Friday, June 10, 2011

நம்மை காக்கும் தேவதைகள்!!!!

காலங்காலமாக நம் முன்னோர்கள் நமக்குச் சொன்னதில் முக்கியமானது
நல்லவற்றையே சொல்ல வேண்டும். ஏன் நல்லதையே சொல்லவேண்டும்?
என்று கேட்டாள், “நமக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி தேவதைகள்,
தேவதூதர்கள் இருப்பார்கள். நாம் சொல்வதற்கெல்லாம் ”ததாஸ்து”
(அப்படியே ஆகுக!) என சொல்வார்கள். நாம் நல்லதையே சொன்னால்
நல்லதே நடக்கும். எண்ணம் நல்லதாக இருந்து, பேசுவதும் நல்லதாக
இருந்தால் பிரச்சனையே இல்லை என்பதைத்தான் பெரியவர்கள் இப்படி
சொன்னார்கள்.

ஆனால் உண்மையில் நம்மை சுற்றி தேவர்கள், தேவதைகள்,தேவ
தூதர்கள் இருக்கிறார்களா??? நம்பிக்கைதான் வாழ்க்கை. அப்படி
நம்புபவர்களுக்கு ஆம் இருக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள்
மேற்கொண்டு தயவு செய்து படிக்க வேண்டாம் என தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.

என் உறவினர் ஒருவரின் மூலமாக எனக்கு இந்த விஷயம் தெரிய
வந்தது. நம்பிக்கை இல்லாமலேயே இருந்தேன். என் அனுபவம்
என்னை நம்ப வைத்தது. அந்த அற்புதத்தை பகிர ஆசைப்படுகிறேன்.
யான் பெற்ற இன்பம் இவ்வயகமும் பெற இந்தப் பதிவு. Angel therapy
எனும் புத்தகத்தையும் பரிசளித்து சென்றிருந்தார் அந்த உறவினர்.

இந்தப் புத்தகம் பெரிய புத்தகக்கடைகளில் கிடைக்கிறது. இதை
வாங்கிப் படித்தால் கூட நாம் புரிந்துக்கொள்ள முடியும்.

Doreen virtue என்பவர் எழுதிய புத்தகம் இது.
ஏஞ்சல் திரப்பி பயிற்சியில் இவரது பயிற்சிதான் சிறந்தது
என்கிறார்கள். இதுவும் ஒரு வகை ஹீலிங் தெரப்பி.
நம் இந்தியாவில் இவரது சிஷ்யை
ஒருவர் டெல்லியில் அனுமதி பெற்று வகுப்புக்கள் எடுப்பதாக
கேள்விப்பட்டேன். பயிற்சி எல்லாம் கூட இல்லாமல் நம்மால்
தேவதைகளை உணர முடியும். எப்படி என்கிறீர்களா? வாருங்கள்
அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.



இந்த தேவதைகள் கடவுளின் தூதர்கள். நம்மைச் சுற்றி
எப்போதும் இருக்க பணிக்கப்பட்டவர்கள். நாம் பேசுவதை எல்லாம்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அழைத்தால்
உதவிட ஆசையோடு காத்திருக்கிறார்கள்.

நாம் பிறக்கும் பொழுதே நமக்கே நமக்கென ப்ர்தயேகமான
காக்கும் தேவதையுடன் தான் நாம் பிறக்கிறோம். ஆனால் நமக்கு
அது தெரியாது. அவரை அறிந்து அந்தப் பெயரைக்கொண்டு
அழைத்தால் நம் பிரச்சனையை, குறையை தீர்க்க ஓடோடி
வருவார்கள் என Angel therapy பயிற்ச்சி பெற்றவர்கள்
சொல்கிறார்கள்.

நம் guardian angel யை அறிந்துக்கொள்வது எப்படி??
அமைதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, தேவைப்பட்டால்
மெலிதான இசையை ஓட விடுங்கள் இல்லையேல் மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து தியானம் செய்வது போல சுவாசத்தை தொடர்ந்து
கவனித்துக் கொண்டே இருங்கள். மனதையும் உடம்பையும் ரிலாக்ஸ்
செய்து கொண்ட பின் வேறெந்த எண்ணங்களும் மனதில் ஓடாமல்
ஆல்ஃபா லெவலை அடைந்து (புருவங்களுக்கு இடையே கவனத்தை
செலுத்தி, மனதை ஒருநிலை படுத்தி 10லிருந்து 1 வரை
எண்ணிக்கொண்டு வந்தால் மனம் ஆல்ஃபா லெவலுக்கு செல்லும்)
அந்த சூழலில் நாம் பிறந்த தேதியை சொல்லிக்கொண்டு
“என்னைக் காக்கும் என் ப்ர்த்யேக தேவதையை உன் பெயரை
நான் அறிந்துக்கொள்ள வைத்திடு என்று கேட்க வேண்டும்.

எந்த பெயர் அடிக்கடி வருகிறதோ அதுவே நம் காக்கும் தேவதை.
ஒரு தேவதையின் பெயர் நமக்கு காதில் சொல்வது போல
இருக்கலாம், சில தேவதைகள் பெயர்கள் ரொம்பவே வித்தியாசமாக
இருக்கும். அந்தப் பெயர் தெரிந்ததும் அந்த தேவதையை அழைத்தால்
நமக்கு தேவையானதை செய்து கொள்ள முடியும்.

guardian angels, angels இவர்களை மேற்பார்வையாளராக இருந்து
கவனிப்பது archangels. இவருக்கு சர்வ வல்லமையும் உண்டு.
முக்கியமான archangels பற்றி பார்ப்போம்.



