Thursday, March 18, 2010

எல்லோரும் நலமா???

ஹாய் ஹாய் ஹாய்!!!

என்ன காணம போயிட்டேன்னு நினைச்சீங்களா?
அதென்னவோ தெரியலை மொதோ தபா
பதிவெழுதக்கூட நேரம் இல்லாம பிசியாகிட்டேன்.
எனக்கே இது ஆச்சசரியமா இருக்கு!!

பசங்களுக்கு பரிட்சை நடந்துகிட்டிருந்த போது
கொஞ்சம் பிசியாக ஆரம்பிச்சேன். தெலங்கானா
பிரச்சனைகளினால பள்ளிகளுக்கு அதிகமா லீவு
விட நேர்ந்ததால் போர்ஷன்ஸ் முடிக்க முடியாம
வெறும் கேள்வி-பதில்களைமட்டும் சில
பாடங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை.
அவங்க விட்டுட்டாங்களேன்னு நானும் விட
முடியுமா? கடைசி நேரம் வரை விளக்கம் சொல்லி
பரிட்சைக்கு தயார் செஞ்ச்சேன்.

மாமா மறைந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது.
இந்த வருடத்தில் எத்தனை முறை,” ஏன் மாமா
இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போனீங்கன்னு?”
கேட்காத நாள் இல்லை. இன்னமும் வருத்தம்
தான். பெங்களூரில் மாமாவின் திவசங்கள்
நடந்தன. அந்த நேரம் மிகச் சரியா பசங்களுக்கு
பரிட்சை நேரம். நானும் குழந்தைகளும் போக
முடியவில்லை. அயித்தான் மட்டும் போனார்.
மனதுக்கு அதுவும் வருத்தமாகிடிச்சு. ”என் மூத்த
மருமகள் நீதான்னு?” சொன்ன மாமாவுக்கு
செய்யும் வாய்ப்பு கிடைக்கலியேன்னு தான்
வருத்தம்.

வீட்டில் அவரது படம் வைத்து, பூ போட்டு
பழங்கள் வைத்து படையல் கொடுத்தேன்.


எப்பவும் எல்லோருக்கும் சரியா பிறந்த நாள்
வாழ்த்து, திருமண வாழ்த்து சொல்லிடுவேன்.
இந்தத் தடவை அதிலும் ஒரு சொதப்பல்.
அயித்தானோட அண்ணன் மகனுக்கு இந்த மாதம்
பிறந்த நாள். ஊருக்கு போனவரிடம் ஞாபகமாக
ட்ரெஸ் வாங்கிக்கொடுத்துவிட்டேன். அயித்தான்
போன அன்று அண்ணன் மகனின் நட்சத்திர
பிறந்த நாள்(எனக்கு டேட் தான் ஞாபகம் இருக்கும்)
ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அவரின் பிறந்தநாள்
நம் ஆங்கில காலண்டர் படி. காலையில்
எழுந்த போது ஞாபகம் இருந்தது. சரி அயித்தானும்
பிள்ளைகளும் எழுந்ததும் வாழ்த்து சொல்லலாம்னு
நினைச்சிருந்தேன். வர இருக்கும் பெருநாளுக்கு
சாமான் வாங்குவது அது இதுன்னு மறந்தே விட்டேன்.

சாயந்திரம் 5.30 மணி இருக்கும் போன் வந்துச்சு.
”இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமான்னு?’
அயித்தானை கேட்க அவரு யோசிச்சுகிட்டே தெரியலை?ன்னு
சொல்லிட்டார். அயித்தானுக்கு செக்கரட்டரி நான் தான்
எல்லா நாளும் நான் தான் ஞாபகமா வெச்சிருந்து
வாழ்த்து சொல்லச் சொல்வேன். யாருப்பா? போன்ல
கேட்டேன். கிருஷ்ணா, இன்னைக்கு என்ன நாள்னு
தெரியுமான்னு! கேட்டதாச் சொல்லவும்
“ஐயோ, இன்னைக்கு அவருக்கு பிறந்த நாள்பா!”
அப்படின்னு சொல்லவும் சித்திகிட்ட போனைக்குடுன்னு
சொல்ல என் கிட்ட கொடுத்திருக்காரு. “எப்பவும்
காலேலேயே உங்க போன் வரும். உங்க வாழ்த்து
தான் முதல் வாழ்த்தா இருக்கும்! சாயந்திரம் வரைக்கும்
போன் வரலைன்னதும் என்னாச்சு? உடம்பு சரியில்லையான்னு”
கேட்கலாம்னு தான் போன் செஞ்சேன்னு சொல்லவும்
மனசு ரொம்ப பாரமாச்சு!என்னைவிட 6 மாதம் சின்னவர்.
ஆனாலும் சித்தின்னு தான் அழைப்பார்.

மாமா,அத்தை(அவங்க அப்பா,அம்மா)வைவிடவும்
முதலில் என் வாழ்த்துதான் அவருக்கு எப்போதும்
கடந்த 15 வருஷமா இதுதான் பழக்கம். இதுல
மாற்றம் ஆனதும் வருத்தப்பட்டுட்டார்.

இனி இந்த மாதிரி இன்னொரு தடவை செய்யக்கூடாதுன்னு
முடிவு பண்ணிட்டேன்.

யுகாதி மாமா இறந்த ஒரு வருட துஷ்டிக்கு பிறகு நாங்கள்
கொண்டாடும்முதல் பண்டிகை. இது தெலுங்கு கன்னடர்களின்
வருடப் பிறப்பு.

