Sunday, April 03, 2011

இந்தியா வெற்றிக்கு வாழ்த்தும், யுகாதி வாழ்த்தும்!!

எங்க வீட்டுலேயே இந்தியாவுக்கு பெட்டிங் நடந்துச்சு!!!
நடத்தியது ஆஷிஷும், அம்ருதாவும். பெட்டிங் செஞ்சது
அவங்க மாமாகிட்ட. இந்தியா ஜெயிக்காதுன்னு சும்மானாச்சுக்கும்
சொன்ன மாமனை இந்தியா ஜெயிச்சா எங்களுக்கு...... வாங்கிக்கொடுக்கணும்னு
சொன்னதைக்கேட்டு தம்பி ஷாக். அது என்னன்னு கடைசில சொல்றேன்.

நேற்றைய சாதனை அபாரமானது. டென்ஷனை தலையில்
ஏற்காமல் தோனி விளையாடியது அவரது பொறுப்பை காட்டுகிறது.
சேவாக்கும் சச்சினும் அவுட்டானதும் இந்தியா தோற்றுவிடுமோ
என்ற அச்சம் தலை தூக்கியதென்னவோ நிஜம் தான். தோனிக்கு
பாராட்டுக்கள். இந்திய வெற்றியை சச்சினுக்கு சமர்ப்பித்த அணியினரின்
மனம், அவரைத் தங்களின் தோள்களில் தூக்கி வலம் வந்தது எல்லாம்
பார்த்து மனம் நெகிழ்ந்தது. சின்னக்குழந்தை போல குதூகலித்த
சச்சினைப்பார்க்க பார்க்க பரவசம்.

மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


நாளை கர வருஷப்பிறப்பு. தெலுங்கு, கன்னட, மராட்டியர்களுக்கான
புத்தாண்டு. இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லாவித மகிழ்ச்சியையும்
தரும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள். யுகாதி ஷ்பெஷல்
யுகாதி பச்சடி. வெல்லம்,புளி,வேப்பம்பூ, மாங்காய் எல்லாம் சேர்த்து
செய்யப்படும் இந்தப் பச்சடிதான் முதலில் உட்கொள்ளப்படும்.
வாழ்வில் எல்லா சுவையும் கலந்துதான் இருக்கும். அதை ஏற்கும்
மனதை ஆண்டவன் தரவேண்டும் எனும் நினைப்பு ஏற்படத்தான்
புளிப்பு,துவர்ப்பு,கசப்பு, எல்லாம் சேர்ந்த இந்த யுகாதிப்பச்சடி.


வாழ்வில் பூரணம் இருக்க வேண்டும். அந்த முழுமை கிடைக்க
பூரணம் நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பது பழக்கம்.
பூரண போளி யுகாதிப் ஷ்பெஷல். :)



டிஸ்கி: ஆஷிஷும் அம்ருதாவும் மாமாவிடம் கேட்டது
ஐபோனும், தங்க ஒட்டியாணமும். :( :))).



3 comments:

சாந்தி மாரியப்பன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் தென்றல்..

ஐபோனும் தங்க ஒட்டியாணமும் கிடைக்க ஆஷிஷ் அம்ருதாவுக்கும் வாழ்த்துகள் :-)))

கோமதி அரசு said...

//எல்லோருக்கும் எல்லாவித மகிழ்ச்சியையும்
தரும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் உங்கள் குடும்த்தார்களுக்கும் எல்லாவித மகிழ்ச்சியை தரும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல்.

இந்தியா வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

மாமாவிடம் குழந்தைகள் எல்லாம் பெற வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

யுகாதி தின வாழ்த்துக்கள். ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும் விரைவில் அவர்கள் கேட்டது கிடைத்திட வாழ்த்துகள்.