1. Arch angel Michael, Gabriel, Uriel, Raphel. இவர்கள்
முக்கியமானவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.
அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே செல்லவும்.

கிறிஸ்துவர்களுக்கு இந்த தேவதைகளின் பெயர்கள் புதிதல்ல.
புனித நூலான பைபிளில் இந்த தேவ தூதர்கள் பற்றி இருக்கிறது.

டொரின் விர்ச்சு அவர்களின் தளத்தில் காலிங் கார்ட்ஸ் எனப்படும்
தேவதைகள் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் எனும் பக்கம்
கிடையாது. ஆனால் இந்தத் தளத்தில் நமக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏதேனும் குழப்பம்,பிரச்சனை இருக்கும் நேரத்தில் இந்த தளத்தை
நாடி தேவதைகள் நமக்குத் தரும் செய்தி என்ன என்பதை தெரிந்துக்
கொள்ளலாம்.இதற்கு ஏதும் பணக் கட்டத் தேவையில்லை.
(கவனம்: ஏஞ்சல் கார்ட் ரெக்வஸ்ட் என்று இருப்பதை அழுத்தி
நம் தேவையைச் சொன்னால் அதற்கு பணம் கேட்பார்கள்)
அவர்கள் அழைத்தால் வந்து சொல்லும் தேவதை நமக்கும் உதவும்
என்பதால் இடைத் தரகர்கள் யாருமில்லாமல் நாமே தெரிந்துக்
கொள்ளலாம். தேவதையிடமிருந்து செய்திக்கு இங்கே போய்
பார்க்கவும்.

இங்கேயும் ஒன்று இருக்கிறது.


இந்தத் தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த நீர்வீழ்ச்சி தியானம்.


healing prayer

free healing card

angel healing

ப்ரானிக் ஹீலிங், ரெயிகி ஹீலிங், கிறிஸ்டல் ஹீலிங் வகையில் இந்த
ஏஞ்சல் தெரப்பியும். பாசிட்டிவிட்டியை பரப்பும் நல்ல செயலாக
இதைக் கருதுகிறேன்.

துயரத்தைச் சொன்னால் மனப்பாரம் குறையும் என்பார்கள். மனிதர்களிடம்
சொல்லி சில சமயம் தீர்வு கிடைக்காமல் சிக்கல் தீவரமாகிவிட வாய்ப்புக்கள்
ஏராளம். நாம் சொல்வதை தேவதைகள் கேட்கிறார்கள், நமக்கு சரியான
பாதையைக் காட்டுவார்கள் என்று நம்புவதில் தவறில்லையே.

guardian angels, angels இவர்களை மேற்பார்வையாளராக இருந்து
கவனிப்பது archangels என்றால் இவர்கள் அனைவரையும் மேற்பார்வை
செய்வது நாம் கடவுள் என பூஜித்து மகிழும் தெய்வம். தெய்வ அருள்
பெற்று நமக்காக நம்மை சுற்றி வரும் தேவதைகள் நமக்கு உதவுகிறார்கள்,
உதவுவார்கள் என்ற நம்பிக்கையை பகிர எண்ணி இந்தப் பதிவு.

விரும்பியவர்கள் செய்து பார்த்து சொல்லுங்க. நம்பிக்கை இருந்தால் மட்டுமே.




12 comments:

எல் கே said...

நம்மை சுற்றி எப்பொழுதும் தேவதைகள் இருப்பார்கள். அந்த தேவதைகள் பெயர் மறந்து விட்டது. இது புதுவித ஹீலிங் போல இருக்கு. படிச்சு பாக்கறேன் .

pudugaithendral said...

வாங்க எல்கே,

இம்புட்டு பாஸ்டா கமெண்ட் பாத்து ஷாக் ஆயிட்டேன்.

வருகைக்கு நன்றி

abi said...

ennudaia 11 vayathu magal oru thevathaiyai thinamum parppathagavum than prachnaikalai antha thevathaidam koorinal sirithtukkondae ketpathagavum avvappozhu solval .intha article padiththavudan unmaiyaga irukkumo endru thondrugirathu. ABIDEVA

pudugaithendral said...

வாங்க அபிதேவா,

குழந்தைகளுக்கு புரிந்து கொள்ளும் சக்தி அதிகம். சில சமயம் அவர்களின் கற்பனை உலகில் நடப்பது நிஜமாக இருக்கவும் வாய்ப்புக்கள் அதிகம்.

imagine that என்கிற ஆங்கிலப்படத்தின் கதையும் இப்படித்தான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

http://www.youtube.com/watch?v=70U393tWjrw

இந்த லிங்கை பாருங்கள் அபிதேவா

இராஜராஜேஸ்வரி said...

. மனிதர்களிடம்
சொல்லி சில சமயம் தீர்வு கிடைக்காமல் சிக்கல் தீவரமாகிவிட வாய்ப்புக்கள்
ஏராளம். நாம் சொல்வதை தேவதைகள் கேட்கிறார்கள், நமக்கு சரியான
பாதையைக் காட்டுவார்கள் என்று நம்புவதில் தவறில்லையே. //
மிக ஆழ்ந்த கருத்துக்கள். நன்றி.

Geetha6 said...

Excellent.
Good!

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா

ஹுஸைனம்மா said...

புதுசா இருக்கு!! நம்பிக்கை இல்லாட்டாலும், தகவலுக்காகத் தொடர்ந்து படிச்சேன்.

pudugaithendral said...

நன்றி ஹுசைனம்மா

இராஜராஜேஸ்வரி said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.