Tuesday, April 20, 2010

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு.....

சிட்டுக்குருவி படத்தில் வரும் “என் மன்னவன் உன் காதலன்”
பாட்டு ரொம்ப பிடிக்கும். அந்த படத்தை பார்த்திராத
பருவத்திலிருந்து இன்னமும் அதன் மேல் இருக்கும்
காதல் போகவில்லை.” இந்தம்மா கருவாட்டுக்கூட
முன்னால போ” போன்ற வசங்கள் பாடலுக்கு நடுவுல
வரும்.

அம்மம்மாவீடு லோக்கலில். அங்கே பள பள சில்வர்
கலர் டவுன் பஸ்ஸில் போகணும்னு ஆசை. 10பைசாதான்
டிக்கெட் ஆனா நடந்து போனதுதான் ஞாபகம். ஆனால்
கல்லூரி சென்ற அந்த வருடமும் பஸ்தான். புதுகை-காரைக்குடி
போகும் பஸ். பள்ளத்தூரில் என் காலேஜ்.
தினமும் காலேல 8.15க்கு போகும் பஸ்ஸில்
ஏறுவேன், சாயந்திரம் 4.5க்கு வரும் பஸ் பிடித்து
புதுகையில் 5 மணிக்கு வந்திடுவேன்.

மூகூர்த்த நாட்களில் கூட்டமாக இருக்கும் பஸ்.
கானாடுகாத்தான் அழகப்பா இன்ஸ்டிடியூட் மாணவர்கள்
அந்த பஸ்ஸில் தான் வருவாங்க. செம சவுண்ட்
பார்டிகளாக இருப்பாங்க. புதுகையிலிருந்து நானும்
இன்னொரு பெண் மாலதி மட்டும்தான் அந்த்க்
காலேஜுக்கு என்பதால் மும்பை ட்ரையினில் கொட்டம்
அடித்த அளவுக்கு இல்லாமல் வாய்மூடி மவுனமாகவே
காலேஜுக்கு போயிட்டு வந்தேன்.

மழைக்காலங்களில் ஜன்னோலர சீட்டில் உக்காந்து
போற சுகம் என்ன ஒரு சுகமோ தான்....

திருச்சிக்கு தனியா பஸ்ஸுல போனது, மதுரையில்
இருக்கும் சித்தி & அத்தை வீட்டுக்கு என பஸ்
பயணம் நிறைய்ய்... ஆனால் பஸ் பயணம் என்றால்
நினைவுக்கு வருவது நானும் என் மகளும் மட்டும்
பயணம் செஞ்சதுதான்.

“அம்மா! என்னை ஒரு தடவை பஸ்ஸுல கூட்டிகிட்டு
போங்க!” என அம்ருதா கேட்ட பொழுது அம்மாவுக்கு
7 வயசு. அப்பாவைக்கேட்டு கூட்டிகிட்டு போறேன்னு
சொல்லிருந்தேன். அயித்தான் நோ தான் சொல்வார்.
அப்போ நாங்க இருந்தது கொழும்புவில். பஸ்களில்
குண்டு சர்வசாதாரண விஷயம் என்பதால் இலங்கையில்
இருந்தவரை ரயில், பஸ் பிரயாணங்களை அயித்தான்
விரும்பினதில்லை.



மக கேட்டு அழைச்சு போக முடியவில்லையேன்னு
வருத்தம். ரோடில் அந்த சிகப்பு நிற பஸ்ஸை
பாக்கும்போதெல்லாம் ஏக்க பார்வையுடன் அம்ருதம்மா
”எப்பம்மா! கூட்டிகிட்டு போறீங்க”ன்னு கேட்பாள்.
பஸ் கண்டக்டர் கண்டிப்பாக சிங்களத்தில்தான்
பேசுவார். அங்கே ஆங்கிலம் எடுபடாது. அதனால்
சில பேஸ் வொர்க்குகளை செஞ்சு வெச்சுகிட்டேன்.
எங்க வீட்டு வேலைக்காரம்மாகிட்ட கேட்டு
எந்தெந்த ஸ்டாப்பிங், எப்படி கேட்பது எல்லாம்
தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன்.

