Sunday, May 09, 2010

அம்மா என்றழைக்காத உயிரில்லையே!!!

மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமென்றால்
அன்னையாக பிறப்பதற்கு கோடி புண்ணியங்கள் செய்திருக்க
வேண்டும். தெலுங்கில் ஒரு வாக்கியம் சொல்வார்கள்.
புண்ணியம் செய்வதன் பலன் பிள்ளைகள் என்று.

ஒரு குழந்தை பிறக்கும் பொழுதுதான் அன்னையும்
பிறக்கிறாள். அமூதூட்டக்கற்கிறாள். என்னைப்
பொறுத்தவரை நான் கற்கத்துவங்கியது அம்மாவான
பிறகுதான்.

காலையில் எழுந்ததுமே அம்மாவுக்கும்,
சித்திக்கும் போன் போட்டு வாழ்த்துச் சொல்லிவிட்டேன்.
”மணி 7 ஆச்சு இன்னும் என் மகளிடமிருந்து
போன் வரலியே என்று காத்திருக்கிறேன்!” என்றார்
சித்தி

என் பிள்ளைகளுக்காக விதம்விதமாய் சமைக்க கற்றேன்.
அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க என் புத்தியை
பெருக்கிக்கொண்டேன் என இப்படி எத்தனையோ...

நான் கற்க காரணமாக இருந்த என் பிள்ளைகளுக்கு
எனதன்புகள்.

ஒரு வாரம் முன்பிலிருந்தே அம்ருதாவும் ஆஷிஷும்
ஆரம்பித்து விட்டார்கள். அம்மா உனக்கு என்ன பிடிக்கும்?
இந்த முறை நீ விரும்புவதையே மதர்ஸ்டே கிப்டா
தர்றோம் என்று.

எனக்கு பிடித்த யேசுதாஸ் பாடல்கள் கலெக்‌ஷன் தேடினார்கள்
ப்ச் கிடைக்கவில்லை. எனக்காக சாஃப்ட் டாய்ஸ்
வாங்குவதாகச் சொல்லி பிறகு வேணாம் என
மாற்றினார்கள். ஷோ பீஸஸ் எதுவும் வேண்டாம்
என்று சொல்லியிருந்தேன்.

கடைசியில் இருவரும் சேர்ந்து வித்தியாசமாக
பரிசளிப்பதாகச் சொல்லிவிட்டார்கள். பிள்ளைகள்
எது செய்தாலும் சந்தோஷமே என இருந்தேன்.
நேற்று சாயந்திரம் முதலே என்னை கிச்சனுள்
விடாமல் டீ, இட்லி,சட்னி செய்து கொடுத்தார்கள்.


நான் கிச்சனுக்குள் நுழையக்கூடாது என இருவரும்
மறியல் செய்ய இன்று வம்படியாக மதிய
சமையலை செய்தேன். இதற்கு பிறகு
கிச்சனுக்குள் வரக்கூடாது என தடா போட்டுவிட்டார்கள்.
தங்களது பாக்கெட் மணியிலிருந்து இருவரும்
சேர்ந்து என்னை டின்னருக்கு அழைத்துச்
செல்லபோகிறார்களாம். சாயந்திரம் மசாலா
டீ கூட ஆஷிஷ் தான் போடப்போகிறார்.

தோளுக்கு மிஞ்சினால் தோழன். சில சமயம்
பிள்ளைகள் இருவரும் தாயாய் பாசம்
காட்டும் பொழுது மகிழ்ச்சியில் இறைவனுக்கு
நன்றி சொல்கிறேன்.

சாப்பிட்டு முடிச்சாச்சு. நான் போய் ஹாயா
ஒரு தூக்கம் தூங்கி ரெஸ்ட் எடுக்கறேன்.
நைட் வேற டின்னருக்கு போகணும். :))
இந்தப்பாட்டை கேட்டு எஞ்சாய் செய்யுங்க.

அன்னையர் அனைவருக்கும் மனமார்ந்த
அன்னையர் தின வாழ்த்துக்கள்.




