அதென்னவோ தெரியலை இந்த மாசம் கொஞ்சம் பிசியாவே
ஓடிப்போச்சு. பசங்களுக்கு பரிட்சை, அது முடிஞ்சு ரிசல்ட்ஸ்,
புது புத்தகங்களுக்கு அட்டைப்போடல் அது இதுன்னு இன்னைக்கு
ஸ்கூலும் திறந்தாச்சு. ஆஷிஷ் 9த், அம்ருதா 6த்.
இரண்டு வாரமா என் ஃப்ரெண்ட்ஸ் (ஆஷிஷ்,அம்ருதா)
வீட்டுல இருந்ததால மொத்தமா அவங்க கூட
கூத்தடிச்சு, கொண்டாடி, ஊர் சுத்தி, சண்டை
போட்டுன்னு ஒரு மார்கமா ஓடினிச்சு. ஏப்ரம் 23ஆம்தேதி
வரை அரைநாள் பள்ளிதான். 12.45க்கு வீட்டுக்கு
வந்திடுவாங்க. மதியம் சாப்பாடு தனியா சாப்பிடும்
கொடுமை இன்னும் 2 மாசத்துக்கு இல்லை.
ஜாலி...
சமைச்சு முடிச்சிட்டு உக்காந்து சும்மா பேசிகிட்டு
இருந்த ஒரு சனிக்கிழமை மண்டைய பொளக்கும்
வெயிலை சும்மா விடுவானேன்னு,”எங்கயாவாது
போவமான்னு” கேட்க ஆஷிஷ் ஐமேஸ், கேம்ப்ளக்ஸ்
அப்படி இப்படின்னு ஆரம்பிக்க அம்ருதா,”சார்மினார்
பாத்ததில்லை!” அப்படின்னு சொல்ல எனக்கு ஷாக்.
என்னக்கொடுமை இது ஹைதைக்கு பெருமை
சேர்க்கும் அந்த பாரம்பரியச்சின்னத்தை பசங்களுக்கு
காட்டமலேயே இருந்திட்டமோன்னு யோசிச்சா,
அடிக்கடி சார்மினார் நான் போனது மட்டுமல்லாம
பசங்களையும் கூட்டிகிட்டு போனா மாதிரி மெமரி
சொல்லுது. ஆஷிஷும் கன்பார்ம் செஞ்சாலும்
அம்ருதம்மா பார்க்கலை, அதாவது மேலே ஏறி
பாக்கலைன்னு சொல்ல அம்புட்டு தானேன்னு,
கிளம்பிட்டோம். திரும்ப வரும்போது அயித்தான்
ஆபிஸுக்கு வந்துட்டு அங்கேர்ந்து வீட்டுக்கு வர
திட்டம்.
ஆட்டோவுல “சலோ சார்மினார்”னு சொல்லி
கிளம்பியாச்சு. சார்மினார் மேலே ஏறி பார்க்க
சில சமயம் தான் அனுமதி கிடைக்கும். பல சமயம்
அங்க தற்கொலை முயற்சி செய்யறாங்கன்னு
போக அனுமதி கிடையாது. ”மேலே ஏறமுடிஞ்சா
சரி, இல்லாட்டி சார்மினார்ல பர்ச்சேஸ் செய்யலாம்னு”
திட்டம் போட்டுகிட்டோம்.
எங்க நேரம் நல்லாயிருந்து அன்றைக்கு மேலே ஏற
டிக்கெட் கொடுத்துகிட்டு இருந்தாங்க. எங்களுக்கு
முன்னாடி வரிசையில நின்னவங்க நம்ம தங்கத்
தமிழ் நாட்டைச் சேர்ந்தவங்க. மேலே ஏறிப்பார்க்க
பெரியவங்களுக்கு 5 ரூபாய். 15 வயசு வரை உள்ள
குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.
ஹைதையின் சின்னம் சார்மினாரின் ஒரு வ்யூ.
/>
டிக்கெட் வாங்கிகிட்டு மேலே ஏறப்போனோம்.
மிகக்குருகிய பாதை. ஒரு குகையில ஏறுவது போலவே
இருந்துச்சு. முழங்கால் உயரப் படிக்கட்டுக்கள்.