ரொம்ப நாளா கெஞ்கிக்கூத்தாடி அயித்தானை
ஒரு வழியா சம்மதிக்க வெச்சேன். ரொம்ப
தூரமெல்லாம் போகக்கூடாதுன்னு சொன்னார்.
“இல்லப்பா! நம்ம வீட்டுலேர்ந்து இரண்டு ஸ்டாப்.
அங்கேயிருந்து டிக்மன்ஸ் ரோடுவழியா
கால் ரோட் போய் அங்கேயிருந்து மெஜெஸ்டிக்
சிட்டி ஷாப்பிங் மால் போகப்போறேன்னு!”
சொன்னேன். உடனே சிரிச்சார்.” நம்ம வீட்டுலேர்ந்து
நடந்தே போனாலும் 2 கிமீ கூட இருக்காது.
இதுக்கு ஆட்டோல போகவேண்டியதுதானே!
எதுக்கு பஸ்ஸுல சுத்தணும்னு”. அம்ருதாக்காக!
அப்படின்னு சொன்னேன். ஜாக்கிரதை, போயிட்டு
வந்து போன் செய்ங்கன்னு சொல்லிட்டு போனார்.
ஆனால் அம்ருதாவிடம் சொல்லவில்லை.

அண்ணாவுக்கு ஸ்கூல் இருந்து அம்ருதம்மாவுக்கு
மட்டும் லீவு இருந்தது ஒரு நாள். அன்னைக்கு
”மெஜஸ்டிக் சிட்டி போகலாமா அம்ருதான்னு” கேட்டேன். ஓ
போகலாமேன்னு ரெடியாகி வந்ததும் கிளம்பினோம்.
எப்பவும் ஆட்டோ பிடிக்கும் இடத்துக்கு பக்கத்துலதான்
பஸ் ஸ்டாப். அதே வழியில கூட்டிகிட்டு போனேன்.
ரவி அங்கிள கூப்பிடவான்னு கேட்டா வேண்டாம்
பஸ்ஸுல போகலாம்னு சொல்லவும் முகத்தில்
அப்படியொரு சந்தோஷம்.

எங்க நல்ல நேரம் உடனேயே பஸ் கிடைச்சிடுச்சு.
அதுவும் புது பஸ். நடுவில் தானியங்கி கதவுடன்.
லும்பினி ஸ்டாபில் இறங்கி மயூராட்பேளேஸ்
கோவில் அருகில் பூ வாங்கிக் கொண்டு அங்கேயிருந்து
காலி வீதிக்கு பஸ் பிடிச்சோம். பம்பலபிட்டிய
ஸ்டாப்பில் இறங்கி அங்கேயிருந்து மெஜஸ்டிக்
சிட்டி மாலுக்கு பஸ். கால் ரோட் மெயின் வீதி
என்பதால் எல்லா பஸ்ஸும் போகும் பாதை.

ரொம்ப சந்தோஷமாகவும், த்ரில்லிங்காகவும்
முகம் வெச்சுகிட்டு எங்க அம்ருதம்மா
பயணம் செஞ்சது இப்பவும் கண்ணு முன்னால
இருக்கு. ஆட்டோவில் போய் வந்திருந்தால்
இலங்கை பண மதிப்பில் 60 ரூபாய் ஆகியிருக்கும்.
ஆனால் அன்று செலவழித்தது 20 ரூபாய் கூட
இல்லை. என் மகளின் ஆசையை தீர்த்த சந்தோஷம்
எனக்கு. தான் விரும்பிய படி பஸ்ஸில் பயண
சந்தோஷம் அவளுக்கு.

ரொம்ப நாளைக்கு அண்ணாவிடம் “நாங்க இந்த
பஸ்ஸுல போனோமேன்னு” பெருமையா சொல்லிக்கிட்டு
இருந்தா.

ஒரு முறை நானும் பிள்ளைகளும் மட்டும்
மதுரை- புதுகை பஸ்ஸில் 3 மணிநேரம்
பிரயாணம் செஞ்சதை ஆஷிஷ் ரொம்ப
ரசிச்சாப்ல. திருப்பத்தூரில் முறுக்கு,
பலாப்பழம், பஸ்ஸில் காதலிக்க நேரமில்லை
சினிமான்னு ரொம்ப ரசிச்சான் மகன்.

அல்ப சந்தோஷங்கள் கூட தீர்க்க முடியாவிட்டால்
அப்புறம் என்ன வாழ்க்கை. சென்ற டிசம்பரில்
திருச்சி ரயில்வே ஷ்டேஷனிலிருந்து பஸ்ஸ்டாண்டுக்கு
பஸ்ஸில் போகலாம்னு சொல்லி அண்ணனும் தங்கையும்
பஸ்ஸில் ஓடி ஏறிட்டாங்க. ”காலங்காத்தால பஸ்ஸுல
போவது நல்லாயிருக்கும்மா, அதோட காசும் சேமிக்கலாம்ல”
அப்படின்னு மகன் சொன்னது இன்னமும் காதுல கேக்குது.


