Tuesday, May 18, 2010

நான் ரசித்த படங்கள்

எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும்னு இல்ல. ஆனா
பிடிக்கும். பாட்டுதான் ரொம்ப இஷ்டம்.செலக்ட்
செஞ்சுதான் சினிமா பாப்பேன். டிரைக்டர், நடிகர்,
நல்லகதையம்சம், இசையமைப்பாளர் அப்புறம்
யேசுதாஸ் ஒரு பாட்டாவது பாடியிருந்தால்
சந்தோஷம்னு  ஒவ்வொண்னா பாத்து பாத்து
சினிமா போவதால மனசுல சிம்மாசனம் போட்ட
படங்கள் அதிகம்.

எதைவிட எதைச் சொல்லன்னுதான் தெரியலை.


அப்பல்லாம் மற்ற மொழி படங்கள் பாக்க வேண்டும்
என்றால் டீடீயில் ஞாயிற்றுக்கிழமை மதியத்
திரைப்படத்துக்காக காத்திருக்க வேண்டும்.
அப்படிப் பார்த்துதான் எனக்குத் தெலுங்குபடங்கள்
பரிச்சயமானது.

குடும்பம் ஒரு கதம்பம்:


விசு என் ஃபேவரீட் டைரக்டர். அவரின் எல்லா
படங்களையும் பாத்திருக்கேன். குடும்பம் ஒரு
கதம்பம் இப்பவும் பாக்கலாம். அதே போல
வேலைக்கு போகும் பெண்ணின் கஷ்டம்,
வேலைக்குப்போகாம வீட்டில் இருக்கும் கஷ்டம்,
பொண்டாட்டி வேலைக்கு போக தான் ஒரு
ஊரில் வேலைப்பார்க்க லெட்டரில் மட்டுமே
குடும்பம் நடத்தும் கணவன், வேலை வெட்டி
செய்யாம வெட்டியா இருக்கும் புருஷன்,
அடுப்படியில் வெஞ்சு அவியும் மனைவி,
தன்னை அம்ஜத்கானா நினைக்கும் மகனுக்கு
நல்லது செய்யும் அப்பான்னு சூப்பரா இருக்கும்
படம். ஒவ்வொருத்தரும் தன் பாத்திரத்தை
உணர்ந்து நடிச்சிருப்பாங்க.


ஸ்வர்ணகமலம்: (telugu)
எனக்கு மிகவும் பிடித்த தெலுங்கு இயக்குனர்
கே.விஸ்வநாத் அவர்கள் இயக்கத்தில் 1988ஆம்
ஆண்டு வெளிவந்தப்படம். பரதம், பானுப்ரியா
இரண்டும் எனக்குப் பிடித்த விஷயம். பானுவின்
நடனத்துக்கு நான் ரசிகை. அருமையான பாடல்கள்,
தேர்ந்தெடுத்த நடிகர்கள்னு கலவையான படம்.
விக்டரி வெங்கடேஷ்  நடிப்பு அருமையா இருக்கும்.
டான்ஸ் கிளாஸ் நடக்கும் இந்த சீன் பாருங்கள்
தெரியும். இசை இளையராஜா
 உன்னால் முடியும் தம்பி: 1988
பாலச்சந்தர் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.
கமல், சீதா,மனோரமா இவர்களுடன்
பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளையாக எங்க
ஊரு ப்ரபலம்  ஜெமினி கணேசன் அவர்கள்
நடிச்ச படம். என் குருநாதர் யேசுதாஸ் பாடல்களும்
இருப்பது ஷ்பெஷல்.  இந்தப்படத்தில் ஜனகராஜ்
காமெடி மறக்க கூடியதா!!

அப்பா மகனுக்கு இடையில் நடக்கும் இந்த
சம்பவம் சூப்பர்.


 TEZAB: hindi

அனில்கபூர் சோ ஸ்வீட்டா இருப்பார்.
ek do theen னு மாதிரி ஆட்டம் போட்ட படம்.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது. இந்தப்பாட்டை
பாடதவங்க உண்டா!!!

