Friday, April 15, 2011

இராவணன் வசித்த இடம்.....

திரிகோணமலை,இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருக்கும் துறைமுக நகரம்.
முக்கோணமலையில் முக்கண்ணனை பூஜித்தான் இலங்கேஸ்வரன்
இராவணன்.

இப்போது இருக்கும் லிங்கம் இராவணன் பூஜித்தது இல்லை.
கோவத்தில் கோவிலுடன் ஒரு சின்ன மலையையும் வெட்டி
பக்கத்திலே இருக்கும் கடலில் போட்டுவிட்டாராம்!! ஏன் இந்த
கோபம்! யார் மேல கோவம்!! கொஞ்சம் புராணக்கதை
பார்க்கலாம்.
இதுதான் கோவிலின் முகப்பு. முகப்புக்கு கொஞ்சம்
முன்னால் புள்ளி மான்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது
இப்போது கண்ணுக்குள்ளேயே இருக்கு!! திரிகோணமலைக்கு
தக்சிண கைலாசம் (தென் கைலாயம்) என்று பெயர் உண்டு.


தற்போது இருக்கும் சிவலிங்கம்.

சிறந்த சிவ பக்தன். அதனால் தான் ஈஸ்வர பட்டம் பெற்றான் இராவணன்.
பார்வதிக்காக ஈசன் வடிவமைத்த இந்த இலங்கையை தனக்கு வேண்டி
இறைவனிடமிருந்து இராவணன் பெற்றதாகவும், அதனால் சினம் கொண்டு
அம்மை அந்த இடத்தில் நிம்மதி இல்லாமல் போகக்கடவதுன்னு சாபம்
இட்டதாலும் அதனால் தான் அங்கே அப்படி ஒரு சூழல் என்றும் சிலர்
சொல்லக் கேள்வி!! கைலயங்கிரியை தன் கட்டைவிரலால் தூக்கி
சிவனையே பயமுறுத்திய வீரன்.

அந்த சிவன் மீதே கோவம் ஏற்பட்டது. காரணம் இராவணனின் அன்னையார்
இறப்பு. என் தாய் இறக்கலாமா? என கோவப்பட்டு கோவிலை வெட்டி
தூக்கி எறிந்துவிட்டு, அதே அடங்காத கோவத்துடன் வாளால் வெட்டிய
இடங்கள் இன்றும் இராவணன் வெட்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அவை வெந்நீர் கிணறுகளாக மாறிவிட்டன. தன் அன்னைக்கு அங்கேதான்
அந்திமக்கிரியைகளைச் செய்ததாக வாயிலில் இருக்கும் பலகைச் சொல்கிறது.


கோவிலுக்கு பின்னாடி:


திரிகோணமலையில் கொழும்புவைப்போல வானிலை இருக்காது.
சென்னையைப்போல கொஞ்சம் கசகசவென இருக்கும். நிறைய்ய
தமிழ் பெயர்களை பலகைகளில் பார்க்கலாம். தமிழ் பேசும் மக்கள்
அதிகம் இருக்கும் இடம். நானறிந்த வகையில் இங்கே இருக்கும்
சில சிங்களர்கள் கூட சரளமாக தமிழ் பேசுவார்கள்.

துறைமுக நகரமாதலால் பேக்வாட்டர்ஸுடன் சில இடங்கள் அழகாக
இருக்கும். அதிலும் நிலாவெளி பீச். அங்கே கடலுக்குள் இரண்டு
கிமீ வரை நடந்து செல்லலாம். தவிர அந்த பீச்சின் மணல் வெள்ளை
நிறத்தில அழகாக இருக்கும்.

நாங்கள் தங்கியிருந்தது கிளப் ஓஷியானிக் ஹோட்டலில்.
சின்னச் சின்ன குடில்கள் போல இருந்த அறை ஒன்றை எடுத்து
தங்கியிருந்தோம்.



