Friday, March 19, 2010

புளியோதரை மஹாத்மியம்!!!!

புளியோதரை.... பெயர் சொன்னால் போதும்
நீர் ஊறும். டூருக்கு எடுத்து போக வசதி.
இரண்டு நாளானாலும் கெடாது. என பலவிதங்களில்
புளியோதரை எல்லோருக்கும் பிடிச்சிருக்கும்.

வீட்டுல செய்யற புளியோதரையை வேணாம்னு
சொல்றவங்க கூட பெருமாள் கோவிலுக்கு போனால்
மறக்காம சாப்பிடுவது புளியோதரைதான்.

அங்க அக்காரவடிசலும், மிளகுவடையும் நல்லாத்தான்
இருக்கும். ஆனாலும் புளியோதரை வைணவத்தலங்களில்
சம்திங் ஷ்பெஷல்.






தில்லானா மோகனப்பாள் திரைப்படத்தில் ஒரு காட்சி.
தனது நாயனத்தை எடுத்துவரச் சொல்வார் மனோரமா.
“நீ நாயன கூட வாசிப்பியா?!!” என்பார் சிவாஜி.
“எல்லாம் தான் கத்தேன், என்ன பிரயோசனம்,” என
“இப்ப எதுக்கு நாதஸ்வரம்??!!”என சிவாஜி கேட்பார்.

“ரொம்ப நாளா எனக்கொரு சந்தேகம்!!! உங்க நாயனத்துலதான்
அப்படி சத்தம் வருதா!! இல்ல எந்த நாயனத்துலயும் அதே
சத்தம் தான் வருமான்னு பாக்கணும்” என்பார் மனோரமா.

நாதஸ்வரத்துல என்ன இருக்கு? நாபிக்கமலத்துலேர்ந்து
நாம தரும் ஓசைதான்!”அப்படின்னு சொல்வார்.

இங்க இதை எதுக்கு சொல்றேன்னா,
அவங்க வீட்டுல,கோவில்ல செய்யற புளியோதரை
மட்டும் எப்புடி அம்புட்டு ருசியா இருக்கு? இதுதான்
விடை தெரியாத சிதம்பர ரகசியம். என்னதான்
அவங்க சொல்ற அதே ரெசிப்பில செஞ்சாலும்
அந்த டேஸ்ட் வராது.

கைமணம்தான் சமையலில் முக்கியம் என்றாலும் மத்த எல்லா
சமையலும் நல்லாச் செய்யறவங்க கூட சொதப்பும் இடம்
புளியோதரை. நான் ரொம்ப நல்லாச் செய்வேன்னு
சொல்றவங்க கூட பெருமாள் கோவில் புளியோதரை
சாப்பிடும்போது,”இந்த மாதிரி செய்யத்தான் முடியலைன்னு!”
நினைக்கத்தான் செய்வாங்க.

வைணவர்கள் செய்யும் புளியோதரைக்கு மட்டும் அப்படி
ஒரு மணம், குணம், சுவை. சிலர் எள்ளு சேர்ப்பார்கள்.
சிலர் வெந்தயப்பொடி சேர்ப்பார்கள். ஆனால் அந்தச்
சுவைக்கு ஈடு இணை எங்கும் இல்லை. திருப்பதி மட்டும்தான்
லட்டுக்கு பேமஸ். மற்ற வைணவத்தலங்களில் புளியோதரை.

அம்மா புளிக்காய்ச்சல்(புளியை அடுப்பில் வைத்து கொதிக்க
வைப்பதால் காய்ச்சல் வந்திருக்குமோ!!) செய்து வைத்து
சோற்றில் போட்டு புளியோதரை செய்வார்கள். இதற்கு
தகுந்த ஜோடி அவியல் இருந்தால் சந்தோஷம். மோர்க்குழம்பும்
ஓகே தான். :)

நானும் அம்மா மாதிரி புளிக்காய்ச்சல் எல்லாம் செஞ்சு
பாத்திருக்கேன். ஆரம்பத்துல அது மிளகுக் குழம்பு
மாதிரி வந்து அப்புறம் ஒரு ஸ்டேஜுக்கு நல்லா வந்துச்சு.
ஆனாலும் எனக்கு மட்டும் இஷ்டமே இருக்காது. நோகாம
நோன்பு கும்பிடும் என்னைப் போன்றவர்களுக்குன்னே
ஆபத்பாந்தவன் அனாத ரட்சகனா MTR, 777 போன்ற
தயாரிப்பாளர்கள் உடனடி புளியோதரை மிக்ஸ் மார்க்கெட்டில்
விட்டிருக்கிறார்கள். நமக்கு இப்ப இதுதான் ஆவி வந்தது.

