Tuesday, February 09, 2010

அருமை நண்பர் ஆதிக்கு..(முன்னாள் தாமிரா, இன்னாள் ஆதி)

சில நண்பர்களுக்காக ஒரு விளக்கம் :

ஏற்கனவே பல தடவைகள் விளக்கம் சொன்ன விஷயம்தான் இது.. ரமா என்ற பெயர் மற்றும் இந்தப் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் பெரும்பான்மையும் உண்மை அல்ல. நானும் என் மனைவியும் சென்ற ஒரு திருமணத்தில் 'தயிர்சாதம் நல்லாயிருந்ததுல்ல' என்ற ஒற்றை வரியிலிருந்து டெவலப் செய்ததுதான் இந்தப்பதிவின் முதல்பகுதி. இப்பதிவுகள் வெறும் நகைப்புக்காக மட்டுமே.. எனது பிற பதிவுகளை வாசித்தீர்களானால் தெரியும் என் காதல் எவ்வாறானது என்று. மேலும் இந்த மாடல் எழுத்துகள் புதுமையானதும் அல்ல.. பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.. நன்றி.


இது நண்பர் ஆதியின் பின்னூட்டம் இந்தப் பதிவில்.
உங்க பதிவிலயும் இந்த பின்னூட்டம் உலகநாதன் எனும் நண்பருக்காக
கொடுத்திருக்கீங்க.

என் எதிர் பதிவு (நல்லாத்தானே சூடு பிடிச்சு 7/7 வாங்கியிருக்கு)
உங்களை திட்ட இல்ல ஃப்ரெண்ட்.

பொதுவாவே ரங்கமணிகள் அப்படித்தான் நடந்துக்குவாங்க.
உங்க பதிவுல உங்க தங்கமணி,அம்மா,தங்கை,மைத்துனி
பத்திய பாயிண்டை விட இரண்டாவதா போட்டிருக்கற நண்பர்
பத்திய மேட்டர் தான் என்னை எதிர் பதிவே போட வெச்சுச்சு.


அந்த மாதிரி எத்தனையோ ஆண்கள் இருக்காங்க. அவங்களுக்கும்
பாடம் சொல்லணும், பொண்டாட்டியை குத்தம் சொல்லும் மனப்பான்மையை
மாத்தணும் என்பதுதான். என் வலைப்பூக்களில் நான் பெரும்பாலும்
கணவன், மனைவி உறவு பற்றி அதிகம் எழுதியிருப்பேன். ஹஸ்பண்டாலஜி
உட்பட. இதை நான் எழுதக் காரணம் ஒரு ஆசிரியையாக பெற்றோரிடமிருந்து
எதிர்பார்ப்பது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவரின் பங்களிப்பையும்.

(husbandology சொல்லியிருந்த எந்த ட்ரீட்மெண்டும் என்னவருக்கு
தேவையே பட்டதில்லை. ஆனாலும் எது என்னை எழுத தூண்டியது.
மத்தவங்க படற கஷ்டம். அதுமாதிரி நீங்க அடுத்தவங்க குரலை
பிரதிபலிக்கறீங்க)

கணவன் - மனைவி உறவில் விரிசல் பூசல் விழுந்தால் பாதிக்கப்படுவது
குழந்தை.

ரமா ஊருக்கு போனா எம்புட்டு ஃபிலீங்க்ஸா பதிவு போடுவீங்கன்ன்னு
தெரியும் பாஸ். நீங்க சொல்லியிருப்பது மாதிரி ,” பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.”.தான்
உங்கப்பதிவுகள் வருதுன்னு தெரியும்.

அப்பல்லாம் இந்த டாபிக்கில் எதிர் கதைகள் எழுத எந்த பெண்ணும்
துணிஞ்சதில்லை. ஆனா இப்ப விடமாட்டோம்ல. :)))
இனி யாரும் தங்கமணிகளை மட்டம் தட்டி பதிவு போட்டா நாங்களும்
பதிவு போடுவோம்.

