Wednesday, March 23, 2011

அம்மாடி!!!!!! எம்மாம் பெரிய இடம்!!!

இந்த இடத்துக்கு போகவேணாம்னு திட்டம் போட்டிருந்தேன்.
விதி வலியது :)) பதிவர் சந்திப்பு நடக்க அந்த இடத்தை தாண்டிதான்
போகணும்னு சொன்னதும் அப்படியே அந்த இடத்தையும் பாத்திடலாம்னு
அயித்தான் சொன்னார்.

உள்ளே மொபைல்,ஹேண்ட்பேக்குகள் எதுவும் அனுமதி கிடையாது.
நல்லா செக்யூரிட்டி வெச்சு செக்கிங் செஞ்சுதான் அனுப்புறாக. அதுவும்
ஆண்கள் வெளியே வர லேட்டாகும்!! ஜான் பிள்ளைன்னாலும் ஆண்பிள்ளை
என்பதை இங்கே கண்கூடா பாக்கலாம். குட்டியா இருந்தாலும்
ஆண்களின் வரிசையில் இருந்துதான் வரவேண்டும். பெல்ட், ஷூ
எல்லாம் கழட்டி செக்கிங் நடக்குது! ஆஷிஷ் அடித்த கமெண்ட்,
“நல்லவேளை! பேண்டை கழட்டுங்கன்னு சொல்லாம விட்டாங்களே!!:(
லாக்கர் வசதி இருக்கு. அங்கே வெச்சிட்டு திரும்ப வந்து எடுத்துக்கலாம்.
கொடுப்பது ஒரு இடம்னா அதுக்கு பின்னாடி திரும்ப பெறும் படி
கூட்டத்தை தவிர்க்க வரிசை, எந்த நம்பர் டோக்கன் எந்த கவுண்டர்
என எல்லாம் பக்கா ப்ளான் படி நடக்குது அங்கே.


நீங்க இங்கபோய் பாக்கலாம்.


பெர்முடாஸ், தோள் தெரியும் உடைகள், ஷார்ட் ஸ்கர்ட்ஸ் அனுமதி
இல்லை. இவற்றிற்கு மேல் சுத்திக்கொள்ள துணிகள் 20ரூபாய்க்கு
வாடகைக்கு தருகிறார்கள். 7மணியோடு சரி. திங்கள்கிழமை
விடுமுறை. நாங்கள் போனது அந்தி சாயும் மாலை.

பாதுகாப்பு தேவைதான். இந்த ஷூ,செருப்புக்களை வெளியவே
போட வெச்சிட்டா கொஞ்சம் செக்கிங் வேலை குறையுமில்ல.
அப்படி எங்கங்க போனோம்? அக்‌ஷர்தாம் லக்‌ஷ்மி நாராயண
கோவில். பிரம்மாண்டமான கோவில். கேமிரா அனுமதி
கிடையாது என்பதால் கண்களால் படம் பிடிச்சுகிட்டோம்.
அளவான மின்னொளியில் ஜொலிக்கும் அக்‌ஷர்தாமை அந்த நேரத்தில்
பார்ப்பதுதான் சரி என எனக்குப் படுகிறது. அக்‌ஷர்தாமுக்கு
அருகிலேயே மெட்ரோ ஷ்டேஷன் இருக்கிறது.

ஒருவழியா செக்கிங் முடிச்சு கோவில் உள்ள நுழைஞ்சா
பிரம்மாண்டமான தோட்டத்திற்கு நடுவே இருக்கு கோவில்.
சுத்தம்.. சுத்தம்.. அப்படி ஒரு சுத்தம்!! கோவில் ப்ரகாரம்
வரைக்கும் செருப்போட போகலாம். செருப்பு வைக்க
தனி இடம். ஷீரடி மாதிரி இங்கேயும் சாக்கு பைகளில்
கட்டி தொங்க விட்டுடறாங்க. கண்ட இடத்துல செருப்புக்கள்
இறைஞ்சு கிடக்கும்னு நினைச்சேன், அழகா அதுக்குன்னு
தனி இடம் இருக்கும்மான்னு ஆஷிஷ் சொன்னாப்ல.
ஆனா அங்கயும் ஒரு இக்... பொதுவா பல ஆண்கள் ஷூவோட
தான் வெளியவாச சுத்துவோம்னு கங்கணம் கட்டிகிட்டு
இருப்பாங்க. ஆனா அவங்ககிட்ட இருக்கும் ஒரே கெட்ட குணம்
ஒரே சாக்ஸை3 நாளைக்கும் போடுவது.ஷூ கழட்டிட்டு
சாக்ஸை கழட்ட/திரும்ப போட சோம்பேறித்தனம். அதனால
அந்த சாக்ஸோடவே சுத்துவாங்க பாருங்க. அந்த நாத்தம் :(
இது கோவில் உள்ளே ஏத்திவெச்சிருக்கும் ஊதுபத்தியையும்
தாண்டி ”மணக்குது”. சாக்சை கழட்டி வையுங்கன்னு தனியா
யாராவது உத்தரவு போட்டாதான் இந்த நாத்தம் போகும்.
(நம் மக்களுக்கு அடுத்தவங்க பத்தி கவலையே கிடையாது)

உள்ளே ஸ்வாமி நாராயண் அவர்களின் சிலை இருக்கு. ப்ரகாரம்
மொத்தமும் நுண்ணிய வேலைப்பாடுகள். அதுவும் மேலே
சீலிங்கில் விதம் விதமாய அழகா செஞ்சு வெச்சிருக்காங்க.
வெளிப்ரகாரத்தில் சுத்தி யானைகளா இருக்கு. கிட்டத்தட்ட 48 வகை பிள்ளையார்
செதுக்கி வெச்சிருக்காங்க. இப்படி எத்தனையோ பிரம்மாண்டங்கள்
இருக்கு. சுவாமி நாராயண் எனும் குருவுக்காககட்டப்பட்ட இடம்.
5 வருஷமாச்சாம் இந்தக்கோவிலை கட்டி முடிக்க.
ம்யூசிக் ஃபவுண்டைன் எல்லாம் பாக்கவில்லை. மணி 6.55.
7 மணிக்கு வர்றேன்னு கயல்விழி முத்துலட்சுமிகிட்ட சொல்லிருந்தேன்.
அவங்க வீட்டுலதான் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.

சனி, ஞாயிறு ஹோலி என்பதால் யாரும் வெளியே வரும்
உத்தேசமில்லை. பிரச்சனையாகும் என்பதால அதிகம் பேர்
வரமுடியாது என்று புதன் கிழமை இரவு கயல்விழி வீட்டில்
சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கயல்விழி, நான்,
விக்னேஷ்வரி, சகோ வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி
கனாக்காதலன் எல்லோரும் சந்திச்சோம். கோவை2தில்லி உடல் நிலை
சரியில்லாத நிலையிலும் வந்தது நெகிழ்வா இருந்துச்சு.
விக்னேஷ்வர் பட்டர்பனீர் மசாலா செஞ்சு கொண்டுவந்திருந்தாங்க.
கயல் இட்லி,தக்காளி ரைஸ், தயிர் சோறு, கீர், தேங்காய்ச் சட்னி,
சாம்பார் எல்லாம் செஞ்சு வெச்சிருந்தாங்க. வந்தார்கள்
சென்றார்கள் மாதிரி போனோம் பேசிகிட்டே டின்னர் சாப்பிட்டோம்,
கிளம்பிட்டோம்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசலாம்னா எங்க டிரைவர்
ஒரு நொய்நொய் பிச்சையாய் வந்து வாச்சிருந்தாரு. ஹமே
தேர் ஹோரஹி ஹை! போன் போட்டு கிளம்ப வெச்சிட்டாரு.
கிளம்புவதற்கு முன்னாடி கயல்விழி வீட்டு ஊஞ்சலையும்
திண்ணையையும் பாத்திட்டு கிளம்பினோம். மாதினி எங்களை
ரிசீவ் செய்ய தெருமுனைக்கே வந்திருந்தாப்ல. சபரி கிட்ட
சரியா கூட பேச முடியலையேன்னு வருத்தம் எனக்கு.
பசங்க நல்லா ஜெல்லாகிட்டாங்க. சகோ வெங்கட் நாகராஜோட
மகள் ரோஷிணி,அம்ருதா, சபரி,மாதினி எல்லாம் சேர்ந்து
கேரம் விளையாடிகிட்டு இருந்தாங்க. ஆஷிஷ் தான்! எங்க பக்கமும்
இல்லாம அவன் பக்கமும் ஆள் இல்லாம ஒரு மாதிரி ஓட்டினான்.

ஒரு மணிநேரம் நடந்த பதிவர் சந்திப்பில் முடிஞ்சவரைக்கும்
ஹஸ்பண்டாலஜி பத்தி விக்னேஸ்வரிக்கு, வெங்கடகிரி புடவை/
சுடிதார் பத்தி கோவை2தில்லிக்கு (போட்டுகிட்டு போய் மாடலை
காட்டி நல்லா சொல்லிக்கொடுத்தேன் :)) எல்லாம் விவரமா
செய்ய வேண்டிய வேலை கணகச்சிதமாக செஞ்சாச்சு. :)))
போற இடத்துல நம்ம வேலையை கரெக்டா செய்யணுமில்ல!!

