சாமான்களை கண்ட இடத்தில் போட்டுவெப்பதை விட அதை நேர்த்தியா
அழகா எடுத்து வெச்சாலே ஒரு அழகு கிடைக்கும். அதே போல இருக்கும்
இடத்தை சம்யோசிதமா உபயோகிச்சு, சின்ன இடத்தையும் பெரிதாக
காட்டும் மாயாஜாலத்தை INTERIOR DECORATION மூலம் செய்யலாம்.
கப்போர்ட் செய்வதானால் கூட அதை எந்த இடத்தில் சரியான
லைட்டிங்க் விழுவது போல செஞ்சு வெச்ச அந்த இடமே அமர்க்களமா
இருக்கும். இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதுன்னு வெச்சுக்கலாம்.
அதனாலேயே சொந்த வீட்டை ஒரு நல்ல டெகரேட்டர் வெச்சு
வடிவமைக்கணும்னு ஆசை. இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை
செலவு செய்யும் சமாச்சாரம்.
அந்த எண்ணத்தில்தான் அவங்க கிட்ட அந்த வேலையைக் கொடுத்தேன்.
ஆகஸ்ட் 16ம் தேதியே பீம் போட அரம்பிச்சு ஆகஸ்ட்30 வயரெல்லாம்
தொங்க்கினு இருந்துச்சு. என் கிட்ட அவங்க சொன்னது செப்டம்பர்1
ஆம் தேதியிலேர்ந்து கிச்சன் வேலை ஆரம்பமாகிவிடும். அக்டோபர்
15க்குள் வீடு ரெடியாகிடும் என்பது திட்டம். கிரஹப்ரவேசம் முடிஞ்சு
அசதியானதுல கொஞ்சம் கண்டுக்காம இருந்திட்டேன். செப்டம்பர்
4 தேதி வாக்கில் வீட்டுக்குப்போய் பார்த்தா??!! வீடு அப்படியே இருக்கு.
எந்த ஒரு வேலையும் நடக்கலை. மெட்டீரியல்ஸ் வாங்க பணம்
வேணும்னு கேட்டிருந்தாங்கனு சொல்லி கொடுத்திருந்தோம்.
”லேபரர்ஸ் ஊருக்கு போயிருக்காங்க, வந்த உடன் வேலை ஆரம்பமாகும்னே!”
சொல்லிகிட்டு இருந்தாங்க. அந்த ஆளு ஊருக்குப்போனவன் வரவே இல்லை. :((
செப்டம்பர் 20 தேதி ஆகியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனக்கு
செம டென்ஷன். இவங்களை நம்பி அக்டோபர் கடைசியோட வீட்டைக்
காலி செய்வதா சொல்லியாச்சு. ஆரம்பிச்ச பிறகு வேற ஒருத்தர் கிட்ட
போகவும் முடியாது. பாதியில நின்ன வேலைன்னு தெரிஞ்சா புதுசா
வரும் ஆளு அதை லாபம் ஆக்கிக்க பாப்பான். தவிர பெருந்தொகை
கொடுத்தாச்சு. ”என்னங்க இப்படி ஆச்சு? ஒரு வேலையும் நடக்கலை!
அப்படின்னு கேக்க அவங்க டென்ஷன் ஆகிட்டாங்க. ”லேபரர் ஓடிப்போனா
நான் என்ன செய்ய??!!” அப்படின்னு சொல்ல நல்லா காய்ச்சிவிட்டோம்.
சரின்னு மரவேலையை ஆரம்பிச்சாங்க. கட கடன்னு சமையற்கட்டு,
மற்ற இடங்கள் ஆரம்பமாச்சு. அப்பவும் ஃபால்ஸ் சீலிங் ஆள் வரலை.:((
இண்டீரியர் டெகரேஷன்ல ஒரு வேலைக்குப்பின்னாடி ஒரு வேலைன்னு
தொடர்ச்சியா இருக்கணும். ஒரு வேலை முன்ன பின்ன ஆனாலும்
மத்த வேலை சரியா இருக்காது. உதாரணமா: ஃபால்ஸ் சீலிங் முடிச்சு,
உப்புத்தாள் வெச்சு தேப்பாங்க. அப்புறம் தான் லப்பம் பட்டி பாத்து
பெயிண்ட் அடிப்பாங்க. அப்புறம் அழகா லைட் வெக்க குடைஞ்சு
லைட் ஃபிட்டிங்.அப்புறம் எலக்ட்ரீஷியன் வந்து கனெக்ஷன் கொடுக்கணும்.
