Tuesday, March 29, 2011

யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே.....

காலையில் 7 மணிக்கெல்லாம் போனாத்தான் சரியா இருக்கும்னு
டிரைவர் சொன்னதால கரெக்டா 7 மணிக்கு காரில் ஏறிட்டோம்.
நாங்க தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து 2 கிமீ தொலைவில்
அந்த உலக அதிசயம். கிட்ட நெருங்க நெருங்க நெஞ்சுக்குள்
ஒரு குதூகலம். நாமே நாமான்னு எல்லோரும் கேட்டுகிட்டோம்.
1கிமீ தொலைவுலையே வாகனங்களை நிப்பாட்டிடறாங்க.
அங்கேயிருந்து தாஜ்மஹால் பார்க்க போகணும்னா பேட்டரி
ஆப்பரேட்டட் கார்கள், குதிரைவண்டிகள், ரிக்‌ஷா இப்படித்தான்
போகணும். மாசுகட்டுப்பாட்டுக்காக இந்த ஏற்பாடாம்.
பார்கிங் கிட்டத்தான் டிக்கெட். இந்திய பிரஜைகளுக்கு 25 ரூபாய்.
வெளிநாட்டினருக்கு 250 ரூபாய் அதுக்காக அவங்களுக்கு
ஒரு 1/2லிட்டர் மினரல் பாட்டிலும் காலுக்கு ஷூபோல துணியால
செஞ்சது 1 ஜோடியும் தர்றாங்க. நம்ம மக்களுக்கும் கொஞ்சமா
காசு கூட வாங்கி அது மாதிரி ஒண்ணு தரலாம்.

தாஜ்மஹால் உள்ள போகும்போது செருப்பை கழட்டி வெச்சிட்டு
வெறுங்காலோட நடக்கும்பொழுது வெயில் தாக்குது!! இந்த
வெயிலைத் தவிர்க்கத்தான் 7 மணிக்கே போகணும்னு டிரைவர்
சொன்னது. (திரும்பும் பொழுது 8.30 மணிக்கே கொஞ்சமா
சூடு ஏறுது)



தில்லி வந்தது முதல் விமானம், கார், ரயில், ரிக்‌ஷா
எல்லாம் ஏறியாச்சு. குறை எதுக்குன்னு ஜட்கா வண்டி பேசினோம்.
அப் அண்ட் டவுன் 200 ரூபாய்!! என் வண்டி நம்பர் 1, இதை
ஞாபகம் வெச்சுக்கோங்கன்னு ஜட்கா வண்டித்தம்பி சொல்ல,
அத விடுப்பா, உன் பேரு என்னன்னு சொல்லுன்னு!” கேட்டேன்,
முகத்துல சந்தோஷத்தோட அமர்னு சொன்னாரு. தாங்க்ஸ்னு
சொல்லிட்டு உலக அதிசயத்தை பாக்க நுழைஞ்சோம்.

சினிமாவிலும் புகைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருந்த
இந்த அழகை நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனும் நினைப்பே
சந்தோஷமாக இருந்தது. போட்டொக்கள் எடுத்து தள்ளினோம்.
எங்கள் நால்வரையும் யாராவது எங்கள் கேமிராவில் எடுத்தால்
பரவாயில்லைன்னு நினைச்சு கேக்க வாயெடுக்கும்முன்னரே
வெளிநாட்டுக்காரர் ஒருவர் நானெடுத்து தர்றேன்னு வந்தாரு.
சரின்னு போட்டோ எடுத்துகிட்டோம்.



நல்ல கூட்டம். அதிகமாக வெளிநாட்டினர் இருந்தனர்.
கட்டிடக்கலையை ரசிச்சுகிட்டே உள்ளே போய் பார்த்தோம்.



யமுனை நதியை மதுராவிலும் பார்க்கலை, இங்கயாவது
பார்த்துவிட வேண்டும்னு தாஜ்மஹலின் பின்புறம் போனோம்.
சுழிச்சு ஓடும்னு நினைச்சேன். இம்புட்டுதான். :(

கிளம்ப மனசே இல்லை. ஆனாலும் திரும்பி திரும்பி பாத்துகிட்டு
அங்கேயிருந்து கிளம்பினோம். மணி 8.30 ஆகிடிச்சு. வெயில்
லேசா காலை பதம் பாக்க ஆரம்பிச்சிருந்தது. அதனால சரி
ஹோட்டலுக்கு போய் ப்ரெக்ஃபாஸ் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்து தில்லி கிளம்பவேண்டும். அன்னைக்குத்தான் ஹோலிகா
தகனம் வேற. எம்புட்டு சீக்கிரம் முடியுமோ அம்புட்டு சீக்கிரம்
தில்லி போய் சேர்ந்திடணும் தவிர அயித்தானுக்கும் தோள்பட்டை
வலி அதிகமா இருந்தது. மருந்து போட்டு, ரெய்கி செஞ்சு
கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தாரு அயித்தான். அதற்கு அப்புறம்
கிளம்பினோம். அதனால வேற எங்கயும் போகலை.

