Tuesday, January 05, 2010

பிரிவு தரும் நெருக்கம்....

தங்கமணிகள் ஊருக்குப்போனா எஞ்சாய் செய்வது பற்றி
பதிவு போடுவார்கள் ரங்கமணிகள். ரங்கமணி ஊருக்குப்போனா
தங்கமணி மட்டும் சோக கீதம் வாசிச்சுகிட்டு இருக்கமாட்டாங்கன்னு
புரிய வைக்கத்தான் என் முந்தைய பதிவு!!


ஊடலில் காதல் அதிகமாகும். அதே போலத்தான்
பிரிவும். சின்ன சின்ன பிரிவுகள் போதிக்கும் பாடங்கள் எவ்வளவோ!!!
இந்தச் சின்னச்சின்ன பிரிவுகள் நிரந்தர பிரிவை நிரந்தரமாக
எட்டத்தில் வைக்கும் காரணிகளாகும்.

நீர் ஊறும் கிணற்றை அவ்வப்போது தூர்வாரினால் தான்
ஊற்று அதிகமாக சுரக்கும். அப்படித்தான் கணவன்/மனைவிக்குள்
இருக்கும் உறவும். அன்பெனும் ஊற்றை அவ்வப்போது
தூர் வாரினால் வற்றாத சுனையாக அன்பு பெருக்கெடுத்து
அன்பால் இயந்த வாழ்க்கையை இருவரும் வாழ முடியும்.


எப்போதும் அருகருகே இருப்பதால் ஒருவரின் அருமை மற்றவருக்கு
புரியாமலேயே போய்விடும். அவ்வப்போது நிகழும் சண்டைகள்,
வாத விவாதங்கள், எரிச்சல்கள் கசடாக மனதில் தங்கி வெறுப்பு பெருகவும்
வாய்ப்பிருப்பதாக உளவியாலர்கள் சொல்கிறார்கள்.


வாலிப வயதில் துணையின் அவசியம் பெரிதாகத் தெரியாது.
ஆனால் வயதான காலத்தில் ஒருவரின் துணை ஒருவருக்கு
பெரிய ஆறுதல். அப்பா எனும் என் இந்தப் படைப்பை
படித்திருக்கிறீர்களா!!! இது சத்தியமான நிஜம்.

பிரிந்திருக்கிரும் போதுதான் துணையின் மீது அன்பு
அதிகமாகும். என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா
என துள்ளிக் குதிப்பவர்கள் கூட 4 நாள் கழித்து
வெறிச்சோடிக்கிடக்கும் வீட்டிற்குள் நுழையப் பிடிக்காமல்
தவிப்பார்கள்.


சேர்ந்து டீ/காபி அருந்திவிட்டு தனியாக டீ குடிக்கக்கூட
பிடிக்காது. நாளெல்லாம் அலுவலகம் சென்றிருக்கிறார்
என நினைத்தாலும் மாலையில் வீடு திரும்பாதது
வெறுமையா தோன்றும்.


அயித்தான் ஊருக்குப்போனால் நான் செய்வது என்னத்
தெரியுமா? சுய அலசல்.

ஆம் இது மிக முக்கியமானது. நான் செய்துதான் சரி
என பல நேரங்களில் வாதிட்டிருப்போம். ஆனால்
உண்மையை மனது ஏற்காது. இப்படி தனித்திருக்கும்
தருணங்களில் இனிமையான நிகழ்வுகளை அசைபோடுவது
போல, சண்டையிட்ட, கோபப்பட்ட தருணங்களையும்
அசை போடுவேன். வாக்குவாதங்களை தவிர்த்திருக்கலாம்
எனும் தோணும் பட்சத்தில் மன்னிப்பு கேட்டு மெயில்
எழுதிடுவேன். அவரும் தன் பக்கம் தவறிருந்தால் மன்னிப்பு
கேட்டு விடுவார். நேரிலும் மன்னிப்பு கேட்டிருப்போம்
என்றாலும் இது இன்னமும் நெருக்கத்தைத் தரும்.


இப்படி அலசிப் பார்க்கும் பொழுது நம் தவறை திருத்திக்
கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த சுய அலசல் கணவன்/
மனைவி இருவரும் செய்து பார்த்தால் புரியும்.

மன்னிப்பை வாய்விட்டுச் சொல்வது போல் அன்பையும்
வெளிப்படுத்த வேண்டும். ஆண்கள் இயற்கையிலேயெ
அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள். அந்த பூட்டை
உடைத்து அன்பை வெளிப்படுத்தினால் மனைவி ஏன்
சண்டை போடப்போகிறாள். தன் செயலால், பரிவான
வார்த்தையால், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு
நடப்பதால் அன்பை இருவரும் வெளிக்காட்டலாம்.