இதெல்லாம் நடக்காம மரவேலை ஆரம்பிச்சா!! மரவேலைகளின் மீது
பவுடர் தூள்கள் விழுந்து நாசமாகும். ஆனா எனக்கு இப்படித்தான்
நடந்துச்சு. மரவேலைகள் முடிக்க 10 நாள் இருக்கும்பொழுது
ஃபால்ஸ் சீலிங் வேலை செஞ்சாங்க. மரவேலைகளின் மீது
பேப்பர் போட்டு முடுங்கடா தம்பிகளான்னு!! பேப்பரைக் கொடுத்தும்
அதை அப்படியே போட்டுட்டு அவங்க பாட்டுக்க அவங்க வேலையை
செஞ்சுகிட்டு இருந்தாங்க.
ஃபால்ஸ் சீலிங் காரங்க வேலை முடிஞ்சு அது காய 1வாரமாவது
டைம் கொடுக்கணும். என் நேரம் வருண பகவான் ரொம்பவே
ஆனந்தமா ஆட்டம் போட்டுகிட்டு இருந்தாரு.அதனால வேற
லேட்டாகிடிச்சு.
கீழேயெல்லாம் பெயிண்ட். இந்த லட்சணத்துல தரையை பாலிஷ்
செய்யும் ஆளு மிஷினை வேற இடத்துக்கு எடுத்துகிட்டு போகணும்னு
உடனே வேலையை முடிக்கணும்னு சொல்ல அந்தக் கூத்தும்
நடந்துச்சு. அந்த பாலிஷ் தண்ணி மரவேலைகளின் மீது தெறிச்சு
அதை சுத்தம் செய்வதுன்னு அது ஒரு சோகக்கதை.
இதுக்கு நடுவுல தசராவுக்கு ஊருக்குப்போன ஆளுங்களும் திரும்ப
வரலை. மரவேலைக்காரங்களை எங்கயும் போகவிடாம எங்க
வீட்டுலேயே தங்க வெச்சு வேலை நடக்குது. அவங்க வேலை
நடக்கும் இடத்திலேயே சமைச்சு சாப்பிட்டுக்கிடு இருந்தாங்க.
அதனால அந்த வேலை மட்டும் சுறுசுறுப்பா போய்க்கினு இருந்துச்சு.
தசராவுக்கு புதுவீட்டுக்கு போகமுடியாதுன்னு புரிஞ்சதும்
வீட்டு சொந்தக்காரரிடம் 2 மாசம் எக்ஸ்டண்ட் செஞ்சுகிட்டோம்.
ஆனா வேலைக்காரங்க கிட்ட நவம்பர் 4 கடைசி தேதி. அதுக்குள்ள
எல்லோரும் வேலையை முடிச்சு வெளியே போனாத்தான்,
பில்டர் பெயிண்டிங், பாத்ரூம் ஃபிக்சிங், எல்லாம் செய்வாரு
அப்படின்னு சொன்னோம். பில்டர், இவங்களை வெளியில அனுப்பிட்டு
”எனக்கு 4 நாள் டைம் கொடுங்க நான் வீடு ரெடி தர்றேன்னு”
நம்பிக்கை வார்த்தை சொன்னாரு.
தினமும் நானும் அயித்தானும் புதுவீட்டுக்குப்போய் ஒரு விசிட்
அடிப்பதுன்னு வெச்சிருந்தோம். சில சமயம் நான் 11 மணிக்கு
கிளம்பிப்போய் மதியம் வரை இருந்து வேலை வாங்கிட்டு
வருவேன்.
