Monday, August 23, 2010

நம்ம ஊர் சேனல்காரங்க கொஞ்சம் உக்காந்து யோசிக்கலாமே!!!!

டீவி பார்க்கறேன்னு சொல்லிக்கவே வெட்கப்படும் அளவுக்கு
டீவியில் எப்பப்பாரு ஏதாவது சீரியல்கள் சீரியஸா வந்து
நம்மளை சீரியஸாக்கிடும். இல்லாட்டி காமெடின்னு சொல்லி
ஏதாவது கூத்து, அதுவும் இல்லாட்டி சினிமா சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சி. இதை விட்டா வேற எதுவும் கிடையாது.
ஒரு காலத்துல தூர்தர்ஷனைத் திட்டிகிட்டு இருந்ததற்கு
நல்ல பனிஷ்மெண்ட்.:((

நல்ல உபயோகமான நிகழ்ச்சிகளா எதுவும் கிடையாது.
எனக்கு பல சேனல்களை பார்க்கும்போது நம்ம ஊர்
சேனல்களில் தான் பகல் நேரங்களில் அதிகமா சீரியல்ஸ்
காட்டுறா மாதிரி தெரியுது. அதை விடுங்க. மேட்டருக்கு
வர்றேன்.

நம்ம மக்கள்ஸ் பிட்சா, பர்கர்னு மாறிட்டங்க. ஆலு சாட்,
கோல்கப்பாஸ்னு கலந்தடிக்கறாங்க. நம்ம பாரம்பரிய
உணவுகளை சமைப்பதை காட்டினா பலரும் கத்துக்க
ஈசியா இருக்கும். நம்ம தமிழ்நாட்டில் ஓவ்வொரு வட்டார
மொழி இருப்பது போல வகைவகையா சமையல்களும்
இருக்கு. பஞ்சு பஞ்சு குழிப்பணியாரங்கள், இடியாப்பம்,
என நிறைய்ய வகை.

எல்லா சேனல்களிலும் சமையல் நிகழ்ச்சி இருக்கு. ஆனா
அது ஏதோ ஒரு நிபுணரை மட்டும் வெச்சு நடத்தறாங்க.
அவங்களை விடவும் திறமையானவங்க சமையற்கட்டில்
ஒரு ராஜ்ஜியமே நடத்திகிட்டு இருக்காங்க. அந்த மாதிரி
சமையல்களை தேடி கண்டுபிடிச்சு, அதை ஒரு நிகழ்ச்சியா
தயாரிச்சா சீரியல்களை விடவும் அதிக வருடம் போகும்.

நிபுணர்கள் சொல்வது சரி. ஆனா அந்தந்த ஊருக்கு போய்
மண்ணின் மணத்தை சொல்லும் சமையலை தேடி
கண்டு பிடிச்சு வருங்கால சந்ததிக்கு எடுத்துச் சொல்லலாமே!!
எங்க ஊரு பக்கம் கடப்பான்னு ஒண்ணு போடுவாங்க.
சூப்பரா இருக்கும். காரக்குழம்புக்கு வறுத்தரைச்சு செய்வாங்க
பாருங்க!! சுள்ளுன்னு சூப்பரா இருக்கும். ( இதே காரக்குழம்பை
சென்னையில் 10 வருடங்களுக்கு முன்னாடி ஒருத்தர்
குருமான்னு சொன்னாரு :( ) வித்தியாசமான சமையல்கள்,
அதோட பக்குவம் இதெல்லாம் கத்துக்கலாமில்ல. அத்தவிட்டு
எப்பப்பாரு ஏதோ சீரியல்தான்.

இங்கே மா டீவி, இ டீவி, ஜி டீவி, எல்லாவற்றிலும்
12 மணிக்கு சமையல் நிகழ்ச்சி தான். மா ஊரி வண்ட(எங்க ஊரு
சமையல்), மீ இண்டி வண்ட( உங்க வீட்டு சமையல்)
அபிருச்சி( அருமையான ருசி) அப்படிங்கற பேர்ல நிறைய்ய
கத்துக்க முடியுது. ஊறுகாய் நேரத்துல வகை வகையா
ஊறுகாய், இப்ப நோன்பு சீசன்ல அதுக்கு தகுந்த மாதிரி
இப்படி எப்பவும் வெரைட்டி நல்லா இருக்கு.

colors சேனலில் கிச்சன் சாம்பியன் நல்லா இருக்கு.
நல்லா உக்காந்து யோசிங்க மக்கள்களே!!!


10 comments:

நட்புடன் ஜமால் said...

நீங்க நல்லா உட்கார்ந்து யோசிச்சி இருக்கீங்க :)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. கடப்பா பத்தி நீங்க சொன்ன உடனே, அதன் செய்முறை பற்றி படித்த இந்த இடுகை ஞாபகம் வந்தது. இடுகையின் சுட்டி இதோ:

http://rekharaghavan.blogspot.com/2009/09/blog-post_06.html

முடிந்தால் பாருங்கள்.


வெங்கட்.

வித்யா said...

இங்க சன் டிவில ஒன்னு வருது. அந்த ப்ரோகிராமில் சமைப்பவர் இன்னும் ஒரு இடத்துல போய்தான் சமைக்கல;)

கலாமகள் said...

நல்ல கருத்து

Thenral said...

vasanth tv-ya illa mega tv-yanu gnabagam illa oru samayal nigazhchi madhiyam 12 manikku podraangale.oor oora poi antha oorai pathiyum solli anthantha oor samayalayum panni kaatrannga thendral!

ஹுஸைனம்மா said...

//ஒரு காலத்துல தூர்தர்ஷனைத் திட்டிகிட்டு இருந்ததற்கு
நல்ல பனிஷ்மெண்ட்.//

அதே, அதே!!

வெரைட்டி வேணும்னு ஆசைப்பட்டு இப்ப பழமையை தேடற நிலைமை ஆகிப்போச்சு!!

கோவை2தில்லி said...

நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜமால்

நன்றி வெங்கட் (லிங்க்குக்கு நன்றி)

ஆமாம் வித்யா கொடுமை அது :)

நன்றி கலாமகள்

நன்றி தென்றல்
ஆமாம் ஹுசைனம்மா

வருகைக்கு நன்றி கோவை 2 தில்லி

bxbybz said...

நல்லா சொன்னீங்க. நம்ம ஊரு சாப்பாடே மாறிப்போச்சுங்க. சமீபத்தில ஒரு மருத்துவரோட அசைபடம் யூடியூப்பில் பார்க்க நேர்ந்தது. வெள்ளைச் சோறு, வெள்ளைச் சக்கரை எல்லாமே வெள்ளை விஷம் அப்டின்னு சொல்லுறாரு. நம்ம ஊரு சாப்பாடு கம்பு வரகு அப்டின்னு இருந்தவரை யாருக்கும் உடம்புக்கு ஏதும் செய்ததில்ல. மாற மாறத்தான் வியாதிகளும் மாறிக்கிட்டு வருது. அப்டின்னு சொல்லுறாப்ள.

மேட்டர் பார்த்தீங்களா, மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு வேண்டாம்னு தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் அடம் பிடிக்கின்றன. சோ வியாதி வந்தா இனிமே டாக்டர்கிட்டயும் போக பயப்படனும். ஒழுங்கா நம்ப சாப்பாட்டுக்கு மாறிடலாம்.

பாண்டியன், புதுக்கோட்டை

புதுகைத் தென்றல் said...

வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டியன்