எங்கு பிறந்தார்? பெற்றோர் யார்? ஏதும் தெரியாது.
1854ஆம் வருடம் 19 வயதுச் சிறுவனாக ஷீரடியில் இருக்கும் (தற்போதும்
அந்த மரம் சமாதிக்கு பின்புறம் இருக்கிறது (குருஸ்தன்)) வேப்பமரத்தடியில்
வந்து அமர்ந்தார். இடையில் எங்கோ சென்றுவிட்டு
அதன்பிறகு 1858ல் திரும்ப ஷீரடிக்கு வந்தார். வெள்ளை நிறத்தில்
ஒரு நீண்ட அங்கி, ஒருலுங்கி, தலையில் வேடு கட்டுவது போல்
ஒரு துணி இதுதான் அவரது உடை.
மெல்ல மெல்ல அவரை ஒரு துறவியாக, அவரின் வார்த்தையில்
பார்வையில் கறையும் துன்பங்களால் இன்பத்தை அனுபவிக்கும்
நிலையை மக்கள் அடைந்தார்கள்
அதன் பிறகு அவருக்கும் அங்கிருக்கும் மக்களுக்கும் இடையே ஆன
பிணைப்பு சாய் சத்சரிதத்தில் இருக்கிறது.
இதுதான் அவரின் சமாதி இருக்கும் இடத்தின் கோபுரம்.
இதுதான் துவாரகமயி எனும் இடம். சமாதிக்கு வெளிப்புறத்தில்
இருக்கிறது. முதலில் வேப்பமரத்தடியில் அமர்ந்தவர் எப்போதும்
இங்கேதான் அமர்ந்திருப்பாராம்.
இந்த இடத்திலிருந்து வெளிவரும் புகை அவர் ஏற்றிவைத்த
அக்னியிலிருந்து வெளியாகிறது.
இதற்கு அருகில் ஸ்ரீ சாவடி எனும் இடம். இங்குதான்
சாயி பாபா தனது பிரார்த்தனைகளையும், தியானத்தையும்
மேற்கொள்வாராம்.
சமாதிக்கு அருகில் சாயி ம்யூசியம் இருக்கிறது. அவர்
உபயோகித்த பொருட்கள், காலணி, அவரது உடை ஆகியன
காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட
பல்லக்கு அவர் கடைசி வரை அதை உபயோக படுத்தவே இல்லையாம்.
அவர் உட்கார்ந்து குளித்த கல் என பல பொருட்கள் இருக்கிறது.
சாய் சத்சரிதம் போன்ற புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி,
குஜராத்தி, ஆகிய அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது.
ரயில்வே கவுண்டருக்கு பக்கத்திலேயே இந்த ஸ்டாலும் இருக்கிறது.
அங்கிருந்து புறப்பட்டாச்சு. நெஞ்சை விட்டு நீங்காத நல்ல தரிசனம்
கிடைத்த திருப்தி. போகும் வழியில் இதை பார்த்ததும் ஆஷிஷ்
அம்மா “ப்ரிஷியஸ் ஐடம்!! கண்டிப்பா போட்டோ எடுத்துக்கணும்னு”
சொல்லி எடுத்தாப்ல. பை பைய்யா அடிக்கி வெச்சிருப்பது
வெங்காயம். ஒரு பேக் 240 ரூபாயம். அதாவது கிலோ 24. :))
சங்கராந்திக்காகவா இல்லை பக்கத்தில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு
கொண்டு செல்கிறார்களா தெரியவில்லை.... வழி நெடுகும்
இப்படி கரும்பு கொண்டு சென்றார்கள்.
போன இடம் எங்கேப்பா??!!!
திங்கள்கிழமை சொல்றேன்ப்பா!!! :))
ஹேப்பி வீக் எண்ட்.
18 comments:
அந்தப்பக்கங்கள்ல வெங்காயமும், கரும்பும் அமோகமா விளையுதுப்பா.. நாங்க நாசிக் வழியா போனப்ப, அறுவடை சமயம். வயல்களிலேயே ஷெட்போட்டு மலைமலையா குவிச்சு வெச்சிருந்தாங்க.
வெங்காயபோட்டோவை பத்திரமா வெச்சுக்கோங்க. விலை இறங்கலைன்னா இதுமாதிரி போட்டோக்கள்லதான் பார்த்துக்கணும்.
என்னுடைய பயணப்பதிவும் இன்ன்னும் ட்ராப்ட்ல தூங்குது. முதல்போட்டோ ரொம்ப அழகாருக்கு. சுட்டுக்கவா :-))))))
இன்னும் நிறைய படம் போடுங்க நன்றி
வெங்காயம் ஒரு மூட்டை வாங்கினீர்களா இல்லையா அதை சொல்லுங்கப்பா.
கரும்பு ஜூஸ் மாடுக்கட்டி பிழியும் காட்சி அங்கேதானே..
வாங்க அமைதிச்சாரல்,
நல்லா சுட்டுக்கோங்க. கேள்வி என்னத்துக்கு?
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி சதீஷ்குமார்,
முந்தைய பதிவுல வீடியோவே இருக்கே
வெங்காயம் 10கிலோ தீர எனக்கு 2 மாசம் ஆகும். அதனால அயித்தான் “நோ”சொல்லிட்டார் அமுதா. :(
அங்கன தான் செக்குல சுத்தற மாதிரி கரும்பு பிழிவதும். அதை பாத்தேன். போட்டோ எடுக்கறதுக்குள்ள கார் பறந்திடிச்சி.
வருகைக்கு நன்றி
புகைப்படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு. வெங்காயம் கிலோ 24 தானா? இங்க 70 ல் தான் இருக்குது. பகிர்வுக்கு நன்றி.
ஷீரடிக்குப் போகணும் என்று மனதில் தோன்றியிருக்கிறது. உங்கள் பதிவு மேலும் நினைப்பைக் கூட்டுகிறது.
அங்கே ஒரு மரத்தடியில் பாதம் ஏதாவது இருக்குதா? அது நீங்க சொல்லும் வேப்பமரத்தடியா?
வாங்க கோவை2தில்லி,
இங்கயும் 57 கிலோ. அந்த வெங்காயம் சொத்தையா இருந்தாலும் இருக்கலாம்னு சித்தப்பா சொன்னாங்க.
வருகைக்கு நன்றி
வாங்க நானானி,
சமாதி, வேப்பமரத்தடி, துவாரகமயி எல்லா இடத்திலும் பாதம் போல மார்பிளில் செஞ்சு வெச்சிருக்காங்க.
வருகைக்கு நன்றி
3 வருடத்திற்கு முன்னர் புனேயில் இருந்த பொழுது ஷீரடி சென்ற நினைவுகளை கிளறியது பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
நீங்கள் புதுகையா ? நான் பக்கம் தான்... ஆலங்குடி.
வாங்க சிவகுமாரன்,
ஆமாம் நான் ப்ராபர் புதுகை. ஆலங்குடி பக்கம் தான்.
வருகைக்கு நன்றி
புகைப்படங்கள் மற்றும் விளக்கம் அருமை. எங்களுக்கும் சேர்த்துதானே வேண்டிக்கொன்டீர்கள்? :)
வாங்க வெங்கட் நாகராஜ்,
நம்ம வேண்டுதல் எப்பவுமே “லோகாம் ஸமஸ்தாம் சுகிநோபவந்து”தான். :))
வருகைக்கு நன்றி
ஒ!ஷிர்டி பார்த்தாச்சா. உங்கள் படங்களைக் கொஞ்சம் சுட்டுக்கறேன்பா. மகளுக்கு அனுப்பத்தான். நன்றி தென்றல். சீரடியின் நாதன் பாதங்களுக்குச் சரணங்கள்.
வாங்க வல்லிம்மா,
நல்லா அனுப்புங்க. வருகைக்கு நன்றி
ரொம்ப சுப்பெர் நாசிக் ப்த்தி இவ்வ்லொ நல்லா நான் குட அரிந்த்ததில்லை ... புகை படங்கல் யெல்லாம் ரொம்ப க்லாசிக்...
சித்தப்பா....ஆம் ஒர் முக்கிய அரிவிப்பு.....
கட்டு கட்டா ஆசை இருக்கிரவஙகலை இந்த பக்கம் தப்பி தவரி அனுப்பாதெ
கட்டு கட்டா ஆசை இருக்கிரவஙகலை இந்த பக்கம் தப்பி தவரி அனுப்பாதெ//
:)) ookies
Post a Comment