நடுவுல இண்டீரியர் டெக்கரேட்டரோட பொண்ணுக்கு (இஞ்சினியரிங்
படிக்கற பொண்ணு) வைரல் ஃபீவர் வந்திருச்சுன்னு அவங்க
டென்ஷனாகி வீட்டை சரியா கவனிக்கலை. வேலை சரியா
நடக்கலையேன்னு எங்க கவலை. அவங்களே மெட்டீரியல்ஸும்
பாத்துகிட்டதனால பணம் கொடுக்கனும், பணம் கொடுக்கணும்
போன் போடுவாங்க. வேலை சரியா நடக்காம பணம் மட்டும்
கேக்கறாங்களேன்னு பயங்கர கோபம். அதுல கொஞ்சம் தகராறு.
அப்புறம் அவங்க பொண்ணுக்கு சரியானதும் கொஞ்சம் ரிலாக்ஸ்டானாங்க.
ஹேண்டில் வாங்குவது, விளக்குகள் வாங்குவதுன்னு ஹோல்ஸேல்
கடைக்கு அலைஞ்சு திரிஞ்சு வாங்கினேன். துணைக்கு இண்டீரியர்
டெக்கரேட்டர் அம்மாவும் வந்தாங்க. திரும்ப திரும்ப அவங்க கிட்ட
ஒரே ராமயணம் பாடிக்கிட்டு இருந்தோம். நவம்பர் 10ஆம் தேதிக்குள்ள
வீடு கொடுத்திருங்க. எங்களுக்குமத்த வேலையிருக்குன்னு கிளிப்பிள்ளைக்கு
சொல்ற மாதிரி சொல்லிகிட்டே இருந்தோம்.
”பணம் பணம்” அப்பப்பா இந்த வார்த்தையை கேட்டாலே பத்திக்கிட்டு
வருது இப்ப. அட்வான்ஸா பணம் கொடுத்தாத்தான் வேலை நடக்கும்.
ஏதோ கொஞ்சமா வாங்குவாங்களா? அதுவுமில்லை 75% சதவிகிதம்
போல வாங்கிக்கறாங்க. பணத்தைக் கொடுத்திட்டு பக் பக்குன்னு
உக்காந்திருக்கணும். வேலை நடக்கற வரைக்கும் நிச்சயமில்லாத
நிலையில அவ்வளவு பணம் கொடுக்கணும்னா கோவமாத்தான் வருது.
சிலருக்கு நான் அட்வான்ஸ் தரமாட்டேன்னு சொன்னா எங்க
வேலையை வாங்கிகிட்டு பணம் கொடுக்காம போயிடுவோமோன்னு
ஒரு நினைப்பு. நாங்க நம்பணும். ஆனா அவங்க நம்ப மாட்டாங்க.
என்ன மாதிரியான உலகமடா சாமின்னு நானும் அயித்தானும்
வெறுத்திட்டோம்.
அப்படி இப்படின்னு நவம்பர் 14 வீடு ரெடியானிச்சு.அதாவது மரவேலை,
ஃபால்ஸ் ஸீலிங் முடிஞ்சு அலங்கார விளக்குகள் வெச்சாச்சு.
மரவேலைகளுக்கு பாலிஷிங் வேலையும், கண்ணாடிக்கதவுகள்
வைக்க வேண்டியது பாக்கியிருந்துச்சு. 20ஆம் தேதி நண்பர்களுக்கு
விருந்து.
பார்ட்டி நடந்துச்சா??!!! அப்புறம் என்னாச்சு? அடுத்த பதிவுல.
22 comments:
ஹாஹா.. இப்போ சிரிப்பா இருந்தாலும் இங்க நாங்க கட்டும் போதும் இதே அஞ்சு மாட்டுப்பொண்ணு கதை தான்!!!! கஷ்ட காலம்!
வாங்க பொற்கொடி,
அதென்ன அஞ்சு மாட்டுப்பொண்ணு கதை??!!!
வருகைக்கு நன்றி
நல்ல அனுபவ புராணம்
மளமளனு எழுத்து நடை. அருமை. தொடர்ந்து அசத்துங்க.
You have a nice blog. (Following)
நன்றி ஜலீலா
முதல்வருகைக்கு நன்றி சித்ரா.
நன்றி
படிக்கிற எங்களுக்கும் டென்ஷனா இருக்குக்கா..