இதையும் காமெடியா எடுத்துக்குங்க நண்பர்களே. சுந்தர ராமசாமி, தேவன்,
எஸ்விவி வரிசையில் நாங்களும் பெயர் எடுக்க போறோம்.

அதனால நட்புக்களுக்கு சொல்லிப்பது இன்னான்னா?
இதை தனிமனித தாக்குதலா நாங்களும் எடுத்துக்கலை,
நீங்களும் எடுத்துக்க வேண்டாம்.


AS U PEOPLE SAY JUST FOR FUN.

படிச்சிட்டு லூசுல விடுங்க பாஸ்.

32 comments:

Anonymous said...

தாமிரா @ ஆதியை யாராச்சும் திட்டிட்டாங்களா. லூஸ்ல விடுங்க ஆதி.

pudugaithendral said...

அவரை யாரும் திட்டலை சின்ன அம்மிணி,

ஃப்ரெண்டோட பின்னூட்டம் பாத்து மனசு பேஜாராகிடுச்சு. அதான் லெட்டர்.

cheena (சீனா) said...

ஒண்ணூம் புரில - எல்லாத்தையும் பாத்துட்டு வரேன் திரும்ப

Thamira said...

தென்றல், உங்கள் அன்புக்கு நன்றி. இந்த மடல் எனக்கானது என்பதை விட இது போன்ற வைஃபாலஜி/ஹஸ்பன்டாலஜி பதிவுகளை புரிந்து கொள்ளாதவர்களுக்காக என்பதே பொருத்தமானது. எனது பின்னூட்டம் வருத்தத்தில் போடப்பட்டதல்ல.. (இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா ஆச்சா, விடுறா விடுறா கைப்புள்ள..). என் பதிவில் நண்பர் உலகநாதன் கருத்தைப்போலவே உங்கள் பதிவிலும் ஒரு தோழியின் கருத்து இருந்தது. ஆகவேதான் அதுபோல எண்ணமிருக்கும் வாசகர்களுக்காகவே அந்தக்கருத்தை இங்கேயும் ரிப்பீட்டினேனே தவிர உங்களுடனான புரிதலில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. :-))

Thamira said...

நான் யாருக்கோ சொல்லப்போக நீங்கள் பிக்பாக்கெட் திருடனை சிபிஐல ஒப்படைச்சமாதிரி தனிப்பதிவெல்லாம் போட்டு கலாய்ச்சுட்டீங்க.. எப்பூடி இதெல்லாம்? ஹிஹி...

pudugaithendral said...

வாங்க ஃப்ரெண்ட்,

உங்க பேரு போட்டு எழுதினா ஒரு கூட்டம் கண்டிப்பா வரும். அதான் தலைப்பில் உங்க பேரை வெச்சு, உங்கபின்னூட்டம் வாயிலா மத்தவங்களுக்கும் டெர்ரரா எதிர் பதிவு வரும்னு மெசெஜ் சொன்னேன். :)))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

எப்பூடி இதெல்லாம்? //

புகழ்ச்சி எனக்கு பிடிக்காது ஃப்ரெண்ட்.

:)))

Thamira said...

எம்பேர் போட்டா கூட்டம் வருமா? என்னா நக்கலா? எனக்கே பதிவு போட்டா 500 பேர் வர்றதுக்குள்ள நாக்கு வெளியே வந்துடுது.

இந்த அழகில் என் பெயரைப் போட்டா கூட்டம் வருதாம்.. ஜோக்.!

cheena (சீனா) said...

எல்லாத்தையும் பாத்துட்டேன் - சரி - தங்க்ஸ் சமையல் சூப்பர் - ரங்க்ஸுக்கெல்லாம் சமைக்கவே தெரியாது - எல்லாரும் ஒப்புத்துக்கங்க - சரியா தென்றல் -

ஹா ஹா ஹா ஹா - நல்லாப் பொழுது போகுது

இருந்தாலும் எங்க அம்மா மாதிரி சமைக்க முடியாது - இது தங்க்ஸோட ஒப்புதலோட எழுதறேன். அசைவச் சமையல்லே எங்க பொண்ணூக எக்ஸ்பர்ட்டு - எங்க தங்க்ஸே பாராட்டிட்டாங்க

பொண்ணுக சொல்றது - மம்மி உனக்கு ஒண்ணும் தெரியாது மம்மி - இதுக்கு என்ன பண்ணலாம்

ஆமா யாரும் போன் பண்ணி எங்க தங்க்ஸ் கிட்டே சொல்லிடாதீங்க

pudugaithendral said...

