நீட்டு” ரகசியமா

:)) அடிக்கடி ஊருக்கு போறார்ல.

நட்புடன் ஜமால் said...

நான் சோறு, கறி செய்வேன், அவங்க காரக்குழம்பு, ரசம், அப்பளம் செஞ்சிடுவாங்க]]

யாரு சாப்புடுவாங்கன்னு சொல்லியாச்சா ...

வால்பையன் said...

//வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி//

வெளிய பிக்னிக் போயிட்டு வாங்க!

வால்பையன் said...

//கணவர்கள் ஊருக்கு போயிட்டா இப்படித்தான் பெண்கள்
சந்தோஷப்படறாங்க அப்படி இப்படின்னு தாக்க காத்திருக்கும்
நபர்களுக்கு !!அடுத்த பதிவை படிச்சிட்டு அப்புறமா சொல்லுங்க.//

அடுத்த கும்மி வேற காத்துகிட்டு இருக்கா!?

வால்பையன் said...

//இப்படிக்கு சீரியல்/டீவி பார்க்காதோர் சங்கம்.
ஹைதை //

எந்த பொய் சொன்னாலும் நம்புவோர் சங்கம்
ஈரோடு!

வால்பையன் said...

//ஆபீஸ்ல போய் தூங்குறீங்களே அதைப்பத்தி நாங்க ஏதும் சொன்னமோ!!//

ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கிறோம்! இது பொறுக்கலையா?

பரிசல்காரன் said...

ஒரே நாள் அல்லது ரெண்டே நாள்தான். மூணாவது நாளே ஒரு வெறுமை வரும் பாருங்க..

ப்ச்... யு வில் பி மிஸ்ஸிங் ஹிம்!

அன்புடன் அருணா said...

ரைட்டு!நடத்துங்க!

ambi said...

என்னா ஒரு வில்லத்தனம்..? :p

இதுல குழந்தைகளை வேற கூட்டணிக்கு சேர்த்துகிட்டாச்சா? :))

வல்லிசிம்ஹன் said...

தென்றல் இப்பத்தான் ஊரு நிலவரம் எப்படி இருக்குனு மெயிலணுனு
நினைச்சேன். உங்க பதிவைப் படிச்சு சந்தோஷம். புதுகைத் தென்றல் கடையைப் பார்த்தோம்.

நல்லாவே இருந்தது.:)
நாங்களும் அடிப்போம் கொட்டம் அப்ப பசங்க சின்னவங்களா இருக்கும்போது.
டாடி வர்லியாம்மான்னு கேட்டுக் கிட்டே சுத்திவந்து கதை சொல்லச் சொல்லி, எல்லாரும உட்கார்ந்து சாப்பிட்டு,மாடிவீட்ல போய்த் தூங்கி எழுந்து எல்லாம்தான்;)

கீதா சாம்பசிவம் said...

நல்லா இருக்கே கதை! நம்ம வீட்டிலே அப்படியே உல்டா! அப்பா இல்லைனா நீ சரியாவே சமைக்கறதில்லைனு பசங்களும், பசங்க இல்லைனா உனக்கு சமைக்கிறதிலே ஆர்வமே இருக்கிறதில்லைனு அவரும் மாத்தி, மாத்திப் போட்டுத் தாக்கறாங்க! இதுக்கு என்ன செய்யறதாம்??? சொல்லிக் கொடுங்க, முயன்று பார்ப்போம்! :)))))))))))))))))))

கீதா சாம்பசிவம் said...

இதுக்கு பேரு தான் கூட்டுசதிங்கிறது!//

இது நல்லா இருக்கே, இதெல்லாம் தெரியாமப் போயிடுச்சே?? :P:P::P

புதுகைத் தென்றல் said...

யாரு சாப்புடுவாங்கன்னு சொல்லியாச்சா ...//

இரண்டு ஃப்ரெண்ட்ஸ் அண்ட் 4 குட்டி ஃப்ரெண்ட்ஸும் தான்

புதுகைத் தென்றல் said...

//ஆபீஸ்ல போய் தூங்குறீங்களே அதைப்பத்தி நாங்க ஏதும் சொன்னமோ!!//

ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கிறோம்! இது பொறுக்கலையா?//

ஓஹோ.!!!

புதுகைத் தென்றல் said...

ஒரே நாள் அல்லது ரெண்டே நாள்தான். மூணாவது நாளே ஒரு வெறுமை வரும் பாருங்க..

ப்ச்... யு வில் பி மிஸ்ஸிங் ஹிம்!//

ஆமாம் யாரு இல்லன்னு சொன்னாங்க. இப்ப நீங்க ஃப்லீங்க்ஸாஃப் இந்தியாவா பதிவு போட்டிருக்கீங்கல்ல... அதே மாதிரி ஃபீலிங்காத்தான் இருக்கும். ஆனாலும் ஒரு ப்ரேக்.

புதுகைத் தென்றல் said...

நன்றி அருணா

புதுகைத் தென்றல் said...

என்னா ஒரு வில்லத்தனம்..? :p

இதுல குழந்தைகளை வேற கூட்டணிக்கு சேர்த்துகிட்டாச்சா? //

ரங்கமணிகள் எல்லாம் நண்பர்களை கூட்டிகிட்டு வந்து எஞ்சாய் செய்வதில்லையா??? எங்களுக்கு பிள்ளைகள்தான் ஃப்ரெண்ட்.

:)))

புதுகைத் தென்றல் said...

நாங்களும் அடிப்போம் கொட்டம் அப்ப பசங்க சின்னவங்களா இருக்கும்போது.
டாடி வர்லியாம்மான்னு கேட்டுக் கிட்டே சுத்திவந்து கதை சொல்லச் சொல்லி, எல்லாரும உட்கார்ந்து சாப்பிட்டு,மாடிவீட்ல போய்த் தூங்கி எழுந்து எல்லாம்தான்//

ஆஹா அங்கயுமா.

குட் குட். சீக்கிரமா டின்னர் சமைச்சு முடிச்சிட்டு பசங்க பக்கத்துலேயே இருக்கணும். இல்லாட்டி போரடிக்குது, தனியா இருக்க பயமா இருக்குன்னு புத்தகத்தை எடுத்துகிட்டு கிச்சனுக்கே வந்திடுவாங்க.

பெட் டைம் ஸ்டோரி சொல்லுன்னு என் கட்டிலில் இரண்டு வாண்டுகளும் வந்து படுத்துகிட்டு ஒரே கலாட்டாதான். உங்க ரூம்லேயே படுத்துக்கங்களேன்னு சொன்னா, உனக்குத் தனியா இருக்க பயமா இருக்குமான்னு சொல்லிகிட்டு எனக்கு முன்னாடி வந்து படுத்துக்கும் இரண்டும்.

வருகைக்கு நன்றிம்மா

புதுகைத் தென்றல் said...

அப்பா இல்லைனா நீ சரியாவே சமைக்கறதில்லைனு பசங்களும், பசங்க இல்லைனா உனக்கு சமைக்கிறதிலே ஆர்வமே இருக்கிறதில்லைனு அவரும் மாத்தி, மாத்திப் போட்டுத் தாக்கறாங்க! இதுக்கு என்ன செய்யறதாம்??? சொல்லிக் கொடுங்க, முயன்று பார்ப்போம்!//

ஆஹா பெரியவங்க உங்களுக்கு நான் சொல்வதா கீதாம்மா!!

ஆனாலும் தெரிஞ்சதை சொல்றேன் அப்பா இல்லாத பொழுது பசங்களுக்கு பிடிச்ச மெனு, பசங்க இல்லாத பொழுது அப்பாவுக்கு பிடிச்ச மெனு
(2 பேருக்கு மட்டும் சமைப்பது மஹா கொடுமைன்னு ஆண்களுக்கு தெரியாது. செப்பு சாமான் வைத்து விளையாடுவது போல இருக்க்ம்னு அனுபவ பட்டவங்க சொல்லியிருக்காங்க

ரங்கன் said...

எங்கள் வீட்டிலும் இதே நிலைதான் இருந்தது..

நாங்கள் அவர் இல்லாமல் நிம்மதியாய் உணர்வதை கண்டாரோ என்னவோ?

இனி வரவே மாட்டேன் என்று கிளம்பிவிட்டார் அப்பா..!!

ஹாஹாஹா..நல்ல பதிவு ..

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்கி..!!

கீதா சாம்பசிவம் said...

//ஆஹா பெரியவங்க உங்களுக்கு நான் சொல்வதா கீதாம்மா!!//

என்ன கொடுமைடா சரவணா இது??? நான் பெரியவங்க லிஸ்டிலேயா???? அக்கிரமமா இருக்கே?? :P:P:P:P

ஹுஸைனம்மா said...

என்னா கும்மி!! நீங்க கொடுத்து வச்சவங்க தென்றல்!!

இடையில சில வருஷம் இவர் பக்கத்து ஊர்ல வேலைங்கிறதால ஒருநா விட்டு வருவார் . அப்ப எஞ்சாய் பண்ணதுதான். இப்ப இங்கியே வேலை.

இதுல கொடுமை என்னன்னா, எம்புள்ளைங்க உனக்கு ஆஃபீஸ்ல டூரெல்லாம் கிடையாதான்னு கேக்கிறாங்க!! (அப்பாதான் ரொம்பப் பிடிக்கும்!!)

fundoo said...

ம்ம்ம்.. அங்கங்கே பசியெடுத்தா பலகாரம்.. அளவுச்சாப்பாடு ஒரு நேரம்..

அண்ணன் ரஜினி உங்க ஜிம்கானாவைப் பாத்துதான் பாடினாரு போல. வெளுத்து கட்டுங்க. நான் ஏற்கனவே சொன்னமாதிரி... பாவம் அந்த நல்ல மனிசன்..

அமுதா said...

:-)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ரங்கன்

புதுகைத் தென்றல் said...

என்ன கொடுமைடா சரவணா இது??? நான் பெரியவங்க லிஸ்டிலேயா???? அக்கிரமமா இருக்கே?? //
மன்னிச்சிருங்க
எனக்கும் இந்த அக்கிரமம் நடந்துச்சு.
45 வயசுக்காரவுக கூட என்னிய அக்கான்னு கூப்பிட்டுகிட்டு கிடந்தாங்க. அக்கா, அக்கா நீ அக்காயில்லை பதிவு போட்டதுக்கப்புறம் தான் தெளிஞ்சிச்சு.

நீங்களும் அப்படி ஒரு பதிவு போடுங்க. நான் தெளிஞ்சுக்கறேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

நீங்க கொடுத்து வச்சவங்க தென்றல்!!//

இதுக்கும்மா அவ்வ்வ்வ்

இடையில சில வருஷம் இவர் பக்கத்து ஊர்ல வேலைங்கிறதால ஒருநா விட்டு வருவார் . அப்ப எஞ்சாய் பண்ணதுதான். இப்ப இங்கியே வேலை.//

பாவம். கல்யாணம் ஆனதுலேர்ந்து அயித்தானுக்கு டூரோ டூர்தான். இடையில் அவுக மட்டும் தனியா ஒருவருஷம் இலங்கையில் வேலை. அப்ப ரொம்ப போரடிச்சுசு.

இதுல கொடுமை என்னன்னா, எம்புள்ளைங்க உனக்கு ஆஃபீஸ்ல டூரெல்லாம் கிடையாதான்னு கேக்கிறாங்க!! (அப்பாதான் ரொம்பப் பிடிக்கும்!!)
சேம் பளட்
நம்ம வீட்டுல கூட “அப்பா நீங்க ஊருக்கு போயி ரொம்ப நாளாச்சேன்னு” கேப்பாங்க.

புதுகைத் தென்றல் said...

நான் ஏற்கனவே சொன்னமாதிரி... பாவம் அந்த நல்ல மனிசன்..//

:))) ரங்கமணி சங்கத்துக்கு இன்னொரு ஆளு சேர்ந்திருச்சுப்பா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி அமுதா

Vidhoosh said...

