Thursday, September 08, 2011

ஆஷிஷின் புது ஃப்ரெண்ட்!!!! :)))

என்ன ஒரு துணிச்சல்!! நான் இருக்கும்பொழுதே இந்த ஆட்டம்
போடுறாங்க ரெண்டு பேரும்!!! சில சமயம் ரொம்பவே ஆட்டம்
ஜாஸ்தியா இருக்கு. என்னால ஒண்ணும் செய்ய முடியலை! :((
அப்பார்ட்மண்ட் மொத்தம் இவங்க சத்தம் தான். தாங்க முடியலடா
சாமி!!!

பில்டப்பை பார்த்து என்னவொ ஏதோன்னு பயப்பட்டுட்டீங்களா?
ஆஷிஷுக்கு ஒரு புது ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கு. அதைப் பத்தி
பகிர்ந்துக்காட்டி எப்படி? அதான் இந்தப் பதிவு.

பிப்ரவரி மாத கடைசில எங்க தளத்துல கிரஹப்ரவேசம் செஞ்சு
குடிவந்தாங்க. மார்ச் மாசம் என் பசங்களுக்கு பரிட்சை, அப்புறம்
ஊர் சுற்றல், திரும்ப ஸ்கூல் அப்படி இப்படின்னு பிசியா இருந்தோம்.
அதனால அதிகம வெளியில வரலை. மே மாதம் லீவு என்பதால
மெல்ல பசங்க வெளியில வந்தாங்க. (ஆஷிஷ்,அம்ருதா இன்னொரு
பையன் தவிர எல்லாம் சுட்கூஸ் (அதாங்க குட்டீஸ்) அதனால
பசங்க ரொம்ப வெளியில வராம இருந்தாங்க)

அப்ப ஆரம்பிச்சுச்சு கலாட்டா! ஆஷிஷை கண்டால் போதும் அந்த
வாண்டுக்கு. முழுமையா பேச்சு வரலை அப்ப. 2 வயசு 2 மாசம்தான்.
ஆஷிஷ்... ஆஷிஷ்னு கூப்பிடும். அண்ணான்னு சொல்வதை
உள்ளேயே முழுங்கிடுவா!! :)) அவனைக்கண்டால் போதும் தூக்கிக்கொள்ளச்
சொல்லி அடம். அய்யா ஒசரமா இருப்பதால எல்லா இடமும்
நல்லாத் தெரியுதுன்னு அவனை தூக்கச் சொல்வாளோன்னு பேசிப்போம்.

அம்மையாருக்கு உடம்பு சரியில்லாம போனா ஆஷிஷுக்கு மருந்து
கொடுப்போம். அப்பதான் மேடம் குடிப்பாங்க. மேடத்தோட பேரு
சொல்ல மறந்திட்டேனே! சாய் சுடுதி. (சாயி ஸ்ருதி) இன்னும்
ர வரலை. மழலை மாறாத பேச்சு. ஆனா நல்ல எக்ஸ்பிரஷன்.
நொப்பு (நொப்பி-வலி), பெகுடு (பெருகு-தயிர்), கூட (கூர-காய்)
தோஸ்தா (தோசை- ப்ரெட்டுக்கும் அதேதான்)இப்படி எங்க வீட்டில் இப்போ ஸ்ருதி மொழிதான்.

இப்ப கதவைத் திறந்தா போதும் ஆஷிஷ் அண்ணான்னு ஓடி வந்திடுவா. அவங்க வீட்டு
கதவை திறந்துகிட்டு வரத் தெரிஞ்சிருச்சு. ஜூலைலேர்ந்து ப்ரீஸ்கூல்
போக ஆரம்பிச்சிருக்கா. ஆஷிஷ் வீக் எண்ட்ல பிசியா இருந்து
போய் பார்க்க முடியலைன்னா போதும் அவனை விட்டு இறங்கவே
மாட்டா. எதிர் வீடுதான். ஆனா அண்ணாக்கு இந்த மாசம்
முதல் டர்ம் போர்ட் எக்ஸாம் என்பதால அவரு பிசி. சரி
கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வந்திடலாம்னு போனா விட
மாட்டாங்க மேடம். அம்டுதா (புரிஞ்சிருக்குமே) எஸ்ஸு
அம்ருதா கூடவும் நல்லா விளையாடுவா ஆனா ஆஷிஷ் அண்ணாவைக்
கண்டால் அது என்னவோ அப்படி ஒரு அன்பு மழைதான். அன்பு எம்புட்டு
தூரம்னா ஆஷிஷ் அண்ணா நான் படிக்க போறேன்னு சொன்னா,
”ஸ்டாண்டிங் லைன் ஒத்து”!! என்று சொல்லிவிடுவாள்.
அவள் படிப்பது ஸ்டாண்டிங் லைன். ஆஷிஷும் அதுதான் படிக்கிறான்
என்று நினைத்து நீ அதெல்லாம் படிக்க வேண்டாம், என்னுடன்
விளையாடு என்று மேடம் பேச்சு.

இல்லாட்டி தானும் படிக்கிறேன்னு பென்சிலை வைத்துக்கொண்டு
கிறுக்கி கொண்டிருப்பாள்!! பக்கத்தில் வீட்டில் இன்னொரு உழக்கு
இருக்கு. அவனை ஆஷிஷ் எடுத்துக்கொண்டால் ஸ்ருதிக்கு
பிடிக்காது!! சில சமயம் எங்க வீட்டுக்கு வந்துவிட்டு,”அம்மா
ஒத்து” (அம்மா வேண்டாம்) என்று சொல்லிவிடுவாள். அவங்க அம்மா வந்து
அழைத்து சென்றால் அழுகைதான். சரி ஆஷிஷ் கொண்டு போய்
விடலாம் என்றால் கழுத்தைக் கட்டிக்கொண்டு விட்டால்தானே.
சில சமயம் எங்க வீட்டு கதவை யாராவது திறந்து வைத்திருப்போம்.
அவங்க வீட்டு கதவையும் திறந்து வைத்து யாராவது நிற்போம்.
ஆஷிஷ் ஸ்ருதியை தூக்கிக்கொண்டு போய் கொஞ்சம் விளையாட்டுக்
காட்டி அவளுக்குத் தெரியாமல் தப தப என ஓடி வர ஒவ்வொரு
கதவாக மூடுவோம்!!மெல்ல மூடை மாற்றுவார் அவள் அம்மா.
கூடிய சீக்கிரம் ஆஷிஷ் இருக்கும் அப்பார்ட்மெண்ட் எது என்று
கேட்டாள் வீதியில் அனைவரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள்
என நினைக்கிறேன். :)) அண்ணாவை அம்புட்டு பாசமா கூப்பிடறாங்க
மேடம். சில சமயம் அம்ருதாவிடம் பேச நினைத்து முதலில்
ஆஷிஷை கூப்பிட்டு அப்புறம் அம்ருதாக்கா அப்படின்னு ஆரம்பிக்கும்
அளவுக்கு ஆஷிஷ் அண்ணா மேல அன்பு.

எங்க அப்பார்ட்மெண்ட்ல இந்த வாட்டி விநாயகர் வைத்திருந்தோம்.
பூஜையில் அண்ணாவும் இன்னொரு பையனுக்கும் கங்கணம்
கட்டி விட்டிருந்தார் பூஜாரி. அதனால் இருவரும் எல்லா நாள்
பூஜைக்கும் பிள்ளையார் அருகேயே இருக்கவேண்டும். அண்ணாவுடன்
இந்த அம்மையாரும் அண்ணாவுடனேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.

நம்ம மாண்டிசோரி படிப்பை உபயோகிச்சுகிட்டு இருக்கேன்னு
சொன்னேன்ல அது இந்த குட்டீஸுக்குத்தான். கைகளாலேயே
ஸ்டாண்டிங் லைன், ஸ்லீப்பிங் லைன் காட்டுவா. ரைம்ஸ்
அழகா சொல்லும். முழு வார்த்தை வரலை என்றாலும் சில
ரைம்ஸ் அழகா மழலையில் கேக்கணும்!! அவங்க மாதிரி
நானும் ரைம்ஸ், ஸ்டாண்டிங் லைன் ஸ்லீப்பிங் லைன் எல்லாம்
சொல்வேன் என்பதால நானும் அவளுடைய தோஸ்த்!!