எனக்கே பதிவு போட்டா 500 பேர் வர்றதுக்குள்ள நாக்கு வெளியே வந்துடுது.//

500 பேரா திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்க ஃப்ரெண்ட்.

cheena (சீனா) said...

ஆமா - வலது பக்கம் - சமீபத்திய காற்று - பேக்ரவுண்டு எடுக்கப்படாதா - படிக்க முடியலியே

Thamira said...

திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்க// சரியான கவுண்டர் அட்டாக். சிரிச்சுக்கிட்டிருக்கேன். :-)) ஆனால் அப்படியே டெய்லி 1500, 2000 பேர் வர்றவங்களையும் நினைச்சுப்பாருங்க.. :-((

pudugaithendral said...

தங்க்ஸ் சமையல் சூப்பர் - ரங்க்ஸுக்கெல்லாம் சமைக்கவே தெரியாது - //

இதை நானே ஒத்துக்க மாட்டேன். எங்கப்பா, எங்க பெரிய மாமா, என் கணவரின் அண்ணா எல்லோரும் நளச்சக்கரவர்த்திகள்.

pudugaithendral said...

இருந்தாலும் எங்க அம்மா மாதிரி சமைக்க முடியாது - இது தங்க்ஸோட ஒப்புதலோட எழுதறேன். அசைவச் சமையல்லே எங்க பொண்ணூக எக்ஸ்பர்ட்டு - எங்க தங்க்ஸே பாராட்டிட்டாங்க//

தன்னையாரும் பாராட்டியும் போகுதுன்னு நிறைஞ்ச மனசோட அடுத்தவங்களை பாராட்டும் அவங்களுக்கு என் வணக்கங்கள்.


//பொண்ணுக சொல்றது - மம்மி உனக்கு ஒண்ணும் தெரியாது மம்மி - இதுக்கு என்ன பண்ணலாம்//

நோ கமெண்ட்ஸ். எங்கம்மாகிட்ட இப்படி சொன்னேன்ன என் முன் பல் பேந்துடும். அதனால் தான் நோ கமெண்ட்ஸ். :))

pudugaithendral said...

ஆமா - வலது பக்கம் - சமீபத்திய காற்று - பேக்ரவுண்டு எடுக்கப்படாதா - //

இல்லையே சீனா சார். இப்பவும் இருக்கே

pudugaithendral said...

திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்க// சரியான கவுண்டர் அட்டாக். சிரிச்சுக்கிட்டிருக்கேன். :-)) ஆனால் அப்படியே டெய்லி 1500, 2000 பேர் வர்றவங்களையும் நினைச்சுப்பாருங்க.. :-((//

:))) இன்னும் ஆபீஸுக்கு கிளம்பல போல இருக்கு

Thamira said...

மருந்து சாப்பிடும் போது குரங்கு மாதிரி மனம்விட்டு சிரிச்சுக்கிட்டிருக்கும்போதே அந்த கருமாந்திரத்தை ஏன் நினைவு படுத்துறீங்க.. கிளம்பிட்டேன்.!!!

வல்லிசிம்ஹன் said...

thenral,ennappa,
inga copy pate seythaa
padhiya mudiyalai. thani mayil anupparen. adhaip pinnuuttamaap podungga.

pudugaithendral said...

