”திருப்பதிக்கு போனா சாமி தரிசனம் முடிச்சு
உடனே கீழ இறங்கிடுவோம். மேல் திருப்பதியில
தங்க மாட்டோம்னு”!!! தோழி சொன்னாங்க.
ஏம்ப்பான்னு கேட்டேன்,”அங்க எம்புட்டு பேரு
தற்கொலை செஞ்சுக்கராங்க தெரியுமா?” அப்படிங்கவும்
அதிர்ச்சிதான். நாம எப்பவோ போறது. இரண்டுவருஷம்
முன்னாடி போயிட்டு அதுவும் எம்பி யோட லெட்டரோட
போயிக்கூட இடத்துக்கும், கல்யாண உற்சவ டிக்கெட்டுக்கும்
3 மணிநேரம் காத்திருந்த கொடுமைக்கு அப்புறம் கணவர்
“இனிமேல் திருப்பதிக்கே வரக்கூடாதுடா சாமின்னு”
கத்தினதுக்கப்புறம் எல்லா ஏற்பாடும் தடபுடலா நடந்துச்சு.
மிகப்பிரபலமான கோவில்களுக்கு போவதுன்னா எனக்கும்
கொஞ்சம் அலர்ஜி. அதனால வீட்டுலேர்ந்து கோவிந்தான்னு
கூப்பிட்டுக்குவேன். முடிஞ்சப்போ பிர்லாமந்திரி போய்
தரிசனம் செஞ்சுக்குவேன்.
ஆனா அங்க இம்புட்டு கோரம் நடக்குதுன்னு தெரியாது.
திருப்பதி புண்ணியஸ்தலம். ஏழுமலை வெங்கடேசன்
அருளாட்சி நடக்குமிடம்.
இங்கே உயிரை விட்டால் நேரே சொர்க்கம் தான் என யாரோ
கிளப்பிவிட குரூப் குருப்பா கிளம்பி வந்து தற்கொலை
செஞ்சுக்கராங்கலாம்.
புண்ணிய பூமியை மரண பூமியாக்குகிறார்கள். போனமாதம்
கர்நாடக மாநிலத்திலிருந்து தாயும், மகனும் காரில் புறப்பட்டு
வந்திருக்கிறார்கள். அடுத்த நாள் இருவரும் இறந்து கிடக்கிறார்கள்.
துண்டு காகிதத்தில்,”தன் கணவரின் மரணத்துக்குப் பிறகு
வாழ முடியவில்லை வயது வந்த மகனும் தந்தையின்
பிரிவால் வாடுகிறான், அதனால் தற்கொலை செய்துகொள்கிறோம்,
நாங்க வந்த கார் இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தம்” !!
என எழுதி வைத்து விட்டு இறந்திருக்கின்றனர்.
இப்படி எத்தனையோ தெரிந்தும் தெரியாமலும் நிறைய்ய
மரணங்கள் திருப்பதியில். சென்னையிலிருந்து வந்திருந்த
ஒரு குடும்பத்தினர் தற்கொலை பற்றி இங்கே.
நேற்று நடந்த இன்னொரு தற்கொலை பரிதாபம்.
நெல்லூரிலிருந்து வந்திருந்தனர் கணவன், மனைவி,
மற்றும் இரண்டு உறவினர், இரண்டு குழந்தைகள்.
(அதில் பையன் புட்டிபால் குடிக்கும் வயசு)
10 லட்சம் கடன் இருப்பதால் அதிலிருந்து
விடுபட வழித்தெரியாமல் பரலோகம்போக
திருப்பதிக்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்கள்.
பெரியவர்கள் நால்வரும் விஷமருந்தி காட்டேஜில்
இறந்து கிடக்க பக்கத்திலேயே அந்த இரண்டு குழந்தைகளும்
விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.(அவர்களுக்கும்
விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது)
இப்போது அநாதைகளாக அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்கள். உறவினர்களும்
அதே நிலையில் இருப்பதால் வேறு யாரேனும்
அந்த பிள்ளைகளை பராமரிக்க முன் வந்தால் தான் உண்டு.