மைனே ப்யார் கியா: 1989

இப்ப சல்மானைப் பாக்க பயம்மா இருக்கு. ஆனா
இந்த படத்தில் ரொம்ப அருமையா இருப்பார்.
பாலுவின் குரலில் சூப்பாரா இருக்கும் பாடல்கள்.
போனவருஷம்னு நினைக்கிறேன் இந்தப்படத்தை
நானும் அயித்தானும் சிலாகித்து பாத்துகிட்டு
இருந்தோம். கொஞ்ச நேரமே பக்கத்துல உக்காந்து
பாத்துகிட்டு இருந்த அம்ருதா “ஐயோ! இது
சம்திங் சம்திங்! படமாச்சேன்னு” சொல்லவும்தான்
பிரபுதேவா இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டாகி,
தமிழிலும் வெளிவந்தப்படம் மைனே பியார் கியாவின்
ரீமேக்குன்னே எனக்குப் புரிஞ்சிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தேவர் மகன்: 1992
இந்தப்படத்தைப்பத்தி நான் என்ன சொல்ல. எல்லோருக்கும்
தெரிஞ்ச படம். பரதன் இயக்கத்தில் வெளிவந்தப் படம்.
இஞ்சி இடுப்பழகி பாட்டு யாரும் அவ்வளவு சீக்கிரத்தில்
மறந்திருக்க முடியாது. ஜானகியம்மா கலக்கியிருப்பாங்க.
இந்தப்படம் தான் எந்த கஷ்டமும் படாம நாங்க கேட்டு
அப்பா ஓகே சொல்லின்னு படம் வெளிவந்த 3ஆம் நாளே
புதுகை வெஸ்ட் டாக்கீஸில் பாத்தது.

 ரங்கீலா: 1995

மாமாவிடம் கெஞ்சிக் கூத்தாடி என் தோழிகளுடன்
மும்பையில் தியேட்டரில் நான் பார்த்த ஒரே படம்.
இந்தப்படத்தின் அத்தனை பாடல்களூம் எனக்கு
பிடிக்கும். அமீர்கான் மாதிரி
“ஜரா ஏசிக்கோ குமா( jara  ac ko guma) ”
அப்படின்னு இப்பவும் டயலாக் அடிப்போம்.
yaaroon sunlo jara பாட்டும் ரொம்ப பிடிக்கும். கேட்டுப்பாருங்க.

 சதிலீலாவதி: 1995

கல்யாணத்துக்கு முன்னாடி நான் என் ஃப்ரெண்ட் சுபத்ரா,
தம்பி கார்த்தி நாங்க 3 பேர் மட்டும் தியேட்டருக்கு போய்
பாத்த படம். பாலுமகேந்திராவுக்கு உரிய ரெண்டு பொண்டாட்டி
கதை. கல்பனா புருஷனை கேள்வி கேட்கும் இடம்
அருமையா இருக்கும்.Mr.pellam 1993 telugu:

தெலுங்கில் நான் விரும்பும் நடிகர் சிரஞ்சீவிக்கு
அடுத்து மிக மிக விருப்பமானது ராஜேந்திர பிரசாத்.
ராஜேந்திர பிரசாத் ஆமனி நடிப்பில் வெளிவந்த
இந்தப்படம் என் ஹஸ்பண்டாலஜி பாடத்திலும்
வந்தது. ஆமாம் வேலைக்கு போன போது ஐயா
அடிச்ச அதிகாரம், வேலை போன பிறகு மனைவி
வேலைக்கு போக வீட்டில் நடக்கும் கூத்துன்னு
தத்ரூபமா இருக்கும் காட்சிகள். இதை என் ஹஸ்பண்டாலஜிக்கு
சிறப்பு பாடமா வெச்சிருக்கேன். :))


சுபலக்னம்:

தமிழில் இரட்டை ரோஜான்னு ஒரு படம்
வந்துச்சு. எனக்குச் சுத்தமா பிடிக்கல. ஆனா
தெலுங்கில் இந்தப்படம் ஆமனி, ரோஜா,
ஜகபதி பாபு நடிப்பில் சூப்பரா இருக்கும்.
படத்தோட ஹைலைட் இந்தப் பாட்டு
எனக்கும் அயித்தானுக்கும் ஆல்டைம் ஃபேவரிட்.HUM AAPKE HE KAUN: 1994
 ஹா!! அழகான மாதுரி. அருமையான
கதை, ராஜஸ்ரீ ப்ரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பு.
பிரம்மாண்ட வெற்றிப்படம். உறவுகளை
விட்டு பிரிஞ்சு வந்திட்டதா நினைப்பு வரும்
பொழுது இந்த சீடி போட்டு உக்காந்திருப்பேன்.


தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே:

என் திருமணத்துக்கு 2 மாசம் முன்னாடித்தான்
இந்தப்படம் வெளிவந்தது. காஜல், ஷாருக்
நடிப்பில் ரொம்ப அருமையா இருக்கும்.
இந்தப் படத்தை நான் அப்போ பார்க்கலை.
திருமணத்துக்கு அப்புறம் நாங்க பார்த்த
இரண்டாவது படம் இது. ஹைதை பரமேஸ்வரி
தியேட்டரில் பார்த்தோம். கடைசி சீனை பாக்காம
பைக் எடுக்கணும் கூட்டி வந்திட்டீங்கன்னு
எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பேன்னு
எனக்கா ஒரு சீடியே வாங்கிக்கொடுத்திட்டாரு
அயித்தான். இப்பவும் நான் அனுபவிச்சு பாக்கும்
படம் இது.

எல்லாப்பாட்டும் பிடிக்கும். ஆனா இது சம்திங்
ஷ்பெஷல்.
அநன்யா தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தாங்க.
நான் பதிவெழுத ஆரம்பிச்சு பதிவெழுத அதிக
நேரம் எடுத்துகிட்ட பதிவு இது தான். இரண்டரை
மணிநேரம் ஆகியிருக்கு. :))
எழுத ஆரம்பிக்க நிறைய்ய படங்கள் ஞாபகத்துக்கு
வந்து ரொம்ப செலக்ட் செஞ்சு கொடுத்திருக்கேன்.

நான் யாரையும் அழைக்கலை. யாருக்கு விருப்பமோ
அவங்க தொடரலாம்.

17 comments:

அநன்யா மஹாதேவன் said...

Nice selection thenral akka.. thanks for taking up!

புதுகைத் தென்றல் said...

நன்றி அநன்யா

ஹுஸைனம்மா said...

தென்றல்,

ஆஸ் யூஷுவல், நல்ல (தமிழ்ப்) படங்கள் + பாட்டுகள்!!

நீங்க பிடிவாதமா, ஒரு பதிவுக்கு குறைஞ்சது ஒரு பாட்டு வீடியோவாவது இருக்கணுன்னு நினைக்கிறீங்க, அதான் அவ்ளவு நேரம்!! ;-)))

//இப்ப சல்மானைப் பாக்க பயம்மா இருக்கு//
ஆமா!! இன்னும் நிறைய பேரும் அப்படித்தான்!!
(15 வருஷம் கழிச்சு, காலேஜ் ஃபிரண்ட்ஸைப் பாக்கப் போறேன், என்னை என்னல்லாம் சொல்வாங்களோ!! ) :-))))

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

வீடியோ போடாட்டி சும்மா கட்டுரை எழுதினாப்ல ஆயிடுமேன்னு நல்ல வீடியோவா தேடித் தேடி போட்டேன்.

புதுகைத் தென்றல் said...

(15 வருஷம் கழிச்சு, காலேஜ் ஃபிரண்ட்ஸைப் பாக்கப் போறேன், என்னை என்னல்லாம் சொல்வாங்களோ!! ) //

ஹை எப்ப பாக்கப்போறீங்க. வாழ்த்துக்கள். எல்லார்கிட்டயும் மாற்றம் இருக்கும் அதனால பயப்படாம போய்வாங்க.

அபி அப்பா said...

உன்னால் முடியும் தம்பி 1987ல் உதயமூர்த்தியோட பிரிவியூ தியேட்டர்ல பார்த்தேன். குடும்பம் ஒரு கதம்பம் 1981ல் மைலாப்பூர்ல பார்த்தேன். தேவர் மகன் 1993ல் அபுதாபியிலே என் ரூம்ல வீடியோவிலே பார்த்தேன். இந்த 3 படமுமே எனக்கு பிடிச்ச படம் தான்!

LK said...

nalla thervugal

நட்புடன் ஜமால் said...

இரட்டை ரோஜாக்கள் தவிர மற்ற எல்லாம் நான் மிகவும் இரசித்து பார்த்தது தான்.

ரொம்பன்னு சொன்னா
உ.மு.த + தி.து.லே.ஜா
இவை இரண்டும்.

அப்பாவி தங்கமணி said...

நல்ல கதம்பமா அழகா தொகுத்து இருக்கீங்க... சூப்பர்

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குங்க செலக்ஷன். அதிலும் ஹம் ஆப்கே ஹை கோன், தில்வாலே ச்சான்சே இல்லை. 'ஸோகயா' எனக்கும் பிடிக்கும்.

புதுகைத் தென்றல் said...

நன்றி எல் கே

புதுகைத் தென்றல் said...

அபிஅப்பா,

1981 நான் 4 ஆம் வகுப்பு படிச்சிக்கினு இருந்தேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

இரட்டை ரோஜா தமிழில் நல்லா எடுக்கலை. தெலுங்கில் இப்பவும் இந்தப்படம் பார்க்க விருப்பம்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி அப்பாவி தங்க்ஸ்

புதுகைத் தென்றல் said...

அப்ப சேம் ப்ளட்டுன்னு சொல்லுங்க அமைதிச்சாரல்.
வருகைக்கு நன்றி

Bala's Bits said...

உங்கள் தென்றலை வருஷ காலமாக தொடர்ந்தாலும், முதல் கருத்து (comment). நல்ல தேர்வு. எல்லாமே feel good படங்கள். நன்றி.

Will try to be regular in comments.

புதுகைத் தென்றல் said...

வாங்க பாலா,

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி