ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. திறமையான ஒரு ஆள்தான்
இந்த வருடத்தின் INDIAN IDOL என்பதுலதான அந்த
சந்தோஷம். ஹைதையைச்சேர்ந்த ஸ்ரீராம்சந்த்ரா
இறுதிக்கட்டப்போட்டிக்கு வெற்றி பெற்றதும்
லோக்கல் சேனல்களிலிருந்து, அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க,
ஸ்ரீராமை தெரியாதவங்க கூட எஸ் எம் எஸ் அனுப்பி
கேட்டுகிட்டது ஸ்ரீராமுக்கு ஓட்டு போடுங்க என்பதுதான்.
சென்ற முறை கருணா எனும் பெண் தகுதியானவளாக
இருந்தும் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
இந்த முறை அனைவரும் வாக்களித்து ஸ்ரீராம் ஜெயிச்சாச்சு.
ஆந்திராவுக்கு மட்டுமல்ல இது தென்னிந்தியாவுக்கே
பெருமை! இந்த நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெற்ற
முதல் தென்னிந்தியர் ஸ்ரீராம் மட்டும்தான்.
இன்னொருக்கா என்னோட வாழ்த்துக்கள்.
**********************************************************
நேற்று சாயந்திரம் 3 மணி வரைக்கும் அக்னி நட்சத்திரம் மாதிரி
வெயில்!!! சாயந்திரம் 4 மணிக்கு மழை ஆரம்பிச்சு பின்னி
எடுத்திருக்கு. பஞ்சாராஹில்ஸ், ஜுப்ளி ஹில்ஸ், பஞ்சகுட்டா,
குக்கட்பள்ளி, பாலநகர் எல்லா ஏரியாவும் வெள்ளக்காடு.
90 நிமிஷ மழைக்கு வெள்ளம். பின்ன சும்மாவா
90 நிமிஷத்துல 8 செ.மி மழை பெஞ்சு சாதனையில்ல
படைக்கப்பட்டிருக்கு.
ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் நெருடுது. மழைபெஞ்சா
அழகா தண்ணி வடிஞ்சு கால்வாய்க்கு போறமாதிரி நம்ம
ஊர்ல சாரி நாட்டுல எப்ப நடக்கும்???!!!!
***************************************************
நேற்று முன் தினம் பள்ளி விட்டு வந்ததும் எப்போதும்
போல அம்ருதம்மா என் கிட்ட வந்து பேசினாங்க.
“எங்க ஸ்கூல்ல ஏவி ரூம்ல் (ஆடியோ வீடியோ ரூம்)
கேர்ல்ஸுக்கு மட்டும் ஒரு ஷோ நடத்தினாங்கம்மா!
பீரியட்ஸ் பத்தி எல்லா டீடெய்ல்ஸும் சொன்னாங்க.
“விஸ்பர்” கம்பெனியிலேர்ந்து வந்திருந்தாங்க,
பீரியட்ஸ் வரும் காரணம்,அந்த நேரத்துல இருக்கும் பயம்,
உடல் உபாதை, மன உளைச்சல்,ஹைஜீனிக்,
சிம்ப்டம்ஸ், பேட் எப்படி வைத்துக்
கொள்வது! எல்லாம் பத்தி சொன்னாங்க. என்றாள்.
மிகவும் விரிவாகவே பிள்ளைகள் பயப்படாத
வகையில் இருந்திருக்காம் நிகழ்ச்சி.
நானும் மகளுக்கு அவ்வப்போது இதைப்ப
பற்றி பேசுவதனால் அவளுக்கு அவர்கள் சொன்னது
மேலும் தெம்பை தந்திருக்கு.
இதை மற்றப் பள்ளிகளும் பின்பற்றலாமே!!!
பெண் பிள்ளைகளிடம் இது பற்றி பேசும் நாம்
ஆண்பிள்ளைகளிடம் இதைப்பற்றி மூச்!! ஏன் இப்படி?
அவர்களுக்கு இயற்கையாக இந்த மாற்றத்தில்
பெண்களுக்குள் ஏற்படும் உபாதைகள் புரிந்தால்
நல்லதுதானே!! என் மகனுக்கு 11 வயதாக இருக்கும்
பொழுது மொத்தமாக இல்லாவிட்டாலும் மாதாந்திர
பீரியட்ஸ், அதனால் ஏற்படும் மூட் ஸ்விங் இது
எனக்கு மட்டுமல்ல உன் வகுப்பு ஆசிரியை, உடன்
படிக்கும் தோழிகளுக்கும் உண்டு. அவர்களின்
பேச்சில் மாற்றம் தெரிந்தால் பொறுமையாக
இரு! என்று புரிய வைத்திருப்பதால் எவ்வளவு
உதவியாய் இருக்கிறது என்பது நான் உணர்ந்திருக்கிறேன்.
நல்லதொரு புரிதலை அவர்களுக்குள் விதைக்க
இது சிறந்த தருணம்.
***********************************************
”தாத்தா எப்ப இங்க வர்றீங்க?”
”என் பொண்ணு பர்த்டேவுக்கு அங்க இருப்பேன்!
”இப்பவே கிளம்பி வாங்க!!”
“நானும் அம்மம்மாவும் இப்பவே வரணும்னா
ஃப்ளைட்லதான் வரணும்! நீயும் உன் தங்கச்சியும்
உங்க பாக்கெட் மணியிலேர்ந்து ஆளுக்கு 5ஆயிரம்
அனுப்பி வெச்சா உடனே அடுத்த ஃப்ளைட் பிடிச்சு
அங்க இருப்போம்!!!
