Monday, April 05, 2010

ஹைதை ஸ்பெஷல்...ஸ்....

ஹைதரபாத் அப்படின்னு சொன்னா முத்து மணிமாலை தான்
எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதைத் தவிரவும் ஹைதையில்
சில ஷ்பெஷல்கள் இருக்குங்க. என்னுடைய பல பதிவுகளில்
சொல்லியிருப்பதைத் தவிர்த்து ஹைதை ஷ்பெஷல்ஷாக
இந்தப் பதிவு என்னுடைய 600ஆவது பதிவுங்கோ... :))

மும்பைக்கு அடுத்து கைநிறைய்ய வளையல்கள் அணியும்
பழக்கம் ஆந்திராவில் உண்டு. சார்மினாரில் கிடைக்காத
வளையல் வகைகளே இல்லை. மீனாகாரி, கண்ணாடி,
கல் வகைகள் என வகை வகையாக வளையல்கள். எதை விடுக்க
எதை எடுக்கன்னு தான் யோசிக்கணும்.

ஆனா ஒண்ணு முத்து மாலையோ, வளையல்
வகைகளோ வாங்க சிறந்த இடம் சார்மினார் தான்.
சிட்டியில் விற்கும் கடைகளை விட 40 சதவிகிதம்
குறைந்த விலையில் வாங்கலாம். ஏமாற்றுக்காரர்கள்
எங்கும் இருப்பாங்க. அதனால் சமயோசிதமாக
இருக்கணும். துளசி டீச்சர் பதிவுகளில் சார்மினார்
வளையல் கடைகளில் எங்க ரவுண்ட் அப் பத்தி
போஸ்ட் இருக்கு.


இந்த வகை வளையல்கள் மட்டுமல்ல போல்கி, குந்தன்
செட்டுகள் கூட சார்மினாரில் வாங்கலாம்.
போச்சம்பள்ளி பட்டு, காட்டன் புடவைகள் இங்கே பிரசித்தம்.


குண்டூரில் இருக்கும் மங்களகிரியும் காட்டனுக்கு
புகழ் பெற்ற இடம். அந்த வகையும் இங்கே வாங்கலாம்.
போச்சம்பள்ளி இணையதளத்துக்கு இங்கே.
ஹைதைக்கு வந்தா நேரடியா போய் பாத்து
வாங்கலாம்.

இங்க எவ்வளவோ ஸ்வீட் கடைகள் இருக்கு அதுல ரெண்டு
பேரு ரொம்ப பேமஸ். நெய்யுல செஞ்சு, நெய்யில முக்கி
எடுப்பாங்க அதான் அம்புட்டு விலையின்னு சொல்லும்
அளவுக்கு தரமான ஸ்வீட்ஸ் வாங்க இந்த இடத்தை விட்டா
வேற இடமே இல்லை. அடிக்கடி வாங்க கட்டுப்படி ஆகாது.
எப்பாவாச்சும் ஓகே. அதுவும் இவங்க எக்லெஸ் கேக்
சூப்பர். அப்படி என்ன கடை??

DADU'S புல்லா ரெட்டிகடையை விட டேஸ்ட் அருமை.
இங்க ஒரு முக்கியமான விஷயம் ஸ்வீட் ஸ்வீட்டா
இருப்பது போல காரம் மகா காரமா இருக்கும். பாம்பே
சாட் வாங்கி சாப்பிடும் முன் நல்லா 4 தரம் யோசிச்சுக்கோங்க.
மினி பிட்ஸா ஒரே ஒரு தடவை வாங்கி வந்து
வாய் வெந்து போச்சு.

தாதூஸ் இணைய தளத்துக்கு.



பிஸ்கெட்டுகளில் இத்தனை வகைகளான்னு வாய் பிளக்க
வைக்கும் இடம் கராச்சி. தரம், மணம், சுவை இங்க
மட்டும் தான்.


சார்மினார் போகும் வழியில் இவங்க கடை இருக்கு.
சார்மினார் போகும் போது வாங்கிக்கிடலாம்.
இணைய தளத்துக்கு இங்க.

