மங்கயர்மலரில் ஆண்வாசகர் ஒருவர் மனம்விட்டு குமுறி
இருந்தார். முன்பு மணமகன் வீட்டார் படுத்திய போதெல்லாம்
மனதுக்குள் குமுறிய மணமகள் வீட்டார் விட்ட சாபமாக மாறி
இன்றைய தலைமுறை ஆண்மகன்கள் அவமானப்படுத்தப்பட்டு
கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்படுவதாக சொல்லியிருந்தார்.
அதற்கு சில வாசகிகள் பதில் சொல்லியிருந்தார்கள்.
அதில் ஒருவர் சொல்லியிருந்தது என்னை மிகவும் யோசிக்க
வைத்தது. “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களைத் தேடி
போனால் இப்படித்தான் அவமானப்பட நேரிடும்!!!!” என்று
சொல்லியிருந்தார். அவரின் இந்த வாக்கியம் எத்தனையோ
கேள்விகளை எழுப்பும்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று படிப்பு வாசனையே
இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்த காலம் போய் இன்று குடும்பவிளக்கான
பெண்ணுக்கு கல்வி முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு
பல பெண்கள் பலத்துறைகளில் படித்து தேர்ந்துள்ளனர். படிப்புக்குத்
தகுந்த உத்தியோகமும் கிடைத்து விடுகிறது. இப்பொழுது பெண்கள்
பெரிய படிப்பு படிக்கத்தான் ஆசை படுகின்றனர். நல்லதொரு மாற்றம்தான்.
வெறும் கிராஜுவேஷன் மட்டும் படித்த பெண்கள் கிடைப்பது
குதிரைக்கொம்புக்கு சமானம்!! டபுள் கிராஜுவேஷன், போஸ்ட் கிராஜுவேஷன்,
இஞ்சினியரிங் என பெண்கள் அடைந்திருக்கும் உயர்ச்சி ஆண்மகன்களுக்கு
இல்லை. காரணம் என்ன ஏதுன்னு முன்பே இதைப்பத்தி பதிவெழுதியாச்சு.
ஆணோ, பெண்ணோ குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க
வைப்பதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். விரும்பியோ
விரும்பாமலோ குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள்.
படித்த பெண்தான் வேண்டும் என ஆண்கள் கண்டீஷன் போட்டதுபோய்
தன் படிப்புக்கும் மேலே படித்த மணமகன் தான் வேண்டும் என
இளம்பெண்கள் ஆசைப்படுவது மட்டுமல்லாமல், தன் பெற்றோரையும்
வற்புறுத்துகிறார்கள். இப்பொழுது பிரச்சனை அதிகமாக படித்த
பெண் என்று சொன்னால் என்னை ஏதோ பெண்கள் முன்னேற்றத்திற்கு
எதிரி என்பது போல பேசுவார்கள். நிதானமாக யோசித்தால் உண்மை
என்னவென்று புரியும்.
நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களாக இருப்பதில் தவறில்லை.
அவர்கள் விரும்புவது என்ன? அது கிடைக்குமா? இங்குதான் குழப்பமே.
எனக்குத் தெரிந்து இன்னொரு பிரச்சனை. பெண்கள் திருமணத்திற்கு
பிறகு வேலைக்குப் போவது. அது ஒன்றும் இமாலயக் குற்றம் என்று
சொல்லவில்லை. இரட்டை சக்கரத்தில் கால்வைத்து அழகாக
பயணம் செய்யத் தெரிந்த புத்திசாலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என் அன்பு கலந்த மரியாதையான வாழ்த்துக்கள்.
அப்படி சமாளிக்கத் தெரியாதவர்கள்??? குடும்பம் பெரிதா/அலுவலகம்
பெரிதா? என பட்டிமண்டபம் வைத்தாலும் தீர்வு கிடைக்காது.
ஏற்றுக்கொண்ட வேலையை நிறைவாகச் செய்ய வேண்டும். அது
குடும்பமோ/அலுவலகமோ. குழந்தைகளை கிரச்சில் விட்டுவிட்டோ,
அல்லது பெற்றோரிடம் விட்டோதான் வேலைக்கு செல்ல நேரிடும்.
தகப்பனாக தன் கடமையை செய்ய ஆண் முன் வரும்பொழுது
இந்தப் பிரச்சனைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும். அது எத்தனை
பேருக்கு சாத்தியம்.
எனக்குத் தெரிந்த தீர்வாக திருமண வயது வந்த உடன் ஆணோ/
பெண்ணோ அவர்களை மனதளவில் தயார் படுத்துதல் மிக
அவசியம். திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்கிறோமே
தவிர அந்தப் பயிர் வாடி வதங்காமல் காக்க என்ன செய்ய வேண்டும்
என்று யோசிப்பது இல்லை. புரிந்துக்கொள்ளும் தன்மை,
விட்டுக்கொடுத்து போதல் ஆகியவற்றை இருபாலினருக்கும் கற்றுக்
கொடுத்தல் அவசியமாகிறது. படிப்பு, அது முடிந்து வேலை என்று
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அதற்கு நடுவே திருமண
வயதில் ஒரு பயிற்ச்சி வகுப்பு போல வைத்தால் மெத்த படித்தாலும்
மனதில் பக்குவம் கொண்டு வர முடியுமோ? அதிகம் படித்த
மனைவி வாய்த்தாலும் காம்பள்க்ஸ் வளர்த்துக்கொள்ளாமல்
கணவனும் மனைவியை புரிந்து ஒரு அன்பான வாழ்க்கையை
அவர்கள் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
கண்ணதாசன் அவர்களின் இரண்டு பாடல்கள் என்
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை!!!!!!!!
படித்தால் மட்டும் போதுமா படத்தின் இந்தப் பாடலும்:

27 comments:
நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க!
நெல்லைக் கண்ணன் அய்யா அவர்கள் நகைச்சுவையாகச் சொல்லுவார்!
நல்ல மனைவியாக உனக்குத்தேவை பேதை!
நீ எதிர்பார்ப்பது மேதை!
ரெண்டு மேதை ஒரு வீட்டில் இருக்க முடியாது!
அப்புறம்..
கிட்டத்தட்ட இதே விஷயத்தை எனது அடுத்த நூலுக்காக கையில் எடுத்திருக்கிறேன்..
நெல்லைக் கண்ணன் அய்யா அவர்கள் நகைச்சுவையாகச் சொல்லுவார்!
நல்ல மனைவியாக உனக்குத்தேவை பேதை!
நீ எதிர்பார்ப்பது மேதை!
ரெண்டு மேதை ஒரு வீட்டில் இருக்க முடியாது!//
அருமையாக சொல்லியிருக்கிறார்
அப்புறம்..
கிட்டத்தட்ட இதே விஷயத்தை எனது அடுத்த நூலுக்காக கையில் எடுத்திருக்கிறேன்..//
ஆஹா சூப்பர்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//புரிந்துக்கொள்ளும் தன்மை,
விட்டுக்கொடுத்து போதல் ஆகியவற்றை இருபாலினருக்கும் கற்றுக்
கொடுத்தல் அவசியமாகிறது. //
உண்மை... பல இளைஞர்கள்/யுவதிகள் இன்று விட்டுக் கொடுத்தல் என்பதே இல்லாமல் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வளர்த்து பேசிக் கொள்ளாமலேயே பிரிந்து விடும் சூழ்நிலை இன்று...
நல்ல பகிர்வு சகோ...
//திருமணவயதில் ஒரு பயிற்சி வகுப்பு போல வைத்தால் மெத்த படித்தாலும்
மனதில் பக்குவம் கொண்டு வர முடியுமோ?//
வடக்கே இதுமாதிரி பயிற்சி வகுப்புகள் நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். புகுந்தவீட்டில் மற்றும் மத்தவங்களை புரிஞ்சி நடந்துக்கவேண்டிய முறை, நாகரீகம்,சமையல்,குழந்தைவளர்ப்பு, மற்றும் அழகுக்கலைன்னு நிறைய கத்துக்கொடுக்கறாங்க.
//முன்பு மணமகன் வீட்டார் படுத்திய போதெல்லாம்
மனதுக்குள் குமுறிய மணமகள் வீட்டார் விட்ட சாபமாக மாறி
இன்றைய தலைமுறை ஆண்மகன்கள் அவமானப்படுத்தப்பட்டு//
ரொம்ப உண்மை தென்றல்!! பெண்ணை அளவுக்கதிமாய் அடக்கி அடக்கி வைத்ததன் விளைவாய், இன்னிக்கு பெண்கள் முன்னேறினாலும், சிலர் புரட்சிங்கிற பேர்ல என்ன கூத்தெல்லாம் பண்றாங்க!! எதுவுமே - படிப்பு, சுதந்திரம், அடக்கம், உரிமைகள், பணம், இன்னும் எல்லாமே- ஆண், பெண் இருவருக்குமே அளவோடு இருந்தாத்தான் நல்லது.