எல்லா இடங்களுக்கும் கார்ல போயிருக்கோம். அதே
இடத்துக்கு பஸ்ஸுல போகும்போது வித்தியாசமா
இருக்கறாப்ல இருக்கும்மா என்று ஆஷிஷ் சொல்வது
உண்மைதான்.
பஸ் பத்தில் பலரின் கொசுவத்தி தொடர்பதிவா
படிச்சபோது என் மனதில் ஓடியது இந்தக் கொசுவத்திதான்.


22 comments:

Ahamed irshad said...

பேருந்து ஞாபகம் அருமை...

நட்புடன் ஜமால் said...

மழைக்காலங்களில் ஜன்னோலர சீட்டில் உக்காந்து
போற சுகம் என்ன ஒரு சுகமோ தான்....
]]

ஆமாமாமாம் ...

Vidhya Chandrasekaran said...

அழகான பகிர்வு..

அமுதா கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு பதிவு..எனக்கு என்னமோ பஸ் பயணம் பிடிக்கவே பிடிக்காது..ட்ரையின் தான் சாய்ஸ்...

எம்.எம்.அப்துல்லா said...

//அல்ப சந்தோஷங்கள் கூட தீர்க்க முடியாவிட்டால்
அப்புறம் என்ன வாழ்க்கை //

சின்னச் சின்ன சந்தோஷங்களின் பெரிய தொகுப்புதானேக்கா வாழ்க்கை :)

Simulation said...

http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_06.html

- சிமுலேஷன்

Rithu`s Dad said...

பேரூந்து பயணங்களும் அனுபவங்களும் சுவையானவையே..


//“அம்மா! என்னை ஒரு தடவை பஸ்ஸுல கூட்டிகிட்டு
போங்க!” என அம்ருதா கேட்ட பொழுது அம்மாவுக்கு
7 வயசு. அப்பாவைக்கேட்டு கூட்டிகிட்டு போறேன்னு
சொல்லிருந்தேன். அயித்தான் நோ தான் சொல்வார்.
அப்போ நாங்க இருந்தது கொழும்புவில். பஸ்களில்
குண்டு சர்வசாதாரண விஷயம் என்பதால் இலங்கையில்
இருந்தவரை ரயில், பஸ் பிரயாணங்களை அயித்தான்
விரும்பினதில்லை.



மக கேட்டு அழைச்சு போக முடியவில்லையேன்னு
வருத்தம். ரோடில் அந்த சிகப்பு நிற பஸ்ஸை
பாக்கும்போதெல்லாம் ஏக்க பார்வையுடன் அம்ருதம்மா
”எப்பம்மா! கூட்டிகிட்டு போறீங்க”ன்னு கேட்பாள்.
பஸ் கண்டக்டர் கண்டிப்பாக சிங்களத்தில்தான்
பேசுவார். அங்கே ஆங்கிலம் எடுபடாது. அதனால்
சில பேஸ் வொர்க்குகளை செஞ்சு வெச்சுகிட்டேன்.
எங்க வீட்டு வேலைக்காரம்மாகிட்ட கேட்டு
எந்தெந்த ஸ்டாப்பிங், எப்படி கேட்பது எல்லாம்
தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன்.//

ஏனோ இவ்வறு படிக்கும் பொழுது மன வருத்தமே வருகிறது..

இருக்கும் ஊரில் பேருந்தில் சென்றுவருவதே இவ்வளவு பிரச்சினை இருப்பது... கொடுமை..!!

என்று மாறும் இந்த நிலை?

அன்புடன் அருணா said...

/மழைக்காலங்களில் ஜன்னோலர சீட்டில் உக்காந்து
போற சுகம் என்ன ஒரு சுகமோ தான்..../
எனக்கும் மிகவும் பிடிக்கும் இது.

தமிழ் அமுதன் said...

good post ..!

நானானி said...

முதல் பஸ் பயணம், அம்ருதாவுக்கு நல்ல அனுபவம். ரொம்ப ரசித்திருக்கிறாள். நன்று.

என்னோட முதல் பஸ் பயணம் ரொம்ப விசித்திரமாயிருக்கும். சீக்கிரம் பதிவிடுகிறேன்.

பனித்துளி சங்கர் said...

