Thursday, March 04, 2010

கண் போன போக்கிலே கால் போகலாமா?

”கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?”//

இந்த பாடல் சொல்லும் கருத்து என்ன??
குறிக்கோள் இல்லாத வாழ்க்கையில் சாதனைகள்
இருப்பதில்லை.

தன்னம்பிக்கை மனிதர்களுக்கு தான் அடையவேண்டிய
இலக்கு எது என்பது தெரிந்து தெளிவாக இருப்பார்கள்.
தனக்கு எது முக்கியம், அவசியம் எல்லாம் புரிந்து
வைத்திருப்பார்கள். தனது திறமையை எங்கே வளர்த்துக்
கொள்ள வேண்டும் என்று அறிந்து தனது குறிக்கோளை
அடைய சிறந்த வழிகளை மேற்கொள்வார்கள்.


முதலில் நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி
“குறிக்கோள் என்ன?” உதாரணம்: என்ன படிக்க விரும்புகிறோம்?
என்ன சாதிக்க ஆசை? என்ன வேலை பார்க்க விருப்பம்?
இதை முதலில் தெரிந்து கொண்டால் தான் நாம் அடைய
வேண்டிய பாதைக்கான வழியை வகுத்துக்கொள்ள முடியும்.

சின்ன சின்ன personal goals வைத்துக்கொள்வது நல்லது.
அவை நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். டூவீலர் ஓட்டத்
தெரியாத ஒருவர் தான் ஓட்டக்கற்றுக்கொள்ள வேண்டும்
என திட்டமிட்டு அதை சாதிப்பதை சொல்லலாம்.


குறிக்கோள்/இலக்கு இவற்றை அமைத்துக்கொள்ள 5 முக்கிய
தேவைகள் இருக்கின்றன. இது வேலை, personal goals
எதற்கும் பொருந்தும்.

CREAM என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்
அதாவது - CLARITY,REALISM, ECONOMY, ACTIVITY & MEANS:

CLARITY - தெளிவு
REALISM -நிஜத்தன்மை
ECONOMY- பொருளாதாரம்
ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை
MEANS-வழிவகை

CLARITY - தெளிவு:
நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதில்
தெளிவாக இருக்க வேண்டும். எதை சாதிக்க விரும்புகிறோம்,
எப்போதைக்குள் அடைய விரும்புகிறோம், இலக்கை
அடைந்துவிட்டோம் என்று எப்படித் தெரிந்து கொள்வது
என பல கேள்விகளை கேட்டு ஒரு தெளிவான
பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

REALISM -நிஜத்தன்மை

நிஜத்தில் அடைய முடியாத ஒன்றுக்கு ஆசைப்படுவது,
அதை குறிக்கோளாக வைத்துக்கொள்வது என்பது மிகப்
பெரிய தவறு. மிகப் பெரிய/அடைய முடியாத ஒரு
குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைய முயற்சி
செய்வது பலனை அளிக்காது. தோல்வி அடைய வைக்கும்
இந்த நிகழ்வு தன்னம்பிக்கையை குலைத்துப்போடும்.
அதற்காக மிகச் சாதரணமான இலக்கு வைத்துக்கொள்வதும்
தவறு.


ECONOMY:வழிவகை

ஒரே நேரத்தில் பல இலக்குகள் வைத்துக்கொண்டால் எதை
முதலில் முடிப்பது என்று தெரியாமல் குழம்ப நேரும்.
பேராசை பெரு நஷ்டம் எனும் வழக்கு இங்கும் பொருந்தும்.
ஒவ்வொன்றாக முடிப்பதே நல்லது.

ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை


நல்லதைச் சொல், நல்லதைச் செய், நல்லதை நினை.
இது நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். நம் இலக்கையும்
நல்லவிதமாகவும், செயல்திறன் உடையதாகவும் வைத்துக்
கொள்வது நல்லது. நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும்?
என திட்டமிட வேண்டும்.

MEANS-வழிவகை

இலக்குகளை திட்டமிடும் பொழுது எந்த வழியில் அதை நாம்
அடையப்போகிறோம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ள
வேண்டும். இதற்காக நாம் சில கலைகளை கற்க
நேரலாம். நடவடிக்கைகளில் சில மாறுதல்களும் தேவைப்படலாம்.
சில நேரங்களில் குறிக்கோள்களே புது அறிவை தந்து
அதை அடைய வழி வகுக்கும்.


குறிக்கோள்களை அடைய பல திறன்கள் வேண்டும்.

நேரத்தை திட்டமிடாமல் எதுவும் செய்ய முடியாது.
சரியான முறையான திட்டமிடல் அவசியம்,
முறையாக பேசத் தெரிய வேண்டும், பிரச்சனைகளைத்
தீர்க்கும் தன்மை, குழு அமைத்தல் என பல இருக்கிறது
ஒவ்வொன்றாக வரும் வாரங்களில் பார்க்கலாம்.


11 comments:

Thenammai Lakshmanan said...

பர்ஸனாலிட்டி டெவலப்மெண்ட் இன்றுதான் படித்தேன் கலா அருமை நல்ல பதிவு

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு..

Ezhilarasi Pazhanivel said...

ஹாய் தென்றல், சமீபத்தில்தான் உங்கள் பதிவுகளைப் படிக்கத்தொடங்கினேன்.
துளசிதளத்தில் உங்கள் விருந்தோம்பல் பற்றிய இடுகை தான் உங்கள் பதிவைப் படிக்கத்
தூண்டியது. தேங்க்ஸ் டு துளசி மேம். சுவைபட எழுதுகிறீர்கள்! கீப் இட் அப்!
அன்புடன்,
எழிலரசி பழனிவேல்

pudugaithendral said...

நன்றி தேனம்மை

pudugaithendral said...

நன்றி வித்யா

pudugaithendral said...

ஹாய் வாங்க எழிலரசி வாங்க,

பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி. அடிக்கடி வாங்க

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு தென்றல். தேர்ந்தெடுத்த தலைப்பும் மிகப் பொருத்தம்.

pudugaithendral said...

நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

அமைதிச்சாரல், ஃபண்டூ மற்றும் இருவரின் பின்னூட்டங்கள் தவறாக மறுதலிக்கப்பட்டுவிட்டது மன்னித்துவிடுங்கள்

மங்களூர் சிவா said...

CLEAR - ஆ புரிஞ்சது!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சிவா