மொகல் வகை உணவுகள் ஹைதையில் பிரசித்தம்.
அதில் இப்ப வரைக்கும் அழியாப்புகழில் இருப்பது
ஹைதரபாத் பிரியாணி. வெஜிடபிள், சிக்கன், மட்டன்
என எல்லாவகை பிரியாணியும் கிடைக்கும். ஹைதரபாத்
ஹவுஸ், அது இதுன்னு ஆயிரம் இடம் இருந்தாலும்
சுவையா இருக்கணும்னா நீங்க போக வேண்டிய
இடம் இரண்டுதான். அதிலும் த பெஸ்ட் PARADISE
BIRYANI தான். பிரியாணியோடு கிடைக்கும்
மிர்ச்சிகா சலன் இல்லாம சாப்பிடாதீங்க.அவங்களே
கொடுப்பாங்க. :))

அடுத்து RTC CROSS ROADS BAWARCHI இந்த இரண்டு
இடம் தான் சிறந்த பிரியாணி கிடைக்கும்.



ஹைதை ஷ்பெஷலில் அசைவ பிரியர்களுக்காக இது:

ஹைதை ஹலீம் என்பது இந்த உணவுக்குப்பெயர்.
ரமலான் மாதத்தில் மட்டுமே இது இங்கே
தயாரிக்கப்படுகிறது. நோன்பு துறக்க இதை சாப்பிடுவாங்க.

HALEEM WIKIPEDIA



ஹோட்டல்களை விட சர்வீஸ்டு அப்பார்ட்மெண்ட்ஸ்
ஹைதையில் நல்லா இருக்கு. இங்கே போனா பாக்கலாம். 1000 முதல் 1500
ரூபாய் பட்ஜெட்டில் பேகம் பேட் ஏரியாவில் இரண்டு
இடங்கள் எனக்குத் தெரியும். யாரும் வருவதாக இருந்தால்
மெயில் அனுப்புங்க. விவரங்கள் அனுப்பி வைக்கிறேன்.

பேகம் பஜார் பக்கம் போனால் சுடிதார் ட்ரெஸ் மெட்டீரியல்ஸ்
குறைந்த விலையில் வாங்கலாம். சார்மினார் ஏரியாவில்
லேஸ்கள், பேக்குகள் எல்லாம் எல்லாம் வாங்கலாம்.
பொறுமை, பேரம் பேசும் திறமை ஆகியவற்றுடன்
நிறைந்த பர்ஸோடு ஹைதைக்கு வந்தால் ஆனந்தமாக
ஷாப்பிங் செய்யலாம். ஷாப்பிங் செய்யாத பொழுது
சிறுது அல்ல அல்ல பெரிது வயிற்றுக்கும் ஈயலாம்.

:))))

டிஸ்கி
புகைப்படங்கள் மற்றும் இணைய தளங்கள் காதில்
புகை ஏற்படவும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை
தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வயிற்றெரிச்சல்
ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.

32 comments:

கானா பிரபா said...

600க்கு வாழ்த்துக்கள் பாஸ்,

ஹுஸைனம்மா said...

600, இன்னும் தொடர்ந்து, என்றும் நாட் அவுட்டாக இருக்க வாழ்த்துகள்!

ஹைதை ஸ்பெஷல் இப்பத்தான் எழுதுறீங்களா? அப்படியா? ஹலீமும், ஹைதரபாத் பிரியாணியும் என்னோட ஃபேவரைட்ஸ். நான் செஞ்சா அந்த டேஸ்ட் வர்றதில்ல; அதுக்குன்னே இங்க இருக்க பாகிஸ்தானி ரெஸ்டாரண்டிற்குப் போவோம்.

இப்ப நிலைமை எப்படிருக்கு அங்க? ஊரடங்கெல்லாம் போட்டாங்களாமே? சரியாயிட்டா?

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

வாழ்த்துக்கு நன்றி. ஊரடங்கு எல்லாம் ஹைதராபாத்தில் இருக்கும் சார்மினார் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில். மக்கள் ரொம்ப அவதிப்பட்டாங்க. இன்னைக்கு நிலமை பரவாயில்லை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

தாங்க்ஸ் பாஸ்

இளந்தென்றல் said...

சூப்பர்
सुपर
സൂപ്പര്‍

எம்.எம்.அப்துல்லா said...

//அதிலும் த பெஸ்ட் PARADISE
BIRYANI தான். பிரியாணியோடு கிடைக்கும்
மிர்ச்சிகா சலன் இல்லாம சாப்பிடாதீங்க.அவங்களே
கொடுப்பாங்க. :))

//

நீங்க எங்க அங்க போனீங்க??இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை??