கொழும்பு நகரம் இலங்கையின் மேற்குப்பகுதியில் இருக்கிறது. அங்கே சூரிய
அஸ்தமனம் தான் பார்க்க முடியும். இங்கே சூரிய உதயம் அருமை.
கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளுடன்
சூரிய உதயத்தை பார்தது என ரொம்ப ரசித்தோம். 2004ல் ஏற்பட்ட
சுனாமியில் நாங்கள் தங்கியிருந்த குடில்கள் சேதமடைந்தன
என தெரிந்த பொழுது செம ஷாக்!!!!!

திரிகோணமலையை தரிசித்து கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த
பொழுதுதான் என் தோழி அண்ணபூர்ணா போன் செய்து தாங்கள்
குழுவினராக ஜாஃப்னா செல்லப்போவதாக சொல்லி எங்களையும்
அழைத்தார்! அப்பொழுத்தான் நெடுந்தூரப் பயணம் முடித்து
களைப்புடன் இருந்ததாலும், அயித்தானுக்கு உடன் வெளிநாடு
செல்லும் வேலை இருந்ததாலும் தவற விட்ட ஜாஃனா பயணம்
அங்கேயிருந்து கிளம்பும் வரை ஏற்படாமலேயே போய்விட்டது!!!

மனதில் ஓரத்தில் இருக்கும் ஒரே குறை நல்லூர்க் கந்தனை
தரிசிக்கும் நந்நாள் எந்நாளோ!! என்பதுதான். நான் மட்டும்
விரும்பி புண்ணியமில்லையே. தரிசனம் தர அவனுக்கும்
மனம் வேண்டுமே!! இப்பொழுது ஜாஃப்னா செல்ல முடியுமாம்.
பார்ப்போம்.

இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் போன இடம், சீதா வனவாசம்
இருந்த இடம் இதெல்லாம் பத்தி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

8 comments:

மாதேவி said...

நம் நாடு :) நல்ல பதிவு.

திருக்கோணேஸ்வரம் இயற்கைத்துறைமுகத்துடன் கூடிய அழகியஇடம்.

நிலா வெளியில் "புறாமலை" இருக்கிறது அறிந்திருப்பீர்கள்.அழகிய இடம் படகில் சென்று ரசி்த்து கடலில் குளித்து வரலாம்.

pudugaithendral said...

வாங்க மாதேவி,

நலமா. புறாமலை போகவில்லை. என் மகளுக்கு தண்ணீரைக்கண்டாலே பயம் அப்போது. அதனால் போகவில்லை.

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. ராவணன் வசித்த இடம்... இப்போது ஒரு நாட்டில் ஒரு தலை ராவணன்களின் தொல்லையே தாங்கவில்லையே. :( பத்து தலை ராவணன் இப்போது இருந்திருந்தால்?

pudugaithendral said...

பத்து தலை ராவணன் இப்போது இருந்திருந்தால்?//

நினைச்சுப்பாக்கவே கஷ்டமா இருக்கு.
:(( :))

saravanan said...

very 1 st time i read ur site hatsoff saravanan frm pudukkottai

pudugaithendral said...

வாங்க சரவணன்,

நம்ம ஊர்க்காரரா. சந்தோஷம். அடிக்கடி வாங்க

Bragi said...

நானும் ரொம்ப நாளா இலங்கை போகணும் நு பாக்கறேன். பொன்னியின் செல்வன் நாவல் படிச்சதுலேந்தே எனக்கு ஒரு ஆசை இலங்கைய பாக்கணும்னு. உங்க வலைப்பதிவ படிச்சோன முடிவே பண்ணிட்டேன் நிச்சியமா இலங்கை போகணும் நு.

அருமையான வலைப்பதிவு, இப்போ தான் முதலில் உங்க பதிவை படிக்கிறேன்.

pudugaithendral said...

வாங்க Bragi,
நானும் ஒரு 28 வருஷமா கனவு கண்டு, காத்திருந்து இலங்கையை அனுபவிச்சிட்டு வந்தேன். உங்களுக்கும் அந்த பாக்கியம் சீக்கிரம் கிடைக்க கதிர்காமன் அருள் புரியட்டும்.


அருமையான வலைப்பதிவு, இப்போ தான் முதலில் உங்க பதிவை படிக்கிறேன்.//

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அடிக்கடி வாங்க.