Wednesday, June 15, 2011

பாட்டு கேக்கணுமா???

ஒரு 15 அல்லது 20 வருஷத்துக்கு முன்னாடி, எல்லார் வீட்டுலயும்
காலையில் எந்திரிச்சதும் மொதல்ல காபி போடுவதோடு ரேடியோவையும்
ஆன் செய்வது வழக்கமா இருக்கும். பக்திமாலை, செய்திகள் இதோடு
7.30க்கு திரைப்படப்பாடல்கள் (திருச்சி வானொலியில்) அப்புறம்
விவிதபாரதியில் 9 - 10 ... ஆஹா என்ன ஒரு சுகமான அனுபவமா
இருந்துச்சு.

ரேடியோ கேட்டுகிட்டே தண்ணி பிடிச்சு ஊத்துவது, மத்த வேலைகளைச்
செய்வதுன்னு எந்த வேலையும் தங்கு தடையில்லாம ஓடிக்கிட்டு இருக்கும்.
அத்தோட அலுப்பு தெரியாம இருக்க ரேடியோ. வம்சம் படத்துல ஒரு
சீன் வரும் அதை ரொம்ப ரசிச்சேன். கதாநாயகி ரேடியோவுல பாட்டு
கேட்டுகிட்டு இருக்க, பக்கத்து வீட்டு பாப்பா வந்து,” எங்கம்மா
ரேடியோவை சத்தமா வெக்கச் சொன்னங்கன்னு” சொல்லும். கரண்ட்
கட்டானா பேட்டரி ரேடியோ வெச்சிருக்கவங்க வீட்டுக்கு ஓடிப்போய்
நாடகவிழா நாடகங்கள் கேட்டவங்க அதிகம்.

இப்படி நிறைய்ய கொசுவத்தி நமக்குள்ள இருக்கும். திரைப்படபாடல்கள்
இப்பொழுதையதைப் போல இல்லாமல் நெஞ்சை வருடும், மனதை
மயக்கும் ஒரு முக்கியமான காரணியா இருந்திருக்கு. படம் நல்லா
இல்லாட்டியும் பாடல்களால கலெக்‌ஷன் நிறைய்ய பாத்த படங்களும்
இருக்கு.

பாட்டு கேக்க இப்ப ரேடியோவை நம்பித்தான் இருக்கணும்னு இல்லை.
டேப்ரெக்கார்டரைத் தாண்டி, சிடி தாணி கைவிரலைவிடவும் சின்னதான
ஐபாட்டில் எம்புட்டோ பாடல்களை வெச்சுக்கிட்டு கேக்கலாம். ஆனாலும்
இந்தக் காதுல ஹெட் போன் வெச்சு கேப்பதை விட பேக்க்ரவுண்ட்ல
பாட்டு ஓடிக்கிட்டே இருக்கணும், நாம நம்ம வேலையை செய்யணும்.
அதுதான் சூப்பர். அதுவும் ஹெட்போன் அதிகமா உபயோகிச்சா தலைவலி
வர்றதோட காது சீக்கிரம் கேக்காம போகவும் வாய்ப்பு இருக்கு.

வலைத்தளத்துல நமக்குத் தேவையான பாடல்களை செலக்ட் செஞ்சு
கேக்க எத்தனையோ தளங்கள் இருக்கு.

WWW.Dhingana.com அப்படின்னு ஒரு வலைத்தளத்துல பாடல்கள் கிளாரிட்டி
நல்லா இருக்கு. தமிழ், ஹிந்தி, பக்தி பாடல்கள் இருக்கு. இதோ ஒரு
பாட்டு உங்களுக்காக.


எந்திரன் படத்து இந்த பாட்டு கிளாரிட்டி சூப்பர்!!!!


எப்பவும் வலைத்தளத்திலேயே கிடப்பவர்களுக்கு வேலையுடன்
பாடல் கேட்க இந்தத் தளமும் இருக்கிறது என்று சொல்ல ஆசைப்பட்டேன்.

எஞ்சாய்!!!!!

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிமுகம் சகோ.. வசதியாக இருக்கும்.... :)

ரேடியோவில் பாட்டு கேட்டபடியே வேலை செய்வது மிகவும் பிடித்த ஒன்று... பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஆயில்யன் said...

அட!

யூஸ்ஃபுல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்


தாங்ஸ் பாஸ் !

pudugaithendral said...

வாங்க சகோ

//ரேடியோவில் பாட்டு கேட்டபடியே வேலை செய்வது மிகவும் பிடித்த ஒன்று... //

ஆஹா சேம் பளட்.
நன்றிக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க பாஸ்,

எனக்கு உதவியா இருக்கு. அதான் பதிவு போட்டேன்.

வருகைக்கு நன்றி பாஸ்

நட்புடன் ஜமால் said...

ஹெட்போன் அதிகமா உபயோகிச்சா தலைவலி
வர்றதோட காது சீக்கிரம் கேக்காம போகவும் வாய்ப்பு இருக்கு.]]

யக்கோவ் இப்படியெல்லாம் பயமுறுத்தக்கூடாது ... :P

மதிய நேரத்தில் திரைபடங்களை போடுவாங்க வெறும் வசனம் மட்டும் தான், எப்படி இரசிச்சி கேட்டிறுப்போம், மாலை நேரங்களில் வரும் பாடல்கள் - ஆஹா! அந்த காலத்திற்கே கொண்டு போய்ட்டீங்க ...

அமுதா கிருஷ்ணா said...

கிச்சனில் நுழைந்தவுடன் முதலில் ரேடியோ தான் ஆன் செய்வேன் இப்பவும்.பாட்டு மட்டுமில்லாமல் நிறைய செய்திகளையும் கேட்கலாமே.

ஹுஸைனம்மா said...

நான் எஃப்.எம். ரேடியோ கேப்பேன். www.tamilradios.com

ADHI VENKAT said...

ஆஹா!!!!!!!! ரேடியோ கேட்டுகிட்டே வேலை செய்வது எவ்வளவு சூப்பர்! பழைய நினைவுகளை கிளறி விட்டுவிட்டீர்கள்.
நான் அப்போது படிப்பதே பாட்டு கேட்டுகிட்டு தான்.
இப்பவும் பாட்டு கேட்டுகிட்டு தான் வேலை.

pudugaithendral said...

வாங்க ஜமால்,

//ஹெட்போன் அதிகமா உபயோகிச்சா தலைவலி
வர்றதோட காது சீக்கிரம் கேக்காம போகவும் வாய்ப்பு இருக்கு.]]

யக்கோவ் இப்படியெல்லாம் பயமுறுத்தக்கூடாது ...//

நான் பயமுறுத்தலீங்கோ. நிஜம் அதுதான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

ஆமாம் நிறைய்ய செய்திகள் தெரிஞ்சிக்க உதவி தான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா
ஆஹா தகவலுக்கு நன்றி இனி அங்கயும் போவோம்ல.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

நான் அப்போது படிப்பதே பாட்டு கேட்டுகிட்டு தான். //

:(( எதுக்கு சோகம்னு கேக்குறீங்களா. படிக்கும்போது கூட என்ன ரேடியோன்னு எம்புட்டு திட்டு வாங்கியிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.

:) வருகைக்கு நன்றி

எல் கே said...

கேக்கணும்னு ஆசைதான். ஆபிஸ்ல நோ ச்பீகர். வீட்ல பாட்டு கேட்டுக்கிட்டே சிஸ்டம்ல இருந்தா அப்புறம் தங்க்ஸ் கூப்பிடறது காதில் விழாமல் திட்டு வாங்கணும்