:))))

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் குருஜி. குருவை மிஞ்சுன சிஷ்யனாகனும்னு பாக்குறேன் முடியாது போல :)

விரைவில் ”1000 பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணி” அப்படின்னு பட்டம் பெற வாழ்த்துகள்.

Vidhoosh said...

அறுநூறுக்கு வாழ்த்துக்கள்.
கராச்சி மற்றும் தாது போன்றவைகளை என் அக்கா புண்ணியத்தில் ரசித்திருக்கேன்.

உங்கூர் மாம்பழம் மற்றும் ஆம் பேடா இரண்டையும் விட்டுடீங்களே தென்றல்??? எங்கக்கா மாமனார் எனக்கு எப்போதும் மே மாசம் ஆனால் கூடை நிறையா அனுப்பிடுவார் :))

pudugaithendral said...

நன்றி தன்யவாத் இளந்தென்றல்

pudugaithendral said...

குருவை மிஞ்சுன சிஷ்யனாகனும்னு பாக்குறேன் முடியாது போல :)//

முயன்றா முடியாதது ஏதும் இருக்கா என்ன??

விரைவில் ”1000 பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணி” அப்படின்னு பட்டம் பெற வாழ்த்துகள்.//

:)) நடந்தாலும் நடக்கும்.

pudugaithendral said...

நீங்க எங்க அங்க போனீங்க??இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை??//

ஹலோ அங்க வெஜ் பிரியாணியும் இருக்கு தம்பி. :))

pudugaithendral said...

உங்கூர் மாம்பழம் மற்றும் ஆம் பேடா இரண்டையும் விட்டுடீங்களே தென்றல்???//

அதைப்பத்தில் எல்லாம் முன்னாடியே பல பதிவுகளில் சொல்லி வயிற்றெரிச்சலை கொட்டிகிட்டாச்சு வித்யா.

இது மத்த விஷ்யங்களுக்கு மட்டும்.

வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

ஹைதை ஸ்பெஷல் அருமை.

600-க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

600-க்கு வாழ்த்துக்கள்.பிரியாணியும்,ஸ்வீட்டுமா கொண்டாடிட்டோம். அடிக்கடி எங்கேங்க காணாம போயிடறீங்க!!....லீவை நல்லா எஞ்சாய் பண்றீங்கன்னு புரியுது.

Ananya Mahadevan said...

600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அக்கா! கங்ராட்ஸ்!

வளையல், ஷாப்பிங், நடூல ஜொள் வரவழைக்கும் goodies!! அந்யாயத்துக்கு டெம்ப்டு பண்றீங்களே? இந்த சம்மருக்கு ஹைதை தான் டெஸ்டினேஷன். முதல்ல சார்மினார் அப்புறம் கோட்டி & ஆபிட்ஸும் போகலாம்! சரி தானே?

pudugaithendral said...

நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

பதிவு போட நேரமில்லாத அளவுக்கு வேலை வந்திடுதுப்பா.(வேலைக்காரம்மா கொடுக்கும் டார்ச்சர் தான்):(( லீவு முடிஞ்சு பசங்க ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. இனி லீவு ஏப்ரல் 23 லேர்ந்துதான்.

வாழ்த்துக்கு நன்றி

pudugaithendral said...

முதல்ல சார்மினார் அப்புறம் கோட்டி & ஆபிட்ஸும் போகலாம்! சரி தானே?//
ஆஹா தாரளமா போகலாம்,
வேணாம்னு சொல்ல மாட்டேன். இப்பவே 39 டிகிரி. அடுத்த ரெண்டு மாசத்துக்கு எப்படியோ, தவிர சார்மினார் பக்கம் தடையுத்தரவு வேற. பாப்போம்.

வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி அனந்யா

நட்புடன் ஜமால் said...

600kku vaazhtugal ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இந்தப் பதிவு என்னுடைய 600ஆவது பதிவுங்கோ... :))//

வாவ்... வாழ்த்துக்கள் புதுகை தென்றல்...... 6000 வது பதிவு தாண்டியும் வீர நடை போட வாழ்த்துக்கள்

ராவி said...

600 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

//
வயிற்றெரிச்சல்
ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.
//
ஹைதராபாத் காரம் சாப்பிட்டாலும், அதை பத்தி படிச்சாலும் வயிற்றெரிச்சல் வரும்னு சொல்லுங்க!!

Jaleela Kamal said...