நாங்க தங்கியிருந்த ஹோட்டலின் டைனிங் ஏரியாவைப்பத்தி
கண்டிப்பா சொல்லணும். ஹோட்டல் புஷ்ப் வில்லா அப்படிங்கற
ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். இங்கே ரெஸ்டாரண்ட்ல
ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிட்டு கிட்டு இருக்கும் பொழுது தாஜ்மஹலின்
மேல் கோபுரம் தெரிஞ்சிச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா
தெரியாலை!! என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சு கிட்டு இருக்கும்பொழுது,
அம்ருதா அம்மா கால்ல வைப்ரேஷன் ஆகுது!!ன்னு சொல்ல
கவனமா பாத்தா ரெஸ்டாரண்ட் சுத்துது!!! மெர்ரிகோரவுண்டாம்.


ரொம்ப வேகமா இல்லாட்டியும் மெள்ள சாப்பாட்டு மேஜை
சுத்துது. நல்லா இருந்தது அந்த அனுபவம். அதுவும் வேர்ல்ட்கப்
ஜுரம் அந்த ஹோட்டலில் எல்லா இடத்திலும் தெரிஞ்சது.
அந்த தீமில்தான் ரெஸ்டாரண்டில் போட்டோக்கள் வெச்சிருந்தாங்க.

ஃபதேபூர்சிக்ரில்லாம் போகலை. 11மணிக்கு ஹோட்டலிலிருந்து
கிளம்பினோம். மதுராவில் பேடா பிரசித்தம். ஆக்ராவில் peta.
அதுவும் அதெற்கென ஷ்பெஷலாக ஒரு கடை (எல்லா இடத்திலும்
கிடைக்குதுன்னாலும் இங்கே தான் பெஸ்டாம்)


அங்கூரி, கேசரி, ப்ளைன்னு நிறைய்ய வெரைட்டி இருக்கு.
கிலோ 60 எங்க ஊர்ல டபுள் ரேட். நண்பர்களுக்காக வாங்கினோம்.
இனிப்பு அதிகம் சாப்பிடாத அயித்தானுக்கும் பிடிச்சிருந்தது.


இந்த தாபாவுல சாப்பாடு நல்லா இருக்கும்னு நம்ம பீமசேனர் சொல்ல
சரின்னு சாப்பிட போணோம். கொஞ்சம் ருசியாவே இருந்துச்சு. பணம்
கொடுக்க பில்லைப் பாத்தா செம ஷாக். நாங்க நாலு பேரும் சாப்பிட்ட
பணமும் ஒண்ணு பீமசேனர் சாப்பிட்ட பணமும் ஒண்ணு. என்னய்யான்னு?
கேட்ட கொஞ்சமே கொஞ்சம் பாகற்காய் கறி நல்லா இருக்குன்னு போடச்சொன்னேன்,
அதுக்கு ஒரு ப்ளேட் சார்ஜ் செஞ்சிட்டான்னு சொன்னார். பில்லை வாங்கி
செக் செஞ்சேன். 150 ரூபாய் எக்ஸ்ட்ராவா போட்டிருந்தக் கடைக்காரரை
உண்டு இல்லைன்னு செஞ்சேன். நியாயமா காசு சம்பாரி, அப்படின்னு
மிரட்டினதும் 150 ரூபாயை திரும்ப கொடுத்தார்.

அதற்கப்புறம் நம்ம பீமசேனர் அதிகமா வாயைத் தொறக்கலை. :))
ஒரே ஒரு கமெண்ட் மட்டும் அடிச்சார்.,” மேடம் திக்தேதோ என் ஆர் ஐ,
மூ கோலே தோ லக்தே இந்தியன் நாரி!!” ( வாயைத் திறக்காத
வரைக்கும் வெளிநாட்டுக்காரங்க மாதிரி இருக்கீங்க. வாயைத் திறந்த
நம்ம இந்தியப் பெண்ணா இருக்கீங்க) :)) எப்ப வாயைத் திறக்கணுமோ
அப்பத்தான் திறப்பேன்னு!! பதில் கொடுத்ததும் மனுஷன் சுப் சாப்!!

4 மணி வாக்கில் தில்லி (குர்காவ்) வந்து சேர்ந்தோம். அடுத்த நாள்
கொஞ்சம் டென்ஷன். எஸ்ஸு அன்னைக்குத்தான் ஹோலி! நாங்க
ஊர் திரும்பும் நாளும்!!!
என்ன நடந்துச்சு அடுத்த பதிவுல!!