தனக்கென சாய்ந்து கொள்ள தோளிருக்கிறது என்ற
எண்ணமே வலிமை தருமே!!

எட்டி நிற்கும்போது அருகில் துணையில்லாமல் தனிமையில்
இருக்கும்போது,”என்ன செய்கிறாளோ! சாப்பிட்டாரோ!
என துணையின் மீது அக்கறை பிறக்கிறது.

“சாப்பிட்டியாப்பா” எனும் அந்த ஒரு வார்த்தையில் உள்ளம்
உருகிவிடுமே!!

தான் ஊரில் இல்லாமல் சாப்பாட்டுக்கு கணவர் கஷ்டப்படுகிறார்
என்பதை உணர்ந்த பெண் கணவனை விட்டுச் செல்லவே
மாட்டார்.

தூர இருந்தும் அருகில் வாழும் தன்மை தானாக வந்துவிடும்.
நேசிக்கும், நேசிக்கப்படும் மனதில் குற்றங்குறைகள் பெரிதாகத்
தெரியாது.


இப்படி தனிமையாக இருக்கும்பொழுது நம் தனித்துவத்திற்கு
இடம் இருக்கிறது. சேர்ந்து இருக்கும்பொழுது தனித்துவம்
மறைந்து ஒருவருக்காக ஒருவர் அதிகமாகவே விட்டுக்கொடுக்கிறோம்.


நான் நானாக இருக்க வேண்டும், சுயமாக இருக்க வேண்டும்
என்பது ஆணுக்கும்/பெண்ணுக்கும் பொதுவல்லவா??


ஊரிலிருந்து வந்ததும், “ நீ போடும் மசாலா டீ போல
வேறெந்த டீயும் வராதுப்பா! உன் கையால எப்ப டீ
சாப்பிடுவோம்னு ஓடி வந்தேன்” எனும் பாராட்டு,

“நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுப்பா!”
தனியா தூங்கக்கூட முடியலை!” என்பதில் இருக்கும்
நெருக்கம் தரும் சந்தோஷம் வேறெதில் கிடைக்கும்!!!!

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே பாட்டு
மன நிம்மதிக்கும் பொருந்தும். கணவன்/மனைவி
உறவு விரிசல் விழாமல் காக்கும் அதிசயம்
நம் கையில்தான் இருக்கிறது.

இனிமையான இல்லம் அமைய கணவன் மனைவி உறவில்
தேவையான நெருக்கத்தை பற்றி சகோதரி ஃபைசாகாதர்
எழுதியிருக்கும் பதிவை படிக்கத் தவறாதீர்கள்.


இருமணம் இணைந்தால் தான் திருமணம்.
திருமணம் நிகழ்வதால் வருவதுதான் இனிய இல்லறம்.
இதில் ஆண்/பெண் பாகுபாடின்றி இருவரும்
அன்பால் கட்டப்பட்டால் ஆனந்தத்துக்கு அளவேது???

25 comments:

PPattian : புபட்டியன் said...

ஷொட்டு.. பகிர்வுக்கு நன்றி

அந்த "ஜாலிலே ஜிம்கானா".. தலைப்பு எதோ ஒரு ரேடியோவில் கேட்ட மாதிரி இருக்கு..

kannaki said...

உணர்வுபூர்வமா இருக்கு தென்றல். .....நல்லா இருக்கு உங்க பதிவு...

Mrs.Faizakader said...

முதலில் உங்களுக்கு எனது நன்றிகள்.. பிரிவு தரும் நெருக்கம்.... மிகவும் அழகாக சொல்லியிருக்கிங்கள்..
கணவன் மனைவி சேர்ந்து இருக்கும் பொழுது கூட சிலர் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொளவது இல்லை ஆனால் பிரிந்து இருக்கும் பொழுது இருவரின் ஏக்கங்கள் அதிகமாகும்.
//மன்னிப்பை வாய்விட்டுச் சொல்வது போல் அன்பையும்
வெளிப்படுத்த வேண்டும். ஆண்கள் இயற்கையிலேயெ
அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள். அந்த பூட்டை
உடைத்து அன்பை வெளிப்படுத்தினால் மனைவி ஏன்
சண்டை போடப்போகிறாள்.// உண்மை தான்.. நாங்கள் அதை தான் எதிர்பார்க்கிறோம்..


உங்க‌ள் வ‌லைப்பூவில் 100 வ‌து ஃப்ளோவ‌ர்ஸ் ஆன‌து மிகுந்த‌ ச‌ந்தோஷ‌ம் (ரொம்ப‌ லேட்)
என்றும் நட்புடன்
ஃபாயிஷாகாதர்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் ஷொட்டுக்கும் நன்றி புட்டியன்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கண்ணகி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபாயிஷாகாதர்,

என் வலைப்பூக்கும் 100 ஃபாலோயர்கள்னு சொல்லிக்கலாம். சந்தோஷம்.

