Wednesday, January 05, 2011
கெட்டது செய்தாலும் நல்லது செய்துவிட்டு போபவர்!!!!
ரொம்ப நாளாச்சு டூர் போயி. வண்டி வாங்கினதிலேர்ந்து லாங்க்க்க்....க்க்
டிரைவ் போகவே இல்லை. :)) விடிஞ்சா கல்யாணம் பிடிடா பாக்குவெத்தலை
ரேஞ்சுக்கு அடிதடியா காலையில் வண்டியைக்கொடுத்து கேஸுக்கு
மாத்தி, அடுத்த நாள் விடியக்காலமே கிளம்பியாச்சு. குளிர் வெட வெடக்குது.
ஜகிரா பாத் தாண்டியது பிதேரு முதல் கர்னாடக எல்லை. அப்புறம் ஆரம்பிக்குது மஹாராஷ்டிரா. அதாவது ஹைதையிலிருந்து 3 நேர பயணத்தில்மஹாராஷ்டிராவுக்குள் நுழைஞ்ச்சாச்சு. சாயந்திரம் 6 மணி வாக்கில் அந்தக் கோவிலுக்குள் நுழைந்தோம். வெளியே ஆர்ச்சுக்கிட்ட வரும்போதே பைக்கில் வந்த ஒரு ஆள், “சார் கோவிலுக்கா போறீங்க. எங்க கடையில தேங்காய் வாங்கிக்கங்கன்னு!!” சொல்லி கார்ட் கொடுத்திட்டு போனாரு.
சரி என்னதான் சொல்லுறாங்கன்னு போய்பாப்போமேன்னு வண்டியை
பார்க் செஞ்சிட்டு கடையில போய் நின்னா, “எதையும் தொட்டுடாதீங்கன்ன்னு”
கடைக்காரர் ரொம்ப உஷாரா என்னை பயமுறுத்தினாரு. எங்களுக்கும்
இந்தக் கோவிலைப்பத்தி தெரியுமப்பு!!ன்னு சொன்னேன். பண்டித்ஜீ
ஆனேகே பாத் பூஜாக்கே பாரேமே பதாயேங்கேன்னு சொன்னதுமே
உஷாரானேன். எனக்கு எந்த பரிகாரமும் செய்ய வேணாம். அப்படின்னு
சொன்னதும் அது இதுன்னு விளக்க ஆரம்பிச்சாங்க. “ஆணியே
.... வேணாம்னு” நான் அங்கேர்ந்து வந்துட்டேன். 500ருயாய்ல ஆரம்பிச்ச
பூஜைத்தட்டை 100ரூபாய்க்கு தர்றதா கத்திகிட்டே இருக்க நாங்க
காதுல வாங்காம நேரா கோவிலுக்குள் நுழைஞ்சோம்.
சரியா ஆரத்தி சமயம். கோவிலில் நுழைஞ்சோம். கொஞ்சம் கூட்டம்
இருந்தாலும் தரிசனம் செஞ்சோம். என்ன கோவில்னு குழப்பம்
வேணாம். அருள்மிகு சனீஸ்வரர் ஆட்சி புரியும் சனிசிங்கனாபூர் கோவில்
அது. இந்தக்கோவில்லுக்கு சுற்றுபுரத்தில் இருக்கும் வீடுகள் மற்றும்
கடைகளுக்கு கதவு கிடையாது. பூட்டு, சாவி கிடையாது.
சனி பரிகார பூஜை செய்து வைப்பதாக பண்டித்ஜீயை வரவழைத்து
அந்த கடைக்காரர் சொல்வதற்கு முன்னே கூகிளாண்டவரிடம்
அந்தக்கோவிலைபத்தி கேட்டு தெரிந்துவைத்திருந்தேன்.
அதாகப்பட்டது சனீஸ்வரர் பால பிரம்மச்சாரி.அதனால்
அவரின் சிலை இருக்கும் மேடை மேல் ஆண்கள் அதுவும்
ஈர உடையுடன் மட்டும்தான் செல்ல வேண்டும். பெண்கள்
கீழே இருந்து தரிசிக்கலாம். எண்ணெய் எல்லாம் நாமே நம்
கையால் அபிஷேகம் செய்து பூஜை செய்யலாம்.