இதுல ராஜா எப்படி ஏறி இருப்பாருன்னு யோசிச்சுகிட்டே
மூச்சு வாங்க ஏறினோம்.
மேலேர்ந்து பார்க்க நல்லாயிருக்க ஒரு கிளிக்
கடைவீதிகள், வாகனங்கள்னு மேலேயிருந்து பார்க்க
நல்லாயிருந்துச்சு.
அழகான அலங்கார வளைவுகள் அவ்வளவு உயரத்துலயான்னு
ஆச்சரியம்
ரொம்ப நேரம் நிக்க விடமாட்டேங்கறாங்க செக்யூரிட்டிகள்.
ஆனாலும் கடலைபோடும் காதலர்கள் இருந்தாங்க.
இறங்கும்போதும் அதே மாதிரி படிக்கட்டுகள். கால்
தசைகளில் வலி எடுக்க ஆரம்பிச்சிருச்சு. எப்படியோ
கீழ வந்து சேர்ந்தோம்.
ஆஷிஷ் அம்ருதா சார்மினார் முன்னாடி நின்னு
போட்டு எடுத்தேன். அங்க வந்த ஒரு போட்டோகிராபர்
உங்க மொபைலில் போட்டோ பிடிச்சுத்தாரேன்னு சொல்ல
வேணாமேன்னு இருந்தேன். பசங்களும் நானும் நிக்கும்படியா
ஒரு போட்டோ எடுக்கலாமேன்னு சரின்னு சொல்ல முழு
சார்மினாரும் தெரியும் படி எடுக்க நடுரோட்டில் ட்ராபிக்கிற்கு
நடுவில் டென்ஷனோட போட்டோ எடுத்துகிட்டது செம
எக்ஸ்பீரியன்ஸ்.(ஒரு போட்டோக்கு 10 ரூபாய் சார்ஜ்
செய்யறாங்க)
இது நான் க்ளிக்கினது.
சார்மினார் வாசலிலேயே பழங்கால நாணயங்கள்
வித்துகிட்டு இருக்காங்க. நம்ம தாமரைக்காசு
போன்றவை வாங்கலாம். 5 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கும்
மேலே ரேட் வகை வகையா இருக்கு.
வெயில் அதிகம், சனிக்கிழமை என்பதால் செம கூட்டம்
என்பதால் சார்மினார்க்கு பின்னால் இருக்கும் மினார் பேக்கரியில்
உஸ்மானியா பிஸ்கட்டும், சாந்த் பிஸ்கட்டும் வாங்கிக்கொண்டு
ஆட்டோ பிடித்து அயித்தானின் ஆபிஸ் போய்ச் சேர்ந்தோம்.
சாயந்திரத்துக்கு மேலே கால் வலிக்க ஆரம்பிச்சிருச்சு.
சார்மினாரில் ஏறியதால் வந்த சைட் எஃபக்ட். :))
சார்மினாரில் ஏறி அயித்தான் கூட இன்னமும் பார்த்ததில்லை.
நாங்க 3 பேரும் பாத்துட்டோம்னு சந்தோஷப்பட்டுகிட்டே
கால்வலியை மறைச்சு 4 நாள் நடந்தோம்.
சார்மினார் மேலே ஏறிப்பாக்க நல்லாத்தான் இருக்கு.
இறங்கினதும் மறக்காம மெடிக்கல் ஷாப் போயி
வலி நிவாரணிகள் வாங்கிவெச்சுக்கறது உத்தமம்.
ீ
16 comments:
//சார்மினார் மேலே ஏறிப்பாக்க நல்லாத்தான் இருக்கு.
இறங்கினதும் மறக்காம மெடிக்கல் ஷாப் போயி
வலி நிவாரணிகள் வாங்கிவெச்சுக்கறது உத்தமம்.//
ரசித்தேன்.!!
நீங்க போய்டு வந்ததுக்கே கால்வலின்னு சொல்றீங்க..சார்மினார் ஒரு நூற்றாண்டு காலமா அங்கினயே நிக்கிதே அதுக்கு எவ்ளோ கால் வலிக்கும்..?!
