அது என்ன கொடுமையோ தெரியலை!!
தங்கமணி என்ன செஞ்சாலும் குத்தம் தான். எப்பப்பாரு தன் வீட்டு
ஆளுங்களோட ஒப்பீடு செஞ்சு செஞ்சு வதைய வாங்குவாங்க.
நானா சொல்லலை. ஆதாரம் இருக்கு.
நம்ம ஃப்ரண்ட் ஆதிபதிவு பாருங்க.
என் மனைவிக்கு நல்லா சமைக்கத் தெரியாது. அவ
ரசம் வெச்சிருக்காளா, குழம்பு வெச்சிருக்காளான்னு விளங்கல!!
எங்கம்மாவும் வெப்பாங்க பாருங்க குழம்பு!!! சும்மா தேவாமிர்தம்.
இதெல்லாம் நிறைய்ய வீட்டுல கேள்வி பட்ட டயலாக்குகள் தான்.
அம்மாவின் கைப்பக்குவம் சாப்பிட்டு சாப்பிட்டு
ருசி கண்ட நாக்குக்கு மத்த சமையல் நிஜமாவே நல்லா இருந்தாலும்
ஏத்துக்காது. ”என்ன இருந்தாலும் எங்கம்மா செய்வது மாதிரி
வராது!!” அப்படின்னு சொல்லிட்டு சாப்பிட்டாத்தான் ரங்க்ஸ்களுக்கு
தின்னது செரிமானம் ஆகும்.
ஒவ்வொரு வீட்டுலயும் சமையல் பக்குவம் மாறும். ருசியும் மாறும்.
அந்தந்த இடத்தின் தண்ணி,சமைக்கும் பதார்த்தங்களின் தரம்,
எல்லாமும் நல்ல சமையலுக்கு காரணம்னு ரங்கமணிகளுக்கு புரியுமா?
இல்ல புரிய வைக்கத்தான் முடியுமா??
இம்புட்டு வருஷம் வளர்த்த பெத்தவங்களை நமக்காக விட்டுட்டு
வந்திருக்காளேன்னு சந்தோஷ பட்டுக்காம சமைக்கது சரியில்லை,
ருசியில்லைன்னு புலம்பத்தான் தெரியும்.
சமீபத்துல கோக் விளம்பரம் ஒண்ணு எல்லோரும் பாத்திருப்பீங்க.
”எங்கம்மா செய்யும் சமையல் தான் ருசின்னு!!” பையன் சொல்ல
அம்மா, தலையைக் கோதுவாங்க. ஆனா அந்த பையனோட அப்பா
”அதெல்லாம் இல்ல! எங்க அம்மா சமையல் தான் பெஸ்டுன்னு!!” சொல்வார்.
கடைசியில பாத்தீங்கன்னா மாமியாரும் மருமகளும் கைகோத்து
கிட்டுத்தான் நிப்பாங்க.
இந்த மாதிரி எல்லா வீட்டுலயும் இருக்க மாட்டாங்க. அவங்க
விளம்பரமாச்சேன்னு நடிச்சிருக்காங்க.(மாமியார் மருமக சண்டைக்கு முக்கிய
காரணம் ரங்கமணிகளின் இந்த மாதிரி ஒப்பீடுகள்தான்)
மொத்தத்துல ஒவ்வொரு மகனுக்கும் அவங்க அம்மா சமையல் தான்
பிடிக்கும். இன்னைக்கு நீங்க சொல்வது மாதிரி நாளைக்கு உங்க மகன்/மகள்
சொல்வாங்க. நீங்க அப்படி சொல்வதால தங்கமணிகள் நல்லா
சமைப்பதில்லைன்னு அர்த்தம் ஆகிடாது. :)))
ச்சும்மா தங்கமணிகளை குத்தம் சொல்வதை நிப்பாட்டிட்டு
சந்தோஷமா இருக்கற வழியைப் பாருங்க ரங்கமணிகளா!!
டிஸ்கி: இன்னைக்கு இந்த முக்கியமான பதிவு வந்தே
ஆகவேண்டிய கட்டாயத்தால் இன்னைக்கு வரவேண்டிய
Personality Development பதிவு வியாழக்கிழமை கண்டிப்பா
வரும்.