மருந்து சாப்பிடும் போது குரங்கு மாதிரி மனம்விட்டு சிரிச்சுக்கிட்டிருக்கும்போதே அந்த கருமாந்திரத்தை ஏன் நினைவு படுத்துறீங்க.. கிளம்பிட்டேன்.!!!//

:)))

pudugaithendral said...

sari vallimma

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல்,ரங்ஸ் எல்லோருக்கும் தங்ஸ் களை விட்டுக் கொடுப்பதில் ஒரு அல்ப சந்தோஷம்.:)

உங்க பதிவைப் பார்த்தாட்டுதான் தெரியுது ,அது எத்தனை வடிவம் எடுக்குதுன்னு:)
எங்க வீட்ட்ல என் சமையல் மிகவே பிடிக்கும். இருந்தாலும் ,அங்க போல வருமா, இங்க போல வருமான்னு சொல்லுவாங்க.!

நாஸியா said...

அடடே இப்படி ஒரு சங்கதி இருக்கா. நல்ல வேளை தெரியப்படுத்தினீங்க. என்னுடைய அறியாமை!

உண்மையா சொல்லனும்னா 'சே, ஏன் இந்த மனிதர் இப்படி மனைவியை/பெண்களை எல்லார் முன்னிலையிலும் குறை கூறுகிறார்' என்ற எண்ணம் ரொம்பவே அதிகமா இருந்தது.
இப்ப தெளிவாயிட்டு.. நன்றி

pudugaithendral said...

ரங்ஸ் எல்லோருக்கும் தங்ஸ் களை விட்டுக் கொடுப்பதில் ஒரு அல்ப சந்தோஷம்.:)//

இதுலயும் அவங்கதான் சந்தோஷப்படறாங்க வல்லிம்மா,
தங்கமணி விட்டுகொடுத்துட்டா போச்சு. வானத்துக்கும் பூமிக்கும் குதியல் தான்.

:))

pudugaithendral said...

உண்மையா சொல்லனும்னா 'சே, ஏன் இந்த மனிதர் இப்படி மனைவியை/பெண்களை எல்லார் முன்னிலையிலும் குறை கூறுகிறார்' என்ற எண்ணம் ரொம்பவே அதிகமா இருந்தது.
இப்ப தெளிவாயிட்டு.. நன்றி//

பாக்கெட் திருடனை பிடிச்சு சீபீஐ கிட்ட கொடுத்திட்டேன்னு திட்டீனீங்களே ஆதி. பாருங்க நான் நல்லதுதான் செஞ்சிருக்கேன். :))

வருகைக்கு நன்றி ஸாதியா

நாஸியா said...

யாருங்க அது ஸாதியா ;)

ஜெயந்தி said...

சின்ன வயசுல இருந்து அம்மா சமையல சாப்பிட்டு நாக்கு ஒரு மாதிரியா பழகிடும். பிறகு வரும் மனைவி நன்றாக சமைத்தாலும் அது புரிய கொஞ்சம் காலமாகும். சரி சரி விடுங்க. நமக்கெல்லாம் இது புதுசா?

சாந்தி மாரியப்பன் said...

//மருந்து சாப்பிடும் போது குரங்கு மாதிரி மனம்விட்டு சிரிச்சுக்கிட்டிருக்கும்போதே அந்த கருமாந்திரத்தை ஏன் நினைவு படுத்துறீங்க.. கிளம்பிட்டேன்.!!!//

:-)))))).

pudugaithendral said...

மன்னிக்கணும் நாஸியா,

ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு

pudugaithendral said...

சரி சரி விடுங்க. நமக்கெல்லாம் இது புதுசா?//

அப்படி லூஸ்ல விட்டுடக்கூடாதுன்னு தான் எதிர் பதிவு. வருகைக்கு நன்றி ஜெயந்தி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

எம்.எம்.அப்துல்லா said...

// லூசுல விடுங்க //

தமிழ்ல எனக்குப் பிடிச்ச ஒரே வார்த்தை :)


//ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு

//

எங்களுக்கு ஆகலாம்.வாத்தியாரம்மாவுக்கு??!??!

pudugaithendral said...

எங்களுக்கு ஆகலாம்.வாத்தியாரம்மாவுக்கு//

சில சமயம் யானைக்கும் அடி சறுக்கும்ல