Thursday, May 05, 2011

லீவு சொல்லிக்கறேன்....

என் ஃப்ரெண்ட்ஸ்ங்க வீட்டில் இருக்கும் பொழுது வேற எதுலையும்
மனசே போகாது :)) அவங்களுக்கு லீவு விட்டிருக்காங்க. அதனால
பதிவுக்கும் கொஞ்ச நாளைக்கு லீவு சொல்லிக்கறேன். பசங்க கூட
ஆனந்தமா இருக்க வேண்டிய தருணத்தில் வேறு எதற்கும் இடம் இல்லை
என்பதலாத்தான் இந்த லீவு.

தவிரவும் இப்ப விடுமுறை மாதம் என்பதால் விருந்தினர்கள் வருவதும்
போவதுமா இருக்கு. இன்னொரு ரொம்ப முக்கியமான மேட்டர்
இருக்கு. பசங்க என்னை ரிவெஞ் எடுத்துகிட்டு இருக்காங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

சும்மா இருப்பானேன்னு டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல பீ.காம்
படிக்க பணத்தைக் கட்டினேன். லிட்ட்ரேச்சர் பட்டயம் இருந்தாலும்
பீ.காம், எல்.எல்.பீ என் கனவு! ஆரம்ப கட்டமா பீ.காம்
சேர்ந்து இருக்கேன். இதுல இந்த மாசம் முதல் வருட பரிட்சை.
அதுக்குத்தான் பசங்க என்னை ரிவெஞ் எடுத்துகிட்டு இருக்காங்க. :)
படிச்சதை கேள்வி கேப்பாங்களாம்! நான் சொன்னதெல்லாம் எனக்கு
திரும்ப நடக்குது. :))))

பரிட்சை சமயத்துல கணிணி கூடாதுன்னு பசங்களுக்கு சொல்லிட்டு
நானே உட்கார்ந்தா தப்பாயிடும்ல. அதான் கொஞ்ச நாளைக்கு
கட்டாய லீவு.

இந்த வருடம் அன்னையர் தினத்துக்கு பசங்க எனக்கு காந்தா எம்ப்ராய்டரி
ஒர்க் புடவை பிரசண்ட் செஞ்சிருக்காங்க. டிஸ்டம்பர் கலரில் கத்திரிப்பூ
கலந்த புடவை. அப்புறமா இந்த ஒர்க் பத்தியும் அந்தப் புடவை போட்டோவும்
போடுறேன்.








அன்னையர்கள அனைவருக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.



18 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் ,நல்லபடியாப் üபரீட்சை எழுதுங்க. பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் விடுமுறைகால வாழ்த்துகள்.
புடவையை முழுவதும் படம் எடுத்துப் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்:)

--

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.
புடவையை போட்டோ எடுத்து கண்டிப்பா பதிவு போடுறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

ஓகே
வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

பி.காம். - வாழ்த்துகள் இப்பவே சொல்லிடறேன் சகோ.

அன்னையர் தின வாழ்த்துகள்.

ஷர்புதீன் said...

come back soon with intersting articles

சாந்தி மாரியப்பன் said...

அன்னையர் தின வாழ்த்துகள்.. லீவை எஞ்சாய் செஞ்சுட்டு, நல்லா படிச்சுட்டு வாங்க :-))))

காற்றில் எந்தன் கீதம் said...

உங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் & அட்சய திருதியை வாழ்த்துக்கள்

காற்றில் எந்தன் கீதம் said...

all the best for your exams too.....:)

ஹுஸைனம்மா said...

அன்னையர் தினம்,
ஃப்ரெண்ட்ஸ் (வருட) விடுமுறை &
பரிட்சைக்கு நல்லா படிக்க
எல்லாத்துக்கும் வாழ்த்துகள்!!

நல்லா படிச்சு, பெரியாளாகி, எங்க பேரைக் காப்பாத்தணும், சரியா? ;-)))))

நெஜமாவே, நீங்க படிக்கறது எனக்கே பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. நல்லா படிங்க. பரிட்சைகள் எப்போ?

ADHI VENKAT said...

தேர்வு சிறப்பாக எழுத வாழ்த்துகள். புடவைகள் பற்றி தொடர் வந்துட்டு இருந்ததே கேட்கலாம்னு இருந்தேன். விடுமுறைக்கு பின் தொடருங்கள்.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி:)! முதல் வருட பரீட்சை நல்லா எழுதுங்க. புடவை பதிவுக்குக் காத்திருக்கிறோம்:)! அன்னையர் தின வாழ்த்துக்கள்! விடுமுறையே இனிதே அமையவும் வாழ்த்துக்கள்!

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

ohhh!All the best for the exams!!!

மாதேவி said...

பரீட்சைக்கு வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Belated Mother's Day Wishes...ha ha ha super...nice revenge by kids..enjaaai... நாங்களும் கொஸ்டின் கேப்போம்... போங்க போங்க போய் படிங்க...ஹா ஹா...:))

புதுகை.அப்துல்லா said...

நேரடியாவே 5 வருட பிஏ.,எல்.எல்.பி., போயிருக்கலாமேக்கா?

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் !

இனிமே.. புதுகைத்தென்றல்.பி.காம்.ன்னுதான் கூப்பிடணுமாக்கும்...!

ஆஷிஷ், அம்ருதாவுக்கு என் அன்பைத்தெரிவிக்கவும்!

pudugaithendral said...

வந்திருந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்