காலையிலேயே அனைவருக்கும் போன் போட்டு
வாழ்த்து சொல்லிட்டோம். கிருஷ்ணாவுக்கு போன் போட்டதும்
என் மருமக ,”உங்க போனுக்கு எப்பவும் காத்திருப்போம்,
போன் வந்ததும் சந்தோஷம் ஆயிடிச்சின்னு” சொல்ல
பர்த்டேக்கு வாழ்த்து சொல்ல மறந்து வருத்தப்பட
வெச்சதுக்கு காம்பன்சேட் செஞ்சிட்டேன்னு சந்தோஷப்பட்டுகிட்டேன்.

என்னென்ன சமைச்சேன்னு சொல்றேன். காதுல புகை விட்டுக்கோங்க.
யுகாதி ஷ்பெஷல் யுகாதி பச்சடி,(வேப்பம்பூ, வெல்லம், புளி,
மாங்காயத்துருவல், சிட்டிகை உப்பு போட்டு செய்வது) போளி,’
வடை, பாயசம், முருங்கை சாம்பார், சூப்பரா தக்காளி ரசம்,
வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி, மாங்காய் கல்யாண ஊறுகாய்,
அப்பளம் அம்பூட்டே தான். :))) (சேர்க்க மறந்தது
எலுமிச்சை சாதம், வெண்டைக்காய் பொரியல்)

இதுல சூப்பர் மேட்டர் என்னன்னா? தெலுங்கில் சூப்பரா
சமையல் செய்பவர்களை,” வண்டலோ சை திருகின மனுஷி”
அப்படின்னு சொல்வாங்க. அதாவது சமையலில் கை தேர்ந்தவர்
என்பது போல இங்கே கை திருகி போன ஆள்.

நிஜமாவே போளிக்கு பூரணம் செஞ்சு, போளி தட்டின்னு
வலது கை வீங்கி திருப்ப முடியாம ஆகிடிச்சி. :))
ரெண்டு நாளா கைக்கு செம ரெஸ்ட். நோ குக்கிங்.
இப்ப கூட ஜூட் விடப்போறேன். (ட்ரை பேண்டேஜை
எடுத்துட்டு மெயில் செக்கிக்கறேன்பான்னு ப்ர்மிஷன்
கேட்டுட்டு பதிவு போட்டா அயித்தான் சாயந்திரம்
வந்து மொத்தினாலும் மொத்துவார்) :)))


யுகாதி ஷ்பெஷல் கிஃப்ட் ஆனந்த விகடனிலிருந்து.
கானக்கந்தர்வன் வலைப்பூ விகடன் வரவேற்பரையில்
வந்திருக்குன்னு அமைதிச்சாரல் பதிவு போட்டிருந்தாங்க.
நன்றி அமைதிச்சாரல். பதிவு இங்கே.


18 comments:

அநன்யா மஹாதேவன் said...

உங்க அயித்தானின் அண்ணன் மகனுக்கு பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பிலேட்டட் யுகாதி சுபாகான்க்ஷ்சுலு.

ராஜ நடராஜன் said...

யாரு லீவுல போறாங்கன்னே தெரியலையே:)

புதுகைத் தென்றல் said...

நன்றி அநன்யா

புதுகைத் தென்றல் said...

லீவு முடிஞ்சு வந்திட்டேன் ராஜ நடராஜன்.

thenammailakshmanan said...

யுகாதி வாழ்த்துக்கள் தென்றல்

கோமதி அரசு said...

கானக் கந்தர்வன் வலைப் பூ விகடன் வரவேற்பரைக்கு வந்தற்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

கானகந்தவர்மனை(யும்) விகடன் கண்டாச்சா - வாழ்த்துகள்.

வித்யா said...

யுகாதி வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

நன்றி தேனம்மை

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஜமால்,
அதையும் கண்டுகிட்டாங்க. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

புதுகைத் தென்றல் said...

இரண்டு வாழ்த்துக்கும் நன்றி கோமதி அரசு.

வல்லிசிம்ஹன் said...

சுவையான உகாதி விருந்துக்கு நன்றி தென்றல்.இப்படியா கையைக் கெடுத்துப்பாங்க!!நானு துளசி எல்லாம் போளி கடையிலிருந்து வரவழைச்சுகிட்டோம்:)நல்லதொரு குடும்பத்தலைவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கோபிநாத் said...

அக்கா தலைப்பு நாங்க கேட்க வேண்டியது...ஆனா நீங்க கேட்குறிங்க...;)))

புதுகைத் தென்றல் said...

இப்படியா கையைக் கெடுத்துப்பாங்க//

இப்பத்தான் வலியெல்லாம் குறைஞ்சிருக்கேன்னு நினைச்சு போளி செய்ய ஆரம்பிச்சேன். போளி நல்லா வந்துச்சு(மங்களூர் போளி) கைதான் :))

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வல்லிம்மா

புதுகைத் தென்றல் said...

அக்கா தலைப்பு நாங்க கேட்க வேண்டியது...ஆனா நீங்க கேட்குறிங்க...;)))//

ஸ்மைலியும் நான் போட வேண்டியது ஆனா நீங்க போட்டுட்டீங்களே கோபி
:))

மங்களூர் சிவா said...

/
ப்ர்மிஷன்
கேட்டுட்டு பதிவு போட்டா அயித்தான் சாயந்திரம்
வந்து மொத்தினாலும் மொத்துவார்) :)))
/

சார் வீரர்தான் நம்பீட்டோம்
:))))))))))))

அப்பாவி ரங்கமணிகள் சங்கம்
மங்களூர் கிளை

புதுகைத் தென்றல் said...

சார் வீரர்தான் நம்பீட்டோம்
:))))))))))))//

:))

Sangkavi said...

யுகாதி வாழ்த்துகள்....