Wednesday, August 25, 2010

இறைவனுக்கு நன்றி!!!


மும்பை எனக்கு பிடிச்ச ஊர்னு எல்லோருக்கும் தெரியும்.
ஆனா அது அயித்தானுக்கு பிடிக்காது. :)

அயித்தானுக்கு பிடிச்ச ஊர் சென்னை. நமக்கு அது
ஆகவே ஆகாது. :)))

ஆனா ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்ச இடம்னா அது
ஹைதை. எங்கள் திருமண வாழ்க்கை துவங்கியது இங்கேதான்.
இந்த சூழ்நிலை, தட்பவெட்பம், மக்கள் இதனாலேயே
ரொம்ப பிடிக்கும்.

இங்கே வீடு வாங்க வேண்டுமென்பது 15 வருட கனவு.
நியாயமான கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றுவான்
என்பது உண்மை. எங்களின் இந்தக் கனவை இறைவன்
நிறைவேற்றி இருக்கிறான். ஹைதையில் ஒரு அப்பார்ட்மெண்ட்
வாங்கி வரும் 30ஆம் தேதி புதுமனைப்புகுவிழா.

நம்ம நட்புக்கள் சொந்த பந்தங்கள் எல்லார்கிட்டயும்
சந்தோஷத்தை பகிர்ந்துக்காட்டி எப்படி?? ஊர்லேர்ந்து
உறவினர்கள் வர ஆரம்பிச்சாச்சு. அம்மம்மா, தாத்தா,
அத்தை வந்துட்டாங்க. அம்மா,அப்பா கிளம்பியாச்சு.
ஞாயிற்றுக்கிழமை இன்னும் சில உறவுகள் வர்றாங்க.

இந்த நேரத்துல பதிவுல உக்கார முடியாது. அதனால
ஒரு வாரத்துக்கு லீவு சொல்லிக்கறேன்.


36 comments:

இளந்தென்றல் said...

மேன்மேலும் வளர்ந்து எல்லா நலன்களும் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மயில் said...

வாழ்த்துக்கள் :)))

துளசி கோபால் said...

புது வீட்டில் எல்லாவித ஐஸ்வர்யங்களும் அடைந்து இனிதாக வாழ மனமார வாழ்த்துகின்றேன்.

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி

ராமலக்ஷ்மி said...

புது இல்லத்தில் நீங்களும் குடும்பத்தினரும் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ (இங்கும் என்) வாழ்த்துக்கள்:)!

ஹுஸைனம்மா said...

ரொம்ப சந்தோஷம் & வாழ்த்துகள். சொந்த வீட்டுல குடிபோற சுகமே தனி!!

அமைதிச்சாரல் said...

congrats :-))

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. அது உங்களுக்கு அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

வெங்கட்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள்.

வித்யா said...

வாழ்த்துகள் அக்கா.

கோவை2தில்லி said...

வாழ்த்துக்கள். அபார்ட்மெண்ட் அழகாயிருக்கிறது.

காற்றில் எந்தன் கீதம் said...

ரொம்ப சந்தோசம் அக்கா ............ புதுமனை புகு விழா நல்லபடியாக நடக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள் .....

AKM said...

அட புதுகைப்பொண்ணு ஹைதையில் செட்டிலா.பாருங்க புதுஹை ஹைதை
ஒரு ரிதம் வருதுல்ல.. எனிவே..புதிய இல்லம் மகிழ்வும் அமைதியும் இன்னும் நல்ல பிற விடயங்கள் எல்லாம் தர என் வாழ்த்துக்கள் ப்ளஸ் பிரார்த்தனனைகள்..
அன்புடன்
ஏகேஎம்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

புதுகைத் தென்றல் said...

நன்றி இளந்தென்றல்

நன்றி மயில்

இந்த புதுவீட்டுக்கும் ஒரு ட்ரிப் அடிச்சிட்டு அப்புறமா உங்க ஊருக்கு போங்க துளசி அக்கா. மிக்க நன்றி

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி ஹுசைனம்மா. ஆமாம் அந்த சந்தோஷம் தனிதான்

புதுகைத் தென்றல் said...

நன்றி அமைதிச்சாரல்

நன்றி அப்துல்லா. வர்றீங்கள்ள???

ஆமாம் வெங்கட் மிக்க நன்றி

நன்றி சரவணக்குமார்

நன்றி வித்யா

புதுகைத் தென்றல் said...

நன்றி கோவை 2 தில்லி. நான் எடுத்த போட்டோ. இரண்டாவது மாடியில் வீடு.

நன்றி சுதர்ஷிணி

ஆமாங்க ஏகேஎம். ரிதமாத்தான் இருக்கு :) தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

நன்றி ஜமால்

ஆயில்யன் said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் !

ஹைதை வரும் நாள் வெகுதொலைவில் இல்லை!
குண்டான் கணக்குல சோறு திங்க வருகிறோம்! வருகிறோம்!! :)))

புதுகைத் தென்றல் said...

வாங்க பாஸ் உங்களுக்கு இல்லாததா. நன்றி

அப்பாவி தங்கமணி said...