“இல்ல தாத்தா நீங்க கஷ்டப்பட வேண்டாம்.
பொறுமையா அடுத்த மாசமே வாங்க!!!””
இது தாத்தா ரமணிக்கும் பேரன் ஆஷிஷுக்கும்
நடந்த பேச்சு வார்த்தை :))
ஒண்ணும் சொல்லுவதற்கில்லை.
*************************************************
கல்வியமைச்சர் சிபில்," TEACHERS NEED BETTER FACILITIES
TO DO BETTER" அப்படின்னு சொல்லியிருக்காரு. ஒரு டீயும்
அதோட ஒரு போண்டா இல்லாட்டி பன்னைத்தவிர வேறென்ன
FACILITI கிடைக்குது ஆசிரியைகளுக்கு.
சமீபத்துல மனநல மருத்துவ நண்பர் ஒருத்தர்கிட்ட
பேசிகிட்டு இருந்தப்போ,” child psychology படிச்ச
ஆசிரியைகள் இல்லாதது ரொம்ப வருத்தம்னு சொன்னார்”
கபில் சிபில் ஆசிரியைகளுக்குத் தேவையான வசதிகளில்
இதற்கான பயிற்சியை கட்டாயமாகவும் இலவசமாகவும்
செஞ்சார்னா வருங்காலத் தூண்களை ரொம்ப ஸ்ட்ராங்கா
செய்யலாம்!!!! நடக்குமா????!!!!
15 comments:
சுவையான பிரியாணி.
பீரியட்ஸ் பத்தி எங்க ஸ்கூல்ல அப்பவே விழிப்புணர்வு வகுப்பு எடுத்தாங்க.
ஸ்ரீராம் ஜெயிச்சது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமான விஷயம்ப்பா. போட்டியின் ஒவ்வொரு கட்டத்தையும் அனாயாசமா கடந்து வந்துட்டிருந்தார் அவர்.
வாங்க வித்யா,
நாம என்னதான் எடுத்துச்சொன்னாலும் பசங்களுக்கு நிறைய்ய குழப்பம் இருக்கு. ஒரு டாக்டரிடம் குழந்தை கேட்பதுபோல இந்த நிகழ்ச்சியை அமைச்சிருக்காங்க. அது ரொம்ப பிடிச்சிருந்தது.
//எங்க ஸ்கூல்ல அப்பவே விழிப்புணர்வு வகுப்பு எடுத்தாங்க.//
அந்த ஸ்கூலுக்கு என்னோட வாழ்த்துக்கள்.
வாங்க அமைதிச்சாரல்,
நான் ஒரு நாள் கூட அந்த நிகழ்ச்சியை பாக்கல. டீவி 9ல ஸ்ரீராமோட பேட்டி பாத்தேன். கணீர்ங்கற அந்தக்குரல், ”அஷ்டசம்மாங்கற” தெலுங்குபடத்துலயும் பாடியிருக்கிறார்.
வருகைக்கு நன்றி
ஆண் பிள்ளைக்கும் புரிய வைத்தல் ஆரோக்கியம்.
ஊர்ல ஸாரி நாட்ல மழை நீர் வடிகால் திட்டம் மற்றும் சிபிலிடம் எதிர்ப்பார்ப்பு - ஆனாலும் உங்களுக்கு பேராசை அதிகமுங்க
ஊர்ல ஸாரி நாட்ல மழை நீர் வடிகால் திட்டம் மற்றும் சிபிலிடம் எதிர்ப்பார்ப்பு - ஆனாலும் உங்களுக்கு பேராசை அதிகமுங்க//
:))
டீச்சருக்கு டீ, பன்னெல்லாம் ஃப்ரீயா ஸ்கூல்ல? :-))
மழைநீர் வடிகால் - ஒவ்வொரு மழையிலயும் தமிழ்நாடு படற கஷ்டங்களைப் பார்த்தா ரத்தக் கண்ணீரே வரும்!! சொற்ப நிவாரணப் பணம் மட்டும் போதும்னு ஆட்சியாளர்கள் நினைப்பது கொடுமை!!
வாங்க ஹுசைனம்மா,
ஒவ்வொரு மழையிலயும் தமிழ்நாடு படற கஷ்டங்களைப் பார்த்தா ரத்தக் கண்ணீரே வரும்!! சொற்ப நிவாரணப் பணம் மட்டும் போதும்னு ஆட்சியாளர்கள் நினைப்பது கொடுமை!!//
அதான் கொடுமை
அன்பு தென்றல், பெண்களுக்காவது அப்படி இப்படி தெரிய வாய்ப்பு கிடைக்கிறது. ஆண்பிள்ளைகளுக்கு சரியான புத்திமதி சொல்லி சரியான வேளையில் திசை திருப்புவது நடக்கணும்.
நல்லதொரு பதிவுமா.
நல்ல பல விஷயங்கள் கூடிய ஆவக்காய் பிரியாணி கொடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ்.
வெங்கட்.
ஆமாம் வல்லிம்மா,
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி வெங்கட்
//உங்க பாக்கெட் மணியிலேர்ந்து ஆளுக்கு 5ஆயிரம்
அனுப்பி வெச்சா உடனே அடுத்த ஃப்ளைட் பிடிச்சு
அங்க இருப்போம்!!!
“இல்ல தாத்தா நீங்க கஷ்டப்பட வேண்டாம்.
பொறுமையா அடுத்த மாசமே வாங்க!!//
haa..haa,... super answer:)))))
varugaiku nandri rasigan
நிறைய செய்திகளை ஒரே தொகுப்பில் தந்தமைக்கு நன்றி.
Post a Comment