கேட்டுகிட்டுத்தான் இருக்கேன்னு சகோ வெங்கட் நாகராஜ்
குரல் கொடுத்துகிட்டே அயித்தானோட அளவளாவிகிட்டு இருந்தார்.
நாங்க மகளீர் அணி கிச்சனில் பேசிக்கிட்டு இருந்தோம்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசிருக்கலாம்ங்கற
எண்ணத்தோடயே கிளம்பினேன். அப்புறம் ரூமுக்கு போய்
இடுப்பை சாச்சதுதான் தெரியும். அடுத்த நாள் அதுக்குள்ள
விடிஞ்சிருச்சு. டூருக்கு போன இடத்துல தூங்கிகிட்டு இருந்தா
எப்புடி? பசங்களை கிளப்பி டிபன் சாப்பிட்டு ரூமை காலி
செஞ்சு கிளம்பியாச்சு.....

போன இடம் எங்கேப்பா???? அடுத்த பதிவுல சொல்றேன்பா.....


24 comments:

ஹுஸைனம்மா said...

//கயல்விழி வீட்டு ஊஞ்சலையும்
திண்ணையையும்//

எனக்கும் அந்த ஊஞ்சல்தான் இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது.

ஹஸ்பெண்டாலஜி: ஆதிக்கு ஹலோன்னு இன்னொரு பேரு இருக்காமே, அதைப் பத்தியும் பேசினீங்களா? :-)))

//பட்டர்பனீர் மசாலா ... இட்லி,தக்காளி ரைஸ், தயிர் சோறு, கீர், தேங்காய்ச் சட்னி,
சாம்பார்//
ஹூம்...

அப்புறம், அந்த சாக்ஸ் - அது எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்கு காலேஜ்ல கம்ப்யூட்டர் லேப் போகும்போதுதான் தெரிஞ்சுது!!

ஹுஸைனம்மா said...

தொடர...

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் சந்திப்பு.

வெங்கட் நாகராஜ் said...

அட இன்னிக்கே பதிவர் சந்திப்பு பத்தியும் சொல்லியாச்சா! நீங்க போட்டுக் கொடுத்ததன் விளைவு - இப்பவே வெங்கடகிரிக்கு அடி போட்டுட்டாங்க தங்க்ஸ்! கவனிச்சிட வேண்டியதுதான்! மூணு நாள் சாக்ஸ் - :( கஷ்டம் டா சாமி!

அடுத்து எங்க போனீங்கன்னு எனக்குத் தெரியுமே! :)

ADHI VENKAT said...

அக்ஷர்தாம் இன்னும் போக நேரம் வரவில்லை. இங்கே எல்லா இடத்துலயும் செக்கிங் உண்டு. ஊரிலிருந்து வருபவர்களுக்கு தான் இப்படி செக்கிங் பண்ணுகிறார்களே என்று சங்கடமாயிருக்கும்.

பதிவர் சந்திப்பு அருமையா இருந்தது. இன்னும் நேரம் போதவில்லையேன்னு தான் வருத்தம். வெங்கடகிரி புடவை மற்றும் சுடிதார் அடுத்த முறை பர்சேஸ் உண்டு!

அன்புடன் அருணா said...

இதே அக்ஷர்தாம் அஹ்மதாபாதில் போயிருக்கிறேன்.அழகும் சுத்தமும் கவர்ந்தது.
இப்படியொரு பதிவர் சந்திப்பு வேறயா?அசத்துங்க!

சாந்தி மாரியப்பன் said...

செம சந்திப்பு நடந்திருக்குதே :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) தென்றல் உறவுக்காரங்க எல்லாம் சேர்ந்து இருந்த ஒரு விசேசம் மாதிரி இருந்தது. கொஞ்ச நேரமே என்றாலும் நிறைவான சந்திப்பு..

raji said...

//அப்படி எங்கங்க போனோம்? அக்‌ஷர்தாம் லக்‌ஷ்மி நாராயண
கோவில்.//

ஒரு டவுட்டு.அது அக்ஷர்தாம் லக்ஷ்மி நாராயண் கோவிலா? ஸ்வாமி நாராயண் கோவில்தானே?

ஹை!பதிவர் சந்திப்புல நல்லா எஞ்சாய் பண்ணிணீங்களா?