கோடி கோடியாக பணம் குவிகிறது அந்த கோவிந்தனுக்கு.
அவனைக் கண்ணாரக் கண்டால் போதும் என கூட்டம்
குவிகிறது. அவனது திருமலையில் இப்போது இரு
பச்சிளம் குழந்தைகள் அநாதைகளாகி நிற்கின்றனர்.
காரணம் யார்?? இது இனி தொடருமா? ஏழுமலையில்
வாசம் செய்வதாகக் கூறப்படும் அந்த
திருப்பதி ஏழுமலை வெங்கடேசனுக்கே வெளிச்சம்.
இறைவனின் மேல் சந்தேகம் வரவழைக்கும்
தருணங்கள் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள
வேண்டியதும் அவன் வேலைதான்.
:(((((
21 comments:
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை உணராது.
இவர்கள் அங்கே கடவுளைக் கடவுளாய் கண்டால் போதும். என்னமோ கோபம் தான் எழுகிறது
என்னமோ கோபம் தான் எழுகிறது//
கோபப்படுவதை தவிர வேறெதுவும்
செய்ய முடியாது
கையில் விஷம் வைத்திருக்கிறார்களா, தற்கொலைக்கு வந்திருக்கிறார்களா, சாமி கும்பிட வந்திருக்கிறார்களா என்றெல்லாமா பரிசோதிக்க முடியும்.
கொடுமையடா சாமி..
இதென்ன கொடுமை பெருமாளே!!!!
கொடுமையாத்தான் இருக்கு இராகவன்
நல்ல கேளுங்க, பெருமாள் காதுல விழுதான்னு பாப்போம். நம்ம எல்லோரு குரலும் கேட்டாவது இதை நிப்பாட்ட அவன் ஒரு வழி செய்ய மாட்டானான்னுதான் பதிவு போட்டேன்
மத்தவங்களைவிட உங்களுத்தான் பெருமாள் ரொம்ப நெருக்கம்(பெருமாள் கோவிலுக்கு பக்கத்துலதானே உங்க ஸ்கூலு).நீங்களே கேளுங்க.
பெருமாள் கோவிலுக்கு பக்கத்துலதானே உங்க ஸ்கூலு).நீங்களே கேளுங்க.//
நமக்கு நெருக்கம் சாந்தாரம்மன் கோவிலில் உக்காந்திருக்கும் சுப்பிரமணிதான். அவரைவிட்டே அவங்க மாமனை என்னான்னு கேக்க சொல்றேன்.
நல்ல பதிவு.
கடைசியில் மனிதர்கள் செய்யும் முட்டாள்தனத்துக்கு கடவுளைப் பழியாக்குகிறீர்கள்.
கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். பதில் சொல்லுங்கள்.
கடவுள் வந்து இங்கே தற்கொலை செய்யாதீர்கள். உங்கள் வீட்டிலேயே பண்ணிக்கொள்ளுங்கள். நாலுபேர் வந்து போறயிடம். நீங்கள் இப்படி உயிரைவிட்டால் மத்தவங்க வராமப் போக என்வருமானம் குறைந்த்து விடும் என்று சொல்வாரா கடவுள்.
Ms Kala,
Who has built the temple? Who has made the temple into a place where thousands of people come and go per day? Who has made the temple the second-most richest temple in the world? Who has made the rituals and ceremonies in the temple?
Questions go on and on. But, for all the questions, the reply is only one: MAN.
Never find fault with God. It is Man who should be held to task.
ஆனால் இங்கே, அதையும் செய்ய முடியாது.
மக்கள் கடவுள் நம்பிக்கை தாறுமாறாக இருக்கிறது.
கிறுத்துவர்கள் இப்படி வாழ்க்கையே அஸ்தமித்துப்போகும் வேளையில், அல்லேலுயா பாடி பெந்தோகோஸ்தோவில் சேர்ந்துவிடுகிறார்கள்.
இந்துக்கள் இப்படி கோயில்களை நாடி உயிரை விடுகிறார்கள்.
இன்னும் ஆழ்ந்து ஏன் செய்கிறார்களிப்படி என்று பார்த்தால் அதுஒரு adventurist thought! Perhaps you may get some interesting conclusions!!