A human body can bear only upto 45 Del (unit) of pain. But at the time of giving birth, a woman feels upto 57 Del of Pain. This is similar to 20 bones getting fractured at a time!!!! LOVE UR MOM... God couldn't be everywhere and therefore he made Mothers... THE MOST BEAUTIFUL PERSON ON THIS EARTH… OUR BEST CRITIC … YET OUR STRONGEST SUPPORTER… "MOTHER"



26 comments:

S.Arockia Romulus said...

great great............

Jerry Eshananda said...

அன்பான பதிவு...

பாச மலர் / Paasa Malar said...

அன்னையர் தின வாழ்த்துகள்

தமிழ் அமுதன் said...

good post..!

Jayashree said...

happy mother's day thenral :))

கோமதி அரசு said...

அன்பு அம்மாவுக்கு வாழ்த்துக்கள்!!

Rithu`s Dad said...

கலக்கல் பதிவு. மனமார்ந்த
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Thamira said...

நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தருவது உங்களுக்குத் திருப்பிக்கிடைக்கிறது. வாழ்த்துகள் ஃபிரென்ட்.!

நட்புடன் ஜமால் said...

எத்தனை முறை கேட்டாலும் என் கண்களில் துளி விழ வைக்கும் வரிகள்

“தாய் வீடு போலில்லை அங்கு தாலாட்ட ஆளில்லை”

அன்னையரான அனைவருக்கும் வாழ்த்துகள்.

pudugaithendral said...

நன்றி ரோமுலஸ்

pudugaithendral said...

நன்றி ஜெரி

pudugaithendral said...

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் பாசமலர்

pudugaithendral said...

நன்றி ஜீவன்

pudugaithendral said...

நன்றி ஜெயஸ்ரீ

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நன்றி கோமதி அரசு,

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நன்றி ரித்து அப்பா

pudugaithendral said...

ஆமாம் ஃப்ரெண்ட்,

நாம் கொடுப்பதைத்தான் திரும்பப் பெறுகிறோம்.

இப்பத்தான் ஹோட்டல் போய் வந்தேன். மினர்வா க்ராண்டில் புஃபே டின்னர் கொடுத்தார்கள் பிள்ளைகள்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஜமால்,

நல்ல பாடல்வரிகள் கொண்ட பாடல். பாலுவின் மயக்கும் குரலில்

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

தென்றல் ,இந்தப் பாடலைக் கொடுத்து என் அன்னையர் தினத்தை நிறைவு செய்து விட்டீர்கள்.
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு இது.
உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்த
உங்கள் அருமையைத்தான் பாராட்டுவேன். உங்களை இத்தனை அருமைத்தாயாக உருவாக்கிய
உங்கள் அன்னைக்கும் சித்திக்கும் என் வாழ்த்துகள்.

ராவி said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

"பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?"

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஆமாம் மனசுக்கு நிறைவைத்தரும் பாட்டு. உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. வருகைக்கும் மிக்க மிக்க நன்றி

pudugaithendral said...

நன்றி ராவி,

சத்தியமாக ஈடாகாது.

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

ம்ம்.. டின்னர்.. அதுவும் பிள்ளைங்க செலவில.. எஞ்சாய்!!

பாட்டும் சூப்பர்!! (நல்லவேளை, ’அம்மா என்றழைக்காத’ பாட்டைப் போடலை!!) :-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகு செல்லங்கள் தான் ஆஷிஷ் அண்ட் அம்ருதா...கிரேட் கிட்ஸ்... வாழ்த்துக்கள்

pudugaithendral said...

ஆமாம் ஹுசைனம்மா,

அதுவும் நல்லா யோசிச்சு நான் விரும்பும் வகை ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போனாங்க. நல்லா எஞ்சாய் செஞ்சேன்.

அம்மா என்றழைக்காத பாட்டு என் தலைவர் கானக்கந்தர்வன் பாடினது என்றாலும் ஏனோ ரஜினியை அந்தப் பாட்டில் பார்க்க பிடிக்காது. அதான் போடவில்லை. :))

pudugaithendral said...

கிரேட் கிட்ஸ்..//

ஆண்டவன் அருள் புவனா,

வருகைக்கு நன்றி