ஸ்கூலில் ஏதாவது ஃபங்ஷன் என்றால் போட்டுச் செல்லும்
ட்ரெஸ்ஸை வந்து எனக்கு காட்டிவிட்டுதான் செல்வாள்.
அப்படி காலையில் மிஸ் செய்துவிட்டேன் என்றால் மதியம்
ஸ்கூலிலிருந்து வந்ததும் நேராக என்னிடம் வந்து அன்றைய
விஷயங்கள் எல்லாம் பகிர்ந்துக்கொண்டால்தான் நிம்மதியாக
இருக்கும். என்ன சாப்பிட்டாள்? என்ன செய்தாள்? எல்லாம்
அழகாக சொல்வாள். சில நாள் கையில் ஸ்டார் வரைந்து
அனுப்பியிருப்பார்கள். அதை என்னிடம் கொண்டு வந்து
காட்டும் அழகே அழகு!! லிஃப்டை விட்டு இறங்கியதும்
அவங்க வீட்டுக்கு கூட போகாமல் என் வீட்டு கதவைத்
தட்டி,”ஆண்ட்டி! ஆண்ட்டி! ஸ்ருதி ஸ்கூல்!!” என
ஆரம்பித்துவிடுவாள். எடுத்துக்கொண்டு விவரம் கேட்டு
மெல்ல அவர்கள் வீட்டில் விடுவேன். தினமும் அவள்
என்ன செய்தாள் என்று லேட்டஸ்ட் அப்டேட்ஸ் கேட்பார்கள்
ஆஷிஷும் அம்ருதாவும்.

குழந்தைகளால் உலகம் அழகாகிறது. அது இப்போ
இன்னொரு முறை உறுதியாகி இருக்கு.

10 comments:

சாந்தி மாரியப்பன் said...

//குழந்தைகளால் உலகம் அழகாகிறது. அது இப்போ
இன்னொரு முறை உறுதியாகி இருக்கு.//

உண்மைதாங்க. எங்க 'கோலு'வை ஞாபகப்படுத்துது இந்த இடுகை. பிறந்த ரெண்டு மாசத்துலேர்ந்தே அவனுக்கு எங்கூடுதான் வாசம் :-)

Appaji said...

>>>குழந்தைகளால் உலகம் அழகாகிறது. அது இப்போ
இன்னொரு முறை உறுதியாகி இருக்கு<<<< இந்த வாசகம் நச்.....
ஸ்ருதி டீச்சர்

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும் கூட ஒரு வளர்ப்பு வீடு இருந்தது. இப்போ எங்க வீட்டில் ஒரு குட்டி. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

ஸ்ருதிக்கு நான் டீச்சர் இல்லையே அப்புறம் எப்படி ஸ்ருதி டீச்சர். :))

தவமணிப் புதல்வன் said...

/குழந்தைகளால் உலகம் அழகாகிறது./

உண்மை.

ADHI VENKAT said...

குழந்தைகளின் பேச்சும் நடையும் அவ்வளவு அழகு...

சுருதியால் உங்கள் வீடு இப்போது அழகாகிவிட்டதா...

காலையில் எழுப்பும் போது இன்று ஸ்டாண்டிங் லைன், ஸ்லீப்பிங் லைன், வாட்டர் பாட்டில் குழந்தை எல்லாத்துக்கும் லீவு... அதனால நான் ஸ்கூல் போக மாட்டேன் என்று ரோஷ்ணி சொல்லுவது ஞாபகம் வந்து விட்டது.

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி தவமணிப்புதல்வன்

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

வீடு இப்ப ரொம்பவே அழகா இருக்கு. ரோஷிணி பத்தி கொசுவத்தி சுத்த வெச்சிட்டேன். ஸ்ருதியை பார்க்கும் பொழுது ஆஷிஷும் அம்ருதாவும் அடித்த லூட்டிகள் ஞாபகத்துக்கு வரும் :))

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

//குழந்தைகளால் உலகம் அழகாகிறது. //

உண்மையான விஷயம்...

நல்ல பகிர்வு.. குழந்தைகள் உடன் எத்தனை நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம் நமக்கு...

pudugaithendral said...

வாங்க சகோ,

நல்ல டைம்பாஸ் :))

வருகைக்கு நன்றி