அடிக்கடி செய்ய மாட்டேன். புளியோதரை கொஞ்சம்
ட்ரை என்பதால் அதுக்குத்தோதான காம்பினேஷன்ஸ்
இருக்க வேண்டும். இது அப்பாவிடமிருந்து கற்றது.
புளியோதரை, தேங்காய்ச்சாதம், தயிர்சாதம்,
சக்கரைப்பொங்கல் + அவியல், அப்பளம் அல்லது
வடகம், ஊறுகாய் இப்படி செய்ய முடிந்தால்தான்
புளியோதரை செய்வது என்பது என் திட்டம்.

இங்கே ஆந்திராவிலும் புளியோதரை மிகப்பிரபலம்.
எல்லோரும் சூப்பராக புளியோதரை செய்கிறார்கள்.
பெருமாள் கோவில் புளியோதரை மாதிரி இருக்காது,
ஆனால் சற்று வித்யாசமாக சூப்பரா இருக்கும்.
(பெருமாள் கோவில் பிரசாதத்துக்கு ஈடு இல்லைன்னு
இப்பவும் சொல்லிக்கிறேன்)

எந்த ஒரு நல்ல நாள் பெரிய நாள் எல்லாவற்றிற்கும்
புளிஹோரைதான். இங்கே புளியோதரைக்கு பெயர்
புளிஹோரை. புளியோதரை, வடை, பாயசம்
இல்லாத பெருநாள் கிடையாது. புளியோதரை
இல்லாவிட்டாலும் எலுமிச்சை சாதமாவது
செய்கிறார்கள். நிம்மபண்டு புளிஹோர என்று பெயர்.



சமீபத்தில் நடந்த ஒரு பாட்லக் கெட்டுடுகதரில் ஒரு தோழி
புளியோதரை செய்து எடுத்து வந்திருந்தார். உடனே ஒருவர்
“எங்க வீட்டுலயும் அடிக்கடி புளியோதரைதான். இங்கயும்
அதுவே வா!!”ன்னு சொல்ல அந்த தோழி சொன்னக்கதைதான்
இந்தப் பதிவுக்கு முக்கிய காரணம்.

புளியோதரை செய்து படைக்க காரணம் என்ன தெரியுமா?
சொல்றேன்.
பாற்கடலில் பிறந்த அன்னை லட்சுமிக்கு பாலில் எத்தனை
வகையாக பிரசாதங்கள் படைத்து அன்னையை மகிழ்விக்கிறோம்.

தன் தங்கைக்கு மட்டும் ராஜ உபசாரம் நடப்பதை பார்த்து
மனம் வெம்புகிறாள் லட்சுமியின் சகோதர் அலக்‌ஷ்மி.
லட்சுமி மங்களம் தருபவள் என்றால், அலட்சுமி அமங்களத்தை
தருபவள். “நான் இல்லாமல் இருந்தால்தானே உன்னருள்
மக்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படியிருக்க
எனக்கு மட்டும் நிவேதனம் ஏன் கிடையாது?” என
கோபபப்ட்டிருக்கிறாள்..

அலட்சுமியின் கோபம் தீர்க்க புளிப்பான(லட்சுமிக்கு
இனிப்பு தானே படைப்போம்) சோறு செய்து படைத்தால்
அதை உண்டு சந்தோஷத்துடன் அந்த இடத்தை
விட்டு போய்விடுவாளாம். லட்சுமி கடாட்சம் பெறத்தான்
புளியோதரையை கண்டிப்பாக பண்டிகை நாளில்
செய்கிறோம்” என்று அந்தத் தோழி சொன்னதும்தான்
இப்படி ஒரு கதை இருக்கிறது என்றே எனக்குத் தெரியும்.


இப்படியாக புளியோதரைக்கு ஒரு கதை இங்கே
உலவிக்கொண்டிருக்கிறது. ”எங்க வீட்டுல இன்னைக்கு
பூஜை செஞ்சேம்பான்னு” பிரசாதமாக புளியோதரையோ
எலுமிச்சை சாதமோ வந்துவிடுகிறது. :))

நல்லதை நாலு பேருக்குச் சொன்னா அவங்களுக்கும்
உபயோகமா இருக்குமேன்னுதான் சொன்னேன்.
விரும்பிறவங்க புளியோதரை செஞ்சு முடிஞ்சா
எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி வைச்சா சந்தோஷப்படுவேன்.

:))))))


27 comments:

Porkodi (பொற்கொடி) said...

haiya! puliyodasrai enaku thaane? :)

pudugaithendral said...

