Friday, September 03, 2010

வேலை பிடித்தவனின் காலைப்பிடித்தவருக்கு வேதனை இல்லை மனமே!!!

தெய்வ பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் சின்ன வயதிலிருந்தே
பக்தி அதிகம்.அப்பா 27 வருடங்கள் சபரி மலைக்கு சென்று வந்தவர்.
ஒரு நாள் என் அம்மம்மா(அம்மாவின் அம்மா)
எல்லா சாமியையும் கும்பிடறே, ஆனால் ஏதோவொரு சாமியை
மட்டும் கும்பிடு. அவரே சரணாகதி என்று இருந்தால் கண்டிப்பாய்
காப்பாற்றுவார்னு சொன்னாங்க. எனக்கு எப்பவுமே அம்மம்மா சொல்வது
வேத வாக்கு! ஆஹா ரொம்ப சரின்னு யோசிச்சு என்னப்பன் கந்தனை
ரொம்ப தீவிரமா கும்பிட ஆரம்பிச்சேன். சும்மா கன்னாபின்னா
பாசம். முருகனை என் அப்பாவாக நினைப்பேன். (மகள்களுக்கு
எப்பவுமே அப்பா மேல்தானே பாசம் ஜாஸ்தி)

எங்கும் முருகன் எதிலும் முருகன் தான். பித்தம் ரொம்பவே
ஜாஸ்தியா இருந்துச்சு. 10வயசுல எங்கப்பாவுக்கு தெரியாம
சஷ்டி கவசம் மனப்பாடமா கத்துகிட்டு தினமும் காலையில்
அவருடன் சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சேன். என் விஷயத்தில் அப்பா
முதன் முதலில் புருவம் உயர்த்தினது இதற்குத்தான். சஷ்டி கவசம்
சொல்லாத நாளேது சுடர் மிகு வடிவேலா! என்றே இருப்பேன்.

நடக்கும்போது, தூங்கும்போது, மனது வேதனையாக
இருக்கும்பொழுது என எந்த நேரமும் அவனுடன் பேசிக்
கொண்டிருப்பேன். சஷ்டி கவசம் தான் எனக்கு மருந்து.
தேள்கொட்டியபொழுது, ஜுரம் வந்தால் என எப்போதும்
மருந்தாக அவன் நாமம். அவனது திருநீறுதான். இந்த
நிலையைப்பார்த்து அம்மம்மாவே பயந்து போயிருப்பார்.
அடி ஆத்தா! கல்யாணமாகிப்போனா அவங்க வீட்டுத்
தெய்வத்தைத்தான் கும்பிடணும். உங்கப்பாவீட்டு சாமியை
அதிகமா கும்பிடமுடியாது!! அப்படின்னு சொனனங்க.
பயமாகிடிச்சு. முருகன் பேரை மட்டும்தான் சொல்வேன்.
சில சமயம் ஐயப்பன் திருநாமம். இதைவிட்டா வேறெதுவும்
சொல்லவே மாட்டேன்னு கங்கணம் கட்டியிருக்கும்போது
இதென்ன சோதனை!! ஆனாலும் அம்மம்மாகிட்ட சவால்
விட்டேன். திருமணமாகிப்போனால் அங்கேயும் என்னப்பன்
வருவான் பாரு என்பதுதான் அந்த சவால்!!

என் திருமணம் யாருடன் என்பதை நான் நிச்சயப்பதைவிட
அவனுக்குத் தெரியும் எனக்கு உகந்தவர் யாரென்பது, அதனால்
அவனே எனக்குக் காட்டித்தருவான் என்றும், என் திருமணத்தில்
அவன் கண்டிப்பாய் இருப்பான் என்றும் நம்பினேன். அப்படியே
நடந்தது. அயித்தான் வீட்டுத் தெய்வம் முருகன் தான். என்
திருமணம் நடந்தது பழநியில்! என்னப்பன் எப்போதும் என்னுடன்
இருப்பதை உணர்ந்தேன்.

அயித்தானின் அண்ணனைப்பற்றி பலதடவை சொல்லியிருக்கிறேன்.
என் தந்தைக்கு நிகரான ஸ்தானத்தில் அவரை வைத்திருந்தேன்.
அப்படி ஒரு உத்தமர். அவரது பெயரும் சுப்ரமணியம். ஒரு பெண்ணுக்கு
புகுந்த வீட்டில் கிடைக்க வேண்டிய கதகதப்பான பாதுகாப்பை
ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து எனக்கு தந்துகொண்டிருந்தது
என்னப்பன் கந்தப்பன் என்றே நம்புகிறேன்.

ஆகஸ்ட் 30 நடந்த புதுமனைபுகுவிழா மிகச்சிறப்பாக நடந்தது.
என் அம்மம்மா மிகுந்த சந்தோஷப்பட்டார். உடல் நிலை
சரியில்லாத நிலையிலும் வந்திருந்தார். அப்பா,அம்மா,சித்தி
குடும்பம், மாமா குடும்பம், அயித்தானின் அண்ணி எல்லோரும்
வந்திருந்தனர். இங்கு இருக்கும் சில உறவினர்களும் வந்திருந்தனர்.
நல்லதொரு வீட்டை எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டியது உன்
வேலைதான் என வேலைப்பிடித்தவனிடம் வேண்டி இருந்தேன்.
அவனருளால் அப்படியே அமைந்தது.

தெய்வத்தால ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி
தரும்.ஆகையால் நீ தெய்வத்தையும் நம்பு, உன் முயற்சியையும்
விடாதே என்று அப்பா சொல்லிக்கொடுத்திருக்கிறார். இன்றளவும்
இவை இரண்டும் தான் என்னை வழி நடத்திக்கொண்டிருக்கிறது.பூக்களால் அலங்காரம்


படிக்கு பூஜை செய்து கிருஹப்ரவேசம்
பூஜை அறை


அம்மம்மா

 
பால் பொங்கியாச்சுசத்யநாராயண பூஜை

அப்பார்ட்மெண்டிற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. ஆனால்
எங்கள்வீட்டிற்கு பெயர் கல்யாண நிலையம். என் மாமனார்
பெயர் கல்யாணம், மாமியார் பெயர் கல்யாணி. இருவரின்
நினைவாக இந்தப் பெயரை செலக்ட் செய்தோம்.
புகைப்படங்கள் எடுத்தது ஆஷிஷ். கிருஹப்ரவேச நினைவாக
அதற்கு முதல்நாள் அம்ருதாவுக்கு மூக்கு குத்தும் படலம்
நடந்தது.

இன்னும் இரண்டு மாதத்தில் புதுவீட்டிற்கு போய்விடத்
திட்டம்.  எல்லாம் அவன்கையில் இருக்கிறது.20 comments:

இராகவன் நைஜிரியா said...

வாழ்க வளமுடன்.

என்னப்பன் முருகப் பெருமான் நினைத்தால் நடக்காததும் உண்டோ..

அவன் அருளால் எல்லா வளமும், நலமும் பெற ப்ராத்திக்கிறேன்.

துளசி கோபால் said...

புதுமனை புகும்விழா சிறப்பா நடந்தது அறிஞ்சு மகிழ்ச்சி அடைந்தோம்.

கல்யாணம் என்றாலே மங்களம் என்றுதான் பொருள். கல்யாண நிலையத்தில் மங்களம் பொங்கட்டும்.

எங்கள் அன்பான ஆசிகள்.

அம்மம்மாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

படங்கள் நல்லா இருக்குன்னு ஆஷிஷ்கிட்டே சொல்லுங்க.

பிள்ளைகளுக்கு எங்கள் அன்பு.

நட்புடன் ஜமால் said...

தெய்வத்தை நம்பு
முயற்சியை செய்

நல்ல விடயம் அக்ஸ்

வல்ல ஏகன் அல்லாஹ் உங்களுக்கு(ம்) மென்மேலும் அருள் புரியட்டும்

கல்யாண வீடு எல்லா சந்தோஷங்களையும் கொண்டதாக இருக்கட்டும்

புதுகைத் தென்றல் said...

என்னப்பன் முருகப் பெருமான் நினைத்தால் நடக்காததும் உண்டோ..//

வாங்க இராகவன்

அவனருள் இருந்தால் போதுமே. வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

கல்யாண நிலையத்தில் மங்களம் பொங்கட்டும்.//

நன்றி துளசிடீச்சர்,

ஆஷிஷ்கிட்ட சொல்லிட்டேன்.
வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜமால் மிக்க சந்தோஷம்

கோவை2தில்லி said...

வாழ்த்துக்கள். நானும் எல்லாவற்றிற்கும் பிள்ளையாரைத் தான் நம்புவேன். அவர் நல்லபடியாக நடத்திக் கொடுப்பார்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லை
அயித்தானுக்கு பிள்ளையார்தான். அதான் அம்மாம்பெரிய பிள்ளையார்பட்டி திருவீசர் போட்டோ வெச்சிருக்கேன்.

வருகைக்கு நன்றி

Covai Ravee said...

வாழ்த்துக்கள் உங்க முகத்தை காட்டவில்லையே... மேடம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான தலைப்பு..
:)
விழா ந்லலா நடந்தது அறிந்து மகிழ்ச்சி..
நானும் முருகனென்றால் பிரியமா இருப்பேன்.. பிள்ளையார் சிலைகளை சேமிப்பேன்.

அம்மாவோடு கார்த்திகை சோமவாரம் விரதமிருப்பேன்... கணவருக்கும் முருகனென்றால் பக்தி.. :)

கானா பிரபா said...

புதுமனை நிரம்பிய சந்தோஷங்களை மட்டுமே அளிக்கும் நிலையமாக இருக்க வாழ்த்துகின்றேன்.


"புதுகைத் தென்றல்" என்ற பெயரையும் மனைக்குப் பரிசீலிக்கலாமே , உங்க ஊரையும் பெருமைப்படுத்தியதாக இருக்கும்

புதுகைத் தென்றல் said...

வாங்க ரவி,

மும்முரமா பூஜை செய்துகிட்டு இருந்தப்போ மகனார் போட்டோ எடுத்திட்டாரு அதான். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்,
இங்கயும் அயித்தானுக்காக பிள்ளையார் கலெக்‌ஷன்ஸ் நடக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க பாஸ்

சரி ஆஷிஷ் பெருசாகி சம்பாரிச்சு வீடுகட்டும்போது என் பேரை வெச்சிடலாம்.

நன்றி பாஸ்

ஹுஸைனம்மா said...

எல்லாம் நலமே நடந்தது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

குடும்பத்தினர் எல்லாரும் வந்து கலந்துகிட்டதே ஒரு தனி மனநிறைவு தரும்.

அமைதிச்சாரல் said...

புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள் தென்றல். பால் பொங்குவதுபோல் சந்தோஷமும் பொங்கட்டும்...

வல்லிசிம்ஹன் said...

புது வீடும் , சொந்தங்களும் பார்க்கப் பார்க்க இனிமை தென்றல். அருள் பொங்க முருகன் திருப்புகழ் முழங்க,கல்யாண நிலையம் வளம் பெறட்டும்.

புதுகைத் தென்றல் said...

குடும்பத்தினர் எல்லாரும் வந்து கலந்துகிட்டதே ஒரு தனி மனநிறைவு தரும்.//
ஆமாம் நன்றி ஹுசைனம்மா

புதுகைத் தென்றல் said...

பால் பொங்குவதுபோல் சந்தோஷமும் பொங்கட்டும்...//

நன்றி அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

ஆசிர்வாதத்துக்கு நன்றி வல்லிம்மா