12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மேடம் திக்தேதோ என் ஆர் ஐ,
மூ கோலே தோ லக்தே இந்தியன் நாரி!!” //ஹஹாஹா..

சாந்தி மாரியப்பன் said...

அழகான தாஜ்மஹால்.. கிளம்பறதுக்கு மனசே வந்திருக்காதே :-))

காற்றில் எந்தன் கீதம் said...

தாஜ்மஹல பார்த்துட்டு வரும்போது திரும்பி பார்த்தா திரும்பியும் ஒரு முறை வருவோம் அப்பிடின்னு நம்பிக்கை இருப்பதாக என் கசின் சொன்னதால நான் ஒரு பத்து தரம் திரும்பி பார்த்தேன் :) நீங்களும் திரும்ப ஒரு தரம் சீக்கிரமே போவீங்க பாருங்களேன்

pudugaithendral said...

வாங்க கயல்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அங்கயே இருந்திடலாமான்னு தோணிச்சு. வர மனசே இல்லை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

ஏதோ கோவிலுக்கு சொல்வது போல “புனர்தர்ஷன ப்ராப்திரஸ்துன்னு” பலமுறை சொல்லிட்டுத்தான் வந்தோம் :))
நீங்களும் திரும்ப ஒரு தரம் சீக்கிரமே போவீங்க பாருங்களேன்
நன்றி :)


வருகைக்கு நன்றி

Chitra said...

அதற்கப்புறம் நம்ம பீமசேனர் அதிகமா வாயைத் தொறக்கலை. :))
ஒரே ஒரு கமெண்ட் மட்டும் அடிச்சார்.,” மேடம் திக்தேதோ என் ஆர் ஐ,
மூ கோலே தோ லக்தே இந்தியன் நாரி!!” ( வாயைத் திறக்காத
வரைக்கும் வெளிநாட்டுக்காரங்க மாதிரி இருக்கீங்க. வாயைத் திறந்த
நம்ம இந்தியப் பெண்ணா இருக்கீங்க) :)) எப்ப வாயைத் திறக்கணுமோ
அப்பத்தான் திறப்பேன்னு!! பதில் கொடுத்ததும் மனுஷன் சுப் சாப்!!


...... Super Punch!!! :-)

ஹுஸைனம்மா said...

ம்... பொறாமையா இருக்கு... நீங்க ஊர்சுத்துறதைப் பாத்து இல்ல.. எப்படி இப்படி வேகமா அடுத்தடுத்து போஸ்ட் போடுறீங்க? கையோட லேப்டாபையும் எடுத்டுட்டுப் போய்இருந்தீங்களா?

\\மேடம் திக்தேதோ என் ஆர் ஐ,
மூ கோலே தோ லக்தே இந்தியன் நாரி!!” //

எம்பையன் ஒரு டயலாக் சொல்லுவான், “நான் பாக்க்கத்தான் ஹைகிளாஸ்; உள்ளே பக்கா லோகிளாஸ்” அது ஞாபகம் வருது.. அய்ய உங்களைச் சொல்லல...

என்னவர் ரொம்ப வருஷமா என்னை யுரோப் டூருக்கு கூப்பிட்டுட்டுருக்கார். ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன் “இந்தியாவை முதல்ல சுத்திப்பாக்காம எங்கயும் வரமாட்டேன்”னு. அவர் கல்யாணத்துக்கு முன்னாடி வட இந்தியா முழுக்க வேலை பாத்துட்டார். அதோட லீவு, இன்னபிற காரணங்களால நேரம் கூடிவரல. இன்ஷா அல்லாஹ்.. அப்பப்ப இப்படி யாராவது சுற்றுலா பதிவு போட்டு, அவருக்கு அர்ச்சனை கொடுக்கச் செய்றீங்க.. :-))))

pudugaithendral said...

வாங்க சித்ரா,

எல்லோருக்கும் இந்த லைன் தான் ரொம்ப பிடிச்சிருக்கு போல :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

உங்க பையர் கிட்ட சேம் ப்ளட் சொல்லிடுங்க.

லேப்டாப்பெல்லாம் எடுத்துகிட்டு போகலை ஹுசைனம்மா. ஊருக்கு போயிட்டு வந்து நிதானமாத்தான் ஆரம்பிச்சேன்.

//அப்பப்ப இப்படி யாராவது சுற்றுலா பதிவு போட்டு, அவருக்கு அர்ச்சனை கொடுக்கச் செய்றீங்க.. :-))))//

ஆஹா......

CS. Mohan Kumar said...

ஆஹா அருமை. நாங்களும் டில்லி செல்ல திட்டமிட்டு இதுவரை முடியலை. அடுத்த வருடம் அக்டோபரில் போக நினைக்கிறேன். பார்க்கலாம்

pudugaithendral said...

நவம்பர்,டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி தான் பெஸ்ட் மாதம் மோகன்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்