Friday, January 21, 2011

டச்சிங்!!... டச்சிங்!!!...டச்சிங்!!!...

அன்னையின் கதகதப்பை மறக்க முடியுமா!! தந்தையின் தோளில் ஆடியதை
மறக்க முடியுமா!! தாத்தாவின் கைபிடித்து நடந்தது!! இவை எல்லாவற்றிலும்
ஒரு ஒற்றுமை. அது தொடுதல் எனும் சுகம். பாசத்தோடு அம்மா வாரி
அணைத்துக்கொள்ளும் பொழுது அந்த சுகானுபவமே சரி.படகோட்டி படத்தில் அருமையான இந்தப் பாடல்.
”தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை”

என்ன அருமையான வரிகள்.நிஜமும் அதுதான். கைகளால் தொட்டு அனுபவிக்காமல் நம்மால்
கற்கக்கூட முடியாது. மாண்டிசோரி முறைக்கல்வியில் பாடங்கள்
ஐம்புலன்களைக் கொண்டு கற்பதாக இருந்தாலும் அதில் முதலில்
கைகளால் தொட்டு உணர்ந்து கற்பதாகவே இருக்கும்.
பள்ளிப்பாடங்களில் கூட செய்முறை மிக முக்கியம். அதனால்தான்
”சித்திரமும் கைப்பழக்கம்” என்று சும்மாவா சொன்னார்கள்.

அலுவலக மீட்டிங்குகளில் கைகொடுத்தல் என்பது முக்கியமான
நிகழ்வு. ஒருவர் கைகுலுக்கும் ஸ்டைலை வைத்தே அவர்
எப்படி பட்டவர் என அறிந்துக்கொள்ள முடியும்.

வடக்கே பெரியவர்களைக்கண்டால குனிந்து அவர்கள் காலைத்தொட்டு
வணங்கும் பழக்கம் இருக்கிறது. இறைவனிடம் கூட சரணாகதிதான்
பெஸ்ட். வேலை பிடித்தவனின் காலை பிடித்துக்கொண்டால்தான்
வேதனை இல்லாத மனம் கிடைக்கும். வளர்ந்த பெரியவர்கள் கூட
ஓடிப்போய் அம்மாவின் மடியில் படுக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
காரணம் அந்த கதகதப்பு.

திருமண பந்தத்தில் கூட கைபிடித்து தான் பல சடங்குகள்.
தலையில் ஜீரகம்+வெல்லம் கலந்த கலவையை வைப்பதுதான்
தெலுங்கு சம்பிரதாயத்தில் முக்கியம். தாலிகட்டுவதெல்லாம் கூட
இரண்டாம்பட்சம்தான்.

தோழிகளைக்கண்டால் கட்டிக்கொள்ளும் போது பெருமையாக இருக்கும்.
ஆண்களுக்கும் அப்படித்தான். “டேய் மச்சான்” என்று தோள் சேருவார்கள்.
இத்தனை நல்லது இருந்தும் பலருக்கு தொடுவதே பிடிக்காது.
பிள்ளைகள் வந்து கட்டிக்கொண்டால் கூட எட்ட நில்லு என்றே சொல்வார்கள்.

பிள்ளைகளுக்கு வயது ஆக ஆக அவர்களை கட்டிக்கொள்வதை ஏறக்கட்டி
விடுகிறோம். ”ஏழு கழுதை வயசாச்சு! இன்னும் என்ன கொஞ்சல்” என்று
எகிருவார்கள். உண்மையில் பதின்மவயதுக்குழந்தையை கட்டி அணைத்தால்
தனக்கு தன் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என நம்பிக்கை இருக்கும்.
சின்னதாக இருக்கும்பொழுது எந்தக் கையை பற்றிக்கொண்டு நடந்தார்கள்
அந்தக் கை தன்னோடு எப்போதும் இருப்பதை உணரும்பொழுது அவர்களின்
தன்னம்பிக்கை வளர்கிறது.


அனைத்து தொடுதலிலும் புனிதமானது கணவன் மனைவி உறவு.
ஆனால் ஏனோ பலருக்கு பகலில் அருகருகே அமர்வது கூட
பிடிக்காது. இந்த நிலையில் தொட்டுக்கொள்வதாவது?? யாரும்
தவறாக நினைத்துவிடுவார்களோ! வயது வந்த பிள்ளை இருக்கிறானே!
என ஏகப்பட்ட பயங்கள்தான் பெரும்பான்மை காரணம். இரவில் மட்டும்
நெருங்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். காரணம்
பெண்ணுக்குத் தேவை அன்பு, அனுசரணையுடன் நானிருக்கிறேன் என
தன் அருகாமையை எப்போதும் உணர்த்தும் கணவன். மற்றதெல்லாம்
கடைசிதான்.

வயதான காலத்தில் அன்புக்குரிய துணையோடு கைபிடித்து
உனக்கு நான் எனக்கு நீ என நடக்கும் பெரியவர்களை பார்க்கும்பொழுது
மனதிற்கு இதமாக இருக்கும் தானே!! அவர்கள் கைபிடித்து
நடக்கும் அழகே அழகு!!!!!

கடைசியாக உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் எப்போது கட்டியணைத்தீர்கள்!!!
நினைவுப்படுத்திப்பாருங்கள். உங்களின் தொடுதலுக்காக, அதில் பொங்கும்
அன்புக்காக அவர் ஏங்கிக்கொண்டிருக்கலாம். அந்த அன்புக்குரியவர் உங்கள்
வளர்ந்தக் குழந்தை, மனைவி/ கணவன், அம்மா,அப்பா, அக்கா, தங்கை
என பெரிய லிஸ்டே இருக்கலாம்!! அன்பெனும் செடிக்கு தொட்டணைப்பது
தண்ணீர் ஊற்றுவது போல!

வசூல்ராஜா எம்பீபீஎஸ் படத்தில் கமலின் “கட்டிப்பிடி வைத்தியம்” உண்மை.
ஆனால் அதை வெளியாருக்கு செய்வதை விட நம் வீட்டில் இருக்கும்
நம்மவர்களுக்கு செய்து அவர்களை குஷிப்படுத்தலாமே!!!
நம் வீட்டில் நம்முடன் இருப்பவர்களைப் பற்றி நாம் பெரிதாகக்
கவலைப்படுவதில்லை காரணம் ஆங்கிலத்தில் அழகாக
சொல்வது போல “WE ARE TAKING THEM FOR GRANTED"
இந்த ஒற்றைவரி சொல்லிவிடும் எல்லா விஷயங்களையும்.

தொட்டால் சிணுங்கி போல சுருங்கிவிடாமல் தொட்டால் மலரும்
பூக்களாய் அன்பை வளர்ப்போம். தயங்காமல் டச்சிங்.. டச்சிங்க..


29 comments:

சேட்டைக்காரன் said...

மனதைத் தொட்ட இடுகை என்று கூறலாம். :-)

புதுகைத் தென்றல் said...

வாங்க சேட்டைத் தம்பி

ஒரே டச்சிங்கா போச்சா!!

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

:)))

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

அமைதிச்சாரல் said...

கிட்டத்தட்ட இதேமாதிரியான விஷயத்தை கவிதையா எழுதியிருக்கேன் :-))

இங்கே

VAI. GOPALAKRISHNAN said...

உங்கள் பதிவு மிகவும் மனதுக்கு டச்சிங் ஆக இருந்தது. பதிவைப் படித்ததும் யாராவது யாரையாவது டச்சிங் செய்யப் போய் ஏதாவது விபரீதம் ஆக உங்கள் “டச்சிங்! டச்சிங்!! டச்சிங்!!! கே, காரணம் என்ற வீண் பழி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தொட்டால் பூ மலரும் .....
அருமையான பாடல் ”டச்சிங்” பதிவுக்கு மிகவும் பொருத்தமானதே

Chitra said...

நம் வீட்டில் நம்முடன் இருப்பவர்களைப் பற்றி நாம் பெரிதாகக்
கவலைப்படுவதில்லை காரணம் ஆங்கிலத்தில் அழகாக
சொல்வது போல “WE ARE TAKING THEM FOR GRANTED"
இந்த ஒற்றைவரி சொல்லிவிடும் எல்லா விஷயங்களையும்.

......உண்மை.....

...VERY TOUCHING POST. :-)

புதுகைத் தென்றல் said...

ஸ்மைலிக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் பூங்கொத்துக்கும் நன்றி அருணா

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

இதோ போய் படிக்கிறேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

பதிவைப் படித்ததும் யாராவது யாரையாவது டச்சிங் செய்யப் போய் ஏதாவது விபரீதம் ஆக உங்கள் “டச்சிங்! டச்சிங்!! டச்சிங்!!! கே, காரணம் என்ற வீண் பழி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.//

ஆஹா பயமுறுத்தறீங்களே!! :)
வருகைக்கு நன்றி ஐயா.

புதுகைத் தென்றல் said...

நன்றி சித்ரா

நட்புடன் ஜமால் said...

we are taking them for granted - yes very truly ...

a touching post :)

வல்லிசிம்ஹன் said...

தொடுதல் நல்லது.
நேற்று குட் டச்ச்சிங் பாட் டச்சிங் பற்றிப் படித்தேன். இன்னிக்கு நீங்க டச்சிங்கா பதிவு போட்டு இருக்கீங்க.:)
தொடும் பெற்றோஓருக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவே வளர்கிறார்கள். எங்கள் காலத்தில் அம்மா மடி, பாட்டி மடி எல்லாம் கிடைத்தது. இப்போது கொஞ்சம் மாறிவிட்டதோ.
கண்வன் மனைவியரிடையே கண்டிப்பாகத் தொடுதல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் நல்லறம் தான். ஒதுக்கிவைக்கப் பட்ட பெண் யாரையும் ஒண்ட விடமாட்டாள்.
நல்ல இடுகை தென்றல்.

புதுகைத் தென்றல் said...

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க!! நலமா ஜமால்?

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி

கோவை2தில்லி said...

Nice post.

புதுகைத் தென்றல் said...

thank u kovai2delhi

மதுரை சரவணன் said...

அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

டச்சிட்டீங்க... நெசம்தான் எல்லாம்.

ஆனா, டச்சிங் எல்லாம் வீட்டுல உள்ளவங்களோட மட்டும்தான்; வெளியே எசகுபிசகா டச்சிகிட்டா வரும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லைன்னு ஒரு டிஸ்கி போட்டிருந்தா ஸேஃபா இருந்திருக்கும் தென்றல்!! ;-)))))

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி மதுரை சரவணன்

புதுகைத் தென்றல் said...

ஆனா, டச்சிங் எல்லாம் வீட்டுல உள்ளவங்களோட மட்டும்தான்; வெளியே எசகுபிசகா டச்சிகிட்டா வரும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லைன்னு ஒரு டிஸ்கி போட்டிருந்தா ஸேஃபா இருந்திருக்கும் தென்றல்!! //

ஆமாம் ஹுசைனம்மா :))

kadar said...

டச்சிங் டச்சிங் நல்லா தான் இருக்கு. இதுனாலதான் காவலன் படத்துல அஸின் தோழி விஜயோட ஓடி போயிடுவாலோ?? அப்படினா புது தலைமுறை பசங்களும் பொன்னுங்களும் கட்டிபுடிச்சிகிறத பத்தி என்ன சொல்ல போரீங்க???

kadar said...

இது எங்களுக்காக எழுதினதா இல்லை உங்க வீட்டுக்காரருக்கு எழுதினதா? அவருக்குனா... அவரோட mail id ya குடுங்க. forward பண்ணிடறேன்.

புதுகைத் தென்றல் said...

அப்படினா புது தலைமுறை பசங்களும் பொன்னுங்களும் கட்டிபுடிச்சிகிறத பத்தி என்ன சொல்ல போரீங்க???//

என்ன மாட்டிவிடறதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்? ஏன் இந்த மர்டர் வெறி?!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

பொதுவுல எல்லோரும் யோசிக்க எழுதினேன் கதிர்.

வருகைக்கு நன்றி

சுரேகா.. said...

நல்ல கோணத்தில் சொல்லியிருக்கீங்க!

தொடுதலை இதற்குமுன் யாரும் இப்படி அலசியதில்லை!

கலக்குங்க!

புதுகைத் தென்றல் said...

நன்றி சுரேகா

மங்களூர் சிவா said...

சூப்பர்.
செம டச்சிங்!