வாங்க பொற்கொடி,

புளியோதரை, எலுமிச்சை சாதம் ரெண்டும் இருக்கு. எடுத்துக்கோங்க.

ப.கந்தசாமி said...

ஆம்பளைங்க கமென்ட் போடலாமான்னு தெரியலெ. எதுக்கும் எங்க ஊரு டிப்ஸ் ஒண்ணு. புளியோதரை கூட பூவன் பழம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா சூபராயிருக்கும்.

ஆம்பளைங்களுக்கு சாப்பிடறதைத்தவிர வேறென்ன தெரியும்?

துளசி கோபால் said...

சூப்பர்!

மகளுக்கு ரொம்பப் பிடிச்ச ஐட்டம். அதனால் அடிக்கடி செய்வேன்.

இதுக்கு நம்ம வீட்டில் டைகர் பாம் ன்னு பெயர்!

அந்த 'bam'க்கு சாதம் என்று 'பொருள்'

Porkodi (பொற்கொடி) said...

:) இன்னிக்கு லன்ச் லெமன் சாதம் தான். எனக்கு அதை தனியா சாப்பிட தான் ரொம்ப பிடிக்கும்!

உங்க பலாக் சூப்பரா இருக்கு, உங்களை நீங்கள் ரொம்ப நேசிக்கிறீர்கள்னு தெளீவா காமிக்குது :) ரொம்ப காலம் முன்னயே படிச்சுருக்கேன் தமிழ்மணத்துல இருந்து.. ஆனா இப்போ 2-3 வாரமா எல்லா பழைய போஸ்டையும் போட்டு குடைஞ்சுட்டு இருக்கேன். நிறைய கொசுவத்தி ஐடியாஸ் எனக்கும் கிடைச்சுருக்கு, எழுதிட வேண்டியது தான் :D


அப்போ ஏன் கமெண்ட் வரலைன்னு கேக்க மாட்டீங்க, நானே சொல்லிடறேன் - சும்மா நடுவுல ப்ரேக்ல லாகின் பண்ணாம படிச்சுட்டு போயிடுவேன்.. அப்புறமா அதை எங்கேன்னு தேடி கமெண்ட் போட பொறுமை இல்ல! உங்க சைட் பார் பேக்ரவுண்ட், ஹோவர் பண்ணும் போது மாறும் கலர்னு கொஞ்சம் வியர்டா பிஹேவ் பண்ணுது. இது உங்களுக்கு தெரியுமா?!

இராகவன் நைஜிரியா said...

// MTR, 777 போன்ற
தயாரிப்பாளர்கள் உடனடி புளியோதரை மிக்ஸ் //

அடுத்த தடவை சென்னை போகும் போது அடையார் கிராண்ட் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ் (அ) கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - இரண்டு இடங்களில் புளிக்காய்ச்சலாகவே கிடைக்கும். வாங்கி வந்து சாப்பிட்டுப் பாருங்க... ஐயங்கார் வீட்டுது மாதிரியே இருக்கும்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ப்ரிட்ஜில் வைத்து உபயோகித்த போது 3 மாதம் வரை கெடவில்லை.

புளியோதரை, அக்கார வடிசல், தேங்காய் சாதம், வெண் பொங்கல், வடாம், அவியல், தயிர் சாதம், சின்ன சின்னதாக நறுக்கிய மாங்கா ஊறூகாய் (அ) மாங்கா தொக்கு. இப்பவே நாக்குல தண்ணி ஊறுதுங்க..

இங்க அக்கார வடிசல் தவிர மற்றவை எல்லாம் செய்ய முடியுது.. அக்காரவடிசலுக்கு நல்ல வெல்லம் கிடைக்கவில்லை. அதனால் செய்வதில்லை..

மங்களூர் சிவா said...

கேக்குறதும் கேக்குறீங்க தம்பிக்கும் சேத்து ரெண்டு பார்சலா கேளுங்க!

ஆயில்யன் said...

நிசமா சொல்லணும்ன்னா

புளியோதரை - நிறைய ஜொள்ளுடன் வயிற்றெரிச்சல் ஏற்பட்டது! - இப்ப நினைச்சாலும் உடனே போய் வாங்கி திங்கமுடியாதே :(

கடந்த லீவுக்கு போயிருந்தபோது ஒரு நாள் முழுதும் வைணவ தல சுற்றுலா அப்ப தின்னது நினைச்சுக்கிட்டேன்!

Anonymous said...

இங்கே சிவாவிஷ்ணு கோவில்ல விஷ்ணு கோவில் புளியோதரை அமிர்தமா இருக்கும்.

pudugaithendral said...

ஆம்பளைங்களுக்கு சாப்பிடறதைத்தவிர வேறென்ன தெரியும்?//

அப்படில்லாம் ஏதும் இல்லீங்க. இங்க பூவன் பழம் அவ்வளவு சுலபமா கிடைக்காது. தமிழக விசிட்டின் போது செஞ்சு பாக்கறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இதுக்கு நம்ம வீட்டில் டைகர் பாம் ன்னு பெயர்!//

ஆஹா வித்யாசமா இருக்கே பேர்.

வருகைக்கு நன்றி துளசியக்கா

pudugaithendral said...

எனக்கு அதை தனியா சாப்பிட தான் ரொம்ப பிடிக்கும்!//

என்ன ஒரு வில்லத்தனம் :))
நீங்கள் ரொம்ப நேசிக்கிறீர்கள்னு தெளீவா காமிக்குது //

ஆமாங்க எனக்கு என்னிய ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடிக்கடி வாங்க.

pudugaithendral said...

ஆமாம் இராகவன்,

கேள்விபட்டிருக்கேன். ஆனா அதென்னவோ சென்னையில் அதிக நேரம் இருபதே இல்லை. அடிக்கடி விசிட் அடிக்கும் அயித்தானுக்கு சொல்லிடறேன்.

அக்காரவடிசல் கேள்விப்பட்டிருக்கேன் செஞ்சதில்லை. செஞ்சா ஒரு பார்சல் அனுப்பறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

சரி தம்பிக்கு சேத்து கேக்கறேன்

pudugaithendral said...

நிறைய ஜொள்ளுடன் வயிற்றெரிச்சல் ஏற்பட்டது//

ஆஹா...

வருகைக்கு நன்றி பாஸ்

pudugaithendral said...

வாங்க சின்ன அம்மிணி,
நான் அங்க இதுவரைக்கும் போனதில்லை. சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் செம எஞ்சாய் :))
வருகைக்கு நன்றி

Thenammai Lakshmanan said...

ஹைதையிலிருந்துகிட்டு ஒரு ஸ்பெஷல் புளிஹோரா நீங்க எங்களுக்கு அனுப்பி வைங்கப்பா கலா

ரசிகன் said...

புளியோதரை புகழை படத்துடன் போட்டு பசி எடுக்க வைத்த கலா அண்ணி வாழ்க..:))

ஹுஸைனம்மா said...

ஆமா, புளியோதரை எனக்கும் பிரச்னைதான். நாங்க செய்ற புளியோதரை புளியின் கலர்ல இருக்கும். இது மஞ்சளா இருக்கு, மஞ்சப்பொடி நிறையப் போடுவீங்களா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பசி நேரத்துல இப்படி செய்யறது ஞாயமா புதுகை. புளியோதரை பத்தி இத்தனை அழகா எழுதி பாத்ததில்ல. சூப்பர். அதுவும் அந்த தில்லானா மோகனாம்பாள் comparision அடிச்சுக்க ஆளே இல்ல போங்கோ

pudugaithendral said...

உங்களை ஆசை அதிவிரைவில் நிறைவேற்றப்படும் தேனம்மை.

:))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இது யாரு ரொம்ப நாளைக்கப்புறம். ரசிகன்னு பேரு என் வலைப்பூ துவங்கினப்போ பாத்தது. :))

என்ன ஆணி குறைஞ்சிடுச்சா ரசிகன். வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஹுசைனம்மா புளியோதரை செய்யும்போது மஞ்சள்தூள் கொஞ்சமா சேப்பாங்க. படம் நெட்டுல சுட்டது. :))

pudugaithendral said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அப்பாவி தங்க்ஸ்

anujanya said...

பெங்களூரில் 'ஹுளியோ கரே' என்பார்கள். இலேசாக வெல்லம் கலந்திருக்கும். நம்ம ஊர் வைணவக் கோவில் புளியோதரை போல் ..... இதுக்காகவே தீவிர விஷ்ணு பக்தனாகிடலாம்னு தோணும் :)

மும்பையில் பசி வேளையில் இந்தப் பதிவு... சாப்பிடப்போவதோ வடா-பாவ் :(((

அனுஜன்யா

pudugaithendral said...

வாங்க அனுஜன்யா,

புளியோதரை ஒரு சுகம் என்றால் வடாபாவ் தனி சுகம். எனக்கு என் மும்பை நாட்களை திரும்ப கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க.

வருகைக்கு நன்றி

Iyappan Krishnan said...

இதை எப்படிச் செய்யறதுன்னு இருக்கும்னு பார்த்தா... ச்சே... ( பொறாமை + ஸ்டமக் பர்னிங்க் ஸ்மோக் யு நோ)