தமிழ்மணத்துல ஓட்டு போட மறந்திடாதீங்க!!
40 comments:
mic testing
//(மாமியார் மருமக சண்டைக்கு முக்கிய
காரணம் ரங்கமணிகளின் இந்த மாதிரி ஒப்பீடுகள்தான்)//
இத...இத..இத.. இதத்தான் எதிர்பார்த்தேன் :-))))).
வாங்க அமைதிச்சாரல்,
இத...இத..இத.. இதத்தான் எதிர்பார்த்தேன் :-)))))//
வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். ஓட்டு போட்டீங்களா?
ஓட்டுப்போட்டாச்சு.
ஒரு உருப்படியான பதிவை ஒத்தி வச்சுட்டு பண்ற காரியமா இது?
அப்புறம் நல்லா கவனிச்சீங்கன்னா தெரியும். எங்கள் வீட்டு நால்வர் அணியைத்தான் (அம்மா, தங்கை, மனைவி, மைத்துனி) அப்படிச்சொன்னேன், ரமாவை மட்டுமல்ல. என் அம்மாவும் அதில் சேர்த்தி என்பதை மறக்க வேண்டாம். ஹிஹி..
ஓட்டுப்போட்டாச்சு.//
டேங்க்ஸ்பா
ஒரு உருப்படியான பதிவை ஒத்தி வச்சுட்டு பண்ற காரியமா இது?//
வாங்க ஃப்ரெண்ட் வாங்க. தங்கமணிகளைத் தாக்கி பதிவு போட்டா எதிர் பதிவு போடாட்டி எப்பூடி??
அப்புறம் நல்லா கவனிச்சீங்கன்னா தெரியும். எங்கள் வீட்டு நால்வர் அணியைத்தான் (அம்மா, தங்கை, மனைவி, மைத்துனி) அப்படிச்சொன்னேன், ரமாவை மட்டுமல்ல. என் அம்மாவும் அதில் சேர்த்தி என்பதை மறக்க வேண்டாம். ஹிஹி..//
அதான் எல்லா தங்கமணிகளையும் சேத்து சொல்லியிருக்கீங்க. நிறைய்ய பேருக்கு அம்மா, கூடபொறந்தவங்கன்னா மட்டும் ரொம்பவே உசத்தி. அவங்களுக்காகவும்தான் இந்தப் பதிவு
:)
அது என்னவோங்க, நான் வேற மாதிரி புலம்புறேன்..
எங்கம்மாவும் சரி, எங்க தங்கமணியும் சரி, நான் சமைக்கிற அளவுக்கு ருசியா சமைக்க மாட்டேங்கிறாங்க. கடைசியில நீ சமைக்கிறதுதான் டேஸ்ட்டா இருக்குதுன்னு சொல்லி சமைக்கிற பொறுப்பை நம்ம கிட்டயே தள்ளிட்டாங்க.. :(((
கடவுளே கடவுளே
இதுக்கெல்லாம் ஒரு பதிவு.
அது கிடக்கட்டும் உங்களுக்கு ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நான் சின்னவனா இருக்கப்ப எங்க அம்மா பூண்டு குழம்பு வச்சாங்கன்னா ... அடா அடா... என்னா வாசம் என்னா டேஸ்ட்டு....
ஹ்ம்ம்ம்ம்ம் ... தங்கமனி அப்படி வைக்கறது இல்லைன்னு நான் சொல்ல வரல. ஆனா அப்படி வச்சா நல்லாருக்குமேன்னு தான் சொல்ல வரேன் ;)
//என் மனைவிக்கு நல்லா சமைக்கத் தெரியாது. அவ
ரசம் வெச்சிருக்காளா, குழம்பு வெச்சிருக்காளான்னு விளங்கல!!
எங்கம்மாவும் வெப்பாங்க பாருங்க குழம்பு!!! சும்மா தேவாமிர்தம்.
இதெல்லாம் நிறைய்ய வீட்டுல கேள்வி பட்ட டயலாக்குகள் தான்.//
ithula kelvipata enna irukku... athu thane unmai...
when mother is started to cook, she s mixing not only rice+water+vegetables and also with her full of love..because of this reason "HER COOKING S SOO NICE AND GOOD"....