குளித்து அனியவேண்டிய இந்தக்காவி வேஷ்டியை
தேவஸ்தானம் இலவசமாகவே தருகிறது.
சுயம்புவாகத் தோன்றிய கருப்புக்கல்தான் சனி பகவானின்
சொருபமாக பூஜிக்கப்படுகிறது. கோவில், கர்ப்பக்கிரஹம் ஏதுமில்லை.
திருட்டு பயமில்லாமல் எந்த நேரமும் சனிபகவான் தங்களை
காப்பதாக இந்த ஊர்மக்கள் நம்புகிறார்கள். மழையோ, வெய்யிலோ,
குளிரோ எதையும் பொருட்படுத்தாது எந்த ஒரு நிழலும் இல்லாமல்
சர்வவல்லமையுடன் சனீஸ்வரர் தன் பக்தர்களை காத்துக்கொண்டு
நிற்கிறார்.
சனிதேவரின் கதை, அவர் சிங்கனாபூருக்கு வந்தது எல்லாம்
இங்கே இருக்கிறது.
கதவுகள் இல்லாத வீட்டைப்பத்தி சொன்னதும் பிள்ளைகளுக்கு
ஆச்சரியம். எப்படிம்மா?ன்னு கேட்டுகிட்டே வந்தாங்க. இந்தக்கோவிலில்
ஷ்பெஷல் தரிசனம் அப்படி ஏதும் கிடையாது. கோவிலுக்கு
நன்கொடை கொடுக்கலாம். படிப்பு, ஏழைகளுக்கு சாப்பாடு என
நம்மால் முடிந்த சின்னத்தொகையும் கொடுக்கலாம். நல்லதொரு
ஏற்பாடு. பிரகாரத்தை சுத்திவரும்பொழுது கோவிலிலிருந்து
வெளியே வரும் வழியில் பாத்ரூம் இருக்கு. போனவர்கள்
எல்லாம் உடனடியாக பேஸ்தடித்த முகத்துடன் திரும்ப
வந்தார்கள். காரணம் ஏதும் ஏடாகூடமாக யோசிக்க வேணாம்.
சிங்கனாபூரில் கதவுகள் கிடையாது என்பது பாத்ரூம்களுக்குமாம்!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
கோவிலுக்கு அருகில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
அது சிங்கனாபூரிலுருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் யுனைட்டட்
ப்ருவரிஸ் கம்பெனியின் கழிவுகளைச் சுமந்து செல்கிறது.
புளித்துப்போன அந்த பார்லி நாற்றத்தை அந்த இடம் மொத்தம்
பரப்பிக்கொண்டு கோவிலில் புனிதத்தை கெடுக்கிறது. இதை
யாராவது சரிசெய்தால் நன்றாக இருக்கும்.
கோபமாக சனியனே என்று திட்டுவோம். இங்கே பலக்கடைகளுக்கு
சனீஸ்வரர் பெயர் இருந்தது. வீட்டுக்கு கூட சனிக்கிருபா என்று
பெயர் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.
சுடச்சுட வடாபாவும், தொண்டைக்கு இதமாக டீயும் குடித்து
கிளம்பியாச்சு...
தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
போனவருடம் போன போது டின், டின்னாக நல்லெண்ணெய் தோளில் சுமந்து பக்தர்கள் சிலைக்கு ஊற்றுவதை பார்த்தோம்.சிலைக்கு கீழே வடிதட்டு மாதிரி வைத்து அந்த எண்ணெயினை அப்புறப்படுத்துவார்கள். கதவு இல்லை என்பது ஒரு ஆச்சரியம் தான்.நானும் சில வீடுகளை பார்த்தேன்.
ஷிர்டியும், ஷிங்க்னாப்பூரும் போயிட்டு வந்தாச்சா.. நானும் இப்பத்தான் போயிட்டு வந்தேன் ஒரு மூணுமாசத்துக்கு முந்தி :-)))
வாங்க அமுதா,
பிரஹாரத்துக்கு வெளியில் கூட எண்ணெய் பிசு பிசுப்போட தான் இருக்கு. வருகைக்கு நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
புத்தாண்டை இப்படித்தான் கொண்டாடினோம்.
வருகைக்கு நன்றி
நல்ல பகிர்வு. ஷனிதேவ் கோவில் பற்றிய விவரங்கள் பகிர்வுக்கு நன்றி.
புது தகவல்கள்!
கோபமாக சனியனே என்று திட்டுவோம். இங்கே பலக்கடைகளுக்கு
சனீஸ்வரர் பெயர் இருந்தது. வீட்டுக்கு கூட சனிக்கிருபா என்று
பெயர் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.
.....புதிய தகவல்கள். நல்ல பகிர்வு.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பாத்ரூம் :)
இங்கயும் ஒரு சனிபாபா கோயில் இருக்கு ..அங்கயும் ஆண்கள் மட்டும் சிவப்பு ஈரத்துண்டோடு பூஜை செய்யலாம் பார்த்தேன்.. அவர்ப்ரம்மச்சாரியா ஓகோ சரி..:)
பகிர்விற்கு நன்றிக்கா. வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பார்ட்:)
சிங்கனாபூரில் கதவுகள் கிடையாது என்பது பாத்ரூம்களுக்குமாம்!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//
அட..:))
வித்யாசமான பயண அனுபவம்..
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி அருணா
நன்றி சித்ரா,
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
வாங்க முத்துலட்சுமி,
வடக்குலதான் சனீஸ்வரர் பிரம்மச்சாரி. :))
வருகைக்கு நன்றி
இதோ அடுத்த பதிவு வருது வித்யா
ஆமாம் ரொம்பவே வித்தியாசமான அனுபவங்கள் பயணங்களு, அனுபவமும்.
வருகைக்கு நன்றி
பாத்ரூம் கதவு........
ரொம்ப சுத்தம்! அதான் யாரும் பயன்படுத்தி இருக்க மாட்டாங்களே:-)))))
ப்ரம்மச்சாரியா...... அதானே., சனியனை எவ கட்டுவா?????????
வாங்க துளசி டீச்சர்,
ரொம்ப சுத்தம்! அதான் யாரும் பயன்படுத்தி இருக்க மாட்டாங்களே:-)))))//
சிலர் பயன்படுத்தினாங்க. ஆனாலும் அங்கே சுத்தமா இருந்துச்சாம்.
ப்ரம்மச்சாரியா...... அதானே., சனியனை எவ கட்டுவா?????????//
:)))))))))))
வருகைக்கு நன்றி
ஆகா.. பயணக்கட்டுரை. ஒரு வரி விடாம படிச்சாச்சு
ஆஹா வருகைக்கு நன்றி ஃபண்டூ,
பயணக்கட்டுரை இன்னமும் தொடருது
நல்ல பதிவு. அடுத்த மாதம் செல்ல இருக்கிறேன். அதற்காக இணையத்தில் துழாவிய போது கிடைத்தது. நன்றி,
அக்கா.,
நலமா...
நீண்ண்ண்ண்ண்ட நாட்களாகிவிட்டது.
செப்.011 இறுதியில் ஒரு பயணம் இருக்கு...பேஸ்த் அடிக்காம சமத்தா வரப்பாக்குறேன்...:)))
வாங்க அகநாழிகை,
தங்கள் பயணம் நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி
வாங்க கும்க்கி,
நலமா? ஆமாம் ரொம்ப நாளா உங்களை பாக்க முடியலை. நல்லா இருக்கீங்களா?? தங்கள் பயணமும் நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி
இன்னும் ரெண்டு நாள்ல அங்கதான்.. நான் இன்னிக்குத்தான் ப்ளாக் பக்கம் வரேன்.. :)
எஞ்சாய் வித்யா
Post a Comment