:) ஓஓஹோ இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?

அது சரி.

--வித்யா

புதுகைத் தென்றல் said...

ஓஓஹோ இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?

அது சரி. //

:)))வருகைக்கு நன்றி வித்யா

ஆயில்யன் said...

ஆஹா !

//எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிட்டாரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........///

அப்பிடி எதுனாச்சும் படத்துல வந்தாத்தான் நாங்க நம்புவோமாக்கும் !

புதுகைத் தென்றல் said...

அப்பிடி எதுனாச்சும் படத்துல வந்தாத்தான் நாங்க நம்புவோமாக்கும் !//

பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டான்னு ஜனகராஜ் குதிச்சதுக்கு பெண்கள் ஏதும் சொல்லலை. எதிர்ப்பு தெரிவிக்கலை.

அதுவே எங்க வீட்டுக்காரர் ஊருக்குபோயிட்டாருன்னு சந்தோஷமா பொண்டாட்டி சொன்னா ஏத்துக்க கூடிய ஆண்கள் கைவிட்டு என்னிடலாம் பாஸ்

சோ இப்படி சினிமால வற சான்சே இல்லை

நாஞ்சில் பிரதாப் said...

ஆஹா... இப்பவே கண்ணைக்கட்டுதே... மொத்தத்துல நீங்க வீட்டுக்காவல்ல வைக்கபட்டிருக்கீங்க...

butterfly Surya said...

இப்படியெல்லாம் தங்கமணிகள் கொண்டாடுவாங்களா..??

தெரியாம போச்சே..??

காற்றில் எந்தன் கீதம் said...

நமக்கு அந்த கொடுப்பின இன்னிக்கி வரைக்கும் இல்ல :(
நாம பிசினஸ் டூர் போனா கூட இங்க ஒருத்தருக்கு காய்ச்சல் வந்திருது, என்ன செய்ய :)
நீங்க கொண்டாடுங்க

புதுகைத் தென்றல் said...

மொத்தத்துல நீங்க வீட்டுக்காவல்ல வைக்கபட்டிருக்கீங்க...//

ஏங்க இப்படி? நான் வீட்டுக்காவல்லாம் இல்ல ஆனந்தமா வானத்துல சிறகடிச்சு பறந்துகிட்டுத்தான் இருக்கேன்.

அடுத்த பின்னூட்டத்தையும் படிங்க

புதுகைத் தென்றல் said...

இப்படியெல்லாம் தங்கமணிகள் கொண்டாடுவாங்களா..??

தெரியாம போச்சே..??//

வாங்க சூர்யா,

ச்சும்மா என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டான்னு ரங்க்ஸ்கள்லாம் சந்தோஷமா இருக்கீங்கல்ல. ரங்க்ஸ்கள் ஊருக்குப்போனா தங்கமணிகளும் சந்தோஷமாத்தான் இருப்பாங்கன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு.

ஹஸ்பண்டாலஜி பாடத்துல ஒரு வொர்க்‌ஷாப் மாதிரின்னு வச்சுக்கோங்க

:))))

புதுகைத் தென்றல் said...

நாம பிசினஸ் டூர் போனா கூட இங்க ஒருத்தருக்கு காய்ச்சல் வந்திருது, என்ன செய்ய //

ஆஹா அப்படியா செய்தி. குட் குட்

வருகைக்கு நன்றி சுதர்ஷிணி

நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

அட இன்னும் யாரையும் காணலியே!!

ஆச்சரியமால்ல இருக்கு/


//74 Comments //


போதும் தானே?????

நிஜமா நல்லவன் said...

ஒரே ரணகளமா இருக்கு:)

நிஜமா நல்லவன் said...

ஹைதராபாத் தான் ரணகள பூமின்னா அங்க இருந்து பதிவு போட்டாலும் அப்படித்தான் போல:)

புதுகைத் தென்றல் said...

//74 Comments //


போதும் தானே?????//

உங்க கமெண்டுகளோடச் சேர்ந்து 77 ஆச்சு

:)) போதும்