600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

ஹலீம் என் பையனுக்கு ரொம்ப பிடித்தது,

போச்சம்பள்ளி பட்டு ஹை எனக்கு ரொம்ப பிடிச்சது,
முத்துமலை ம்ம் சூப்பர், ரொம்ப‌ ரொம்ப‌ பிடிக்கும்.
வளையல் வாவ் சூப்பர். ஒரு காலத்தில் டிரெஸுக்கு மேட்சா வளையல் இல்லன்னா அவ்வளவு தான், என் மூஞ்சே விளங்காது,
மொத்த‌த்தில் இந்த‌ 600 வ‌து ப‌திவு என்க்க‌காவே போட்ட‌து போல‌ இருக்கு.
ஹைத்ரா பாத் பிரியாணி, பாயிஜா நல்லா செய்வாங்க.


நேரம் கிடைக்கும் போது என் பக்கமும் வந்து செல்லுங்கள்.

Jayashree said...

புல்லா ரெட்டிய விடனு சொல்ல நினைச்சேன், தாதுவை சொல்லிட்டீங்க. Almond house, கேஷவ் ரெட்டி யும் ok தான்!!

வெங்கடகிரி கத்வால் ஐ ஏம்பா விட்டுடீங்க?

வளையான வளை அரக்கு வளை ரொம்ப ATTRACTIVE தான்.

நம்ப வெஜிடேரியனானதுனால பிரியாணி பத்தி சொல்லி கேட்டதுதான்.
வெஜிடேரியன் பிரி....நு நான் ஆரம்பிக்கும் போதே என் ஃப்ரெண்ட் அதெல்லம் நன்னா இருக்காதுன்னு முடிச்சிடுவா:))

fruits காய்கறி நல்லாவே இருக்குப்பா ஒங்க ஊர்ல :))
Well! 600 ? Congrats!!

settaikkaran said...

600? ஆஹா! இது பெரிய சாதனை! இன்னும் தொடரவேண்டும். இதுபோல பல பதிவுகள் வரவேண்டும். வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

நன்றி ஜமால்

pudugaithendral said...

வாங்க ராவி,

ஹைதராபாத் காரம் சாப்பிட்டாலும், அதை பத்தி படிச்சாலும் வயிற்றெரிச்சல் வரும்னு சொல்லுங்க!!//

ஹைதையில் காரம் குறைவு. அச்சு அசல் காரம் ஆந்திரா, ராயலசீமா பக்கம் தான்.
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

மொத்த‌த்தில் இந்த‌ 600 வ‌து ப‌திவு என்க்க‌காவே போட்ட‌து போல‌ இருக்கு.//

ஓஹோ இவையெல்லாம் எனக்கு பிடிச்சது. அது உங்களுக்கும் பிடிச்சிருப்பது சந்தோஷம் ஜலிலா. நானும் வர்றேன். அடிக்கடி நீங்களும் வாங்க

pudugaithendral said...

வாங்க ஜெயஸ்ரீ,

புடவை ரகங்களைப்பத்தி தனியா பதிவு போட்டு ரங்க்ஸ்களின் பர்ஸுகளை கொஞ்சம் தாக்கம் திட்டம் இருப்பதால் இப்போதைக்கு கேப் விட்டிருக்கேன்.

ஹைதைபோல் (ஆந்திரா) போல எங்கேயும் காய்கறி, கனிகள் விலைக்குறைவு கிடையவே கிடையாது. 5 ரூபாய்க்கு கீரைக்கட்டு 4 வாங்கி டக்குன்னு சமைச்சிடலாம்.

பாலக், சுக்காக்கீரை, அது இதுன்னுபல வகைகளும் உண்டு.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

pudugaithendral said...

கண்டிப்பா உங்க ஆசையை பூர்த்தி செய்வேன் சேட்டைக்காரன். பதிவெழுதானே நான் ஜென்மம் எடுத்தேன். :)))

நன்றி

Ungalranga said...

600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கலாம்மா..!!

”ஆயிரம் பதிவுகள் தொட வாழ்த்துக்கள்”..

ஹைதை ஸ்பெஷல் ரொம்ப ரசித்து படிச்சேன்!!

இன்னும் பல சென்சுரிகள் அடிக்க வாழ்த்துக்கள்!!

pudugaithendral said...

நன்றி ரங்கன்

pudugaithendral said...

நன்றி அப்பாவி தங்க்ஸ்