புதுமனை புகுவிழா ஏற்பாடு எல்லாம் எப்படி போயிட்டு இருக்குங்க? சரி சரி... இப்போ பிஸியா இருப்பீங்க... வந்து சொல்லுங்க... மனமார்ந்த வாழ்த்துக்கள்...

fundoo said...

ஏங்க...அட நம்ப ஊரு அம்மணி வீடு வாங்கியிருக்காக. அதுவும் கிரகப்பிரவேசத்துக்கு வீட்டுக்கு வந்து சொல்லியிருக்காங்க.. கிளம்பலைங்களா..

யாரு நம்ப தென்றல் அம்மாவைச் சொல்றியா.. ஆமாமா கிளம்பிட்டு இருக்கேன். கிப்டு வாங்க நம்ப பையன்கிட்ட சொல்லியிருக்கேன்.

கிப்டா.. என்ன கிப்டு..

வால் கிளாக்கு..

அப்ப அண்ணன் வீடு கிரகப்பிரவேசத்துக்கு குடுத்தமே.. அது என்ன..

அது டைம் பீசு..

என் அக்கா வீட்டுக்குக் கொடுத்தது

அது பெண்டுலம் டைப்பு

தென்றல் : இனி கடிகாரம் எடுத்துட்டு யாராவது இந்தப் பக்கமா வந்தீங்க.. ஓ...ன்னு அழுதிடுவேன் ஆமா!

நிற்க.

திருமணம் குழந்தைகள் வரிசையில் சொந்த வீடும் மறக்க முடியாத ஒன்று. ப்ளாட் முறையில் ஜீவன் குறைவாக இருந்தாலும் ஜனப் பெருக்கத்திலும் கால ஓட்டத்திலும் தவிர்க்க முடியாத ஒன்று. புதிய வீடு புத்துணர்ச்சியும், தொடர்ந்து வரும் இதமான நல்ல நிகழ்வுகளையும் தரும்.

புதுக்கோட்டையிலிருந்து இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

பாண்டியன்.

சிநேகிதி said...

ஒரு வீடு வாங்குவது என்பது மிக பெரிய சந்தோஷம்...நமக்குனு குடும்ப சொத்துக்கள் பல இருந்தாலும் நாம்மாக கஷ்டப்பட்டு வாங்கும் பொழுது தான் இதன் அருமை தெரியும்..
இன்னும் நிறைய செல்வங்கள் பெற வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் புதுவீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்கட்டும்..!

மணிநரேன் said...

வாழ்த்துக்கள்..:)

Thenral said...

vaazhththukkal!Innum thangalthu vaazhvil selvam peruga ellaam valla iraivanai prathikiren!

புதுகைத் தென்றல் said...

ஆமாம் புவனா செம பிஸி வந்து சொல்றேன். நன்றி

ஆஹா ஃபண்டூ அந்தக்கால ரேடியோ விளம்பரம் மாதிரி நம்ம ஊர்ல எப்பவும் கொடுக்கும் கடிகாரம் பத்தி சொல்லியிருப்பது ரசிச்சேன். மிக்க நன்றி

ஆமாம் ஃபாயிஷா வாழ்த்துக்கு மிக்க நன்றி

நன்றி வசந்த்

நன்றி மணிநரேன்

நன்றி தென்றல்

ரங்கன் said...

கேட்கவே சந்தோஷமா இருக்கு..!!

போட்டோ போட்டு பார்த்தும் சந்தோஷப்பட வெச்சிட்டீங்க..!!

வாழ்த்துக்கள்!!!

பிரியமுடன் பிரபு said...

அயித்தானுக்கு பிடிச்ச ஊர் சென்னை. நமக்கு அது
ஆகவே ஆகாது. :)))
///////

GOOD COUPLE

டம்பி மேவீ said...

valthukkal

கலாமகள் said...

வாழ்த்துகள் சகோதரி. உங்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் இறைவன் நிறைவேற்ற வேண்டுகிறேன் .

ஸாதிகா said...

இனிய வாழ்த்துக்கள்.

சுரேகா.. said...

ALL THE BEST!!! SUPER!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)
வாழ்க வளமுடன் தென்றல்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல், கடந்த வாரம் என் கணினிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. நிறைய விஷயங்களை மிஸ் செய்திருக்கிறேன்.
நேற்று புதுமனை புகு விழா நடந்திருக்கும் என் அன்பான வாழ்த்துகள். புதுக் கிரகத்தில் அன்பும் ஆசையும்,இன்பமும் ஆரோக்கியமும் பலபலவாக பெருக வாழ்த்துகள் மா.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வாழ்த்துக்கள் தென்றல்.. நலமுடன் வளமுடன் வாழ்க..

புதுகைத் தென்றல் said...

நன்றி ரங்கன்
நன்றி பிரபு
நன்றி டம்பி மேவீ
நன்றி கலாமகள்
நன்றி ஸாதிகா
நன்றி சுரேகா
நன்றி வல்லிம்மா
நன்றி தேனம்மை