உங்க கருத்திற்கும் நன்றி

fundoo said...

தெரியுமா. இந்தப் பதிவைப் படிக்கையில அப்டியே வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் படமாக ஓடுகின்றன. மத்தவங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன்.
நன்றி.

ramasamy kannan said...

நிஜம்..

பூங்குன்றன்.வே said...

நல்ல பகிர்வுக்கு வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

எப்படி இவ்வளவு அழகா எழுதறீங்க? ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

எல்லாமே மிகச்சரி!! (எவ்வளவு சண்டை போட்டிருக்கோம், அந்த அனுபவம்தான்!!)

Anonymous said...

முதல்ல எல்லாம் ரங்கமணி டூர் போவார். இப்ப காஸ்ட் கட்டிங்ல அது கட் ஆயிடுச்சு.

புதுகைத் தென்றல் said...

இந்தப் பதிவைப் படிக்கையில அப்டியே வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் படமாக ஓடுகின்றன. மத்தவங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். //

வாங்க ஃபண்டூ,

பலரின் வாழ்க்கையில் நடந்திருப்பதுதான். ஆனால் இதையெல்லாம் நினைத்துப்பார்க்க நேரம் ஒதுக்க மாட்டோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

(தங்கமணிக்காக நேரமா?? சான்சே இல்ல) அப்பாடி இன்னைய கந்தாயத்துக்கு ரங்குகளை உசுப்பியாச்சு.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்

புதுகைத் தென்றல் said...

நன்றி பூங்குன்றன்

புதுகைத் தென்றல் said...

(எவ்வளவு சண்டை போட்டிருக்கோம், அந்த அனுபவம்தான்!!)//

வாங்க ஹுசைனம்மா,

பாராட்டுக்கு நன்றி. நல்லதொரு பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு வழிகாட்டி. குழந்தை செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் பெற்றோரின் பங்கும் இருக்கிறது. குழந்தையின் நலனுக்காகவும் அர்த்தமுள்ள அடுத்த தலைமுறை உருவாகவும் ஒரு மாண்டிசோரி ஆசிரியையாய் என் உணர்வுகளை பதிகிறேன்.

புதுகைத் தென்றல் said...

பொங்கல் சீசனாச்சே அதைப்பத்தி ஒரு எக்சாம்பிள் பாப்போம்.

தித்திக்கும் பொங்கலில் தேன்மாரி பெய்தாலும் அளவுக்கதிகமாக சாப்பிட முடியாதுல்ல. திகட்டும். அதுக்குத் தோதா உப்பு, புளி, காரம் சேத்த கொத்துமல்லித் துவையல் இருந்தால் பொங்கலை இன்னொரு ரவுண்ட் கட்டலாம்.

வாழ்க்கையில் சண்டை சச்சரவுகளும் இருக்கத்தான் வேண்டும். இருக்கணும். ஊடலினால்தானே கூடல் அதிகமாகிறது.

புதுகைத் தென்றல் said...

வாங்க சின்ன அம்மிணி,

வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

நிதர்சணங்களோடான பதிவு.

வார்த்தையை வெளியிடுமுன் கொஞ்சம் அசை போட்டால் பல பிரச்சனைகளை தவிர்கலாம்.

ஈகோ இருக்கவே கூடாது அதுவும் நட்புக்குள்ளும், கனவன்/மனைவிக்குள்ளும் கூடவே கூடாது.

சிறு சிறு பிரிவுகள் தேவைதான்

அதிகப்பிரிவு ஆபத்து - பலரை சந்தித்து இருக்கேன் - வெளிநாட்டு வாழ்க்கையில் - தனிமையை விரும்ப துவங்கிடுவார்கள். மனைவி/குழந்தை இவையெல்லாம் வருடம் 2 மாதம் தான். அது போல அங்கேயும் நினைக்க துவங்கிடுவாங்க, பலரால் தவிர்க்க இயலவில்லை இதனை ... :(

சரி பிரார்த்திப்போம்.

புதுகைத் தென்றல் said...

அருமையான கருத்துக்கள் ஜமால்,

வெளிநாட்டில் வாழ்வோர்களின் எண்ணங்களை வெளிபடுத்தி அவர்களைப்பற்றியும்தெரிந்து கொள்ள வைத்தீர்கள்.

நன்றி

T.V.Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி டீவீ ஆர்.

வித்யா said...

அழகு.

புதுகைத் தென்றல் said...

thanks vidya

பரிசல்காரன் said...

யக்கா..

நல்லாருக்கு!

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

புதுகைத் தென்றல் said...

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//

உ.கு ஏதும் இல்லையே????