எனக்குத் தெரிஞ்ச வரை அஞ்சு மாட்டுப் பொண்ணு இருந்தும் வீட்டில ஒரு வேலை நடக்காதாம்,அவ செய்வான்னு ,இவ,இவ செய்வாள்னு அவள் னு கதை.எங்க மாமியார் முழுக்கதையும் சொல்லாமல் விட்டுட்டாங்களே.
பாவம்பா தென்றல் நல்லாவே சிரமப் பட்டு இருக்கீங்க. வெறும் ஒரு ரூமும் சுத்துச் சுவரும் கட்டவே ஆறு மாசம் எடுத்தாங்கப்பா நம்ம் ஊர்ல. ஒரு மாசம்னு ஆரம்பித்து.
எல்லாம் முடிந்த பிறகு கிடைக்கும் ஒரு நிம்மதி இருக்கே... அதற்காகவே இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டிதான் இருக்கு.... பகிர்வுக்கு நன்றி.
இதே போன்றதான அனுபவங்கள் பத்து வருடம் முன்னே எங்களுக்கும்:)! தலைப்பு ரொம்பப் பொருத்தம்.
தொடர் விறுவிறுப்பா போகுது. அடுத்த பகுதிப் படிக்க ஆவல்.
ஆஹா அப்படியா வித்யா,
வருகைக்கு ரொம்ப நன்றி
வாங்க வல்லிம்மா,
ஓ அப்படி ஒரு கதையா!! அப்பார்ட்மெண்டுக்கே இம்புட்டு கஷ்டம்னா தனி வீடு பத்தி நினைச்சு பாக்கவே பயம்மா இருக்கு.
வருகைக்கு நன்றிம்மா
ஆமாம் வெங்கட்,
கல்யாணம் செஞ்சு வெச்சு மகளை அனுப்பி வெச்சு கண்ணில் நீர் வரும் போது மனசு கொஞ்சம் நிறைஞ்சிருக்கும்
மூன்று பாகங்களுமே படித்தேன். ஓவர் பிரச்சினையா இருக்கும் போல இருக்கே.. இதுக்காகத்தான் நாங்கல்லாம் சொந்த வீடு பற்றி யோசிக்கறதேயில்ல.. ஹிஹி..
அப்புறம் ஃபிரெண்ட்ஸுக்கு தனியா பார்ட்டின்னு சொல்லிட்டு இந்த ஃபிரெண்டுக்கு ஒரு விபரம் கூட சொல்லாம முடிச்சுட்டீங்க போலயே.!! :-(
\\பார்ட்டி நடந்துச்சா??!!! அப்புறம் என்னாச்சு? அடுத்த பதிவுல.\\
இந்த கலவரத்திலும் பார்ட்டியா!!!...;))
யெஸ் பணம் பணம் ந்னு கேட்டு நிப்பாங்க ஆனா வேலை ஸ்லோ ஆகும்போது நமக்கு அதுவரை அவர்களுக்கும் நமக்கும் இருக்கு ம் நல்ல ப்ரண்ட்ஷிப் குறைய ஆரம்பிச்சிடும்.. :(
எல்லோருக்கும் அனுபவங்கள் இப்படித்தான். வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
வாங்க ஃப்ரெண்ட்,
அன்னைக்கு நடந்த பார்ட்டி இங்கே லோக்கலில் இருக்கும் ஃப்ரெண்ட்ஸ். நம்ம வலையுலக நட்புக்கள் எல்லோரையும் கூப்பிட்டு பதிவர் சந்திப்பு நடத்த திட்டம் இருக்கு. உங்களுக்கு மட்டும் அந்த தேக்சா கப்புல டீயும் கண்டிப்பா உண்டு :)))
வருகைக்கு நன்றி
இதோ அடுத்த பகுதி வந்துக்கினே இருக்கு கோவை2தில்லி
இந்த கலவரத்திலும் பார்ட்டியா!!!...;))//
யெஸ்ஸு :)))))
ஆமாம் கயல்,
மனசுல அது ஒரு உறுத்தலா இருக்கும்னு ஏனோ அவங்க நினைக்க மாட்டாங்க. இன்னொரு இடத்துல அவங்களுக்கு பேமெண்ட் தரலையாம். அதனால எங்களை போட்டு வாட்டிட்டாங்க. :(((
வருகைக்கு நன்றி
Post a Comment