//பெண்கள் திருமணத்திற்கு
பிறகு வேலைக்குப் போவது//
நிச்சயமா, அவரவர் capability என்னன்னு அவரவருக்குத் தெரியும். சமாளிக்க முடியலைன்னா, வேலையை விட்டுடுறது நல்லது. ஆனா, படிச்சிருக்கேன், அதனால யார் கஷ்டப்பட்டாலும், நான் வேலை பாத்துத்தான் ஆவேன்னு பிடிவாதம் பிடிக்கிறது எந்த வகையில சரி?
//தீர்வாக திருமண வயது வந்த உடன் ஆணோ
பெண்ணோ அவர்களை மனதளவில் தயார் படுத்துதல் மிக
அவசியம்//
நிச்சயமா, ஆண்-பெண் இருவருக்குமே ‘விட்டுக் கொடுத்தல், விட்டுப் பிடித்தல்’ எல்லாமே சொல்லித் தரணும்!!
நிறையப் பேசலாம் தென்றல் இதுபத்தி. முடிவில்லாதது. அவரவருக்கேற்றபடி அவரவர் யோசித்து முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.
//மணமகள் வீட்டார் விட்ட சாபமாக மாறி
இன்றைய தலைமுறை ஆண்மகன்கள் அவமானப்படுத்தப்பட்டு//
ரெண்டு நாளா இதே யோசனைதான் தென்றல். கோ-இன்ஸிடன்ஸ்!! எனக்கு ரெண்டும் பையனா இருக்கதுனால, பெண்வீட்டார் முன்பு பட்ட கஷ்டங்கள் போல, நானும் எதிர்காலத்துல படவேண்டி வருமோன்னு ஒரு பயம்!! சரி, நம்ம பிள்ளைகள் நல்லா இருக்கணும்னா பட்டுக்க வேண்டியதுதான்னு நினைச்சுகிட்டிருந்தேன்.. ;-))))))))))))))
//சுரேகா.. said...
நீ எதிர்பார்ப்பது மேதை! //
மேதை என்றாலும், தன் வீட்டில் அவள் பேதையாகவே வேஷம் பூண வேண்டும் என்பதுதான் இன்றைய ஆண்களின் எதிர்பார்ப்பு!! டூ-இன் -ஒன்!! ;-))))))))
நல்ல பகிர்வு.
இன்றைய நிலையில் ஆண்கள் தான் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.
பெண்களும் நிறைய படித்து விட்டு நல்ல வேலையிலும் சேர்ந்து தனக்கு இணையாக சம்பாதிக்கும் ஆண் மகனை தேடுகின்றனர்.
எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இருபாலருக்குமே நல்லது என்று நினைக்கிறேன்.
கண்ணதாசனின் ”பரமசிவன் கழுத்திலிருந்து” இந்த அற்புதமான பாடலை நேற்று தான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ம். அக்கா சொன்னா சரிதான்.
இந்த பிரச்சனை இப்ப நெறய எடத்துல கேள்வி படறோம், தவறு ரெண்டு பக்கமும் இருக்கு. எது முக்கியம்'ங்கற புரிந்துணர்வு இருந்தா இந்த பிரச்சனைகள தவிர்க்க முடியும்னு தோணுது. பார்ப்போம்
U cd hav written ur title in clear tamil.
வேலைக்குச் செல்லும் பெண்கள் திருமணத்திற்குத் தயாரகும்போது அவர்களுக்கு average 24 வயதாகிறது. இவர்கள் என்ன பாப்பாவா? விட்டுக்கொடுத்துப்போதல் முதலியவற்றைச் சொல்லிக்கொடுக்க வகுப்பறை நடத்துவதற்கு.
அமைதிச்சாரல், நீங்கள் சொல்லும் வகுப்பறைகள் தில்லி சவுத் எக்டென்ஸனில் நடைபெறுகின்றன. அது பெரும் தனவனதர்கள் தங்கள் பெண்களை பெரும் தனவன்தர்கள் குடும்பங்களில் கட்டிக்கொடுக்கும்போது, உறவினர், பார்ட்டிகள் போன்றவைகளில் எப்படி நடந்துகொள்வது என்று etiquette சொல்லித் தருகிறார்கள். அங்கு மிடில் களாஸ் பெண்கள் சேரமுடியாது. அது பணக்காரச்சேவை.
