Tuesday, June 07, 2011

வந்தேன்!! வந்தேன்!! வந்தேன்!!!!!!!!

எல்லோரும் சொளக்கியமா???
ஒரு வழியா லீவு முடிஞ்சிருச்சு. பசங்களுக்கு பள்ளிக்கூடம்
ஆரம்பிச்சாச்சு. சென்ற பதிவுல வந்து நான் பரிட்சை எழுத
வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றியைச்
சொல்லிக்கிறேன்.

ஆனா பரிட்சை எழுதலீங்க!!!! 3 மாசமாவே லோ பீபி ரொம்ப
ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கு. அதுவும் ஏப்ரல், மே மாதத்துல
கிட்டத்தட்ட 10 நாளைக்கும் மேல பேசக்கூட முடியாம போயிடிச்சு.
ஸ்ட்ரிக்டா பெட் ரெஸ்ட்!!! காரணம் எல்லாம் பழசு தான்.
என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டா என் கூடவே ஒரு 8 வருஷமா இருக்கும்
PMS தரும் சைட் எஃபக்ட் தான் இது. :(( படும் கஷ்டத்தைப்
பார்த்து ஆஷிஷ் பரிட்சை எல்லாம் வேணம்மா! செப்டம்பரில்
உடம்பு நல்லா இருந்தா பாத்துக்கலாம்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாப்ல.

இந்த உடல் கஷ்டத்தால பசங்களை அதிகமா வெளியில கூட
கூட்டிகிட்டு போக முடியாட்டியும் வீட்டுலையே முடிஞ்ச வரைக்கும்
அவங்களோட அளவளாவிகிட்டு இருந்தேன். வழக்கம்போல
என் கண்மணிகள் இரண்டு பேரும் உதவியா இருந்தாங்க.
அப்பிடி இப்படின்னு அவங்க லீவு முடிஞ்சு நாளையிலிருந்து
வகுப்புக்கள் ஆரம்பம்.

இந்த லீவுல ஆஷிஷ் அண்ணா கிடார் கத்துகிட்டாரு. எனக்கு
பிடிச்ச சுராலியாகே தும்னே ஜோ தில்கோ பாட்டு வாசிக்கிறாரு.
அப்புறமா வாசிக்கிறதை ரெக்கார்ட் செஞ்சு அப்லோட் செய்யறேன்.
அம்ருதம்மாவுக்கு இந்த மாசம் இல்லாட்டி அடுத்த மாசம் வாக்குல
டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் எக்ஸாம் பியானோவுக்கு இருக்கும்.

இப்ப கொஞ்சம் பரவாயில்லை. அதனால வழக்கம்போல இல்லாட்டியும்
முடிஞ்சப்பல்லாம் பதிவெழுதுவேன். வழக்கம்போல உங்கள் ஆதரவுகளை
அள்ளித் தர கேட்டுக்கறேன். ச்சே. எலக்‌ஷ், அதுக்கப்புறம் ரிசல்ட்னு
பாத்து அதே மாதிரி டயலாக்கா வருது. :))))

சரி பட்டையை கிளப்ப நான் ரெடி. நாளை முதல் பதிவுகள் வரும்.
தங்கமணிக்கு எதிரா பதிவுகள் போடறவங்களுக்கு முக்கியமா
எச்சரிக்கை கொடுத்து வைக்கிறேன். :)))

வர்ட்டா... குட் நைட்.



24 comments:

ஹுஸைனம்மா said...

வாங்க, வாங்க. இப்ப உடம்பு பரவால்லையா?

வரும்போதே டெரர் எச்சரிக்கையோட வர்றீங்களே - //தங்கமணிக்கு எதிரா பதிவுகள் போடறவங்களுக்கு //!!

ஆஹா, ஆவலா அவலுக்குக் காத்திருக்கேன்!!

அப்பாவி தங்கமணி said...

வாங்க வாங்க... இப்ப உடம்புக்கு பரவா இல்லை தானே... டேக் கேர்... ஜூன் போனால் செப்டம்பர் இருக்குனு ஆசிஷ் கரெக்டா சொல்லி இருக்கார்... வாவ், கிடார் எல்லாம் கத்துக்கராங்களா? வெரி குட்... tag போடுங்க அப்புறமா... ஒகே அக்கா... தங்கமணி எதிரா யாரெல்லாம் சதி பண்றாங்கன்னு உங்களுக்கு அப்டேட் பண்றேன் டோண்ட் வொர்ரி... ஒரு கை பாத்துருவோம்... ஹா ஹா... :))

அபி அப்பா said...

வாங்க வாங்க. முதல்ல உடல்நிலையை பார்த்துகுங்க. பசங்களுக்கு வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

உடல் நலமாகி வந்தால் சந்தோஷமே


ரங்ஸ் பற்றி போட்டா தங்ஸ் பற்றி போடுவோம்ல ...

ராமலக்ஷ்மி said...

வாங்க வாங்க:)!

உடல்நலத்தைக் கவனியுங்க. பரீட்சை மெல்ல எழுதலாம்.

கோபிநாத் said...

வாங்க அக்கா....பதிவுகள் போட்டு கலக்குங்க ;))

புதுகை.அப்துல்லா said...

வாங்க. குட்நைட்.

GEETHA ACHAL said...

உடல் நலத்தினை பார்த்து கொள்ளுங்க...

தொடரட்டும் உங்கள் பதிவுகள்...

எல் கே said...

வாங்க. உடல் நிலைதான் முக்கியம். பிரஷர் லோ ஆர் ஹை?? கவனமா இருங்க .

Anonymous said...

welcome back.

ஷர்புதீன் said...

welcome back madam!

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

அன்புக்கு நன்றி. இப்ப உடம்பு பரவாயில்லை ரகம் :))

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

தங்கமணி எதிரா யாரெல்லாம் சதி பண்றாங்கன்னு உங்களுக்கு அப்டேட் பண்றேன் டோண்ட் வொர்ரி... ஒரு கை பாத்துருவோம்... ஹா ஹா... :))//

ஆமாம் அது ரொம்ப முக்கியம் :))

வருகைக்கு நன்றி தங்கச்சி.

புதுகைத் தென்றல் said...

நன்றி அபி அப்பா

புதுகைத் தென்றல் said...

ரங்ஸ் பற்றி போட்டா தங்ஸ் பற்றி போடுவோம்ல ...//

அதே தான் தங்க்ஸ் பற்றி போட்டா ரங்க்ஸ் பற்றி பதிவு போட வேண்டி வரும் :))

வருகைக்கு நன்றி தம்பி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ராமலக்‌ஷ்மி,

ஆஷிஷும் அம்ருதாவும் அதேதான் சொன்னாங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா, இந்த வருஷம் 1000 அடிச்சிடணும்னு திட்டம் கோபித்தம்பி,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

நீங்க ராத்திரி கமெண்ட் போட்டிருக்கீங்க. நான் நன்பகல் தாண்டி கமெண்டிகிட்டு இருக்கேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கீதா

புதுகைத் தென்றல் said...

வாங்க எல் கே,

ப்ரஷர் லோ... லோன்னு இருக்கு. 96/54 :))

ரொம்ப கவனமா இருக்கேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி அனாமிகா

நன்றி ஷர்புதின்

வெங்கட் நாகராஜ் said...

தில்லி வரப்போதும் இப்படித்தான் லோ..லோன்னு உங்களைப் படுத்தியது.... உடம்பை கவனிச்சுங்க சகோ...

இப்பதான் இந்த பகிர்வை பார்த்தேன்...
பரீட்சை எழுதலைன்னா என்ன... ஜுன் போனால் செப்டம்பர் இருக்கவே இருக்கு.... :)

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

அப்பத்திலேர்ந்துதான் இந்த ஆட்டம். :))

வருகைக்கு நன்றி

Bala's Bits said...

Welcome back.... Take care of your health.

// எனக்கு
பிடிச்ச சுராலியாகே தும்னே ஜோ தில்கோ பாட்டு வாசிக்கிறாரு.
அப்புறமா வாசிக்கிறதை ரெக்கார்ட் செஞ்சு அப்லோட் செய்யறேன்.//

Looking forward to hear this.