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி கயல்
எங்கம்மாவும் சரி, எங்க தங்கமணியும் சரி, நான் சமைக்கிற அளவுக்கு ருசியா சமைக்க மாட்டேங்கிறாங்க. கடைசியில நீ சமைக்கிறதுதான் டேஸ்ட்டா இருக்குதுன்னு சொல்லி சமைக்கிற பொறுப்பை நம்ம கிட்டயே தள்ளிட்டாங்க.. :(((//
எங்கப்பா வைக்கும் ரசத்துக்கு நாங்க அடிமை.மாமா செய்யும் பாவ்பாஜி சூப்பரா இருக்கும். இதுவும் சகஜம்.
:))
தங்கமனி அப்படி வைக்கறது இல்லைன்னு நான் சொல்ல வரல. ஆனா அப்படி வச்சா நல்லாருக்குமேன்னு தான் சொல்ல வரேன் ;)//
அருணாவுக்கு போன் போட்டே ஆகணுமே. அருணாவின் சமையல் ருசியை சாப்பிட்ட ஆயில்ஸ், பாரதி எல்லோரும் கிளம்பிவாங்கப்பா
when mother is started to cook, she s mixing not only rice+water+vegetables and also with her full of love..because of this reason "HER COOKING S SOO NICE AND GOOD"....//
Every mother has this capability. u people differentiate women as your mother and your wife and hence u don't get satisfied.
//ச்சும்மா தங்கமணிகளை குத்தம் சொல்வதை நிப்பாட்டிட்டு
சந்தோஷமா இருக்கற வழியைப் பாருங்க ரங்கமணிகளா!!//
எல்லாம் சரி.......
தங்கமணி எங்கள குத்தம் சொல்றத யார் கேக்கறது.......
அம்மாவின் சமையலை நாம் ருசி பார்க்க ஆரம்பிக்கும்போது, அம்மா சமையலில் நன்றாகத் தேறி இருப்பார். மனைவியோ, திருமணத்திற்குப் பிறகுதான் சமையல் செய்யப் படிக்க ஆரம்பித்திருப்பார். அதனால் ஆரம்பக்காலங்களில் வித்தியாசம் இருக்கலாம். அதே மனைவியின் சமையல், அவரின் மகனுக்கு ருசியாகத்தானே இருக்கிறது?
மற்றபடி எப்பப் பாத்தாலும் ஒப்பிட்டுக் கொண்டு எரிச்சல்படுத்திக் கொண்டிருந்தால், அப்பா-கணவர் ஒப்பீடுதான் பதிலாகும். (ஓவர்டோஸ் ஆகிடக்கூடாது).
குடும்பத்துக்குள்ள நடக்கிற சென்சிட்டிவான விஷயங்களை எல்லாம் எல்லாரும் படிக்கிற மாதிரி செய்றது ரொம்ப ஓவர். சமையல்தானேன்னு சாதாரணமா சொன்னாலும் சம்பத்தப்பட்டவங்க மனசு கண்டிப்பா கஷ்டப்படும். விஜய் டிவி நீயா நானாவுக்கும் இந்த மாதிரி பதிவுகளுக்கும் வித்தியாசம் இல்லை..
நல்ல விஷயத்தை சொல்லிருக்கீங்க.. புரியரவங்களுக்கு புரிஞ்சா சரி.
ஹலோ மேடம் நீங்க உங்க பிலாக்குல சைட் பார்ல போட்டு சக்ஸஸ் ஆகும்வரை விட மாட்டேன்.உங்களுக்காக என் பக்கத்தில் போட்டுப் பார்த்து விட்டேன்.சரியாக வருகிறது.காபி பேஸ்ட் செய்யும் போதோ அல்லது அனானி வேண்டாம்னு சிலவற்றை நீக்கும் போதோ கவனம் தேவை.ஒரு அரைப் புள்ளி [,] கூடினாலும்/குறைந்தாலும் தப்பாகி விடும்.
வரலைன்னா விட்டுடுவோமா?கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தங்கமணி எங்கள குத்தம் சொல்றத யார் கேக்கறது.......//
ஆகா அப்படியே குத்தம் சொல்லிட்டாலும் விட்டுடுவாங்களா ரங்குகள்??