///மழைக்காலங்களில் ஜன்னோலர சீட்டில் உக்காந்து
போற சுகம் என்ன ஒரு சுகமோ தான்....//////////


வார்த்தைகள் இல்லை இந்த உணர்வை சொல்வதற்கு . மிகவும் அருமை பகிர்வுக்கு நன்றி

தாரணி பிரியா said...

//மழைக்காலங்களில் ஜன்னோலர சீட்டில் உக்காந்து
போற சுகம் என்ன ஒரு சுகமோ தான் //

ஆஹா ரசனைங்க இது. அதுவும் சாரலா இருக்கணும். சூப்பர்

pudugaithendral said...

நன்றி ஜமால்,

நன்றி அஹமது இர்ஷாத்

நன்றி வித்யா

நன்றி அமுதா கிருஷ்ணா

ஆமாம் அப்துல்லா அதையெல்லாம் சேத்துவெச்சுக்கச் சொல்லணும்னுதான் கூட்டிகிட்டுப்போனேன்

pudugaithendral said...

பார்க்கிறேன் சிமுலேஷன்

இப்ப பரவாயில்லையாம் ரித்து அப்பா, நாங்க அங்க இருந்தப்பாத்தான் பயங்கரம்.

pudugaithendral said...

நன்றி அருணா

நன்றி ஜீவன்

ஆஹா போடுங்க நானானி, மீ த வெயிட்டிங்

pudugaithendral said...

நன்றி சங்கர்

நன்றி ப்ரியா, நானும் பஸ் தொடர்பதிவு எழுதிட்டேன்

கானா பிரபா said...

பின்னீட்டிங்க பாஸ், ரொம்பவே ரசித்தேன்

துளசி கோபால் said...

சின்னச்சின்ன ஆசைகள். சின்னச்சின்ன சந்தோஷங்கள் எல்லாம் மனசுலே மணை போட்டு உக்காந்துக்குது இல்லே?

ரசிச்சேன்.

எங்கூர்லே பஸ் ரொம்ப நல்லா இருக்கும். கூட்டம் வேற இருக்காதே.

டவுனுக்குப்போகணுமுன்னா நான் காரில் போகமாட்டேன். வீட்டு வாசலில் பஸ் ஸ்டாப். ஒரு மூணு மணி நேரத்துக்குள்ளே திரும்பினோமுன்னா அதே டிக்கெட்டே செல்லும். தனியா வேற ஒன்னு வாங்க வேண்டாம். பார்க்கிங் சார்ஜ் காசுக்குப் பத்து முறை பஸ்ஸில் போயிட்டு வந்துறலாம்.

நம்ம கோபால் அங்கே பஸ்ஸில் போனதே இல்லை. ஐயா காரை விட மாட்டார்.

எங்கூரில் புதுசா ஆர்பிட்டர்ன்னு ஒரு பஸ் வந்துச்சு. ரூட்? வட்டவட்டமா ஊரைச்சுத்தி எல்லா ஷாப்பிங் மாலுக்கும் போகும்.

வம்படி பிடிச்சு ஒரு நாள் கோபாலை இழுத்துக்கிட்டு ஆர்பிட்டரில் கிளம்பி, வீடு வாசலில் வந்து இறங்கினேன்.

பஸ் நல்லாதான் இருக்குன்னார்.

காட்சிகள் எல்லாம் காரில் பொகும்போது ஒருவிதமாவும் அதே காட்சிகள் பஸ்ஸில் போறப்ப வேற மாதிரியும் இருக்குது பாருங்க. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

சென்னையில்தான் பஸ்ஸில் போகும் எண்ணம் நிறைவேறவே இல்லை:(

pudugaithendral said...

நன்றி பாஸ்

pudugaithendral said...

ஆமாம் துளசி டீச்சர்,

பஸ் பயணம் எப்பவும் ஒரு வித்தியாசமா இருக்கும்.
//சென்னையில்தான் பஸ்ஸில் போகும் எண்ணம் நிறைவேறவே இல்லை:(//
இதுக்குப்போய் ஏன் வருத்தம். எனக்குத் தெரிஞ்சு சென்னை பஸ் பயணம் மோசமான அனுபவமாத்தான் இருந்திருக்கும்.

வருகைக்கு நன்றி

சுரேகா.. said...

ஆமாங்க ...!

அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் அற்புதங்களை அர்த்தப்படுத்துவது இந்தமாதிரி சந்தோஷங்கள்!

எனக்கும் பஸ்லபோறது ரொம்ப பிடிக்கும் ஆசிஷ், அம்ருதா!

pudugaithendral said...

thanks sureka