Monday, March 14, 2011

சிம்பிளாக தக்காளித் தொக்கு

இது தக்காளி சீசன். 10 ரூபாய்க்கு 3 கிலோகூட கிடைக்கும்.
சூப்பாரா... வாயூறும்...அதே சமயம் சிம்பிளா தக்காளி
ஊறுகாய் செய்யலாமா!!! இது எதுக்கும் நல்ல காம்பினேஷன்.
சோற்றில் பிசைஞ்சுக்கலாம், சப்பாத்தி, தோசை, இட்லி, பூரிக்கு
நல்ல ஜோடி.




தக்காளி 1 கிலோ வாங்கி நல்லா கழுவி தண்ணி ஊத்தாம
குக்கரில் போட்டு 3 விசில் வரவெச்சு அடுப்பை அணைச்சிடணும்.
குக்கரில் ஸ்டீம் போனதும் திறந்து பார்த்தா தக்காளி வெந்தும்
தண்ணீரோட இருக்கும். அடுப்பை பத்த வெச்சு அதுல இந்தக்
குக்கரை வெச்சு தண்ணி சுண்டும் வரை ஸிம்மில் வெச்சு
கொதிக்க விடணும். அடி பிடிக்காக கிளறி விட்டுகிட்டே
இருக்கணும். தண்ணி நல்லா சுண்டினதும் தேவையான அளவு
காரம், உப்பு, மஞ்சள்தூள் போட்டு கலந்து விடணும். (விருப்ப
பட்டா 3 ஸ்பூன் கடுகை பொடி செஞ்சு அதுல தூவலாம், தக்காளி
ஆவக்காய் ஊறுகாய் ஆகிடும்)

ந.எ 1 பெரிய கரண்டி எடுத்து சூடு செஞ்சு அதுல பெருங்காயம்
சேர்த்து (கடுகு பொடிச்சு போடாட்டி) கடுகு 1 ஸ்பூன் போட்டு
வெடிக்க வெச்சு அதை கொதிக்கும் தக்காளிக் கலவையில்
கொட்டி இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு இறக்கினா
சுவையான தக்காளித் தொக்கு ரெடி....


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... தக்காளித் தொக்கு

15 comments:

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே கார சாரமா இருக்கே! தங்க்ஸ் கிட்ட சொல்லிட வேண்டியதுதான்! நன்றி சகோ.

சாந்தி மாரியப்பன் said...

பார்க்கவே செமையா இருக்குதே :-))

எல் கே said...

தக்காளித் தொக்கு , சாதத்தில் பிசைந்து சாப்பிட, டிபனுக்கு சைட் டிச்ஷாக எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்

pudugaithendral said...

வாங்க சகோ,

மீ த ஃபர்ஸ்டா வந்திருக்கீங்க. எஞ்சாய் மாடி. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

செஞ்சு பாருங்க. அப்புறம் தக்காளி என்ன விலை வித்தாலும் அடிக்கடி செய்வீங்க.:))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க எல்.கே,

ஆமாம் எல்லாத்துக்கும் நல்லா இருக்கும்

வருகைக்கு நன்றி

raji said...

ஹை!தக்காளித் தொக்கு!எனக்கு பிடிச்ச ஐட்டம்

pudugaithendral said...

அப்படியா!!

வருகைக்கு நன்றி ராஜி

Thenammai Lakshmanan said...

ஐ ஜொள்ளு ஊறுது.. இங்கே ஒரு கப் ப்ளீஸ்..

தக்காளி படத்தை பார்த்தவுடனே உங்க ப்லாக்குக்கு ஓடி வந்துட்டேன் தென்றல்..:)

ADHI VENKAT said...

ரயில் பிரயாணத்திற்கு எடுத்துச் செல்வேன். ஆனால் வாணலியிலேயே தான் வதக்குவேன். குக்கரில் வேகவைத்ததில்லை.
இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன்.

GEETHA ACHAL said...

ஆஹா..கலக்குறிங்க..தக்காளி தொக்கு பார்க்கும் பொழுது ஆசையினை கிளப்புதோ...

Vidhya Chandrasekaran said...

பார்க்கவே செம்மையா இருக்கு.

அம்மா குக்கர்ல வேக வைக்காம, நறுக்கி, கடாய்ல வதக்கி செய்வாங்க. நாலு கிலோ வாங்கிப் பண்ணாலும் ரெண்டே நாள்ல தீர்த்திருவோம்.

pudugaithendral said...

வாங்க தேனம்மை,

இங்கே ஒரு கப் ப்ளீஸ்..//

அனுப்பிட்டா போச்சு :))

தக்காளி படத்தை பார்த்தவுடனே உங்க ப்லாக்குக்கு ஓடி வந்துட்டேன் தென்றல்..//

ஆஹா வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

எனக்கும் வாணலியில் செஞ்சுத்தான் பழக்கம். சமீபத்துல வீட்டுக்கு வந்திருந்த அயித்தானோட அண்ணி இந்த மாதிரி செய்ய சொல்லிக்கொடுத்தாங்க. ஈசியா முடிஞ்சிருச்சு வேலை. இல்லாட்டி மிக்சியில் அடிச்சு அதை வாணலியில் கொதிக்க விட்டுன்னு செஞ்சுகிட்டு இருந்தேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கீதா ஆச்சல்,

செஞ்ச உடனே மகன் லன்சுக்கு சாப்பிட எடுத்துகிட்டாரு :))

வருகைக்கு நன்றி