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

பேரு மறந்து போய் ஹலோன்னு கூப்பிட்டதை பதிவா போட்டுட்டாங்கன்னு புலம்பினாரு. அதெப்படி பேரு மறக்கும்னு? போட்டு கலாட்டா செஞ்சிட்டோம்ல. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் அமுதா கிருஷ்ணா,

இந்தப் பதிவு எழுதும் உபயோகத்தால போகும் இடங்களில் எல்லாம் நம்ம சொந்தங்கள் இருக்கறாப்லயே ஒரு உணர்வு வருது.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

அது வெங்கடகிரியில்லை... வெங்கடகிரியும் சூப்பரா இருக்கும். (அதைப்பத்தி தனி பதிவும் வருது இருங்க )விஜயவாடா பக்கத்தில் இருக்கும் மங்களகிரி.:))
//மூணு நாள் சாக்ஸ் - :( கஷ்டம் டா சாமி!//

அந்த நாத்தத்தை அவங்களே எப்படித்தான் தாங்குறாங்களோ!!

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

இங்கல்லாம் நடப்பது செக்கிங்கிற பேருல வெறும் கண்துடைப்பு. ஹைதையில் செக்கிங் உண்டு. நடு ரோட்டில் நிக்க வெச்சு செக்கிங் செஞ்ச இடத்துலேர்ந்து வந்ததால புதுசா தெரியலை. ஆனா கொஞ்சம் திட்டமிட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம் என்பது என் அபிப்ராயம்.

pudugaithendral said...

பதிவர் சந்திப்பு அருமையா இருந்தது. இன்னும் நேரம் போதவில்லையேன்னு தான் வருத்தம். வெங்கடகிரி புடவை மற்றும் சுடிதார் அடுத்த முறை பர்சேஸ் உண்டு!//

ஆமாம் எனக்கும் ரொம்ப வருத்தம் :(

வெரி வெரி குட்.
வெங்கடகிரியோடு நான் போட்டு வந்த மங்களகிரி காட்டனும் வாங்கிடுங்க. டீடெயில் பதிவு டூர் பதிவு முடிஞ்சதும் வருது. :))

pudugaithendral said...

வாங்க அருணா,

சுத்தம், மனதுக்கும் இதமா இருந்துச்சு.
பதிவர் சந்திப்புதானே ஹைலட்டே!

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் அமைதிச்சாரல்,

சூறாவளிப்பயணம்மாதிரி சூறாவளி சந்திப்புதான்னாலும் எல்லோர் மனசுலையும் நிறைஞ்சு போச்சு. எல்லா புகழும் கயலுக்கே.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கயல்,

எனக்கும் அப்படி ஒரு எண்ணம்தான். முதன் முதலில் பார்த்தாலும் விக்னேஷ்வரி நல்லா நட்பாகிட்டாங்க.
அனைவரையும் வரவழைச்சு ஏற்பாடு செஞ்சதுக்கு உங்களுக்கு ஷ்பெஷல் நன்றி.

pudugaithendral said...

வாங்க ராஜி,

கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டேன். ஸ்வாமி நாராயாண் கோவில்தான்.

வருகைக்கு நன்றி

துளசி கோபால் said...

பதிவர் சந்திப்பு மெனு.......ஆஹ்ஹா..... மிஸ் பண்ணிட்டேனே:(

நாங்களும் ம்யூஸிகல் ஃபவுண்டெய்ன் பார்க்க நேரமில்லை. இதே போலத்தான் அக்ஷர்தாம் முடிச்சுட்டுக் கயலு வீட்டுக்குப்போயிருந்தோம்.

என்ன ஒற்றுமை பாருங்க!!!!!!!!

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

ஒற்றுமைதான்!!

வருகைக்கு நன்றி

சென்ஷி said...

நீண்ட நாட்களுக்குப் பிறகான டெல்லி பதிவர்கள் சந்திப்பு :))

பகிர்விற்கு நன்றிகள்..

வல்லிசிம்ஹன் said...

தென்றல் நீங்களும் பயணம் ஆரம்பிச்சூட்டீங்களா. எல்லாப் பதிவையும் ஒழுங்கா படிச்சாதானே:(
ஸ்வாமிநாராயண் கோவில் எல்லா இடத்திலயும் ரொம்ப நாலா உழைச்சுக் கட்டி இருக்காங்க. நாங்க சிக்காகோவில் பார்த்ததில் நூத்திஎட்டு யானைகள்:)
பதிவர் சந்திப்பு பறி சந்தோஷம இருக்கு. என்னைருந்தாலும் அப்ப அப்பா பார்த்துக் கிட்டா நல்லாதானெ இருக்கு. முதுவின் ஊஞ்சலைத் தேடிப் போறேன்.

pudugaithendral said...

வாங்க சென்ஷி,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

சந்திப்பு நல்லா நடந்தது.


வருகைக்கு நன்றி