நீங்க போய்டு வந்ததுக்கே கால்வலின்னு சொல்றீங்க..சார்மினார் ஒரு நூற்றாண்டு காலமா அங்கினயே நிக்கிதே அதுக்கு எவ்ளோ கால் வலிக்கும்..?!//
ஆமாம். அப்ப மூவ்ல முக்கி எடுத்திடுவோம்
சார்மினாரில் புறாக்கள் கூட்டம் பார்ப்பதற்கு மிகவும் அழகல்லவா. குழந்தைகள் ரசித்திருப்பார்களே! :)
நல்ல பகிர்வு தென்றல். படங்களெல்லாம் அருமை.
//ஆமாம். அப்ப மூவ்ல முக்கி எடுத்திடுவோம்//
இப்போ வோலினிதான் பெஸ்ட்:)))!
அழகா சொல்லி இருக்கீங்க பயண கட்டுரை மாதிரி. எங்க அம்மா கூட ஊரு சுத்தின ஞாபகம் வந்துடுச்சு
எல்லா இடத்துக்கும் போகணும்னு ஆசையா இருக்கு! ஆனா வீட்ல தான் விடல ஏதாவது உடம்பு சரியில்லாம போயிடும்னு தடா போட்டுட்டாங்க.. :((( நானும் ஒரு நாள் இதெல்லாம் சுத்தி உங்களை மாதிரியே எல்லார் காதுலயும் புகை வர்ற மாதிரி போஸ்ட் போடலை.. :)))
எல்லா ஃபோட்டோஸும் சூப்பர் :)
அக்கா,
சார்மினார் ரவுண்டப் தூள் போங்க!
சின்ன குழந்தையில அம்மா கூட்டிண்டு போனப்போ மேல போக பெரிமிஷன் இல்லை. இதே தற்கொலைதான் காரணம். 87ல் நான், அம்மா, தங்கைமணி போன போது மேலே போக விடாமல், பல்பு வாங்கி, அந்த கடைத்தெருவில் அம்மாவுக்கு சில நூறுகள் செலவு! அழகழகான நவ்ரங் வளையல்கள் வாங்கித்தந்தார். பல வருஷங்கள் போட்டுண்டு இருந்தேன். அருமையான கவரேஜ். நானும் உங்க கூட வந்த மாதிரி!
பி.கு: அநாவஸ்யமா (கராச்சி) பேக்க்ரி பிஸ்கட்டுக்களை நினைவு படுத்தி, ஜொள் ஊற வைத்தமைக்கு, கன்னா பின்னா என்று என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்!
வாங்க இளந்தென்றல்,
சார்மினாரை விட மும்பை கேட் வே ஆஃப் இந்தியாவில் தான் அது அழகு. இங்கே செம ட்ராபிக்.’
வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி சொல்லிட்டா அப்பீல் ஏது. வோலினிலேயே முக்கிடுவோம் :))
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
வாங்க அப்பாவி தங்கமணி,
உள்ளூரிலேயே இருந்தாலும் இதுவும் ஒரு பயணம் மாதிரி தானே.
வருகைக்கு நன்றி
நானும் ஒரு நாள் இதெல்லாம் சுத்தி உங்களை மாதிரியே எல்லார் காதுலயும் புகை வர்ற மாதிரி போஸ்ட் போடலை.. :)))//
போடுங்க ஆத்தா போடுங்க. அதுக்காகத்தானே நாங்க வெயிட்டீஸ்.
வருகைக்கு நன்றி பொற்கொடி
நன்றி ரகு
கடைத்தெருவில் அம்மாவுக்கு சில நூறுகள் செலவு!//
அன்னைக்கு வெயில் என்பதாலும் அயித்தான் ஆபிஸுக்கு போறோம் என்பதாலும் பர்ச்சேசிங் செய்யலை. இல்லாட்டி பில் பழுத்திருக்கும். என் மகள் அலங்காரவல்லி அதிரூப சுந்தரியாச்சே. :))
பி.கு: அநாவஸ்யமா (கராச்சி) பேக்க்ரி பிஸ்கட்டுக்களை நினைவு படுத்தி, ஜொள் ஊற வைத்தமைக்கு, கன்னா பின்னா என்று என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்!//
அப்பாடி இப்பத்தான் நிம்மதி. :))))))))))))
வருகைக்கு நன்றி அனந்யா
நானும் மேலே ஏறிப் பார்த்திருக்கிறேன். பாரம்பரியச் சின்னத்தடி இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கலாம் :(
வாங்க வெயிலான்,
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment