ஆஹா நினைச்சு பாக்கயிலேயே எம்புட்டு சந்தோஷமா இருக்கு.
ஆடி ஆடி தாலாட்டும் ரயில்.... படிக்க புத்தகம்... பாட்டு
கேக்க மொபைல்.. ம்ம்ம் ஜாலி!!
நாம ரெண்டு பேரும் மட்டும் ஃபட்ஸ்டைம் தனியா ஊருக்கு
போறோம்லம்மான்னு எங்க அம்ருதம்மா கேட்டுகிட்டு இருக்காங்க.
நாங்க PDKT போயி (அதாங்க புதுகை போயி) குமார் அங்கிள்
கடையில தோசை, பரோட்டா எல்லாம் சாப்பிடப்போறோமே,
வரும்போது பல்லவன்ல வர்றோம் அண்ணான்னு
அண்ணனை வெறுப்பு ஏத்திகிட்டு இருக்காங்க அம்மா!!
அண்ணன் அம்மம்மாவுக்கு போனைப்போட்டு ரவா உருண்டை
பொடி, தீபாவளி லேகியம்!!, அம்மா செய்யும் இட்லி பொடி
எல்லாம் ஞாபகமா செஞ்சு எடுத்து வெச்சுக்கச் சொல்லிகிட்டு
இருக்காரு!!
நானும் எங்க அம்ருதம்மாவும் மட்டும் கூகூ சுகுசுகுன்னு
ஊருக்கு போறோம்! ஆஷிஷ் அண்ணாவுக்கு 9த் கிளாஸ்
என்பதால இப்ப வர முடியாது. மார்ச் மாசம் முழுப்பரிட்சை.
ஊருக்கு போயி அதாவது புதுகைக்கு போயி அம்மா
அப்பாவை அழைச்சுகிட்டு வரப்போறேன்.
போக 1 1/2 நாள் வர 1 1/2 நாள் , புதுகையில்
1 1/2நாள். இவ்வளவுதான் என் பயணம். ஸோ...
நான் இல்லைன்னு யாரும் வருத்த படாதீங்க. அடுத்த
திங்கள் முதல் வந்து கொடுமை படுத்துவேன்.. :)))
சென்னையில யாரையும் சந்திக்கலைன்னு எனக்கு நிறைய்ய
திட்டுக்கள்... போன் கால்கள் வரும்.. நட்புக்களே, உடன்பிறப்புக்களே
மன்னிச்சிடுங்க. ரொம்பவே ஷார்ட் ட்ரிப்பா போறேன்.இல்லாட்டியும்
சென்னையில 4 நாள் தங்கிட்டுதான் மறுவேலைன்னு ...
திட்டறது புரியுது. அது ஒரு மைண்ட் செட்டாவே ஆகிப்போச்சு. :))
அடுத்த வாட்டி (அது எப்பன்னு எனக்கே தெரியாது) கண்டிப்பா
மீட்டலாம்.
புதன் கிழமைதான் ட்ரையின் ஆனா அதுக்குள்ள உறவினர்
வருகை இருப்பதால இப்பவே டாடா சொலறேன்.
21 comments:
//அம்மா அப்பாவை அழைச்சுகிட்டு வரப்போறேன்//
போன முறை (கிரஹபிரவேசம்) தனியாதானே வந்துட்டுப் போனாங்க, இல்லையா? ஏன் இப்ப நீங்க போய் கூட்டிட்டு வரீங்க?
பயணம் இனிதே அமையட்டும். டாடா:)!
வாங்க ஹுசைனம்மா,
எப்பவும் அவங்க தனியாவே வர்றாங்களே போய் கூட்டிகிட்டு வந்தா நாமளும் புதுகையைப்பாத்தா மாதிரி ஆச்சு, அம்மா அப்பாவையும் அழைச்சுகிட்டு வந்தா மாதிரியும் ஆச்சுன்னு தான் பயணம்
:)) வருகைக்கு நன்றி
ஹே நம்ம கேஸா நீங்க..எனக்கும் ட்ரையின் பயணம் மிகவும் பிடிக்கும்.லாங்கஸ்ட் சென்னையிலிருந்து கெளஹாத்தி வரைக்கும் ட்ரையினில் போய்ட்டு வந்தும் இன்னும் ட்ரையின் பிடிக்குது.
வாங்க ராமலக்ஷ்மி,
உங்க ஊரில் குளிர் எப்படி இருக்கு? இங்க குறைஞ்சிருக்கு.
வருகைக்கு நன்றி
வாங்க அமுதா,
நானும் உங்க கேஸ்தான். ட்ரையின் எப்பவும் பிடிக்கும்.
வருகைக்கு நன்றி
//நாம ரெண்டு பேரும் மட்டும் ஃபட்ஸ்டைம் தனியா ஊருக்கு
போறோம்லம்மான்னு எங்க அம்ருதம்மா கேட்டுகிட்டு இருக்காங்க//
மேடம் ரொம்ப சந்தோஷத்துல இருக்காங்கன்னு சொல்லுங்க :-))
வாங்க அமைதிச்சாரல்,
ரொம்பவே சந்தோஷம் மேடத்துக்கு.:))
வருகைக்கு நன்றி
ஆஹா.............. ஜமாய் ராணி.
வரும்போதும் ரயிலா!!!!!!!!!!!!
ஜாலியாத்தான் இருக்கும் (கூட வரும் மற்ற பயணிகள் நல்லவங்களா அமையணும்)
வரும்போதும் ட்ரையின் தான். அதுல உள்ள சுகமே தனி..
வருகைக்கு நன்றி டீச்சர்.
ஹாய்.. டாட்டா.. ஸீயூ.! (ஹும் அப்புறமா ஹைதை வரவே முடியலைங்க)
நாங்க ஜூனுக்காக வெயிட்டிங்க்!ரயில் பயணத்துக்கு!
பயணம் இனியதாய் அமையட்டும்!
happy journey
Super.... Enjoy your visit!
வாங்க ஃப்ரெண்ட்,
அதுக்கென்ன லீவு போட்டுட்டு ஃபேமலியோட வாங்க... நாங்க இருக்கோமே!!
:)(கவலைப்படாதீங்க ஹஸ்பண்டாலஜி டிப்ஸ் எல்லாம் சொல்லித்தர மாட்டேன்)
வாங்க அருணா,
இது எதிர்பாராமல் வந்த ஒரு குஷி..
வருகைக்கு நன்றி
நன்றி சகோ
நன்றி ராஜி
நன்றி சித்ரா
//அண்ணனை வெறுப்பு ஏத்திகிட்டு இருக்காங்க அம்மா!!//
That is wbat siblings are for akka...ha ha ha....enjoyyyyyyyyyyyyyyyyyyyy.............கொஞ்சம் எங்களையும் ஞாபகம் வெச்சுகோங்க...:))
//அடுத்த திங்கள் முதல் வந்து கொடுமை படுத்துவேன்.. :)))//
அடடா... தலைப்பை பாத்து ஒரு மாசமாச்சும் எஸ்கேப் நெனச்சு தான் வந்தேன்...இப்படி ஏமாத்தினா எப்படி அக்கா...ஹா ஹா ஹா... happy journey...have fun...take care...:)
Post a Comment