It happens in North Indian culture where they give more importance to social appearances. A TV serial s being telecast in Star plus based on the theme where a rural woman gets married into a rich household; and how she suffers. In the last night episode, the kind monther in law has decided to send her school.
It s not necy in South Indian culture.
ஆணும் பெண்ணும் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் சமூகத்தின் பிரதிபலிப்புக்கள். சமூகம் ஏற்கனவே ஆணுக்கு ஒரு பிம்பம், பெண்ணுக்கு இன்னொன்று என்ற வைத்துவிட இவர்களில் ஆண் அவன் பிம்பத்தையும் பெண்ணுக்கு உள்ள பிம்பத்தையும் ஏற்றுக்கொண்டு, கணவனாகிறான். அவன் குடும்பத்தாரும் அதே
இச்சூழலில் பெண்ணின் பிம்பம் பெண்ணுக்கு ஒரு தடையாக இருக்கிறது. அவள் அதை மாற்றத் துடிக்கிறாள். அல்லது கொஞசமாகவாவது மாற்றலாமா என நினைக்கிறாள். இதுதான் பிரச்சினைக்கு மூல காரணம்.
The person who s to be pitied here s the young bride. She s caught between the old and new worlds:
And she sees:
One s dead; and the other powerless to b born.
For her, a good help s necy. But blogs such as these written by represetnatives of old world r no help at all. U put her in the dock as an accused ! And the boy and his family r defendents. Laughable situation !
In my opinion if the boy wants to have a better educated girl who s gainfully employed and full of social graaces, including the ability to converse in English confidently, and he wants to show such an 'educated' bride as a status symbol or a badge of honor, he must prepare to sacrifice a part of his ego; and allows her desires to get fulfilled also. Help her, not only in house; but mentally. Encourage her in all her ambitions in profession and outer society.
If not, marry a rurual woman or any woman who has accepted the image foisted on her. There s a lot of such women who accept their conditions.
நுனி நாக்கு ஆங்கிலம் என்றால் என்ன ? எனக்கு ஆங்கிலம் எழுத பேசத் தெரியும். என் வீட்டிலும் அவ்வாறே. ஆனால் இந்த நுனி நாக்கு ஆங்கிலம் நான் கேட்டதில்லை. சென்னைப் பெண்களுடன் நான் ஆங்கிலம் என் இளமைக்காலத்தில் பேசியிருக்கிறேன். நான் சென்னைப் பிரிட்டிஸ் கவுன்சிலிலோடு சில்லாண்டுகள் நெருங்கிய தொடர்பில் இருந்தேன். சென்னைக்கல்லூரி, மற்றும் the so-called மெத்தப்படித்தப் பெண்கள் வருவார்கள்: நான் எவரும் செயற்கையாக ஆங்கிலம் பேசிக் கேட்டதில்லை !
ஆங்கிலம் பேசுவதில் செயற்கை என்பது கிடையாது. அப்படி உங்களுக்குத் தோன்றினால், உண்மையென்னவென்றால், பேசுபவருக்கு உண்மையிலேயே ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அதை நீங்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்ற கவனத்தில் அவர் போடும் நாடகம் இந்தச் செயற்கைத்தனமான உரையாடல்.
இந்த நுனி நாக்கு ஆங்கிலம் என்ற சொற்றொடர் பெண்ணைப்பற்றிப் பேசும்போது மட்டுமே எழுதபடுகிறது. எவனோ ஒரு எழுத்தாளன் முதலில் சொல்லி பெண்ணை அவமானப்படுத்த, மற்றவர்களெல்லாம் பிடித்துக் கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது.
அவனுக்கு ஆங்கிலம் ஒரு பிர்ச்சினையாக இருந்திருக்கும். ஒரு பெண்ணிடம் மாட்டிக் கொண்டு முழித்திருப்பான். வஞசம் தீர்க்க அவன் வக்கிரத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை.
விட்டுவிடுமோமா புதுகைத்தென்றல்?
நல்ல க்ருத்துக்கள்.எதிர்பார்க்கும் பெண் மேதையாக இருக்கலாம்.ஆனால் அதிமேதையாக,கணவனை எத்ர்க்கும் காரிகையாக இருக்கக்கூடாது.திருமண்த்தின்போது councellin இருப்பது நல்லதுதான்.எழிலன்
பல இளைஞர்கள்/யுவதிகள் இன்று விட்டுக் கொடுத்தல் என்பதே இல்லாமல் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வளர்த்து பேசிக் கொள்ளாமலேயே பிரிந்து விடும் சூழ்நிலை //
ஆமாம் சகோ,
அதுதான் வருத்தமே :((
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
அந்தமாதிரி தனியா போய் படிக்க எல்லோருக்கும் வசதி இருக்காதே!!
அதுவும் ஒரு மேட்டர்.
வருகைக்கு நன்றி
நிறையப் பேசலாம் தென்றல் இதுபத்தி. முடிவில்லாதது. அவரவருக்கேற்றபடி அவரவர் யோசித்து முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.//
ம்ம்ம் ஆமாம்,
பிள்ளை வளர்ப்பு போல இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும்தான். ஆனால் நல்ல தீர்வாக இருக்கணும்.
வருகைக்கு நன்றி ஹுசைனம்மா
ரெண்டு நாளா இதே யோசனைதான் தென்றல். கோ-இன்ஸிடன்ஸ்!! எனக்கு ரெண்டும் பையனா இருக்கதுனால, பெண்வீட்டார் முன்பு பட்ட கஷ்டங்கள் போல, நானும் எதிர்காலத்துல படவேண்டி வருமோன்னு ஒரு பயம்!! சரி, நம்ம பிள்ளைகள் நல்லா இருக்கணும்னா பட்டுக்க வேண்டியதுதான்னு நினைச்சுகிட்டிருந்தேன்.. ;-))))))))))))))
ஸ்மைலி போட்டாலும் இந்தவரிகளில் ஒருவித வேதனை இருக்கு ஹுசைனம்மா
எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இருபாலருக்குமே நல்லது என்று நினைக்கிறேன்.//
எதுவுமே எதிர்பார்க்காவிட்டாலும் பெண்கிடைப்பது ரொம்பவே கஷ்டமா இருக்கு.ம்ம்ம் கடவுள் தான் காப்பத்தணும்
வருகைக்கு நன்றி கோவை2தில்லி
வருகைக்கு நன்றி ஷர்புதீன்,
வருகைக்கு நன்றி தம்பி அப்துல்லா
என்னவோ போடா மாதவான்னு சொல்வாங்களே அப்படி இருக்கு புவனா. வருகைக்கு நன்றி
உங்கள் முதல் வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் நன்றி சிம்மக்கல்.
இந்தப் பதிவு எழுதிய உடன் என் கணிணி சரி இல்லாமல் போய்விட்டதால் அந்த மூடிலிருந்து மாறிவிட்டேன். அதனால் என்னால் ரொம்ப தீவிரமாக பதில் சொல்ல முடியவில்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வருகைக்கு நன்றி எழிலன்
நல்ல பதிவு.
நன்றி சிவா
அன்பின் தோழியாரே,
இது அடிக்கடி எங்க வீட்லநடக்கும் உரையாடல். திருமணப்பருவத்தில் இருக்கும் அல்லது திருமணம் ஆகியிருக்கும் மக்களிடம், அழகான வாழ்க்கைக்கு என்ன செய்யனும்னு கேட்டால், நல்ல அண்டர்ஸ்டாண்டிங் என்று தவறாமல் சொல்வர். அதுக்கு நான் கேரண்டி. அண்டஸ்டாண்டிங் பத்தி என்ன அண்டஸ்டாண்ட் பண்ணியிருக்காங்க. அதைப் புரிந்து கொள்வதற்குள் என்னென்னமோ நடக்கிறது.நமது வாழ்க்கை முறை, சரியோ தவறோ, நிறைய மாறிவிட்டது. வெட்டி வீராப்பு போலி கவுரவம் ஆட்டிப்படைக்கிறது
வாங்க ஃபண்டூ
அண்டஸ்டாண்டிங் பத்தி என்ன அண்டஸ்டாண்ட் பண்ணியிருக்காங்க. அதைப் புரிந்து கொள்வதற்குள் என்னென்னமோ நடக்கிறது.நமது வாழ்க்கை முறை, சரியோ தவறோ, நிறைய மாறிவிட்டது. வெட்டி வீராப்பு போலி கவுரவம் ஆட்டிப்படைக்கிறது//
நீங்க சொல்வது சரி.
உள்காயம் வெளியே யாருக்கும் தெரியாது. அதுபோல உள்ளுக்குள் குமைந்துக்கொண்டே வாழும் தம்பதிகள்தான் அதிகம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment