Thursday, June 23, 2011

சாந்தி இல்லா பிரசாந்தி நிலையம்!!!!!!!!!!

பகவான் சத்ய சாயி பாபா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல்
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்து புட்டப்பர்த்திதான் நியூஸ்
சேனல்களுக்கு தீனி. இப்பொழுது அது மாபெரும் தீனியாகிவிட்டிருக்கிறது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பொழுது என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்?
அவரது உடம்புக்கு என்ன? என எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
தற்பொழுது சாயி பாபா அவர்களின் சகோதரி மகள் தந்த பேட்டியில்
“ராகு காலம் முடிவதற்காக வெயிட் செய்து பிறகு ஆப்ரேஷன் செய்தார்கள்.
அதனால்தான் அவருக்கு இப்படி ஆனது!!” என்று சொல்கிறார்.
குடும்ப உறவினர்களுக்கும் என்ன நிலமை என்று தெரியாதாம்!!
அப்படி என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள்? புட்டபர்த்தியில் இருக்கும்
சத்ய சாயி மல்டிஷ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தான் பாபாவுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மெடிக்கல் ரெக்கார்ட் ஏதுமில்லை!!
அதை வெளியிடவில்லை. அரசும் கேட்காது ஏன்?? புரியவில்லை.

யுகாதிக்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்றும், சில நடவடிக்கைகள்
எடுக்க வேண்டி இருந்ததால் சிகிச்சை பெறுவதாக கூறி மருத்துவமனையில்
வைத்தார்கள் என்றும் மீடியா சொல்கிறது. அதை ஊர்ஜிதம் செய்வது போல
இருக்கிறது இன்னொரு செய்தி. ஏப்ரல் 28ஆம் தேதியே பெங்களூரில் இருக்கும்
கம்பெனி ஒன்றில் கண்ணாடி சவப்பெட்டி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதே
சமயத்தில் தான் புட்டபர்த்தியிலிருந்து ஒரு ட்ரக்கில் நகைகள் சென்றதாக
சொல்கிறார்கள்.

இத்தனை நாள் கழித்து இப்பொழுதுதான் யஜுர் மந்திரம் எனும் பாபாவின்
அறை திறக்கப்பட்டுள்ளது. பணக்கட்டுக்கள், நகைகள், வைரங்கள் என
ஒரு கஜானாவைப்போல தெரிகிறது.மீடியாவோ, அரசுத்துறையைச்
சார்ந்தவர்களோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 15 மாணவர்கள்
இங்கே இருந்த பணங்களை எண்ணியதாகச் செய்தி.
இப்பொழுது மீடியா நம் நாட்டின் ஸ்விஸ் பேங்க் இந்த அறை
என்றும், பல பெரிய தலைகளின் கறுப்புப் பணம்
இங்கேதான் பதுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறது.

கடந்த ஞாயிறு அன்று அனந்தபுரத்தில் போலீஸ் அதிகாரிகளால்
கைப்பற்றப்பட்ட ட்ரஸ்டுக்கு சம்பந்தப்பட்ட வாகனத்தில் 35 லட்சம்
பணம் இருந்திருக்கிறது. முதலில் மார்பிள் வாங்க அனுப்பிய
பணம் என்று சொல்லி ட்ரஸ்ட், வேன் டிரைவர் ட்ரஸ்டைச் சேர்ந்த
ஒருவரின் பெயரைச் சொல்ல இப்பொழுது போலீச் ரத்னாகர் (இவர்
தான் இறுதிச் சடங்கு செய்தவர், பாபா அவர்களின் அண்ணன் மகன்)
மற்றும் இன்னொரு நிர்வாகியான ஸ்ரீநிவாஸ் என்பவரையும் விளக்கம்
கேட்டிருக்கிறது.

இத்தனை குற்றச் சாட்டுக்கள் வெளிவந்தாலும் அதை மறுக்கவோ,
எதிர்த்தோ ஒரு செய்தியும் ட்ரஸ்ட் வெளியிடாத மர்மம் என்ன?
வாய் மூடி மவுனமாக இருப்பதால் புட்டபர்த்தியின் மேல்
நல்ல மதிப்பைக் கொண்டவர்கள் எத்தனையோ பேரின் மனதில்
சங்கடத்தை உட்படுத்தி இருக்கிறது.

திருப்பதி மலையில் வெங்கடேசனுக்கு சேரும் காணிக்கைகள்
எவ்வளவோ அத்தனையும் தணிக்கை செய்யப்படுகிறது. எந்த ஒரு
கோவிலும் தணிக்கைக்கு உட்பட்டதே. அப்படியிருக்க புட்டப்பர்த்தி
மட்டும் தணிக்கைக்கு உட்படுத்த படவில்லை. விதிவிலக்கு
அளித்துள்ளதாம் அரசு!!! அது ஏன்??

சீரியஸாக செயலில் இறங்கி அரசு என்னதான் நடக்கிறது? அல்லது
நடந்தது என விசாரனையில் இறங்காததும் ஏன் என்பதும் இறைவனுக்கே
வெளிச்சம்.

புட்டப்பர்த்தியின் செக்யூரிட்டி அதிகாரியான ப்ரதான் என்பவரை
போலீஸ் விசாரித்திருக்கிறது. மீடியாவுக்கு இவர் தந்த பேட்டியில்
வெளிநாட்டு யுவதிகள் காணாமல் போனதும் உண்டு என்று
இன்னொரு அதிர்ச்சித் தகவலை சொல்கிறார்.

இத்தனை பூகம்பளுக்கு இடையே நேற்று வெளியான இன்னொரு செய்தி
வெளிநாட்டு பக்தரான ஐசக் தந்த அதிர்ச்சி. சாயி பாபா அவர்களின்
பிரியமான இந்த கோடீஸ்வரர் தான் புட்டபர்த்தியின் வளர்ச்சிக்காக
400 கோடி கொடுத்திருக்கிறார். இவர் தற்போது கொளித்திப்போட்டிருக்கும்
செய்தி,” பாபா உயில் ஏதும் எழுதவில்லை என ட்ரஸ்ட் நிர்வாகிகள்
சொல்வது பொய். தான் உயில் எழுதியிருப்பதாக என்னிடம் சொன்னார்.
என்னிடம் சில ரகசியங்களையும் சொல்லியிருக்கிறார். 6 வாரத்தில்
ஆதாரங்களுடன் அவற்றை பக்தர்களுக்கு சொல்கிறேன்!!” என்று
சொல்லியிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்து
இருக்கிறது சி.பி.ஐ. ஆனால் அந்த 200 கோடி ரூபாய் என்ன ஆச்சு?
அந்தப் பணம் இப்படி அனாமத்தாக இருக்கும் பல பணங்களை
ஒருங்கே சேர்த்து நாட்டு நலத்திட்ட பணிகளுக்கு செலவழித்தால்
பொருளாதாரம் மேம்பட்டுவிடுமே. இதற்கெல்லாம் நம் அரசியல்
தலைவர்களுக்கு நேரமில்லை. ஒரு அன்னா ஹஜாரே போதாது.
வீதிக்கு ஒரு அன்னா ஹஜாரே வந்தால்தான் நம் நாடு உருப்படும்.

பின்குறிப்பு: நான் சாயி பாபா பக்தை என்றோ, அல்லது அவருக்கு
எதிராக இந்த பதிவை எழுதி அவருக்கு அவமரியாதை செய்து
விட்டோன் என்றோ யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கிடைக்கவிட்டால் யாரும்
குழம்பத்தான் நேரிடும். புட்டப்பர்த்தியின் அபிவிருத்திக்கு மிகவும்
உழைத்த மனிதர், தண்ணீர் பிரச்சனையை தீர்த்தவர் என்ற
விதத்தில் அவரை நான் மதிக்கிறேன். தயவு செய்து யாரும்
தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம். உலகமெங்கும் வியாபித்திருக்கும்
புட்டப்பர்த்தி ட்ரஸ்டின் முக்கிய இடமான புட்டபர்த்தியின் நிர்வாகிகள்
மீது இப்பொழுது எழுந்திருக்கும் சந்தேகங்களை முன் வைப்பதே
இந்தப் பதிவின் நோக்கம்.





7 comments:

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை சந்தேகங்கள்.... பல விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாய் தினம் தோறும் செய்திகள்... என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. பல விஷயங்கள் புரியாத புதிராகவே இருக்கிறது...

கிடைத்த பணம் வைத்து நல்ல விஷயங்கள் செய்யலாம். ஒரு சில கிராமங்களைத் தத்து எடுத்து, பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் கட்டலாம்... நிறைய நல்ல உதவிகள் செய்யலாம்...
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

pudugaithendral said...

ம்ம்ம்ம்...

பார்ப்போம்

ADHI VENKAT said...

இந்த பணத்தை கொண்டு ஏழை எளியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம். பார்ப்போம்.

துளசி கோபால் said...

க்யா மாலும்.................:(

ஹுஸைனம்மா said...

தொண்டு செய்ய வரும் எல்லாருமே ஆரம்பத்தில் நல்லவர்களகத்தான் இருக்கிறார்கள். கொஞ்சம் பணம் சேர ஆரம்பித்ததும்தான் சுயநலமும், பிரச்னைகளும் தலைதூக்குகின்றன. யாராலுமே அந்த இச்சையை வெல்ல முடியாதுபோவது வருத்தம்தான்.

நானானி said...

அதிகம் பணம் சேரும் இம்மாதிரி இடங்களைச் சுற்றி இது போன்ற குழப்பங்கள் வருவது ரொம்ப சகஜமாகி விட்டது.

'யாரைத்தான் நம்புவதோ மக்கள் நெஞ்சம்'

pudugaithendral said...

வருகை தந்த அனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி