Wednesday, August 04, 2010

நாங்களும் மனிதர்கள் தான்!!!!

4 வருடங்களுக்கு முன்னால நடந்தது இது. சென்னையின்
பிசியான மாம்பலம் உஸ்மான் ரோடில் இந்தப் பக்கத்திலிருந்து
எதிர் திசைக்கு போக வேண்டும். அப்போது இந்தப் புது
தொல்லையான மேம்பாலம் கிடையாது.(இந்த மேம்பாலம்
கட்டினதுக்கப்புறம் அந்த இடமே கொச கொசன்னு ஆன
மாதிரி இருக்கு எனக்கு)

ரோட்டை கிராஸ் செய்ய பயந்து நின்னுகிட்டு இருந்தேன்.
கொஞ்சம் தைரியம் செஞ்சு கிராஸ் செய்யப்போகையில
வேகமா வந்த வண்டியைப்பாத்து அயித்தான் என்னை
இழுத்திருக்காட்டிப்போனா என் படத்துக்கு மாலை போட்டு
பூஜை நடந்திருக்கும்!!!

பாதசாரிகளுக்கு மரியாதையே கிடையாது. பாதுகாப்பு
அதைவிட கிடையாது. இது தான் நம்ம ஊர் சாலைகள்
நிலைமை. வண்டீயில போறவங்க சர் புர்ர்ன்னு மிரட்டிகிட்டு
போவாங்க. பெடஸ்ட்ரியன் க்ராஸ் இல்லாத இடத்துல எப்படி
ரோட்டை கிராஸ் செய்வது????

இலங்கையில் இருந்தவரைக்கும் என் அனுபவம் பாதசாரிகளை
வண்டி ஓட்டிக்கள் மதிக்க வேண்டும். நீங்க எம்புட்டு ஸ்பீடா
வந்தாலும் பாதசாரிகள் கடந்து போனா நிறுத்தித்தான் ஆகணும்.
நம்ம ஊர்ல அந்த நினைப்புல ரோடை கிராஸ் செய்யப்போயித்தான்
அடி படத் தெரிஞ்சேன்.

ரோடு எல்லோருக்கும் தான். இது எங்கப்பன் ரோடுன்னு சொல்லாம
சொல்லி வண்டி ஓட்டறாங்க. நடந்து போறவன் கதி என்ன இதுல?
சென்னை மட்டுமல்ல இங்க ஹைதையிலும் இதே கதிதான்.
பாம்பேயிலயாவது கையைக்காட்டிகிட்டு போயிகிட்டே இருக்கலாம்.
நாம கை காட்டுவதைப்பாத்து கொஞ்சம் ஸ்லோவா வருவாங்க.

சமீபத்துல ஒரு புத்தகத்துல சைக்கிள் ஓட்டுறது நல்லது. அது
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்குதுன்னு மேட்டரோட எழுதியிருந்தாங்க.
ஆபிஸுக்கு கூட சிலர் சைக்கிள் ஓட்டிகிட்டு போறது பத்தி
எழுதியிருந்தாங்க. நல்லதுதான். ஆனா நம்ம ஊர்ல பிசியான
ரோட்ல இது சாத்தியமா? ஜப்பான்ல சைக்கிள் ஓட்டணும்னா
லைசன்ஸ் வேணுமாம். என் ஃப்ரெண்ட் சைக்கிள் ஓட்டத்
தெரியாது. ஆனா அங்க அதுதான் பெஸ்ட் ட்ரான்ஸ்போர்டுன்னு
சைக்கிள் ஓட்டக்கத்துகிட்டு லைசன்ஸ் வாங்கினாங்க.

நம்ம ஊர்லயும் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தி
அவங்களுக்குத் தக்க பாதுகாப்பு(போலிஸ் பாதுகாப்பு இல்ல,
சைக்கிள், பாத சாரிகளை மதிச்சு எப்படி வண்டி ஓட்டுறதுன்னு
கார், பைக் ஓட்டுறவங்களுக்கு வகுப்பு எடுப்பது)
செஞ்சா எரிபொருள் சேமிப்பு மாத்திரமில்ல, உயிர்பலிகளையும்
தடுக்கலாம். ஆனா யாரு செய்வாங்க? நம்ம அரசியல்வாதிகளுக்கு
இதுக்க்கல்லாம் நேரம் இருக்குமா? அவங்களை குத்தம் சொல்லலை.
ஆனா இதையும் யோசிச்சு நடவடிக்கை எடுத்தா நல்லதுதானே.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு
கார், பைக்கை உபயோகப்படுத்தி சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாம,
உடலை ஆரோக்கியமா வெச்சுக்க எளிய வழி நடை + சைக்கிள்
பயணம். மும்பையில் பாண்ட்ரா ஏரியாவில் சல்மான் கான்
சைக்கிள் ஓட்டிப்போறாரு, அமெரிக்காவிலா ஜூலி சைக்கிள்ல
தான் போறாங்கன்னு படிச்சேன். இலங்கையில நான் சர்வ சாதரணமா
ரோட்டை கிராஸ் செஞ்சு போயிருக்கேன். புதுகையில் சைக்கிளில்தான்
சுத்தியிருக்கேன். இப்ப எங்கயும் இது சாத்தியமில்லைன்னு தோணுது.

சுத்தமான காற்றை மாசுபடாத சூழ்நிலையைத் தரணும்னு ஆசைபடற மாதிரி
பிள்ளைகள் பயப்படாம ரோட்டை கிராஸ் செய்ய, சைக்கிளில் செல்லணும்னு
நினைப்பது நடக்காது போல இருக்கு.

இந்த நாட்டின் குடிமகன்களாக நாங்களும் தான் இருக்கோம்.
நாங்களும் மனிதர்கள்தான். அரசாங்கம் எந்திரம் ரொம்பத் தாமதம்தான்.
அதனால வாகன ஓட்டிகள் எங்களையும் மதிச்சு வண்டி ஓட்டி
நாங்களும் ரோடில் போக உரிமை உண்டு என்பதை புரிஞ்சு வண்டி
ஓட்டணும்!!!!

நடக்குமா???!!!!!????


21 comments:

Thenral said...

Nichayam idhellam saathiyamillainaalum arumaiyana yosanai(cycle otradhathan solren).Nalla padhivunga!Yosipaangala.......???????Avvvv........

துளசி கோபால் said...

சத்தியமான உண்மை. Zebra க்ராசிங்கை யாரும் கண்டுக்கரதே இல்லை. நாம்பாட்டுக்கு நின்னுக்கிட்டே இருப்போம்:(

தி நகர்லே ரோடைக் கடந்து அந்தப்பக்கம் போக பத்துரூபாய் ஆட்டோவுக்குக் கொடுத்துருவேன். யாராலே நடுரோடுலே அடிபட்டுப் பப்பரப்பான்னு விழ முடியுது?

சாந்தி மாரியப்பன் said...

//பாம்பேயிலயாவது கையைக்காட்டிகிட்டு போயிகிட்டே இருக்கலாம்.
நாம கை காட்டுவதைப்பாத்து கொஞ்சம் ஸ்லோவா வருவாங்க.//

கரெக்டுங்க. சின்னக்குழந்தைங்க கூட ஈசியா சாலையை கடந்துடலாம்.போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் இந்தியாவிலயே நாங்க முதலிடத்தில் இருக்கோமாக்கும் :-))

//மும்பையில் பாண்ட்ரா ஏரியாவில் சல்மான் கான்
சைக்கிள் ஓட்டிப்போறாரு, அமெரிக்காவிலா ஜூலி சைக்கிள்ல
தான் போறாங்கன்னு படிச்சேன்//

ஹி..ஹி.. நான்கூட எங்கூர்ல சிலசமயம் நடந்துதான் போவேனாக்கும். :-))))))

இராகவன் நைஜிரியா said...

நிச்சயம் நடக்கும்... குழம்பியது என்றாவது ஒரு நாள் தெளிந்தாக வேண்டும்... எப்போது என்பது தெரியவில்லை அவ்வளவுதான்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி தென்றல்

pudugaithendral said...

யாராலே நடுரோடுலே அடிபட்டுப் பப்பரப்பான்னு விழ முடியுது?//

அதே பயம்தான் எனக்கும். இப்பவே இந்த நிலைன்னா வருங்காலத்தை நினைச்சா!!!!! அவ்வ்வ்வ்வ்வ் தான்

வருகைக்கு நன்றி டீச்சர்

pudugaithendral said...

.போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் இந்தியாவிலயே நாங்க முதலிடத்தில் இருக்கோமாக்கும்//

நம்ம ஊர்ல ரோட்ல எல்லாம் நல்லாத்தான் இருக்கும். ஆனா ட்ரெயின் டாப்ல ஏறி உக்காந்து போவது மட்டும் நம்ம மும்பை வாசிகளுக்குத்தான் சாத்தியம் :))

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

pudugaithendral said...

எப்போது என்பது தெரியவில்லை அவ்வளவுதான்.//

அதானே புரியவில்லை இராகவன்,

வருகைக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவுங்க... நீங்க சொல்ற மாதிரி நடந்தா நல்லாத்தான் இருக்கும்... அதுக்கு எல்லாரும் தான் மனசு வெக்கணும்... கவர்மன்ட் சட்டம் போடணும்னு இல்லாம தனி மனித பொறுப்புன்னு செஞ்சா நிச்சியம் இது சாத்தியம் தான்...

சாந்தி மாரியப்பன் said...

//ஆனா ட்ரெயின் டாப்ல ஏறி உக்காந்து போவது மட்டும் நம்ம மும்பை வாசிகளுக்குத்தான் சாத்தியம் :))//

அது நம்மோட தனித்தன்மை இல்லியோ :-))))))))))

pudugaithendral said...

சட்டம் போடணும்னு இல்லாம தனி மனித பொறுப்புன்னு செஞ்சா நிச்சியம் இது சாத்தியம் தான்...//

ஆமாம் புவனா,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

//ஆனா ட்ரெயின் டாப்ல ஏறி உக்காந்து போவது மட்டும் நம்ம மும்பை வாசிகளுக்குத்தான் சாத்தியம் :))//

அது நம்மோட தனித்தன்மை இல்லியோ //

யெஸ்ஸோ யெஸ்ஸூ

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Ungalranga said...

நல்ல ஆசை தான்.!!
ஆனால் நடக்க எல்லாரும் முயற்சிபண்ணினால்தான் முடியும்.

என்ன ஒரு டைமிங்..நீங்க பதிவு போடும் நேரம், நான் இங்க என் சைக்கிளை ரிப்பேர் பண்ணிகிட்டு இருக்கேன்..!! :)))

ரசிகன் said...

//வாகன ஓட்டிகள் எங்களையும் மதிச்சு வண்டி ஓட்டி
நாங்களும் ரோடில் போக உரிமை உண்டு என்பதை புரிஞ்சு வண்டி
ஓட்டணும்!!!!//

நியாயமான வேண்டுகோள்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ரங்கன்

pudugaithendral said...

நன்றி ரசிகன்

Thenammai Lakshmanan said...

சிங்கப்பூரிலும் நீங்க சொன்னபடி ட்ராஃபிக் ரூல்ஸை மதித்து நடக்குறாங்க தென்றல் ..சைக்கிள் கூட ..ம்ம்ம் இங்கே எல்லாருக்கும் அவசரம்..

ரசிகன் said...

/
பாதசாரிகளுக்கு மரியாதையே கிடையாது. பாதுகாப்பு
அதைவிட கிடையாது. இது தான் நம்ம ஊர் சாலைகள்
நிலைமை.//

உண்மைதான்:)

ராமலக்ஷ்மி said...

சாலையைக் கடப்பதைப் போல சிரமம் வேறில்லை நம் நாட்டில். நல்ல இடுகை தென்றல்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி தேனம்மை, ரசிகன், ராமலக்‌ஷ்மி