Friday, December 17, 2010

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

இன்று வைகுண்ட ஏகாதசி. புதுகையில் இருந்த வரை
ராணிஸ்கூலுக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவில்
செல்வது வழக்கம். வீட்டில் கண்டிப்பாக விஷ்ணு சஹஸ்ர்நாமம்
படிப்போம். முடிந்ததும் கோவிலுக்கு செல்வோம். வரிசையில்
நின்று துளசி மாலையுடன் இறைவனைத் தரிசித்து
சொர்க்கவாசல் வழியாக வெளியே வருவதற்குள் மதியம்
ஆகிவிடும்.



பல சமயம் விரதம் மட்டும். அவ்வாவுடன் சேர்ந்து
பரமபதம் விளையாட்டு. ஒரே ஒரு முறை எதிர் வீட்டினருடன்
சேர்ந்து இரவு கண்விழித்தேன். எப்போதும் ரேடியோவில்
கேட்கும் இந்தப் பாடல் என் ஆல்டைம் ஃபேவரைட்.
பாடியது கானகந்தர்வனாச்சே!!!

SwamiAyyappan-Thir...


திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்குதிருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஉரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணாஇரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஇந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணாதேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயேகணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயேஅனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனிவருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


ஸ்ரீமன் நாராயணாஸ்ரீபதி ஜெகன்னாதாவருவாய்
திருமாலே - துணைதருவாய்
பெருமாளே.


இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கி
அருள் புரியட்டும்!!!!


10 comments:

Vidhya Chandrasekaran said...

வீட்லருந்து ஒரே பிரஷர். இன்னைக்கு விரதம் இருன்னு. ஒருபொழுது;)

Chitra said...

அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

ADHI VENKAT said...

இந்த பாடல் எனக்கும் பிடித்தவற்றில் ஒன்று. நல்ல பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

வைகுண்ட ஏகாதசிக்கு ஏற்ற பதிவு. பரமபதம் விளையாட ஆளைத் தேடணும்:)

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பாடல். பகிர்வுக்கு நன்றி சகோ.

pudugaithendral said...

வாங்க வித்யா,

எனக்கும் ஒரே பிரஷர்... விரதம் இருந்தா தொலைச்சிப்பிடுவேன்னு :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

அருமையான பாட்டை நீங்களும் ரசித்ததில் சந்தோஷம்

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

கானகந்தர்வனின் குரலில் நிறைய்ய பாடல்களைக் கேட்க தனியே ஒரு ப்ளாக்கை இருக்கே தெரியுமா???

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

இப்ப பசங்க அதையே ஸ்நேக் & லேடர்னு ஆடறாங்க. எங்க வீட்டு பசங்களும் ஆடுவாங்க. வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வெங்கட்,

உங்க பாடல்கள் வலைத்தளம் ஆரம்பமே அசத்தல்...

வருகைக்கு நன்றி