மற்றபடி எப்பப் பாத்தாலும் ஒப்பிட்டுக் கொண்டு எரிச்சல்படுத்திக் கொண்டிருந்தால், அப்பா-கணவர் ஒப்பீடுதான் பதிலாகும்.//
ஆஹா எப்படிப்பா இப்படி!!!
அடுத்த இதைவெச்சு ஒரு பதிவு போடலாம்னு நினைச்சுகினு இருந்தேன்.
எங்கப்பா மாதிரி இல்ல, எங்க மாமா மாதிரி இல்ல, எங்கண்ணன் மாதிரி இல்லன்னு மனைவி சொன்னா தாங்குவாங்களா ரங்குகள்? (பொதுவாத்தான் சொல்றேன்)
நினைச்சுப்பாருங்க மிஸ்டர். ரங்க்ஸ்
நாஸியா கூல் கூல்,
நல்ல விஷயத்தை சொல்லிருக்கீங்க.. புரியரவங்களுக்கு புரிஞ்சா சரி.//
அது
வரலைன்னா விட்டுடுவோமா?கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
கண்மணி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு சொன்னாங்க. நான் நம்பலை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ச்சும்மா தங்கமணிகளை குத்தம் சொல்வதை நிப்பாட்டிட்டு
சந்தோஷமா இருக்கற வழியைப் பாருங்க ரங்கமணிகளா!!//
சூப்பர் தென்றல்
// ”என்ன இருந்தாலும் எங்கம்மா செய்வது மாதிரி வராது!!” //
இது எல்லாம் அந்த காலத்துல கூட்டுக்குடும்பத்திலிருந்த காலத்துல கணவன் மனைவிக்கிடையே ஊடல் ஏற்படுத்தக்கூடிய காரனிகள்..
குடும்பமா சாப்பிட்டுகொண்டிருக்கும் போது புது மனைவி செய்த சமையலை அதிகமா சாப்பிட்டுவிட்டு இதே “ ”என்ன இருந்தாலும் எங்கம்மா செய்வது மாதிரி
வராது!!” என்ற டயலாக்கை அனைவர் முன்னும் சொல்லிவிட்டு.. பின் தன்னறையில் மனைவியிடம் “ அற்புதமான சமயல்ம்மா.. எவ்வளவு ருசி என்றும்.. பின் ஏன் சாப்பிடும்போது உங்கம்மா சமயல் மாதிரி இல்லை என்று சொன்னீங்கன்னு மனைவி கேட்கும் போது “ எல்லோர் முன்னும் உன்னை உன் சமயலை புகழ்ந்தால் பின் அவர்கள் உன்னிடம் பொறாமை பாரட்டுவார்களே என்றுரைத்து .. சமாதானப்படுத்துவது.. அப்பொழுது..
இது எல்லாம் அப்பப்போ தேவையானது தானே?
இப்ப நாம எப்படி இருக்கோம்னு பார்த்துக்கோங்க.. இது பற்றி கூட பிளாக் எழுதும் அளவுக்கு தானே!?
புரிதலுக்கான நேரம் எவ்வளவு உள்ளது இந்த தற்சமய அவசர உலகில்?? சிறு சிறு ஊடல்களுக்கான நேரம் எங்கே?
ஆனா இதையே எப்பவும் சொல்லும் வழக்கமுடையவர்களுக்கு..
“ எல்லா தாயும் ஒரு காலத்தில் மனைவியாய் மட்டுமே என்று இருந்து தாயாய் வந்தவளே” !!!
Rithu'dad வாங்க,
அன்னைக்கு கூட்டு குடும்பத்துல கணவர்கள் சொல்லிட்டு தனியறையில் மனைவியிடம் உன் சமையல்தான் நல்லாயிருக்குன்னு சொன்னாங்கன்னு சொல்றீங்க. இதுலயும் வாதம் செய்யலாம். அது வேணாம் விடுங்க.
இப்ப தனியாவே இருக்கும் குடும்பங்களில் கூட இந்த டயலாக் தேவையா? எங்கப்பா மாதிரி வருமா?ன்னு மனைவி ஆரம்பிச்சா என்னாகும்.
கடைசியில சொன்னீங்களே அது பாயிண்ட்.
புரிஞ்சிருச்சு வித்யா
//எங்கப்பா மாதிரி வருமா?ன்னு மனைவி ஆரம்பிச்சா என்னாகும்.//
eduketuthalum itha solra tangamanigalai enna solrathu :(
intha samayal matterla enga ammavum , enga veetu tangamanium onnuthan so no comparision on my home. i agree there shuld be no comparision
தென்றல் ரீ வால்யூவேஷ்னில் நீங்க ஃபெயிப்பா.ஏன்னா கமெண்ட் பாக்ஸில் கூகுள் பிரண்ட் கனெக்டரின் ப்ளூ கலர் ஐகான் மறைஞ்சிருக்கே
அந்த விட்ஜட்டை வலது பக்கம் வையுங்க.அப்பத்தான் ஃபாலோ செய்யவோ பிலாக்கர் நேமுடன் கமெண்ட்டவோ முடியும்.இல்லைனா எல்லோருமே அனானிதான்.
:)!
கடந்த பதிவின் பின்னூட்டத்திலும் இங்கும் கண்மணி எதை சொல்லித் தர முயற்சிக்கிறாங்க?
அந்த விட்ஜட்டை வலது பக்கம் வையுங்க.அப்பத்தான் ஃபாலோ செய்யவோ பிலாக்கர் நேமுடன் கமெண்ட்டவோ முடியும்.இல்லைனா எல்லோருமே அனானிதான்.//
saringa teacher
கடந்த பதிவின் பின்னூட்டத்திலும் இங்கும் கண்மணி எதை சொல்லித் தர முயற்சிக்கிறாங்க?//
என் வலைப்பூவை இன்னொரு வாட்டி பாத்து நீங்களே கண்டுபிடிங்க பாக்கலாம் ராமலக்ஷ்மி
வைரஸ் :( ?
இல்ல ராமலக்ஷ்மி,
வலது பக்கம் பாருங்க பின்னூட்டப்பெட்டி.:))
சில நண்பர்களுக்காக ஒரு விளக்கம் :
ஏற்கனவே பல தடவைகள் விளக்கம் சொன்ன விஷயம்தான் இது.. ரமா என்ற பெயர் மற்றும் இந்தப் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் பெரும்பான்மையும் உண்மை அல்ல. நானும் என் மனைவியும் சென்ற ஒரு திருமணத்தில் 'தயிர்சாதம் நல்லாயிருந்ததுல்ல' என்ற ஒற்றை வரியிலிருந்து டெவலப் செய்ததுதான் இந்தப்பதிவின் முதல்பகுதி. இப்பதிவுகள் வெறும் நகைப்புக்காக மட்டுமே.. எனது பிற பதிவுகளை வாசித்தீர்களானால் தெரியும் என் காதல் எவ்வாறானது என்று. மேலும் இந்த மாடல் எழுத்துகள் புதுமையானதும் அல்ல.. பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.. நன்றி.
ரைட்டு!
இந்த மாதிரி எதிர் பதிவைத்தான் நான் எதிர் பாத்தேன் :)
வருகைக்கு நன்றி அருணா,
சந்தோஷம் சின்ன அம்மிணி
ஃப்ரெண்ட் என்ன டென்ஷன் ஆகிட்டீங்களா??
அப்பா எல்லாத்தெயும் படிச்சேன் - சும்மா சின்ன விஷயம் - லூசுலே வுட்டுருக்கலாம் - பரவா இல்ல - தப்பில்ல - போட்டாச்சு பதிவு - ம்ம்ம்ம் - நான் ஓட்டு போட்டேன் - ஆமா எத்தினி ஓட்டு வுழுந்துருக்குன்னு எங்கே பாக்கறது ?
எங்க தங்க்ஸ் சமையல் சூப்பர் - ஏன்னா எனக்கு வேற வழி இல்ல - எங்கம்மா இப்ப இல்ல
சும்மா சின்ன விஷயம் - லூசுலே வுட்டுருக்கலாம் -//
ஏன் விடணும்?? இல்ல ஏன் விடணும்னு கேக்கறேன். :))
அதெல்லாம் அப்படி விட்டுட முடியாது. எதிர் பதிவு கண்டிப்பா காட்டி ஹஸ்பண்டாலஜி பேராசிரியைன்னு ஃப்ருவ் செஞ்சுகிட்டே இருக்கணும்.
வருகைக்கு நன்றி.
Post a Comment