Monday, September 20, 2010

DADUS JHAROKA

பிறந்த நாள் ரொம்ப நல்லதாவே இருந்துச்சு.
அயித்தான் ஒரு அழகான தோடு பரிசளிச்சிருந்தாரு.
பசங்க இருவரும் சேர்ந்து டைட்டன் ராகா கைக்கடிகாரம்
கொடுத்தாங்க. காலையில் எங்கப்பன் முருகனை தரிசிச்சேன்.
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக மாண்புமிகு ரமணி சாரும்,
அவங்க மனைவியும் (அதாங்க எங்க அப்பா, அம்மா :) )
இருந்தது சிறப்போ சிறப்பு.

இரவு விருந்து மட்டும் இந்த ஹோட்டலில் தான்
வேணும்னு சொல்லியிருந்தேன். ஹிமாயத்நகரில்
இருக்கும் DADU'S  JHAROKA தான் அந்த ஹோட்டல்.
வழக்கமான இட்லி, தோசை, போரடித்து விட
வித்தியாசமாக இந்த ராஜஸ்தானி ஹோட்டல்.
கம்பீரமான நுழைவு வாயில். சல்யூட்டெல்லாம்
சூப்பரா இருக்கு. அன்னைக்கு ஒரே ஒரு விஷயம்
மிஸ்ஸிங் அது, பி ப்பீ ந்னு ராஜஸ்தானி வாத்யம்
ஒன்னை வெச்சு ஊதிகிட்டே ஒரு ஆளு ரவுண்ட்
அடிச்சுகிட்டு இருப்பாரு.



நுழைவு வாயில்





இதுதான் பேரு



உள்ளே அலங்காரம் எல்லாம் ராஜஸ்தானி ஸ்டைல்ல
நல்லா இருக்கும்.
உள்ளே அலங்காரம்
இது மெனு கார்டோட அட்டை. சூப்பரா இருக்குல்ல.
நாங்க அன்னைக்கு ஆர்டர் செஞ்சது டொமடோ சூப்,
பனீர் டிக்கா, தால் bati, வெஜிடபிள் மக்கன் வாலா,
பட்டர் நான். ராஜஸ்தான் ஸ்பெஷல் மாவா, மால்புவா
இல்லைன்னு சொன்னதால டெசர்ட் வேணாம்னு
பெரிய மனது செஞ்சு விட்டுட்டேன். குலாப்ஜாமுன்
எத்தனை வாட்டி சாப்பிடறது!!



மெனுகார்ட்





நெய்யில் மிதக்கும் bati




ராஜஸ்தான் தாலுடன் அந்த உருண்டை போட்டு சாப்பிட வேண்டும். செம ருசி



தாலி மீல்ஸும் இருக்கிறது. அதில் எல்லா வகை
ராஜஸ்தான் உணவுகளும் அடக்கம். ராஜஸ்தானி கடி,
சூர்மா. விலை 395 ரூபாய். சில சமயம் அன்றைய ஸ்பெஷல் தாலி
295க்கும் இருக்கும்.
சாப்பாட்டுக்கு பிறகு கை கழுவுவதுதான் ஹைலட். வாஷ் பேசின்
எல்லாம் இருக்கு. ஃபிங்கர் பவுல் கேட்டால் கன்யாதானம் எஃபக்ட்டில்
இப்படி இருக்கும் :)
கன்யாதானம் போல் கை கழுவும் ஸ்டைல் :))

மொத்தத்தில் நல்ல ருசியான உணவுடன் ஆனந்தமாய்
முடிந்தது இந்த வருட பிறந்த நாள். சுவரொட்டியில் நம்ம
அபி அப்பா எனக்காக வாழ்த்து போட்டிருந்தாரு. அவருக்கு
நன்றி. எனது சென்ற வருடம் எப்படி இருந்தது அப்படின்னு
பதிவு போடும்படியும் ஆனா அதை தொடர் பதிவா ஆக்கிட
கூடாதுன்னு சர்வேசன் சொல்லியிருந்தாரு. ஆமா நான்
தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டா உடனே எல்லோரும்
பதிவு போட்டுட்டுத்தான் மறுவேலை பாக்கப்போறாங்க.

அதனால் உங்க ஆசையை அதி விரைவில் நிறைவேற்றி
வைக்கிறேன் சர்வேசன்.


24 comments:

ஆயில்யன் said...

ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் [வழக்கம்போல பெருமூச்தான்] நல்லா சாப்பிட்டீங்களா சிஸ்டரு :))

Prathap Kumar S. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...ஜமாய்ட்டேள் போங்கோ... :)

வெங்கட் நாகராஜ் said...

தமிழ்மணம் ஓட்டளிப்புப் பட்டையை மேலிருந்து கீழே அல்லது வேறு இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். உங்கள் பதிவுகளை படிக்க இயலவில்லை..... சரி பாருங்கள் ப்ளீஸ்.......

வெங்கட்.

ஸாதிகா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

நல்ல என் ஜாய்மெண்ட் தான்

இந்த சந்தோஷம் எப்பொழுதும் இருக்க வாழ்த்துகள்

Unknown said...

முதலில் உங்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. ஹிமாயத்நகரில் இப்ப தான் இந்த ஹோட்டல் உதயமாகியிருக்கா தென்றால்?ராஜஸ்தாணிஹோட்டல் பார்க்கவே ரிச்சா இருக்கு. வாயில் நுழையாத உணவுகள் பார்ப்பவர்கள் வாயில் நீர் ஊற வைக்கிறது.. அடுத்த மாசம் ஹைதை வருவேன் அப்ப போய் பார்க்கிறேன்

ஹுஸைனம்மா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இந்தக் கொண்டாட்டத்துலதான் இந்தப் பக்கமே வரலையா??

Pandian R said...

********
பசங்க இருவரும் சேர்ந்து டைட்டன் ராகா கைக்கடிகாரம்
கொடுத்தாங்க.
*******

சரி. அப்ப பழைய கடிகாரத்தை எங்களுக்கு பார்சல் பண்ணிடுங்கள். எங்களை விட்டு தனியே உணவைச் செமித்ததற்குத் தண்டனையாகட்டும்.

pudugaithendral said...

ரொம்ப நல்லா ஃபுல் கட்டு கட்டினேன் பாஸ் :)) வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி பிரதாப்,

நானாக கொண்டாடுவதில்லை பிள்ளைகளின் ஆசைக்கு மறுப்பு சொல்ல வழியும் இல்லையே. அவர்களின் சந்தோஷமே என் சந்தோஷமாச்சே!!

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

எனக்கு இந்த மாதிரி டெக்னிக்கல் மேட்டரெல்லாம் தெரியாது வெங்கட். இருந்தாலும் ட்ரையரேன்

pudugaithendral said...

நன்றி ஸாதிகா (அது முடிஞ்சு பத்து நாளாச்சு) :))

pudugaithendral said...

நன்றி ஜமால்

பெருநாள் நல்லதாக நிகழ்ந்திருக்கும்னு நினைக்கிறேன்

pudugaithendral said...

வாங்க ஃபாயிஷா,

இப்ப சமீபத்துல தான் இந்த ஹோட்டல் வந்திருக்கு போல. அடுத்த மாசம் வர்றீங்கன்னா ஒரு மெயிலை தட்டுங்க. மீட்டுவோம்

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இந்தக் கொண்டாட்டமட்டுமில்ல அதுக்கு முன்னாடி கிருஹப்ரவேசம் அதற்கு வந்த விருந்தினர்கள்னு ரொம்ப வேலை ஜாஸ்தியாகி உடம்பு ரிப்பேராகி கிடக்கு. மனசு எப்பவும் அடிச்சுகிட்டே இருந்தாலும் கணிணிகிட்ட வரமுடியாத அளவுக்கு டேமேஜ். இப்ப கொஞ்சமா ஓகே.

pudugaithendral said...

எங்களை விட்டு தனியே உணவைச் செமித்ததற்குத் தண்டனையாகட்டும்.//

பழசு என்னாத்துக்குங்க! உங்க வீட்டுல ஏதும் விஷேஷம்னா சொல்லுங்க நம்ம ஊர் வழக்கப்படி பெரிய புது கடிகாரத்தோட வந்து நின்னுடறேன். உணவை செமிக்கலை ஃபுல் கட்டு கட்டினோம் (அப்பாடி தெளிவா சொல்லி காதுல புகை வர வெச்சதுல தான் திருப்தியே) ))))

வருகைக்கு நன்றி

Anisha Yunus said...

வாவ். கலக்கலான பிறந்த நாள் போலவே. வாழ்த்துக்கள். பிள்ளைகளுக்கும் சாருக்கும் நீங்கள் நன்றிப்பரிசு எதுவும் தரலையா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Belated Birthday wishes akka... super post... super gifts thaan pola irukku... thanks for sharing the day's experience with us...

பாலராஜன்கீதா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மாதேவி said...

அருமையான விருந்துக் கொண்டாட்டம்.

Vidhya Chandrasekaran said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்..

ADHI VENKAT said...

பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் பதிவில் இரண்டு செகண்டில் எழுத்துகள் மறைகின்றன. பதிவின் ஓரத்தில் ஒரொரு எழுத்துகளாக வருகின்றன. அப்படி படித்து தான் கருத்துரை இடுகின்றேன். சரி செய்யவும்.

pudugaithendral said...

அனைவருக்கும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

அயித்தானுக்கு இப்பதான் வாழ்த்துச் சொன்னேன். அதுக்கு முன்னால் அயித்தான் பொண்டாட்டிக்குப் பொறந்த நாளா:)
மனம் நிறைந்த வாழ்த்துகள் தென்றல். உடல் நலம் பெற இறைவன் அருள் நிறையட்டும்.