வருத்தமான விஷயம்தான். அவ்வளவு மனசொடிஞ்சு இருக்காங்க.
அதிருக்கட்டும், இப்படி ஒரு நாளிலேயே ரெண்டு பதிவுகள் போட்டா, நாங்க எப்படி படிச்சு, பின்னூ போடறது? இந்த அநியாயத்தை யார்கிட்ட சொல்றது? ;-)))
வாங்க ஃப்ர்ணாண்டஸ்,
கடவுளை பழியாக்கும் என்னமில்லை.
இந்தக் கேள்விக்கு பூர்ணமாக பதில் சொல்லவும் முடியாத ஒன்று என்பதால்தான் என் மனத்தாங்கலை புலம்பியிருக்கிறேன்.
அதிருக்கட்டும், இப்படி ஒரு நாளிலேயே ரெண்டு பதிவுகள் போட்டா, நாங்க எப்படி படிச்சு, பின்னூ போடறது? இந்த அநியாயத்தை யார்கிட்ட சொல்றது//
இதெல்லாம் ஒண்ணுமில்லை ஒருநாளைக்கு 4 பதிவு கூட போட்டிருக்கேன். ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைக்குத்தான் ரெண்டு பதிவு. :))
:((
ithenna tiruppathiyin marupakkama. kodumai. indha jenmangal poi sera vendiyathuthan.
என்ன கொடுமை ஸார் இது ????????
வாங்க ஃபண்டூ,
போய்ச்சேர வேண்டிய ஜென்மங்கள் புனிதமான திருப்பதியை மரணபூமியாக்குவது எந்த விதத்தில் நியாயம்னு தான் தெரியலை
கொடுமையான கொடுமை பனித்துளி சங்கர். :(
என்னப்பா தென்றல்!!தர்மத்தின் பிறப்பிடம் அவரே பாவம் நாம எல்லாம், கொடுத்தா ஒரேடியா ஓஹோனு கூத்தாடி, கொடுக்கலைனா காறி அசிங்கம் பண்ணி, நாம அவருக்கு போட்ட நாமத்தயும் போட்டுக்கொண்டு மலை மேல எதையும் தாங்கும் இதயமா நின்று கொண்டு இருக்கிறார்:((! கிடைப்பதற்கு அரிய பிறவினு மனுஷப்பிறவியையும் தந்து அறிவையும் தந்து அதை உபயோகப்படுத்தாதவரின் சிறுபிள்ளைதனத்தால் வந்த விளவுக்கு அவர்களைத் தவிர வேற யார் பொருப்பாக முடியும். அநாதையான குழந்தைகளுக்கு இப்போ வைத்தியமும் பண்ணி அதுக்கு ஒரு வழியும் பண்ணற தெய்வத்த நம்மளால மனசாக்ஷியோட பாக்க முடியாம போயிடும்னா சொல்லறீங்க நம்பிக்கை தளருவதுக்கு?நம்பிக்கையே இல்லாதவர்களுக்கு கூட அறிவும் மனசாக்ஷியும் அப்படி இல்லாம போய்விடுமாம்மா?
வாங்க ஜெயஸ்ரீ,
காப்பாத்தும் வரைக்கும் செஞ்சிருக்காரு சரி. அதுக்கப்புறம் எங்களாலும் முடியாது வேறுயாராவது தான் பாத்துக்கொள்ளவேண்டும்னு சொல்லும் உறவினர்கள். பிள்ளைகள் இனி அநாதை இல்லத்தில்தானே!!!
என்னவோ
அந்த அனாதை இல்லமும் சிலரின் கருணை தானேடா. அநாதைக்குழந்தைக்கு வாழ்வளிக்கும் மனித தெய்வங்களின் பரிச்சயம் எனக்கும் உண்டுப்பா:)வருத்தப்படாதீங்க பிள்ளைங்க நல்லா இருப்பாங்க
/
இங்கே உயிரை விட்டால் நேரே சொர்க்கம் தான் என யாரோ
கிளப்பிவிட
/
:(
Post a Comment