Sunday, September 05, 2010

அறிவுக்கண்ணை திறப்போருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களும் வந்தனங்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் பெரியோர்.
உடலும் உயிரும் தந்த பெற்றோருக்கு அடுத்து குருவை
வைத்து போற்றி வந்தார்கள். தெய்வத்திற்கு கூட குருவுக்கு
அடுத்த இடம் தான். எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
என்றும் சொல்வார்கள்.

ஆசிரியைப்பணிக்கு உண்டான சிறப்பு அத்தகையது.
அறிவுக்கண்ணை திறந்து பிள்ளையின் வளர்ச்சிக்கு
உதவும் மிகப்பெரிய கடமையைக் கொண்டதொரு
தன்னலமற்றப்பணி அது.



வீட்டை விட்டு முதன் முறையாக வெளியே வரும்
சின்னக்குழந்தை தனது ஆசிரியையில் தனது தாயைக்
காண்கிறான். ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையே
இருக்கும் பந்தம் உணர்வுப்பூர்வமாக உணரக்கூடிய ஒன்று.

தெரிந்தோ தெரியாமலோ இன்றைய காலக்கட்டத்தில்
ஆசிரியருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை சரியாக
இல்லை. ஆசிரியர் மாணவர் இடையே இருக்கும் உறவும்
நல்லதாக இல்லை. இதனாலேயே சரியானதொரு வளர்ச்சியை
பிள்ளை பெறத்தவறுவதாக நான் நினைக்கிறேன்.

பெற்றோர்களே என்ன நடந்தாலும் சரி தயவு செய்து
பிள்ளைகள் எதிரில் ஆசிரியர்களைப்பற்றி தவறாக
பேசாதீர்கள். ஏதும் பிரச்சனையிருந்தால் நேறாக
பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் பேசுங்கள். இது
என் பணிவான வேண்டுகோள்.

என்னை வழிநடத்திய நடத்திக்கொண்டிருக்கும்
என் ஆசிரியர்களுக்கும், என் பிள்ளைகளுக்கு
கிடைத்த, கிடைத்துகொண்டிருக்கும் மரியாதைக்குரிய
ஆசிரியர்களுக்கும் மற்றும் இந்த உலகமெல்லாம்
தன்னலமற்ற சேவையை செய்து கொண்டிருக்கும்
ஆசிரிய சமூகத்தினர் அனைவருக்கும் ஆசிரியர்
தின நல்வாழ்த்துக்கள்.




தனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதி தனது
கல்விப்பணியைச் செய்யும் ஆசிரியைக்கிடைப்பது
பிள்ளைகள் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம்.
அப்படி ஒரு அருமையான வரத்தை பிள்ளைகள்
அடைய ஆசிரிய சமுதாயம் அருள வேண்டுமெனம்
என்பது என் பிரார்த்தனை.

8 comments:

M.Mani said...

நான் வழிமொழிகிறேன்.
தங்கள் வீட்டுப்பிள்ளைகள்போல் கருதி வழிநடத்திய ஆசிரியப்பெருமக்களுக்கு வந்தனங்கள்.
மா.மணி

அன்புடன் அருணா said...

/பெற்றோர்களே என்ன நடந்தாலும் சரி தயவு செய்து
பிள்ளைகள் எதிரில் ஆசிரியர்களைப்பற்றி தவறாக
பேசாதீர்கள்/
மிகச் சரியான அறிவுரை.பூங்கொத்துப் பதிவு!

a said...

வழிமொழிகிறேன்.

Vidhya Chandrasekaran said...

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

ஆசிரியர் தினத்துக்காக போட்ட உங்கள் பதிவு அருமை. நீங்கள் சொல்லும் கருத்துக்களும் நூற்றுக்கு நூறு உண்மை.

ஹுஸைனம்மா said...

//பிள்ளைகள் எதிரில் ஆசிரியர்களைப்பற்றி தவறாக
பேசாதீர்கள்//

ம்ம்.. அதே போல, பிள்ளைகள் ஏதேனும் சொன்னாலும், கண்டிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வழிநடத்தும் அத்தனை ஆசிரியர்களுக்கும் குருக்களுக்கும் நன்

pudugaithendral said...

நன்றி மணி

நன்றி அருணா

நன்றி யோகேஷ்

நன்றி வித்யா

நன்றி கோவை2தில்லி

நன்றி ஹுசைனம்மா(சரியா சொன்னீங்க)

நன்றி வல்லிம்மா